ஆவி அழுது போதலை

வெந்துவிட்ட என்னிதயத்தின்
சாம்பலை, என்றும்
நொந்து போகாத உனக்குத்
தருவதை விரும்பிவிட்டேன்
வந்து அதைத் தின்னு.
சொல்லு அப்பொழுதாவது
உன் இரக்கமற்ற காதலை!!

கழுகுகளின் வேட்டையில்
காய்ந்துபோன எனது உடல்
காயப்பட்டு போனது அறிந்து
என் உணர்ச்சியைப் புரிந்து
பாடுவாயா காதல் ஓதலை?

பனியின் பிடியில் சிக்கிய
மனிதனாய் தவித்து
இனி உன் மடியே என
நினைத்தவனுக்கு நீ
இழைத்த கருமங்கள்
எண்ணிப் பாரடி! அப்பொழுதாவது
புரிவாய் என் மூடத்தனமான சாதலை!!

வாயிலே பேசாமல்
கண்களிலே பேச முயன்றேன்
இன்று அதுவும் பயனில்லாது
போயினவே என
ஆவியாய் நின்று அழுது போகிறேன்
கண்டு கண்ணீர் விடுவாயா எனது
ஆவி அழுது போதலை??

Comments

Popular Posts