வட இந்தியா - 1
மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்து கிடந்தது அந்நேரத்திலேயே. குளிர் பத்து டிகிரிக்கும் குறைவாக இருக்கலாம். என்னைப் போன்ற வெப்பமண்டலக் காடுகளிலிருந்து வரும் வெயில்காரர்களுக்கு மிகவும் நடுக்கம் நிறைந்ததாக இருக்கிறது. உடலெங்கும் குளிர் ஊடுறுவி உறுப்புகளை நடனமாடவைக்கிறது. மலைமுழுக்க குளிர் மூடி நெருப்பின் கதகதப்பைத் தேடவைக்கிறது. சிம்லா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கேள்விக்கும் அனுபவத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. மிக உயர்ந்த மலைநகரம்.. மலையெங்கும் கிராமங்கள். இரவுகளில் மலைகள் முழுக்க ஒளிர்கிறது. மலைகளின் மகாராணி சிம்லா என்றால் ஏனைய கிராமங்கள் அதன் உற்ற தோழிகள். எங்கு நின்றாலும் சிம்லா நமக்கு ஒரு காட்சிமுனை தந்துவிடுகிறது. ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் காட்சிமுனைகளுக்காக இடம் ஒதுக்கி இருப்பார்கள். இங்கு அந்த தேவையில்லை. சிம்லாவில் பார்த்த ஒவ்வொரு முகமும் வட இந்திய முகங்கள். சில திபத்திய முகங்கள். மிக அன்புடன் பழகும் மக்கள். விலை அதிகமாக வைத்து சுற