இன்று நேற்று நாளை Sci-Fi Comedy
Direction | R.Ravikumar |
Starring | Vishnu Vishal, Mia George, Karunakaran, Jayaprakash |
Year | 2015 |
Language | Tamil |
Genre | Science Fiction, Comedy, Thriller |
இன்னும் யாராலும் கணக்கிட முடியாதது “காலம்”. குறிப்பாக, காலத்தின் பிறப்பு. மற்றும் வெளி (Space) இது இரண்டுக்கும் மிக நெருங்கின தொடர்பு உண்டு. கிட்டத்தட்ட கணவன் மனைவி போல. இவை இரண்டையும் இணைக்கும் கருவிதான் Time Machine. இதற்கான சாத்தியம் இல்லை (அல்லது இப்போதைக்கு இல்லை) என்றாலும் திரைப்படங்களிலோ, புத்தகங்களிலோ பேசப்பட்டே வருகிறது. டைம் மிஷின் ஏன் சாத்தியமில்லை என்றால், நம்மிடம் ஒளியை மிஞ்சும் வேகத்தில் எந்த கருவியுமில்லை என்பதுதான். நாம் பார்க்கும் நட்சத்திரங்கள், பிரபஞ்சங்கள் எல்லாமே அது கடந்த காலத்தில் உமிழ்ந்த ஒளியைத்தானே பார்க்கிறோம். ஆக நாம் வெளியெடும் ஒளியிலிருந்து மிகத் தொலைவிலிருந்து நமது கடந்த காலத்தைப் பார்க்கலாம் என்கிறது அறிவியல். இது பற்றி நிறைய பேசுவதற்கு இருக்கிறது.
ஒருவேளை அப்படியொரு டைம் மிஷின் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அது நிகழ்காலத்தில் ஒருவரிடம் சிக்கினால் எப்படியிருக்கும்? அதுதான் “இன்று நேற்று நாளை”
சொந்த தொழில்தான் செய்யவேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கும் விஷ்ணு, அவருடைய நண்பர் போலி ஜோதிடர் கருணா இருவரும் எதிர்பாராத நேரத்தில் கால இயந்திரத்தைக் காண்கிறார்கள். அதைப் பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாமல் அதனை இயக்குகிறார்கள். ஓரளவு புரிதல் கிடைத்ததும் அதைவைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறார்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வின் ஒரு சிறு கண்ணி விலகி, அது நிகழ்காலத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று புரிந்து கொள்கிறார்கள். இறுதியில் எப்படி பாதிப்பிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதே கதை (புரிகிறதா?)
காலத்தைக் கடக்கும்பொழுது ஏற்படும் சிறு மாற்றங்களை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். படம் முழுக்க ஜாலி மூடில் செல்வதால் டைம் மிஷின், ஸ்பேஸ், ட்ராவல் என்று ஒரே சைன்ஸ் வார்த்தைகளால் நிரப்பி குழப்பாமல் தெளிவாக இருக்கிறது திரைக்கதை. பெரிய லாஜிக் மீறல்கள் இல்லாதிருப்பது திரைக்கதையை எவ்வளவு தூரம் ஆழமாக செதுக்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ திரைக்கதை டிஸ்கஷன் குழுவினருக்கு.
விஷ்ணுவின் சமீப இரண்டு திரைப்படங்கள் ஃப்ரெஷாக இருந்தன. இன்று நேற்று நாளை, அவருக்கு பேசப்படும் திரைப்படம். நன்கு நடிக்கவும் செய்கிறார். மியாவுக்கு கண்கள் பெரிது. கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறார். கருணாகரன் படத்தின் டெம்போவை ஏற்றுவதில் பெரிய பங்கு வகிக்கிறார். அவர் வருகிற எல்லா காட்சிகளுமே அட்டகாசம்.. வசனம் படத்திற்கு பெரிய பலம். எடிட்டிங் செம க்ரிஸ்பாக இருந்தது. டெக்னிக்கலாக எல்லாமே அபாரம். சிஜி தேவையான அளவுக்கு இருந்தது. துருத்தவில்லை. பாடல்களுக்கு நடனம் அமைக்காமல் மாண்டேஜில் சென்றது திருப்தியைத் தந்தது
நிறைய தருணங்கள் சிலிர்ப்பானவை… எதுவும் சொல்லக் கூடாது என்றாலும் ஒன்றே ஒன்று… மியா ஜார்ஜ் குழந்தையை வாங்கி முத்தமிடும் தருணம் அபாரம்.. மைல்ட் ட்விஸ்ட் இருப்பதால் திரில்லிங்காக செல்கிறது திரைப்படம். எந்தவொரு இடத்திலும் போரடிக்கவில்லை என்பதைவிட எந்தவொரு இடத்திலும் திரில்லிங் குறையவில்லை, குறிப்பாக இரண்டாவது பாதி செம ஸ்பீடு…
படத்தின் இசையைப் பற்றி பேசமுடியவில்லை, நான் சென்ற அரங்கில் ஸ்பீக்கரே இல்லை. இனியொருமுறை பார்க்கவேண்டும்.
குறைகள் ?
பெரிதாக ஏதுமில்லை என்றாலும் சண்டைக்காட்சிகள் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கவேண்டும். சில காட்சிகளில் நடிகர்கள் சுமாராகவே செயல்பட்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகவே இயக்குனர் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
டைம் மிஷின் படங்கள் எல்லாமே ஒரேவகையான டெம்ளேட்டைக் கொண்டவை. நிகழ்காலத்திலிருந்து கடந்த/எதிர் காலத்திற்குச் செல்லலாம். ஃபிஸிக்கலாக செல்வதால் அங்கே நிகழும் நிகழ்விலிருந்து எதையும் மாற்றாமல் திரும்பவேண்டும் என்பது பொதுவான விதி. இதில் மாற்றம் ஏற்பட்டால் பின்னால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும். இது butterfly effect, chaos theory என்று பொதுவாக பல பெயர்களில் சொல்வார்கள். ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுத்திவிட்டு பின் அதை சரிசெய்வது என்பதாகத்தான் எல்லா திரைப்படங்களும் இருக்கும். இந்த படமும் அதில் விதிவிலக்கல்ல.. டைம் மற்றும் ஸ்பேஸ் இரண்டையும் வைத்து நிறைய திரைப்படங்கள் குறிப்பாக ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. Back to the Future, X-Men, Time Machine, Butterfly Effect, Source code போன்ற படங்கள் காலத்தைக் கடப்பதைப் பற்றின திரைப்படங்கள். சில படங்களில் இந்த உத்தியை ஊறுகாய் போல தொட்டுக்கொள்வதும் உண்டு. டெர்மினேட்டர் ஒரு நல்ல உதாரணம். தமிழில் இதற்கு முன்பு தாசாவதாரத்தில் கேயாஸ் தியரியைப் பற்றி கமல் சொல்லுவார், 12பி கூட ஐந்து நிமிட காலப்பயணம் பேரல்லலாக பயணிக்கும், ஆனால் முழுநீள டைம் ட்ராவல் படம் தமிழில் இதுவே முதல்!
வித்தியாசமாக படம் பார்க்கவேண்டும், வழக்கமான மசாலாத்தனம் இல்லாத தமிழ்படம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு விருந்து!!
சிறப்பான இடத்தை ரிசர்வ் செய்திருக்கும் ரவிக்குமாருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
Comments
Рпор апор апор hypoallergenic titanium earrings апор апор titanium 4000 апор апор апор ford escape titanium for sale апор апор titanium drill bit set апор апор titanium hair trimmer