அவள் (18+)

naruo

மதுக்கோப்பையில் ஊறிக்கிடந்த
அவளை என் வாயில் ஊற்றி
திமிரத் திமிரப் பருகுகிறேன்
அடங்காமல் அலைந்திருந்த
அவளது குரூரக் காமத்தை
மதுக்கோப்பைகள் தீர்த்துவிட முடியாமல்
தோற்றுப் போகின்றன
உள்ளே நுழைந்தவள்
மனதெங்கும் முடிச்சுக்களைப்
போட்டுக் கொண்டேயிருந்தாள்
அதன் கிள்ளலில்
சட்டென்று விறைத்தெழுந்தது காமம்
கண்களின் வழியே கனன்றுகொண்டிருந்த
அவளின் மூச்சுக்காற்றை
பின்புறம் நெளிந்து படுத்துக் கிடந்த
மனைவியினைப் புணர்வுக்கிழுத்து
யோனிக்குள் நுழைத்தேன்.
அலறிக் கொண்டிருந்தாள்
அவள்.

நன்றி : Google Images, Uyirmmai.com

Comments

அன்பின் ஆதவன்! நல்ல கவிதை எழுதி இருக்கீங்க! இது ஒரு நல்ல தத்துவத்தை சொல்கிறது! தீய நடத்தை உள்ள ஒரு பெண்ணை, மனதினுள் நினைத்துக்கொண்டு, நம்மையே நினைத்து வாழும் மனைவியை சமயத்தில் துன்பப்படுத்தி விடுகிறோம்!




உடலால் மட்டுமல்ல மனத்தால் செயாதாலும் அது துரோகம் தானே! நண்பா உங்கள் கவிதை அருமை!
மேம்போக்காய் படித்தால் விவகாரமாக தோன்றும் கவிதை. பொருள்பட படித்தால்...ம்.... ஆதவா உங்களின் வளர்ச்சி மிளிர்கிறது.
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.