Rio : பறக்கவியலா பறவையின் அட்வெஞ்சர்
Direction | Carlos Saldanha |
Starring | Jesse Eisenberg, Anne Hathaway, George Lopez |
Cinematography | Renato Falcão |
Studio | Blue Sky Studios |
Year | 2011 |
Language | English, Portuguese |
Genre | Animation, Comedy |
Blue Sky Studio இன் ஐஸ் ஏஜ் படங்களில் பெரும்பாலும் தேடலும், தவிப்பும், இடப்பெயர்ச்சியும் முக்கிய கதைக்காரணிகளாக இருக்கும். தேடலின் வழியே நகைச்சுவையும் பரிதவிப்பும் மிக அழகாகப் பொருத்தி திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஐஸ் ஏஜின் மூன்று திரைப்படங்களும் ஒன்றையொன்று விஞ்சியதாகவே இருக்கும். ப்ளூ எனும் ஒரு அரிதான பறவையைச் சுற்றி நிகழ்வும் வாழ்க்கையும், அன்பும் பாசமும் தேடலுமே ரியோ படத்தின் மொத்தக் கதையுமே,
செம்மூக்குப் பறவை, ப்ளூ, மற்றும் ஜ்வெல்.
புக்ஸ்டோர் நடத்தும் லிண்டாவுக்கு (Linda) ப்ளூ எனும் அரிதான பறவை கிடைக்கிறது. அந்த பறவைக்கோ பறக்கத் தெரியாது. பறக்க முயற்சித்தும் பலனில்லை. இச்சூழ்நிலையில் டுலியோ (Túlio) எனும் ப்ரேசில் நாட்டு பறவைகள் ஆராய்ச்சியாளர் லிண்டாவைத் தேடி வருகிறார். ப்ளூ தான் அதன் இனத்தின் கடைசி ஆண்பறவை என்றும், அதனை தன்னுடன் இருக்கும் பெண்ணுடன் சேரவிட்டால் இனம் செழிக்கும் என்று மன்றாடுகிறார். கொஞ்சம் யோசித்து பிறகு ஒத்துக்கொண்டு லிண்டாவும் ப்ளூ பறவையும் ப்ரேசிலுக்குச் செல்லுகிறார்கள்.
டுலியோவின் ஆராய்ச்சிக் கூடத்தில் வனச்சூழ்நிலைமிக்க ஒரு அறையில் அடைபட்டு வெளியே போகத்துடிக்கும் பெண் பறவை ஜ்வெல் (Jewel) உடன் ப்ளூவுக்கு சினேகம் கிடைக்கிறது. பார்த்தவுடனேயே காதலில் மயங்கி விழும் ப்ளூவை ஜ்வெல் கண்டுகொள்ளாமல் வெளியே போகத் துடிக்கிறது. இவர்கள் இருவரையும் தனித்துவிட்டு லிண்டாவும் டுலியோவும் டின்னருக்குச் செல்கிறார்கள். இச்சமயத்தில் பறவைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலொன்று ப்ளூ மற்றும் ஜ்வெல் பறவைகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது. இதை ப்ரேசில்நாட்டு சிறுவன் ஒருவனும் வெண்கிழட்டுப் பறவை ஒன்றும் ஈடுபடுகிறது. கொள்ளையர் தலைவன் பல அரிதான பறவைகளைத் திருடிக் கொண்டு வந்து வெளிநாட்டுக்கு விற்பவன்!!
புல்டாக், மஞ்சள் குருவிக்குஞ்சு, மற்றும் செந்தலைப் பறவை
கொள்ளையர் கூண்டில் ஒன்றோடொன்று சங்கிலியால் கட்டப்பட்டு கிடக்கும் ப்ளூவும் ஜ்வெல்லும் அங்கிருந்து தப்பிக்க முயலுகின்றன. அவைகளை வெண்கிழட்டுப் பறவை துரத்துகிறது. முடிவில் ஒரு காட்டினுள் தஞ்சமடைய, அங்குள்ள செம்மூக்குப் பறவையை சந்திக்கின்றன. தங்களது காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அவிழ்த்துவிட உதவிசெய்யுமாறு இருபறவைகளும் கேட்கின்றன. அச் செம்மூக்குப் பறவையோ தன்னால் முடியாது என்றூம் தனது நண்பன் லூயிஸ் எனும் புல்டாகினால் முடியும் என்று அழைத்துச் செல்கிறது. ப்ளூவுக்கு பறப்பது எப்படி என்று சொல்லித் தரவும் செய்கிறது. எனினும் ப்ளூவால் பறக்க இயலுவதில்லை.
இச்சூழ்நிலையில் வெண்கிழட்டுப் பறவை தனது கொள்ளையர் தலைவனின் உத்தரவுப்படி இரு பறவைகளையும் தேடிவருகிறது. ப்ரேசிலின் ஒரு குரங்குவகையொன்று அங்குவரும் சுற்றுலாப் பயணிகளிடம் “ஆட்டையைப்” போடுவதில் கில்லாடிகள். பறவைகளைக் கண்டுபிடிக்க அவைகளிடம் மிரட்டி பொறுப்பை ஒப்படைக்கிறது வெண்கிழட்டுப் பறவை. ஒரு பறவைகள்
“சம்பா” கிளப்பில் இரு பறவைகளையும் கண்டுகொண்டு அங்கே பிடிக்க வருகின்றன குரங்குப் படைகள்.. இருப்பினும் அங்கிருக்கும் பறவைகளின் உதவியுடன் தப்பிக்கின்றன ப்ளூவும் ஜ்வெல்லும். இதே நேரத்தில் லிண்டாவும் டுலியோவும் ப்ரேசிலின் ரியோ நகரம் முழுக்க போஸ்டர் ஒட்டவைத்து பறவைகளைத் தேடிவருகின்றனர். பறவைகளை முதலில் களவாடிய ப்ரேசில் சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு இருவருக்கும் உதவுகிறான்.
செம்மூக்குப் பறவையும் அதன் நண்பர்களும், ப்ளூவும், ஜ்வெல்லும், இறுதியில் ஒரு புல்டாக்கை சந்தித்து காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அவிழ்த்துக் கொள்கிறார்கள். ஒரு சின்ன காதல் புரிதல் சண்டையில் பிரிந்து ஜ்வெல் பறந்து செல்கிறது. (ப்ளூவால் பறக்க இயலாதே!) அச்சமயம் பார்த்து வெண்கிழட்டுப் பறவை ஜ்வெல்லை சிறைபிடிக்கிறது. இதனை அறிந்து கொண்ட ப்ளூ, ஜ்வெல்லைக் காப்பாற்ற விரைந்தோடுகிறது. ஆனால் அதுவும் மாட்டிக் கொள்கிறது. லிண்டாவும் டுலியோவும் கொள்ளையர் கூட்டத்தையும் தமது பறவைகளையும் கண்டுபிடித்துவிடுகிறார்கள், அவர்கள் சென்று பிடிப்பதற்குள் கொள்ளையர் தலைவன் விமானத்தில் ஏற்றிச் சென்றுவிடுகிறான்.
இதிலிருந்து எப்படி ஜ்வெல்லும் ப்ளூவும் தப்பிக்கிறார்கள், பறக்கவேமுடியாத ப்ளூ, எப்படி விமானத்திலிருந்து தப்பிக்கப் போகிறது? கொள்ளையர் தலைவன் என்னாகிறான் என்பது பரபரப்பான கிளைமாக்ஸில்!!
வெண்கிழட்டுப் பறவையும் “திருட்டுக்”குரங்குகளின் இராஜாவும்
கார்டூன் படமென்றாலே இந்தியர்களுக்கு ஒருவித புரிதல் இருக்கிறது. அவைகள் குழந்தைகளுக்காக மட்டுமே படைக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் உண்மையில் கார்ட்டூன்கள் பின்னவீனத்துவக் கதைகளைக் கொண்ட, குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களுக்கெனவே படைக்கப்படுகின்ற அருமையான திரைப்படங்கள். எந்தவொரு படங்கள் சோடை போனாலும் அனிமேஷன் படங்கள் மட்டும் சோடைபோனதே கிடையாது. ஏனெனில் அதன் பின்னுள்ள கடுமையான உழைப்பு மற்றும் நேர்த்தி. கூடவே அதனிடையே இழைந்தோடும் பரிதவிப்பும் பாசமுமிக்க திரைக்கதை.
ரியோ படம் முழுக்க ப்ரேசிலின் ரியோ நகர அழகையும் கார்னிவல் பிரம்மாண்டத்தையும், மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். ப்ளூ முதன் முதலாக ஜ்வெல்லைப் பார்க்கும் அந்த செயற்கை வனச்சூழ் சிறை இருவரையும் இணைக்கும் விதமாக டிஸ்கோ பாடல்கள் ஒளிரும் கண்ணாடிக் கோளம் என பறவைகளுக்கான இன்னொரு உலகை மனித கொண்டாட்ட காரணிகளோடு இணைக்கும் விதம் அனிமேஷன் படங்களுக்கேயுண்டான உத்தி. ஒன்றிரண்டு சேஸிங் காட்சிகள் பிரமாதம், குறிப்பாக ரியோவின் ஸ்லம் ஏரியாவில் லிண்டாவையும், டூலியோவையும் மோட்டார் வண்டியில் கூட்டிச் செல்லும் சிறுவனின் காட்சி மிகப்பிரமாதம், அதன்ப்பின்னர் ப்ளூவை பறக்க வைக்கும் முயற்சியும், அது தோல்வியடைந்து ப்ரேசில் கடற்கரையில் செய்யும் அமளியும் (குறிப்பாக ஒரு பெண்ணின் புட்டத்தில் பந்து விழுந்து எகிறுவதும் ) கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகப்பிரமாதம். இவர்களின் நண்பர்களாக வரும் செந்தலைப் பறவையும், மஞ்சள் குருவிக்குஞ்சும் திரைக்கு வெளியேயும் பறக்கின்றன.
லிண்டாவின் பரிதவிப்பு முந்தைய படங்களைப் போல (ஐஸ் ஏஜ் ஒன்) அழுத்தமாக இல்லாவிடினும் நகைச்சுவையும் களேபரக் காட்சிகளும் அதனைக் குறைக்கச் செய்கின்றன. குரங்குகளின் சேஷ்டைகளும் அவை ஆட்டையப் போடும் விதமும் மனித திருடர்களை மிஞ்சி நிற்கின்றன. அதன் வடிவமும் முழியும் நகைச்சுவைக் கூட்டும் படைப்பு. குரங்குகளின் இராஜாவாக வரும் ஒரு குரங்கு கைகளில் தங்க ப்ரேஸ்லெட்டுகளையும் வயிற்றும் கடிகாரத்தை ஒட்டியானம் போல கட்டியிருப்பதும், பறவைகளைத் தேடுவதற்கு, மனிதர்களிடமிருந்து களவாடிய பைனாகுலர், டி.எஸ்.எல்.ஆர் கேமராவும், டச் ஸ்க்ரீன் மொபைலும் பயன்படுத்துமிடங்கள் அதீத நகைச்சுவை இழையும் காட்சிகள்!!
என்னதான் அனிமேஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக இருந்தாலும் பிக்ஸாரின் தரம் எனக்குத் தெரியவில்லை. பறவைகள், ரியோ நகரக் காட்சிகள், கார்னிவல் கொண்டாட்டங்கள், பறவைகளின் இறகுகள், புல்டாக்கின் வாயில் ஒழுகும் ஜலவாய் முதற்கொண்டு சிறப்பாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஏதோவொன்று குறைகிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.
படம் பார்க்கும் பொழுதே நினைத்தேன் ப்ளூவுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பது ஜெஸி எய்ஸம்பர்க்காகத்தான் (Jesse Eisenberg) இருக்குமென்று. ஏற்கனவே சோஷியல் நெட்வொர்க்கில் வார்த்தைகளை மிக்சியில் போட்டு அரைப்பது போல அந்த ஸ்பீடில் பேசினவர் இந்த படத்தில் பரவாயில்லை, கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். ஜ்வெல்லாக வருபவர் அன்னி ஹதாவே.. இவரை கொஞ்ச நாட்களாகத்தான் பார்த்துவருகிறேன். இருப்பினும் இவருக்குப் பதில் ரீஸ் விதர்ஸ்பூனைப் போட்டிருக்கலாம்… அல்லது லிண்டாவுக்கு…
குழந்தைகளுடன் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். 3D யில் பார்க்கமுடிந்தால் நிச்சயம் பாருங்கள்!! நகைச்சுவைக்கும் ரசிப்புத் தன்மைக்கும் நான் கியாரண்டி!!
Trailer
Comments
நல்ல paradox..
அடுத்த உலககோப்பைக்கு முன்னாடியே எழுதிட்டீங்க......
//படம் பார்த்து விட்டேன் நண்பரே,இதை விட rango மிக அருமையாக உள்ளது//
பாருங்க இதான் என்ன மாதிரி..(நீங்களும் ஜாயின் பண்ணிக்கலாம்) குழந்தைகளுக்கும் மோகன் மாதிரி பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசாம்..எனக்கு எல்லா அனிமேசன் படங்களும் பிடிக்கும்
(By the way, நம்ம மோகன் பெரிய Special effects artist. பல ஹாலிவூட் படங்களில் வேல பார்த்திருக்கிறார் - பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுனால அந்த கண்ணோட்டத்திலதான் இந்த படங்கள பாப்பார்..வேற ஒண்ணுமில்ல...)
பகிர்வுக்கு நன்றி நண்பா