மினி பைனல்: இந்தியா vs ஆஸ்திரேலியா
மொத்தமிருந்த நான்கு போர்களில் முதலாவது போர் நேற்று முடிவுக்கு வந்துவிட்டது.
முதலாவது சரக்கு முடிவு (குவாட்டர் பைனல்!! )
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான்
இந்தியாவுடனான போட்டியில் விளையாடாமலிருந்த கெய்லும் கேமர் ரோச்சும் இம்முறை பங்கேற்றனர். பழைய ரெக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்ததில் ஏதோ தப்பித்தவறிதான் பாகிஸ்தான் ஜெயித்திருக்கிறது என்றாலும் குரூப் ஏ பொறுத்தவரையில் இரண்டு பெரிய அணிகளைத் தோற்கடித்த பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஒரு சுண்டைக்கா டீம்.
ஆரம்பம் முதலேயே பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் போல இருந்தது.. அதற்கேற்றவாறு மிக முக்கிய வீரர்களான கெயில், ஸ்மித், ப்ராவோ ஆகிய மூன்று பேரும் சீக்கிரமாகவே நடையைக் கட்டினார்கள்!!! கெயிலாவது பரவாயில்லை இரண்டு ஃபோர் அடித்தார்... பிராவோ அதைவிட.... வந்த மூணாவது பாலில் டக்கு!! பத்து ஓவருக்கு 18 ரன்கள் 3 விக்கெட்..... குவார்டர் பைனல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு “குவாட்டர்” அடித்து ஆடினார்களா விண்டீஸ்?? பாகிஸ்தானின் பவுலிங் பிரமாதம்… ஹஃபீஸ் ஓவரில் திணறினார்கள். குறிப்பாக சந்தர்பால்... ஏதோ டெஸ்ட் ஆடுவது போல எல்லா பாலையும் ஸ்ட்ரோக்கிக் கொண்டிருந்தார்... இறங்கிக் கத்தவேண்டும்போலத் தோன்றியது “வெஸ் இண்டியன்ஸ்!!!! இப்ப நீங்க ஆடிட்டி இருக்கிறது வார்ம் அப் மேட்ச் இல்ல.... குவார்டர் பைனல்!!!!”
சந்தர்பால் சர்வான் ஜோடி கொஞ்சநேரம் நிலைத்தாடினாலும் பாகிஸ்தானின் மந்திர சுழலில் காணாமல் போனது இவர்களது பார்ட்னர்ஷிப். வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டேயிருந்தன. வெஸ்ட் இண்டீஸின் இந்த ஆட்டம் படுமோசமான ஆட்டம். காலிறுதியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பில் விளையாடியதைப் போலத் தெரியவில்லை. நாலாம் தர அணியைப் போல ஆடியது. எந்தளவுக்கு மெதுவாக விளையாடியதோ அதற்கு நேர்மாறாக சீக்கிரமாகவே விக்கெட்டுகள் விழுந்தன. இதெல்லாவற்றையும் சந்தர்பால் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… வேற வழி?
முதல் முப்பந்தைந்து ஓவருக்கு ரசாக் வரவேயில்லை. சயித் அஜ்மலை பாகீஸ்தான் மறைத்து வைத்து வெளிப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். பாகிஸ்தானின் பவுலிங் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருப்பது போலத் தோணுகிறது. ஒருவேளை ஆஸியை நாம் வென்றாலும் பாகிஸ்தானை வெல்வதுதான் கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன்!!!
எப்படியோ விண்டீஸ் 112 க்கு ஆலவுட்!! சந்தர்பால் மட்டும் அவுட் ஆகாமல் நின்றுகொண்டிருந்தார்.. 106 பாலுக்கு வெறும் 46 ரன்களே எடுத்திருந்த அவர் ஸ்லோயஸ்ட் ஃபிஃப்டிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்... வந்தவரெல்லாம் சென்றுவிட்டால் சந்தர்பால் ரன் அடிக்க இடமேது??
அப்ரிடிக்கு 4 விக்கெட்டுகள்!!
மனுஷன் மேன் ஆப் த சீரியஸ் வாங்கிவிடுவார் போலிருக்கே??
பிறகென்ன ஹஃபீஸும் கம்ரான் அக்மலும் சேர்ந்து விக்கெட்டே இல்லாமல் அடித்த ஜெயித்த கதையை நான் எழுதவேண்டுமா என்ன??
இந்த தோல்விக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பக்கம் பல மாற்றங்கள் வரலாம்... சிலர் அணியிலிருந்து தூக்கப்படலாம். கேப்டன்கள் மாறலாம்....
வெஸ்ட் இண்டீஸின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் நிச்சயம் அதன் ஸ்திரமில்லாத பேட்டிங் தான் முன்னுக்கு வருகிறது. ஸ்மித் மட்டுமே உறுப்படியாக ஆடிய மனுஷன். ஆனால் முக்கியமான இந்த மேட்சில் ஆடாமல் விட்டது மிகப்பெரிய ஏமாற்றம்... லீக் முழுக்க ஆடாமல் காலிறுதியில் ஆடிய சந்தர்பால், இந்த தொடர் முழுக்க ஏமாற்றிய கெய்ல், இடியடி அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட், சர்வான் போன்ற எந்த முண்ணனி வீரர்களும் ஆடவில்லை... பிறகெங்கே காலிறுதியிலிருந்து முன்னேற??
ஆனால் வெஸ்ட் இண்டீஸின் பவுலிங் டிபார்ட்மெண்ட் மிக அருமையாக இருந்தது. இந்தியாவுக்கெதிராக இறக்கப்பட்ட ரவிராம்பால் ரொம்பவும் சவாலாக இருப்பாரென எதிர்பார்த்தேன். “நானும் பதினொண்ணிலொண்ணு” என்று சொல்வதைப் போல சுத்தமாக எடுபடாமல் போனார்.. ரோச் மற்றும் பென் ஆகியோர் லீக் போட்டிகளில் அசத்தினார்கள். கேப்டனும் நன்றாகத்தான் வீசினார். கேப்டனைச் சொல்லி குறையொன்றுமில்லை. பேட்ஸ்மென்கள் ஒழுங்காக ஆடாததற்கு அவர் என்ன செய்வார் பாவம்!!!
பாகிஸ்தான், பேட்டிங்கை விடவும் பவுலிங்கில் நல்ல பலமாக இருக்கிறது. தவிர, அவர்களது ஸ்பின்னிங் டிபார்ட்மெண்ட் ரொம்பவும் வலுவாக இருப்பதால் அரையிறுதியில் இந்தியா (அல்லது ஆஸி) திணறக்கூடும்... ஆஸ்திரேலியாவாக இருந்தால் ஸ்பின்னுக்கு ரொம்பவும் திணறுவார்கள். அப்ரிடியின் பவுலிங் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஹஃபீஸ், அஜ்மல் போன்றவர்கள் நன்கு பவுல் செய்கிறார்கள். குறிப்பாக அஜ்மல் தூஸ்ராவில் எதிரணியை திணறவைக்கிறார்.
சோ, அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது பாகிஸ்தான்.. இது கடந்தகால கசப்புகளிலிருந்து மனதளவில் அவர்களை மிகவும் தேற்றியிருக்கும். 12 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதி செல்வதால் கோப்பை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இன்று ஒரு மினி பைனலுக்காகக் காத்திருக்கிறது. பழைய ஹிஸ்டரிகளைப் புரட்டிப் பார்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம். இன்றைய ஃபார்ம் என்ன என்பதுதான் கணக்கு. இரண்டுமே பெரிய மலைகள். இரண்டிலொன்று இன்றிரவு வெளியேறுவது நிச்சயம். ஆக, போட்டி மிகவும் சுவாரசியமானது….
கவனிக்கப்படவேண்டியவர்கள்:
சச்சின் : நூறாவது சதம், சிறப்பான ஃபார்ம்
யுவ்ராஜ் : தொடர் முழுக்க நல்ல ஆல்ரவுண்டராக வருவது
அஸ்வின் : கேரம் பால் உத்தி
பாண்டிங் : முக்கிய மேட்சுகளில் முக்கிமுக்கி அடிப்பது
ஹஸி : மிகச்சிறந்த மேட்ச் வின்னர்
ஜான்ஸன் : மிரட்டும் வேகம். சேவாக் கவனம்!!
இன்றிரவு இந்திய ரசிகர்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கலாம்...
அது
ஆனந்தக்கண்ணீரா? இல்லை
அழுவாச்சிக் கண்ணீரா???
என்பதுதான் கேள்வி!!!
படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : http://www.espncricinfo.com
Comments
WhatsApp Mac Crack
Stellar Data Recovery Crack
Omnisphere Mac Crack
The Bat Professional Crack
Parallels Desktop Crack
DriverMax Pro Crack
Cyberlink PhotoDirector Mac Crack
GraphPad Prism Crack
iMazing Crack
Reading your blog entries is an excellent idea. Thank you for thinking about so many people like myself and I wish you all the very best in your career.
bartender crack
dragon naturally speaking torrents
flvto youtube downloader crack
euro truck simulator 3 download