இலங்கையின் மிரட்டல்: பயத்தில் இந்தியா
சனிக்கிழமை இலங்கை ஆடிய ருத்ரதாண்டவம், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு மிகப்பெரிய சவாலை எடுத்துரைப்பதாக இருந்தது. தொடரின் ஆரம்பம் முதலே ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் இலங்கை நல்ல வலுவான நிலையில் இருந்துவருகிறது. அதிலும் இங்கிலாந்துடனான காலிறுதியில் ஒரு விக்கெட் கூட போகாத நிலையைப் பார்க்கும் பொழுது, முன்பு ஒருமுறை நமது அணி நானூறைக் கடந்தும் சேஸிங்கில் இலங்கையும் நானூறைக் கடந்ததே, அதுதான் ஞாபகத்திற்கு வந்தது. தனது நிலையை இலங்கை மிக வலுவாகக் காட்டியிருக்கிறது. ஒருவகையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தவும் இருக்கலாம்!!
இங்கிலாந்தின் பலவீனம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்புவதும், வேகப்பந்து எடுபடாததும்தான். இருப்பினும் ட்ராட்டும் மோர்கனும் மிடில் ஆர்டரை நன்கு பார்த்துக் கொண்டனர். பந்துவீச்சுதான் படுமோசமாகிவிட்டது. ஒருவேளை கொலிங்வுட்டும் ஓய்வுபெற்ற ஃபிளிண்டாப்பும் இருந்திருந்தால் அட்லீஸ்ட் விக்கெட்டையாவது தூக்கியிருக்கலாம்…
இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுக்கும் கேப்டனும் ஒரு தேவையில்லாத ஷாட்டில் பெல்லும் சீக்கிரமே நடையைக் கட்டிவிட பொறுப்பு, ட்ராட்டுக்கும் பொபாராவுக்கும் இருந்தது. ட்ராட்டும் பொபாராவும் விட்டால் ஆளில்லை. அதனால் கொஞ்சம் ஸ்டாண்ட் செய்ய அடித்து ஆடாமல் விக்கெட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஆடினர். இருப்பினும் இலங்கையின் சுழற்பந்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. சீக்கிரமே பொபாரா கழண்டுவிட மோர்கன் நல்ல பொறுப்பான ஆட்டத்தைக் கொடுத்தார். ட்ராட்டின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன்... வெகு சீக்கிரமாக்வே ஆயிரத்தைநூறு ரன்கள் எடுத்த சாதனையை ஆம்லாவோடு பகிர்ந்து கொண்டுள்ளவர்.... இந்த உலகக் கோப்பையின் 6 அரைசதங்கள் (ஒரு போட்டியில் 47!!) உட்பட அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். மொத்தம் ஆடிய 7 இன்னிங்க்ஸில் 422 ரன்கள்!! மிகச்சிறப்பான ஃபார்ம்!! நான் முன்பே சொன்னது போல, இங்கிலாந்தின் மிகப்பெரும் விக்கெட் ட்ராட். ஐரிஷ் காரரான மோர்கனும் தென்னாப்பிரிக்ககாரரான ட்ராட்டும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்ததால் இங்கிலாந்து ஓரளவு ரன்களைச் சேர்க்க முடிந்தது. 96 பாலுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தை வலுவாக்கியது
மோர்கனுக்குப் பிறகு ப்ரயர் வருவார் என எதிர்பாக்கையில் வந்தது ஸ்வான்!! வந்தவுடனே ரிவர்ஸ் ஸ்வீப்பில் எல்.பி!! இவ்விடத்தில் எனக்கொரு சந்தேகம் இங்கிலாந்து ஏன் ஸ்வானை இறக்கிவிட்டது?? மெண்டிஸின் கேரம்பாலால் ப்ரயார் போய்ச்சேராமல் இருக்கவா?? முக்கி முக்கி 229 ரன்களை மட்டுமே ஆங்கிலேயர்களால் எடுக்க முடிந்தது. ஏனெனி;ல் அவ்வளவு வலுவான நெருக்கமான பந்துவீச்சு இலங்கையிடம் இருந்தது.
இந்த ஸ்கோர் இலங்கைக்கு சவாலானதல்ல. ஓபனர் டில்ஷானும், சங்ககராவும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் எளிதில் இந்த ஸ்கோரை அடித்து விடமுடியும் என்றாலும் இலங்கை மைதானங்களில் இரவு ஒளிவெள்ளத்தில் சற்றே கடினமான சேஸிங் என்று சொல்லலாம். ஆனால் நடந்ததோ வேறு.. சங்ககராவை மைதானத்துள்ளே வரவிடவில்லை டில்ஷானும் தரங்க வும்.. இருவரும் மாறி மாறி அடிக்க, இலங்கையின் அடித்தளம் நல்ல வலுவாகச் சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்தின் பந்துவீச்சு மட்டமாக இருந்தது.. அவுட் சைட் ஆஃப் ஸ்டம்புக்குத்தான் குறிவைத்தார்கள். எல்லாமே பவுண்டரிகளைக் கடந்து ரன்விகிதம் சீராக உயர்ந்து கொண்டிருந்தது.
இங்கிலாந்துக்கு டில்ஷானும் தரங்காவும் டபுள் ஸ்ட்ரைக்கில் சென்றிருந்தாலொழிய இங்கிலாந்தைக் காப்பாற்றவியலாது! அரையிறுதியின் மற்ற ஆசிய அணிகளுக்கு “கிலி” ஏற்படுத்தும் துவக்கம் இது!! இங்கிலாந்தின் வழக்கம், அடிவாங்கி பிறகு அடிப்பது... ஆனால் இலங்கையிடம் அடி மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தது சேஸிங்கிலேயே சிறப்பான துவக்கம் எனில் இலங்கையின் பந்துவீச்சு கட்டுப்பாடு பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது!!! இந்தியா, பாகீஸ்தான், இலங்கை அணிகளிடையே பயங்கர போராட்டமிருக்கும்!! இருவரும் இன்னும் இரண்டு போட்டிகளில் இப்படியொரு துவக்கத்தைத் தந்தால் மற்ற அணிகள் வெறூம் கனவு மட்டும் கண்டுகொண்டிருக்கலாம்!!!
ஸ்ட்ராஸைப் பார்க்கும் பொழுதெல்லாம் ரொம்ப பாவமாக இருந்தது, பயபுள்ளைக்கு ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். 230 ரன்னையும் முதலிரண்டு விக்கெட்டுகளே எடுத்தது மிகப்பெரிய வேதனை!!
நியூஸிலாந்தாவது சமாளிக்குமா அல்லது ஒரு பெரிய அப்செட் கொடுக்க காத்திருக்குமா???
தெரியவில்லை. பார்ப்போம்!!
படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : http://www.espncricinfo.com
Comments
எழுத்து பிழை சார்,மூத்திர தாண்டவம் என்று சொல்லி இருக்கலாம் பொருத்தமாக இருந்திருக்கும்,
இவ்வளவு கேவலமான பீல்டிங்கை நான் வெறு எந்த மாட்சிலும் பார்க்கவில்லை
இங்கிலாந்தை தவிற வேறு எந்த டீமோடும் விளையாடி இருந்தால் இலங்கை மண்ணை கவ்வியிருக்கும்
அல்வாதுண்டு போன்ற மூன்று கேட்ச்களை மிஸ்பன்னியது,ஒரு ரன்னவுட் மிஸ்,மகா மட்டமான பீல்டிங்,இதை பார்த்து வெறு எதிரணிக்கு பயம் வந்திருக்குமாம்,கண்டிப்பாய் ஜெயித்துவிடலாம் என்கிற தன் நம்பிக்கை வந்திருக்கும்,
ரொம்பவும் பில்டப் கொடுக்காமல் நேர்மையை எழுதினால் நன்றாக இருக்கும்
dont be such a fool
senthil, doha