அய்யய்யோ!! காலிறுதியில் இந்தியா
எப்படியும் காலிறுதியில் போய்விடுவோம் என்று தெரியும். ஆனால் அங்கிருந்து அரையிறுதிக்குப் போவோமா என்பதுதான் இப்போது கேள்வியே. ஏனெனில் அடிபட்ட சிங்கம் ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடும். ஆனால் போராடியே ஜெயிக்கும் நாம் சறுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா ஒருவேளை ஆஸியை ஜெயித்துவிட்டால் பைனல் கன்ஃபர்ம். ஒருவேளை தோற்றுவிட்டால் ஆஸிக்குத்தான் கோப்பை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்!
வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் சேவக் மற்றும் சச்சினின் ஆட்டமில்லாத இந்தியரின் ஆட்டம் புன்னகைக்க வைத்தது. அவர்களையே இதுவரை நம்பியிருந்த அணி, இப்பொழுது யுவ்ராஜை நம்பியிருக்கப் போகிறது. யுவ்ராஜின் எழுச்சியும், அதிர்ஷ்டமும் அணிக்கு மிக நல்லது. ஆனால் அவர் அதை இன்னும் மூன்று போட்டிகளில் காண்பிக்கவேண்டும். அதேசமயம், மோசமான பேட்டிங் முறையில் விக்கெட்டைப் பறிகொடுக்கும் கேப்டன் தோனியைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது. கேப்டன் ஆனாலே பேட்டிங் திறம் பறிபோய்விடுகிறது போல… குறிப்பாக இந்தியர்களுக்கு. தோனி நேற்று வீணாக இறங்கி வந்து அவுட் ஆனார்… எங்கே சார் போச்சு உங்க ஹெலிகாப்டர் ஷாட்? கோல் திரும்பத் திரும்ப பவுல்ட் ஆவது சரியில்லை. இருப்பினும் பரவாயில்லை ரக ஆட்டம். ரெய்னாவை ரொம்பவும் எதிர்பார்த்தது தவறு!!! பதான்???? அடுத்த மேட்சில் இருப்பாரா என்று தெரியவில்லை. பவுலிங்கும் எடுபடவில்லை.
முதல் ஓவரை மட்டுமல்ல, முழுமையாகவும் பவுலிங் செய்தது அஸ்வின் மட்டுமே.. துல்லியமான பவுலிங்கில் ஜாஹீர் அசத்தி வருகிறார்.இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஜாஹீர் பவுலிங்கில் இரண்டாமிடத்தில் இருப்பது மனதளவில் மற்றவர்களுக்கு அச்சமேற்பட வாய்ப்பிருக்கிறது. அஸ்வினை ஒரு பிரம்மாஸ்திரம் போல தோனி மறைத்து வைத்திருந்ததற்கு அவரின் கேரம் பால் பந்துவீச்சு முறைதான் காரணம். இலங்கையில் மெண்டிஸ் போல அஸ்வின் கேரம் பால் எனப்படும் முறையில் வீசுகிறார். ரொம்ப தெளிவாகச் சொல்லவேண்டுமெனில் ஆஃப் ஸ்பின் போல லெக் ஸ்பின் போடுவது. பந்துவீச்சுப் பணி முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றெல்லாம் சமாதானம் சொல்லிவிடமுடியாது. ஏதோ பரவாயில்லை எனலாம். 150 ரன் வரை மூன்று விக்கெட்தான் போயிருந்தது. 188 க்கு ஆல் அவுட்…. ஆஸ்திரேலியாவாக இருந்தால் இப்படி பொல பொலவென விழாது என்பதை நினைவில் கொள்ளவும். ஆக, ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். பேட்டிங் வரிசையும் பலமானதுதான். ஹர்பஜன் சென்ற போட்டிகளைக் காட்டிலும் ஓரளவு பிரமாதம் எனலாம்… தொடர்ந்து ஆல்ரவுண்டராக வரும் யுவ்ராஜை நிச்சயம் பாராட்டலாம்!!
ஆஸியுடனான டீமில் சேவாக் வந்துவிடுவார் எனில் பதானைத் தூக்க வாய்ப்பிருக்கிறது. முனாப் அல்லது நெஹ்ரா மற்றும் அஸ்வின் தொடர்வார்கள். ரெய்னாவுக்கு வாய்ப்பு தரலாம். பதானுக்குக் கொடுத்தது போதும்.
போனது போகட்டும். இனி என்ன செய்யலாம்.!! ஆஸ்திரேலியா ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டதாலும் நாக் அவுட் போட்டி என்பதாலும் கடுமையாகப் போராடும். அப்படி போராடும் குணம் ஹஸியின் அதிகம் உண்டு. ஹஸியை அவுட் ஆக்கினாலே போதும் ஆஸ்திரேலியாவின் முன்னேற்றம் தடைபடும்!! ஹஸியை அவுட் ஆக்க ஆஸ்திரேலியாவுக்கு மூன்று விக்கெட் போயிருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்!! போட்டி இங்கே நடைபெறுவதால் கொஞ்சம் சவுகரியங்கள் ஜாஸ்தி!
ஆஸியின் மிக முக்கிய விட்டெட்டுகள் மைக் ஹஸி, வாட்சன், கிளார்க், ஹடின்… இவர்கள் தவிர, வைட், மற்றும் பாண்டிங்கை எளிதாகத் தூக்கலாம். ஆனால் பாண்டிக்குக்கு இந்தியாவின் பவுலிங் அல்வா சாப்பிடுவது போல, அதனால் கவனம் தேவை. அவர்களது பந்துவீச்சு மிகத்துல்லியமானது என்பதை நம்மாட்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆஸ்திரேலியா என்றால் சச்சினின் பேட்டிங் அருமையாக இருக்கும். லீ, ஜான்ஸன் மற்றும் டைட் ஆகியோர் குறிப்பிடத்தக்க மனுசன்கள். சுழற்பந்து மிக வீக்கமாக இருப்பதால் அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!!
டேஞ்சர் மென்!!
சச்சின்
சேவக்
யுவ்ராஜ்
அஸ்வின்
ஜாஹீர்
ஹஸி
வாட்சன்
கிளார்க்
ஜான்ஸன்
எப்படியும் இந்தியா ஜெயிக்கும் என்பது என் கணிப்பு… அரையிறுதியில் பாகிஸ்தானுடன் போட்டி இருக்கும்!! பார்ப்போம்!!
லீக் போட்டிகளின் முடிவில்….
புள்ளிப் பட்டியல் :
Group A
Teams | Mat | Won | Lost | Tied /NR | Pts |
Pakistan | 6 | 5 | 1 | 0 | 10 |
Sri Lanka | 6 | 4 | 1 | 1 | 9 |
Australia | 6 | 4 | 1 | 1 | 9 |
New Zealand | 6 | 4 | 2 | 0 | 8 |
Zimbabwe | 6 | 2 | 4 | 0 | 4 |
Canada | 6 | 1 | 5 | 0 | 2 |
Kenya | 6 | 0 | 6 | 0 | 0 |
Group B
Teams | Mat | Won | Lost | Tied | Pts |
South Africa | 6 | 5 | 1 | 0 | 10 |
India | 6 | 4 | 1 | 1 | 9 |
England | 6 | 3 | 2 | 1 | 7 |
West Indies | 6 | 3 | 3 | 0 | 6 |
Bangladesh | 6 | 3 | 3 | 0 | 6 |
Ireland | 6 | 2 | 4 | 0 | 4 |
Netherlands | 6 | 0 | 6 | 0 | 0 |
புள்ளிவிபரங்கள் (07-03-11 வரை)
அதிக ரன்கள்
சங்ககரா | 363 |
ட்ராட் | 336 |
ஸ்ட்ராஸ் | 329 |
ஷேவாக் | 327 |
டெண்டுல்கர் | 326 |
அதிக விக்கெட்டுகள்
அப்ரிடி | 17 |
ஜாஹீர்கான் | 15 |
பீட்டர்சன் | 14 |
சவுதீ | 14 |
ரோச் | 13 |
சதம்/அரைசதங்கள்
டீவில்லியர்ஸ் | 2 / 1 |
டென் டஸ்காட் | 2 / 1 |
டெண்டுல்கர் | 2 / 0 |
டெய்லர் | 1 / 1 |
ஜெயவர்தனே | 1 / 1 |
படங்கள் மற்றும் புள்ளிபட்டியல் உதவி : Cricinfo இணையதளம்
காலிறுதி :
C | பாகிஸ்தான் | VS | வெஸ்ட் இண்டீஸ் |
D | ஸ்ரீலங்கா | VS | இங்கிலாந்து |
E | இந்தியா | VS | ஆஸ்திரேலியா |
F | நியூஸிலாந்து | VS | தென்னாப்பிரிக்கா |
அரையிறுதி (உத்தேசம்)
பாகிஸ்தான் Vs இந்தியா
ஸ்ரீலங்கா Vs தென்னாப்பிரிக்கா
Comments
எனினும் நீங்கள் கூறிய அடிபட்ட சிங்கம் பார்முலா சச்சினுக்கும் பொருந்தும்... நேற்றைய ஆட்டத்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்த சச்சின் மறுபடியும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மாட்டார் என்று நம்பலாம்...
டாஸ் மிக முக்கியமானது... டாஸ் வென்று பேட்டிங் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசம்... இந்தியாவைப் பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே வெல்ல முடியும்... ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சேசிங் எல்லாம் சான்சே இல்லை...
என்னுடைய Playing XI செலக்ஷன்:
சேவாக், சச்சின், கம்பீர், கோலி, யுவராஜ், தோணி, பதான், அஷ்வின், ஹர்பஜன், முனாப், ஜாகிர்
154 ரன் வரை இரண்டு விக்கெட் தான் போயிருந்தது...
உங்க செலக்ஷன் அருமை!! சச்சினின் கருத்தும்..... அவர் நூறாவது சதத்தை ஆஸியிடம் எடுப்பார்னு நினைக்கிறேன்.
அஷ்வினை இவ்வளவு நாள் பயன்படுத்தாமல் வைத்திருந்ததே எனக்கு வருத்தம்தான்...
அஸ்வின் ஒரு பிரம்மாஸ்திரம், அவரது கேரம் ஸ்டைல் எளிதில் மற்றவர்களுக்கு தெரியச்செய்யாமல் இருக்கவே, இந்த ஏற்பாடு என நினக்கிறேன். நிச்சயம் அஸ்வின ஒரு ட்ரம்கார்டுதான்.