அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!!

நானும் பொடிப்பயலாக இருக்கும் நாளிலிருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். எப்பொழுதெல்லாம் God of Cricket விக்கெட் விழுகிறதோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து பல விக்கெட்டுகளைத் தானமாகக் கொடுக்கும் இந்தியா.. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை 1999 காலிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் டெண்டுல்கருக்குப் பிறகு நடையைக் கட்டிய வீரர்களைப் பார்த்த பொழுது சவுட்டால் அடிக்கலாமோ என்றெல்லாம் கோபம் வந்தது!! அப்போ சின்னவயசு!!

ஏன் சார் இப்படியெல்லாம் ஆகுது? டெண்டுல்கர் என்ற தனிமனிதனைத் தவிர தொடர்ந்து ஒழுங்காக ஆடும் ஒரு இந்தியனையாவது சொல்லுங்கள்??? யோவ்… அந்தாளுக்கு 37 வயசுய்யா… ராக்கெட்ல ஏறி உட்கார்ந்தமாதிரி சும்மா போய்ட்டே இருக்காரு!! மத்தவங்கள்லாம் என்னதான் பண்றாங்க?

267 க்கு ஒன்னு… யாராச்சும் அந்த நேரத்தில கக்கூஸ் போய், இந்நேரம் இந்தியா 290 அடிச்சிருக்கும், 300…. 320…. 340 என்று கனவு கண்டு கொண்டிருந்தார்களென்றால் அவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்கள் மிடில் டூ லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்கள்!! ங்கொய்யால 13 ரன்னுக்கு 7 விக்கெட்!!! தாங்குமாய்யா?

இதில பெரிசா பேசுவாய்ங்களே…. டெண்டுல்கர் சதம் அடிச்சா டீம் தோத்துடும்பா… அட அறிவுகெட்டவிங்களா, டெண்டுல்கர் மட்டும் ஆடினா போதுமா? மத்தவங்களும் ஆடினாத்தானே டீம் ஜெயிக்கும்?? அந்தாளை ஒருபயலும் குறை சொல்லவே முடியாது!!! 37 வயசுல இப்படி ஆடின ஒரு ஆளையாவது காண்பிங்க பார்ப்போம்??

தொலைஞ்சுதுபோ… இனிமே ரசிகர்களெல்லாம் கெஞ்சுவாங்க…. டெண்டுல்கர் சார்… இனிமே அவுட் மட்டும் ஆகிடாதீங்க!! அப்படியே ஆனாலும் டீம் ஸ்கோரை 300 க்கு கொண்டுவந்துடுங்க…. இல்லாட்டினா பயபுள்ளைங்க 50 க்கே ஆல் அவுட் ஆவானுங்க….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோற்றதற்கு நெஹ்ரா மட்டுமில்லை, டெண்டுல்கர், சேவக், காம்பிர், ஜாஹிர் தவிர மற்ற அனைவரும் காரணமே!! எப்பொழுதெல்லாம் அணி, ஒன்றாக ஆடுகிறதோ அப்பொழுதெல்லாம் வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும்!

எனக்கென்னவோ, லீக் போட்டிகளெல்லாமே கொஞ்சம் ட்ரமாட்டிக்கா தெரியுது. இங்கிலாந்துகிட்டல்லாம் தோற்கிற டீமில்லை தென்னாப்பிரிக்கா!!! இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் தோற்கும் என்பதை முன்பே கூறியிருந்தேன்… ட்ரமாட்டிக்காக இருப்பது உண்மையானால் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்பது என் கணிப்பு!!!

பார்ப்போம்!!

Comments

"எனக்கென்னவோ, லீக் போட்டிகளெல்லாமே கொஞ்சம் ட்ரமாட்டிக்கா தெரியுது."

எனக்கும் கூடத்தான்
வணக்கம் சகோதரம், ஒரு தூணை நம்பி ஒரு அணியை எந்த நேரத்திலும் தக்க வைக்கலாம் எனும் அடிப்படையில் இந்தியக் கிறிக்கற் சபை செயற்படுகிறதொ என்றும் எண்ணவும் தோன்றுகிறது. காரணம் எப்போதும், எல்லா ஆட்டங்களிலும் சச்சின் நன்றாக பிரகாசிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய அணியினை துடுப்பாட்டத்திலும், போலிங்கிலும் இன்னும் நிறைய முன்னேற்ற வேண்டும்.

ஆனாலும் மச்சின் இறுதியில் தோனி சொன்ன விடயம் ‘’வீரர்கள் தங்களுக்கா விளையாடாமல் தமது நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதை உணர்ந்து விளையாட வேண்டும் என்று சொன்னார்’
இதனை எல்லா வீரர்களும் உணர்ந்தால் இந்தியாவிற்கு வெற்றி நிச்சயம் என்பதில் ஐயமில்லை.