உலகக்கோப்பை 2011: Updates (10-03-11)
வேலைப்பளு அதிகமாக இருப்பதால் அதிகம் எழுதமுடியவில்லை நண்பர்களே… சென்ற பதிவில் பின்னூட்டியவர்களுக்கு நன்றி.. அண்ட் கவனத்தில் கொள்ளுகிறேன்!!
நியூஸிலாந்து பாகிஸ்தான் போட்டியில் நியூஸிலாந்து ஜெயிக்கும் என்றே அதிகம் எதிர்பார்த்தேன். ஏனெனில் நடக்கும் ஒவ்வொரு போட்டிகளும் ஒரு அணிக்கு மேல் இன்னொரு அணி என்று ஒவ்வொன்றும் தனது திறமையை நிரூபிக்கின்றன. கொஞ்சம் ஃபிக்ஸிங் போலத் தோன்றினாலும் எந்தவொரு போட்டியையும் யாரும் எளிதில் எடைபோட்டுவிட முடியாதல்லவா? சிலசமயம் அதிர்ச்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
நியூஸிலாந்தின் அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்துவிட்டு வாயடைத்துப் போனேன். போட்ட பாலெல்லாம் சிக்ஸருக்கு விரட்டிய ரோஸ் டெய்லர், இந்தியாவுக்கு எதிராக இப்படி ஆடியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோணியது!! 47 மற்றும் 49 வது ஓவர்களில் மட்டும் மொத்தம் 58 ரன்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன!!! பாகிஸ்தான் இறுதிகட்டத்தில் ரொம்பவும் பதட்டத்தோடுதான் பந்துவீசியது. சோயப் அக்தர், எல்லா பாலையும் ஃபுல்டாஸாகவே வீசினார். அப்துல் ரசாக்கின் பந்து விக்கெட்டை எடுக்கும்படியான நேக்கில் போடப்படவேயில்லை.
பாகிஸ்தான் தோற்றதால் ஜிம்பாப்வேக்கு அடுத்து வரும் ஆஸ்திரேலியா போட்டியை ஜெயித்தாலொழிய முதலிடத்திற்கு வரமுடியாது. மாறாக நியூஸிலாந்து இலங்கையை வென்றுவிட்டால் பாகிஸ்தான் குழுவின் இறுதிக்கு வந்துவிடும்!! (குழு B யில் இந்தியா முதலிடம் பெற்றால் இந்தியா பாகிஸ்தான் காலிறுதி நடைபெறும்.)
எனது நண்பரின் கணிப்பு, இந்தியா பாகிஸ்தான் அரையிறுதியில் மோதும் என்பது!!
நேற்றைய போட்டியில் நெஹ்ரா இறங்கினார். தோனி அவருக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என்றாலும் சிறப்பான பவுலிங் நெஹ்ராவிடமிருந்து வந்தது. தற்போது இரண்டு சீமர்ஸும் மகிழ்ச்சியளிக்கிறார்கள்.. இன்னும் ஹர்பஜன் மட்டும் சுழற்றிக் கொண்டுதான் இருக்கிறார்… (இலங்கையில் முரளிதரனும் அப்படித்தான்… )
பவுலிங் ஓரளவு திருப்தியைத் தந்தாலும், பேட்டிங்கில் சொதப்பினார்கள். விரைவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பிய தோனி, அடித்து ஆட சேவக்கையும் சச்சினையும் நிர்பந்தித்தார். விரைவாக அடித்தாடும் நோக்கில் எல்லா பந்தையும் காட்டுத்தனமாக சுற்றி சேவக் அவுட் ஆனார்.. சச்சினும் முடிந்தவரை அடித்துவிட்டு கிளம்பிப் போனார்… ஒரு மாற்றலாக இறங்கிய யூசுப் பதான் ஒரு சிக்ஸர் அடித்ததோடு சரி, பயிற்சிக்காக வந்து பத்து ரன்கள் மட்டுமே எடுத்து கடுப்பேத்தினார்.. 100 ரன்கள் அடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. 15 ஓவர்களில் நூறைக் கடந்த இந்தியா அதற்கடுத்த நூறைக் கடக்க இருபது ஓவர்களுக்கும் மேலானது!!
எப்படியோ யுவ்ராஜ் புண்ணியத்தில் ஜெயித்தாலும், இந்தியா பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவ்ற்றில் ஏதோவொரு குறை இருந்து கொண்டே இருக்கிறது!!!
இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வரமாட்டேன்.. (கிரிக்கெட் பார்ப்பது நிறுத்தமாட்டேனென்பது வேறு விஷயம்..) கொஞ்சம் பொறுத்தருள்க!!!
Comments
இந்தக்குறை பெரிய டீம்கூட விளையாடும்போது என்னஆகும்ன்னு பயமாயிருக்கு.
(கிரிக்கெட் பார்ப்பது நிறுத்தமாட்டேனென்பது வேறு விஷயம்..)
கொஞ்சம் பொறுத்தருள்க!!!
எதுக்கு பொறுத்துக்கனும்?
:-)
மேலேயா? கீழேயா?