உலகக் கோப்பை 2011 : Updates (04-03-11)
Result தென்னாப்பிரிக்கா 351/5 நெதர்லாந்து 120 231 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி |
ஒரு பயிற்சி ஆட்டம் போல இருந்தது தென்னாப்பிரிக்காவுக்கு. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸுடனான மேட்சில் ஒழுங்காக ஆடாத ஆம்லா, தனது ஃபார்மை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் நெதர்லாந்து மேட்சில் தெரிந்தது. இந்த தாடிக்கார பயபுள்ள நின்றால் ஒரு சதம் அல்லாவிட்டால் அரைசதமாவது அடித்துவிட்டுப் போவது மற்ற அணியினரை ரொம்பவே பயப்படச் செய்கிறது. இவர் போகிற வேகத்தைப் பார்த்தால், சச்சினாவது ரிச்சர்ட்ஸாவது…. எப்படியோ ஆம்லா, முதல் உலகக் கோப்பை சதத்தை அடித்து தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தியிருக்க, மறுபக்கம் டீ வில்லியர்ஸின் ருத்ரதாண்டவம் மிரட்டும் வகையிலிருந்த்து. இருவரும் மாறி மாறி சதமடிக்க, நான் நினைத்துக் கொண்டேயிருந்தேன்.. எதற்கு இவ்வளவு பில்டப்?? டீ வில்லியர்ஸின் ரன் எண்ணிக்கையைக் கூட மொத்த அணியே எட்டமுடியாமல் 120 க்கே ஆல் அவுட்.. ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்தறாங்க? டீவில்லியர்ஸ் ஆடிய இரண்டு போட்டிகளிலும் சதம்!!! ங்கொய்யால!!
நெதர்லாந்தின் ஒரே ஒரு நம்பிக்கை டசாட்டே தான். அதுவும் முதல் ஆட்ட சதத்தில் சவாலான அணியாக இருக்குமென்று பார்த்தால், அடுத்தடுத்து புஷ் ஆகிவிட்டது. 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுகிறார்கள். இப்பொழுதுள்ள புள்ளிவிபரத்தின் படி கென்யாவைக் காட்டிலும் மிக மோசமான அணி நெதர்லாந்து.
இதை விடுவோம். அடுத்து பாகிஸ்தான் கனடா மேட்சைப் பார்ப்போம்.
Result பாகிஸ்தான் 184 கனடா 138 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி |
சின்ன அணியுடனான மேட்ச் என்றாலும் விறுவிறுப்பாகவும், பெருத்த ஏமாற்றத்துடனும் இருந்தது. இது பாகிஸ்தான் கனடா மேட்ச் மாதிரியே தெரியவில்லை. கனடா வீரர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவே இருந்தனர். கனடா ஒருவேளை ஜெயித்திருந்தால் இந்தியர்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் ஜெயிக்கும் சூழ்நிலையை கனடா தவறவிட்டது. பாகிஸ்தானில் உமர் அக்மலைத் (42) தவிர மற்ற அனைவரும் 20 ஐத் தாண்டுவதில் சிரமப்பட்டார்கள். மொத்த அணியே 184 ரன்களுக்குள் கனடா வீரர்கள் சுருட்டினார்கள். அது பாராட்டத்தக்கதொன்று. ஏனெனில் இதே மைதானத்தில்தான் பாகிஸ்தான் இலங்கையுடன் 277 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தானின் ஓபனர்கள் இன்னும் நிலையாக ஆடமாட்டேன்கிறார்கள். சின்ன அணிகளோடும் லீக் போட்டிகளிலும் தப்பித்துவிடலாம், அடுத்து வரும் நாக் அவுட் போட்டிகளுக்கு ஓபனர்கள் மிகவும் முக்கியம், ஆனால் அதேசமயம் மிடில் ஆர்டர் பலமாக இருக்கிறது. மிஸ்பா, உமர்குல், யூனிஸ்கான், அப்ரிடி வரை நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். மாறாக கனடா பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. 100 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த கனடா ஜெயித்திருக்க அதிக வாய்ப்பு இருந்தது. ஹன்ஸ்ரா, சர்காரி, பாகாய் போன்று சிலர் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் ரன் எடுத்திருக்கலாம். ஓபனர்களும் அதிக மேட்சுகளில் விளையாடியவர்கள் கிடையாது. அப்ரிடி பவுலிங் போட வந்தபொழுதே கனடா நொறுங்கிப் போனது. வெறும் 23 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைப் பறித்தார். அவரைப் பற்றிய ஒருசில சாதனைத் துளிகள்.
|
கிடைத்த ஒரே வாய்ப்பை நழுவிய கனடா அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதலாக ஊருக்குப் போய்ச் சேரட்டும். இன்று (04-03-11) நிகழ்ந்த “குட்டி” மேட்ச்கள் பற்றி பார்ப்போம்.
Result ஜிம்பாப்வே 162 நியூஸிலாந்து 166/0 பத்துவிக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி |
காலையில் மேட்ச் இருக்குமென்றே தெரியவில்லை. டிவியைப் ஒளித்துப் பார்த்தால் யாரும் ஆடிக் கொண்டிருக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது ஜிம்பாப்வே நியூஸிலாந்து மேட்ச் சீக்கிரமாகவே முடிந்துவிட்டது என்று. ஓரளவு சுமாரான அணியிடம் மண்ணைக் கவ்வும் நியூஸிலாந்து மட்டமான அணியைப் போட்டுத் தாக்குகிறது. இது அதன் முதல் மேட்சிலிருந்து பார்க்கலாம். ஆஸியிடம் வாங்கிய அடியை ஜிம்பாப்வேயிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறது. ஜிம்பாப்வேயோ, ஆஸியைக் கட்டுப்படுத்திய effort நியூஸிலாந்திடம் காண்பிக்காமல் விட்டுக் கொடுத்திருக்கிறது. எப்படியும் நியூஸிலாந்து ஜெயித்துவிடுவார்கள்தான், என்றாலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்ததெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்…. தவிர நியூஸிலாந்து இரண்டுமுறை 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த திறமையை பாகிஸ்தானுடனோ, இலங்கையுடனோ காட்டுவார்களா?
Result பங்களாதேஷ் - 58 வெஸ்ட் இண்டீஸ் – 59 /1 (12.2 ஓவர்கள்.) 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி |
மொத்தமே 30 ஓவர்கள்தான் வீசப்பட்டன. 117 ரன்கள் தான் இரு அணியினராலும் எடுக்கப்பட்டன. இப்படியொரு மகா கேவலமான தோல்வியை தனது மண்ணில், தனது ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கக் கூடாது பங்களாதேஷ். மேட்ச் நடப்பதற்கு முன்னர் நான் பங்களாதேஷ்தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காலிறுதிக்கு பங்களாதேஷ் வந்தால் அந்த அணி சற்று உற்சாகத்துடன் இருக்குமென்று நம்பியிருந்தேன். சொல்லப் போனால் இரண்டுபேருக்குமே இது மிக முக்கிய மேட்ச். இந்தியாவிடம் பங்களாதேஷும், தென்னாப்பிரிக்காவுடன் வெஸ்ட் இண்டீஸும் தோற்றதால் நான்காமிடத்திற்கு இவ்விரு அணிகளிடையே ஒரு போட்டி இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸிடம் அவ்விடத்தைப் பறிகொடுத்திருக்கிறது.
பழைய பங்களாதேஷைப் பார்ப்பது போல இருந்தது. மிகமோசமான ஆட்டம், தொடர்ந்து ஓவருக்கு ஓவர் விக்கெட்டுகள் என படுகேவலமான பேட்டிங், கிரவுண்ட் முழுக்க அமைதி மட்டும்தான் இருந்தது. கேப்டன் ஷாகிப், மக்களின் கோபத்தைப் புரிந்து கொண்டு வரும் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெறுவோம் என்று தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.. கடந்த இரண்டு வருடங்களில் பங்களாதேஷுக்கு இது மிகப்பெரிய தோல்வி!
இன்னும் மூன்று மேட்சுகள் பங்களாதேஷுக்குக் காத்திருக்கின்றன. அவற்றில் நெதர்லந்து மேட்ச் தவிர, மீதி இரண்டும் பெரிய மேட்சுகள். ஒன்று இங்கிலாந்துடனும் (இன்னுமா நம்பறேன்?) இன்னொன்று தென்னாப்பிரிக்காவுடனும். அதேபோல் நிலைமைதான் வெஸ்ட் இண்டீஸுக்கும். வெஸ்ட் இண்டீஸும் பங்களாதேஷும் ஒருவேளை ஒரே புள்ளியில் இருந்தாலும் ரன் ரேட்டில் வெஸ்ட் இண்டீஸ் முன்னேறிவிடும். இப்போதைக்கு இவ்விரு அணிகளுக்குள்ளும்தான் போட்டியே… இங்கிலாந்து யாரிடம் தோற்கிறதோ அவர்கள் நான்காமிடத்தை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதோடு, இங்கிலாந்தும் நான்காமிடப் போட்டிக்கு வந்துவிடும்!! பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போதய நிலவரப்படி புள்ளிபட்டியல்
புள்ளிப் பட்டியல் :
Group A
Teams | Mat | Won | Lost | Tied | Pts |
Pakistan | 3 | 3 | 0 | 0 | 6 |
Sri Lanka | 3 | 2 | 1 | 0 | 4 |
Australia | 2 | 2 | 0 | 0 | 4 |
New Zealand | 3 | 2 | 1 | 0 | 4 |
Zimbabwe | 3 | 2 | 1 | 0 | 2 |
Canada | 3 | 0 | 3 | 0 | 0 |
Kenya | 3 | 0 | 3 | 0 | 0 |
Group B
Teams | Mat | Won | Lost | Tied | Pts |
South Africa | 2 | 2 | 0 | 0 | 4 |
West Indies | 3 | 2 | 1 | 0 | 4 |
India | 2 | 1 | 0 | 1 | 3 |
England | 3 | 1 | 1 | 1 | 3 |
Ireland | 2 | 1 | 1 | 0 | 2 |
Bangladesh | 3 | 1 | 2 | 0 | 2 |
Netherlands | 3 | 0 | 3 | 0 | 0 |
புள்ளிவிபரங்கள் (04-03-11 வரை)
அதிக ரன்கள்
ஸ்ட்ராஸ் | 280 |
டீ வில்லியர்ஸ் | 241 |
ஷேவாக் | 210 |
மிஸ்பா உல் ஹக் | 185 |
பெல் | 184 |
அதிக விக்கெட்டுகள்
அப்ரிடி | 14 |
ரோச் | 10 |
ஜான்ஸன் | 8 |
பென் | 8 |
இம்ரான் தாஹீர் | 7 |
சதமடித்தவர்கள் (முதல் ஐந்து பேர்)
ஸ்ட்ராஸ் | 158 |
டீவில்லியர்ஸ் | 107, 134 |
ஷேவாக் | 175 |
ஆம்லா | 113 |
கெவின் ஓ ப்ரயன் | 113 |
பெரிய ஸ்கோர் | இந்தியா – (பங்களாதேஷ்) | 370 ரன்கள் |
பெரிய வெற்றி | தென்னாப்பிரிக்கா –(நெதர்லாந்து) | 231 ரன்கள் வித்தியாசம் |
நியூஸிலாந்து – (கென்யா) | 10 விக்கெட் வித்தியாசம் | |
அதிக சிக்ஸர்கள் | கெவின் ஓ ப்ரயன் | 7 சிக்ஸர்கள் |
அதிக கேட்ச் | தில்ஷான் | 4 |
படங்கள் மற்றும் புள்ளிபட்டியல் உதவி : Cricinfo இணையதளம்
Comments
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.