உலகக்கோப்பை 2011 : Updates

128836

எந்த உலகக் கோப்பையிலும் இல்லாது இந்த உலகக் கோப்பை போட்டிகளை நன்றாக துவக்கியிருக்கின்றன வங்காளதேசமும் நெதர்லாந்தும். குறிப்பாக நெதர்லாந்தின் நேற்றைய ஆட்டம் பிரமிக்க வைத்திருக்கிறது. தோற்றிருந்தாலும் அவர்களின் போராட்டமும் திறமையும் ஒருங்கே வெளிப்பட்டது. 292 ரன்களை நானும் எதிர்பார்த்திருக்கவேயில்லை. ஏன், இங்கிலாந்தும் எதிர்பார்த்திருக்காது.

நெதர்லாந்து அணியை ஆல் அவுட் ஆக்க இங்கிலாந்து எத்தனையோ பிரம்மாயுதங்களை வீசியும் ten Doeschate வின் முன்னால் அது எடுபடாமல் போயிற்று. தனியாளாக 119 ரன்களை 110 பந்துகளுக்கு எடுத்திருந்தார். Cooper ஓரளவு கை கொடுத்திருந்தாலும்  Zuiderent தவிர மற்ற அனைத்து விக்கெட்டுகளும் நெதர்லாந்துக்கு போராடின. இங்கிலாந்து தரப்பில் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. ஏதோ உள்ளூர் விளையாட்டு போலவும், வார்ம் அப் மேட்சுகளைப் போலவும் உணர்ந்திருந்தார்கள் போலும். ஃபீல்டிங்கில் இப்படி மோசமாக இருந்தால் அரையிறுதியெல்லாம் கனவில்தான் எட்டமுடியும். அப்படியே காசி ராமேஸ்வரம் என்றூ போகவேண்டியதுதான். இங்கிலாந்து பவுலிங்கும் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியவில்லை. நன்கு எதிர்பார்த்த Swann மட்டுமே 35 க்கு 2 விக்கெட் எடுத்திருந்தார். ஆண்டர்சன், கொலிங்வுட் பவுலிங்கையெல்லாம் நெதர்லாந்து நாறடித்திருந்தது. பற்றாகுறைக்கு ஆடியன்ஸ் எல்லாருமே நெதர்லாந்துக்குத்தான் சப்போர்ட். இங்கிலாந்து ஒரு பவுண்டரி அடித்தால் சலனமே இல்லாமல் இருக்கிறது மைதானம்…

ஆனால் இங்கிலாந்து ஒரு அனுபவம் வாய்ந்த அணி என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. இந்தியா, இலங்கை போல நல்ல ஸ்தரமான பேட்டிங் ஆர்டர் இல்லாவிட்டாலும் ஓரளவு நன்கு நிலைத்து ஆடக்கூடியவர்கள் ஆங்கிலேயர்கள். ஸ்ட்ராஸ் பீட்டர்ஸன் ஜோடி 100 ரன்களைக் குவித்தபோதே நினைத்தேன். நெதர்லாந்து ஜெயிப்பது மிகவும் கடினம் என்று. இக்கட்டான சூழ்நிலைகளில் விக்கெட் எடுக்க முடியாமல் போனதும், பொறுப்பாகவும் பொறுமையாகவும் வெறும் சிங்கில்ஸிலேயே ஸ்கோரை ஏற்றியதும்தான் நெதர்லாந்தின் தோல்விக்குக் காரணமாக இருக்க முடியும். பேட்டிங்கில் தன்னை நிரூபித்த டென், பவுலிங்கிலும் 47 ரன்ன்கு 2 விக்கெட் சாய்த்திருந்தார். எப்படியோ, கொஞ்சம் சிரமப்பட்டுதான் இங்கிலாந்தால் ஜெயிக்க முடிந்தது. பழைய இந்தியாவைப் போல!!

இந்த போட்டியைப் பார்க்கும்பொழுது இங்கிலாந்து இவ்வளவு பலவீனமாக இருக்கிறதா? இல்லை நெதர்லாந்து பலமாகிவிட்டதா என்று தோணுகிறது. இவர்கள் இருவரோடும் இந்தியா ஆடும் ஆட்டத்திலிருந்து கணிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ரொம்பவும் பாவமான அணி எது என்று கேட்டால், அது கென்யாதான். கனடவைக் கூட அப்படி சொல்லமுடியாது. ஏனெனில் கென்யா பலமான அணிகளை வீழ்த்தியிருக்கிறது. மாறாக கனடா அப்படியில்லை. அந்த அணியின் மொத்த ஸ்கோரே 69 தான். அநேகமாக இந்த அணி பட்டியலில் இறுதி இடத்தை உறுதிசெய்து கொள்ளும் என்று நினைக்கிறேன்.

ஜிம்பாப்வே ஒரு நம்பர் ஒன் அணியுடன் மிகச்சிறப்பாக ஆடினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆஸ்திரேலியா ரன்களைக் குவிக்க வெகுவாக சிரமப்பட்டது, ஒருவர் கூட சதம் அடிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் நல்ல பவுலிங் இருந்திருந்தால் 220 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். சேஸிங்கும் நன்றாக செய்திருக்கலாம். 1983 ல் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வென்றது நினைவிருக்கலாம். அப்படியொரு நிகழ்வு ஏற்படுமென்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ப்ச்.. ஆஸ்திரேலியா இன்னமும் பலமிழக்காத சிங்கம்.

இந்தியா வங்காளதேசம் பார்க்காதவர்கள் இருக்கமாட்டீர்கள். இதை எழுதியும் பிரயோசனமில்லை. ஆனால் இந்தியாவின் மோசமான பவுலிங்கை குறைகூறாதவர்களே இருக்க முடியாது. எல்லாரும் ஸ்ரீசாந்தைக் குறிப்பிடுவார்கள். ஸ்ரீசாந்த் வேறுவழியில்லாமல் எடுக்கப்பட்டவர். பிரவீன்குமாராக இருந்தால் இன்னும் 20 ரன்கள் குறைந்திருக்கும், என்றாலும் ஸ்ரீசாந்த் 5 ஓவருக்கே 53 கொடுத்திருக்கிறார் என்றால் இவரையெல்லாம் நம்பி எப்படி கிண்ணத்தை வாங்குவது? என்னைக் கேட்டால் பவுலிங்கில் படுமட்டமாக இருக்கிறது இந்தியா. நிறைய ரன்களைக் குவிப்பது மட்டுமே பலமல்ல. ஒரு பேலன்ஸ்ட் அணியாக இருக்கவேண்டும். ம்ஹூம்… இந்தியா இங்கிலாந்து போட்டிக்குப் பிறகு இந்தியாவைக் கணிப்போம் மீண்டும்…

ஒரு சின்ன புள்ளிவிபரம்.

எல்லா அணிகளும் ஒரு மேட்ச் மட்டுமே ஆடியிருக்கின்றன.

  • ஷேவாக் 175 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
  • மொத்தம் 4 சதங்கள். அதில் இரண்டு இந்தியாவிலிருந்து (கோலி - 100*)
  • நெதர்லாந்து வீரர்  ten Doeschate இரண்டாம் இடத்தில்..
  • சதமடித்த நான்கு பேரின் ஸ்கோரிங் ரேட் 100 க்கும் மேல்.
  • விக்கெட்டுகளில் பெனட், ஜான்ஸனோடு முனாப் பட்டேலும் 4 எடுத்திருக்கிறார். இது ஆட்டம் செல்லச் செல்ல வெகுவாக மாறும்.
  • நெதர்லாந்தின் 292 ரன்கள் அந்த அணியின் உ.கோப்பை அதிகபட்ச டோட்டல்.

அடுத்தடுத்த மேட்ச் அப்டேட்டுகளில் நிறைய புள்ளிவிபரங்கள் காணலாம்!!!

இன்றைய போட்டி பாகிஸ்தான் கென்யா. கென்யாவுக்கு இந்த போட்டி தொடரின் இரண்டாம் போட்டி. ஓரளவு கெளரவமாக தோற்குமா அல்லது வீறுகொண்டெழுந்து ஜெயிக்குமா??? பொறுத்திருந்து பார்ப்போம்…

Comments

இதோ வருகிறேன்.
வணக்கம் சகோதரம், கென்யாவிற்கு பதிலாக நாம ஒரு லோக்கல் புளொக் அணியை உருவாக்கி ஆடலாம் என்று தோன்றுகிறது. அலசல் அருமை.
Unknown said…
நல்ல அலசல். இரண்டு நாளைக்கு ஒரு தடவை அப்டடே செய்யுங்கள் பாஸ்
Unknown said…
//ஹாஜா மொஹைதீன் said...
நல்ல அலசல். இரண்டு நாளைக்கு ஒரு தடவை அப்டடே செய்யுங்கள் பாஸ்//
வழி மொழிகிறேன்..
அருமையான அலசல்..
நானும் முயன்றால் எழுதலாம்ன்னு இருக்கேன் பார்ப்போம் நண்பா..
தொடர்ந்து போடுங்க கிரிகெட் பதிவு
ஆதவா..
சென்ற வார நீயா? நானாவில் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகள் ஜெயிக்கும் என்று சொன்னவர்களின் தேர்வும், அவர்கள் சொன்ன டாக்டிஸும் செம்மையா அடிவாங்கிட்டு இருக்கு....
இலங்கையை மட்டும்தான் சரியா கணிக்க முடியலை..

ச்சலோ இந்தியா ச்சலோ....