உலகக்கோப்பை 2011 : Updates–28-02-11

129112
கருத்துக் கணிப்புகள் எப்பொழுதும் நூறு சதவிகிதம் சரியாக இருப்பதில்லை. பாகிஸ்தான் இலங்கை மற்றும் இந்தியா இங்கிலாந்து போட்டிகளில் எல்லாருடைய கருத்து கணிப்பும் மாறிப் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். டாஸ், காலநிலை, பிட்சின் தன்மை, ஆட்டத்தின் திறன் என பல காரணிகள்.. நன்றாக ஆடும் அணி ஒருசமயத்தில் திணறக்கூடும். திணறி ஆடும் அணி பெரும் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சரி… முதலாவதாக இலங்கை பாகிஸ்தான் மேட்ச் பார்ப்போம்..

Result

இலங்கை – பாகிஸ்தான்

பாகிஸ்தான் - 277/7 (50 ov)
இலங்கை 266/9 (50 ov)

11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கை இரண்டாவதாக பேட் செய்யப்போகிறது என்று அறிந்த பொழுதே இலங்கைக்கு கொஞ்சம் சறுக்கல்தான் என்று கணித்தேன். இருப்பினும் இலங்கை பேட்ஸ்மென்கள்மேல் நம்பிக்கை இருந்தது.

உண்மையைச் சொல்லவேண்டுமானால் இலங்கையைக் காட்டிலும் பாகிஸ்தான் மிக அற்புதமாக ஆடியது. ஒருசில ஃபீல்டிங் தவறுகளைத் தவிர மற்ற எல்லாவிதத்திலும் நன்றாக ஆடினார்கள். குறிப்பாக அப்ரிடி. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் வீரர்கள் எல்லாருமே கை கொடுத்தார்கள். யூனிஸ்கானும், மிஸ்பா உல் ஹக்கும் அருமையான பார்ட்னர்ஷிப்பைத் தந்தனர். இடையில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக ரன்களை அதிகம் சேர்க்க முடியாவிட்டாலும் 277 ஒரு நல்ல ஸ்கோர்தான். பவுலிங் தரப்பில் யாரும் இலங்கை ரசிகர்களுக்குத் திருப்தியைத் தரவில்லை. முரளி நன்றாக வீசியிருந்தாலும் அதிக விக்கெட் எடுக்காமல் விட்டது என்னைப் பொறுத்தவரையில் திருப்தியில்லாத பவுலிங் தான்.

சேஸிங்கில் இலங்கை சிறப்பான தொடக்கம் தந்தது. அந்த முதல் விக்கெட் மட்டும்தான். 76 க்கு 1 என்ற நிலையிலிருந்து மளமளவென சீட்டுக் கட்டு போல சரிந்த வண்ணம் இருந்தது. 96 க்கு 4 என்று தத்தளித்த இலங்கைக்கு சங்ககராவும் சமர சில்வாவும் கைகொடுத்தனர். பாகிஸ்தானின் பந்துகளை இருவராலும் அவ்வளவு சீக்கிரம் விரட்டவே முடியவில்லை. பந்தும் போவதற்கு அடம் பிடித்தது. சங்ககரா மேல் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஏனெனில் இக்கட்டான சூழ்நிலைகளில் நிலைத்து ஆடக்கூடியவர். இலங்கையின் மேட்ச் வின்னர்.  பெரரா வரைக்கும் நம்பிக்கை இருந்தது. தவிர, கடைசி ஓவர்கள் வரவர சூழ்நிலை இலங்கை ஜெயித்துவிடுமோ என்று மாறியது. ஆனால் பேட்ஸ்மென்களே ஆடாத நிலையில் பவுலர்களிடம் ஆடச்சொன்னால் எப்படி இருக்கும்?? கடைசி இரண்டு ஓவரில் அப்ரிடிக்கு மனசே இல்லை. ஜெயித்துவிடுவார்களோ என்று சொல்லும்படி பவுலர்களின் பேட்டிங் போராட்டம் நன்றாக இருந்தது. ஆனால் தொடர்ந்து சிக்ஸர் அடித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் எனும் சூழ்நிலை வந்தபிறகே இறுக்கமாக இருந்த அப்ரிடி கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தார். பாகிஸ்தானின் பவுலிங் பலம், ஓரளவு சிறப்பாக இருக்கிறது என நினைக்கிறேன். இனி வரும் போட்டிகளில் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கணிப்பு மாறலாம்.

உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இலங்கை ஜெயித்ததேயில்லை. அந்த ஜோஸியம் தொடர்கிறது. இலங்கை மண்ணிலேயே இலங்கையைச் சரித்த அப்ரிடிக்கு வாழ்த்துக்கள். நன்கு போராடிய இலங்கை ஆஸ்திரேலியாவை வெல்லும் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது... பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான போட்டி இந்தியா - இங்கிலாந்து போட்டி.

Result

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா – 338 (49.5 ov)
இங்கிலாந்து – 338/8 (50 ov)

போட்டி சமம் ஆனது.

129134கடந்த நாட்களில் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்த இரு போட்டிகளில் ஒன்று கணிப்பு மாறி பாகிஸ்தான் வென்றிருந்தது. ஆனால் இந்த போட்டியில் எல்லோருடைய கணிப்பும் தவறாகப் போய்விட்டது. வெற்றியா தோல்வியா என்றில்லாமல் டை ஆனதில் பெருத்த ஏமாற்றம் இந்திய ரசிகர்களுக்குத்தான்.

இந்தியா இங்கிலாந்து போட்டியில் எதிர்பார்த்த இரு விஷயங்கள் நடந்தன. முதலாவது டெண்டுல்கர் சதம் அடிப்பார் என்று நினைத்திருந்தேன். ஆரம்பத்தில் பாலைத் தின்று கொண்டிருந்தவர் அரைசதம் கடந்தபிறகு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து பந்து கணக்கை சமப்படுத்தினார். இரண்டாவது இந்தியா 300 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆட்டம் செல்லச் செல்ல 360 க்கும் மேல், 350க்கு மேமேல் செல்லும்  என்று ஆளாளுக்கு கணிப்பு கூறிக்கொண்டிருந்தோம். டெய்லெண்டர்களின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட்டுகள் விழுந்தபடியே இருந்தது. கடைசி 26 பந்துகளில் 7 விக்கெட்டுகள் விழுந்தன. 339 ரன்கள் இங்கிலாந்துக்குப் பெரிய சேஸிங் ஸ்கோர்தான்.

ஆண்டர்சனின் முதல் ஓவரில் சேவாக்கின் அதிர்ஷ்டம் அவரைக் காப்பாற்றியது. 5 பந்துகளில் 3 எட்ஜ் ஷாட்கள். ஆனால் பிறகு அதனை தக்கவைத்துக் கொள்ள அவரால் முடியவில்லை. சீக்கிரமே நடையைக் கட்டினாலும் டெண்டுல்கரின் சதமும் காம்பிர் மற்றும் யுவராஜின் அரைசதமும் பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டன. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் காம்பிரும், ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் யுவராஜ் மற்றும் தோனியும் வரும் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தருகிறார்கள். அவசர கட்டத்தில் கோலியாலும் பதானாலும் ரன்களை அதிகம் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சனின் பந்துவீச்சு ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் பிறகு படுமோசமாகிவிட்டது. 91 ரன்கள் கொடுத்து இங்கிலாந்தின் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற பெயரை வாங்கிக் கொண்டுவிட்டார்.. 129155

சச்சின்!!!! ஒவ்வொருமுறையும் சதமடிக்கும் பொழுதெல்லாம் பலரால் பெருமிதப்பட்டும் மிகச்சிலரால் சர்ச்சைக்கும் உள்ளாகும் பெயர். 5 சிக்ஸர்களை விரட்டிய அதிரடி ஆட்டத்தினைப் பார்க்கும் பொழுது சச்சின் அடுத்த உலகக்கோப்பைக்கும் இருப்பாரோ என்று தோன்றுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் 24 மேட்ச் ஆடியிருக்கும் சச்சின் 5 சதம் மூன்று அரைசதம் உட்பட 1337 ரன்கள், 66.85 ஆவ்ரேஜில் எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் எவ்வளவு தெரியுமா? 99.18!!!! வயது கூடக் கூட ஆட்டமும் கூடுகிறது..

நான் முன்பே சொன்னது போல இந்தியாவின் பேட்டிங் எவ்வளவு பலமாக இருக்கிறதோ அத்தனை பலவீனமாக இருக்கிறது பவுலிங்… சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் இந்தியா வெல்வதில்லை என்று சொல்லும் பலர், அந்தப் போட்டிகளில் பவுலர்களின் பங்கைப் பற்றி பேசுவதேயில்லை. இன்றும் நான் அடித்துச் சொல்லுவேன். சச்சின் மட்டுமே இந்திய அணி… மற்றவர்களெல்லாம் பேருக்குத்தான் பங்கு.. நல்லவேளை ஸ்ரீசாந்த், ஆட்டத்திற்கு இல்லை. இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று சில பந்துகளை மிச்சமும் செய்திருக்கும். ஜாஹீர்கான், முனாப் பட்டேல், சாவ்லா ஆகியோரின் ஓவர்களில் ஆங்கிலேயர்கள் ரன்மழை பொழிந்தனர். குறிப்பாக சாவ்லாவின் 49வது ஓவர்தான் இப்போட்டி ”டை” ஆனதற்கு மிக முக்கிய காரணம்.

நெதர்லாந்திடம் போராடி வென்ற இங்கிலாந்து, நம்மை நொறுக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கேப்டன் ஸ்ட்ராஸ் மட்டும் இல்லையென்றால் இங்கிலாந்து 250 க்குள் சுருண்டிருக்கும். இவரை அவுட்டாக்க தோனி பல வியூகம் வகுத்தார். ஆனால் வியூகங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்தனர் ஸ்ட்ராஸும் பெல்லும். ஆனால் 25வது ஓவரில் யுவ்ராஜின் பாலுக்கு இயன் பெல்லுக்கு LBW ஏன் தரப்படவில்லை என்று தெரியவில்லை. அம்பயர் பில்லி பவுடன் திறமையானவர்தான். 2.5 மீட்டர் ரூல்ஸ் என்ன என்று புரியவில்லை.. பெல் பிழைத்துக் கொண்டதில் இந்தியா மூழ்கிக் கொண்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தனர். (நேற்று பனி பெய்யாததும் இங்கிலாந்து பேட்டிங்கு சாதகமாக இருந்தது..). ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்து ரன்ரேட் 6 க்கும் கீழ் இறங்காமல் பார்த்துக் கொண்டது இங்கிலாந்து..

மேட்ச் டை ஆனாலும் தோல்வி என்னவோ இந்தியாவுக்குத்தான். 339 ரன்களை எடுத்துவிட்டு அதற்கேற்ப ஃபார்ம் இல்லாத, இந்திய சூழ்நிலை ஒத்துக்கொள்ளாத ஒரு அணியை அடிக்கவிட்டு டை செய்தது பெருத்த தோல்வி… இந்தியாவுக்குக் கோப்பை கிடைக்கவேண்டுமானால், ஒரே ஒரு மாற்றம் வேண்டும்… அது, எதிரணியைச் சுருட்டும் திறமை!!

பெட்டர் லக் நெக்ஸ்டைம் இந்தியா!!


புள்ளிப் பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied    Pts
Pakistan 2 2 0 0 4
Australia     2 2 0 0 4
Sri Lanka 2 1 1 0 2
New Zealand 2 1 1 0 2
Zimbabwe     1 0 1 0 0
Canada     1 0 1 0 0
Kenya 2 0 2 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
India         2 1 0 1 3
England     2 1 0 1 3
South Africa 1 1 0 0 2
Bangladesh    2 1 1 0 2
Netherlands 1 0 0 0 0
Ireland 1 0 1 0 0
West Indies    1 0 0 0 0

புள்ளிவிபரம்

அதிகரன்கள்

Name Runs High Score
AJ Strauss (Eng) 246    158   
V Sehwag (India) 210    175   
Misbah-ul-Haq (Pak) 148    83*
SR Tendulkar (India) 148    120   
KC Sangakkara (SL) 141    92   

அதிக விக்கெட்டுகள்

Name Wickets Best
Shahid Afridi (Pak) 9 5/16   
MG Johnson (Aus) 8 4/19   
HK Bennett (NZ) 6 4/16   
TT Bresnan (Eng) 6 5/48   
MM Patel (India) 6 4/48   

நேற்று அடித்த இரண்டு சதங்களோடு மொத்தம் 7 சதங்கள் இந்த தொடரில் அடிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாமே ஸ்கோரிங் ரேட் 100 க்கும் மேல்.

Comments

Anonymous said…
அருமையான தொகுப்பு அட்டவணை
Anonymous said…
விமர்சனம் சிறப்பாக உள்ளது
ஆதவா புள்ளிப் பட்டியலில் Lost Draw இல் இலங்கையின் புள்ளி 1 என வரவேண்டும். இலங்கை விளையாடிய ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும், மற்றையதில் தோல்வியும் அடைந்துள்ளது. அலசல் அருமை. இந்தியா பற்றிய கரிசனையும், ஆஸ்திரேலியா பற்றிய உங்களின் அக்கறையும் விமர்சனங்களில் தெரிகிறது. வரும் ஞாயிறு மாலை, பலசாலிகளைப் பரிட்சிக்கும் ஓர் நாள்.
ஆதவா said…
மிக்க நன்றி நண்பர்களே..
\
@நிரூபன்..
கவனித்து சொன்னமைக்கு நன்றி. அதனை சரிசெய்துவிட்டேன்.
//
இம்முறை கடும் போட்டி நிலவுகிறது அணிகளுக்குள்.......... பார்ப்போம்
ஆதவா said…
@ RKS

வாங்கண்ணே....
Unknown said…
பாஸ்,
இந்தியா துடுப்பாட்டத்தில் திறமையானது.
ஆனால் பந்து வீச்சு,நேற்று களத்தடுப்பு படு மோசம்..
இப்பிடியே போனால் இந்தியா 350 அடித்தாலும் கலைத்து அடிப்பார்கள்.

இலங்கை அணி பாகிஸ்தானுடன் முறையான திட்டமில்லாமல் விளையாடி தோற்றது...
Anonymous said…
நேற்றைய ஆட்டம் ஒரு கட்டத்திலே இங்கிலாந்துக்கு சாதகமாக முடியும் போல இருந்தது.எனினும் இறுதி நேர சகீரின் அருமையான பந்துவீச்சால் தப்பித்துக்கொண்டது. அத்தோடு ஆடுகளும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.
ஆதவா said…
நன்றி மைந்தன் சிவா மற்றும் கந்தசாமி.
ஜாஹீர் கடைசி ஓவரில் 13 ரன்கள் (ஒரு சிக்ஸருடன்) கொடுத்தார்... இது நல்ல பந்துவீச்சாளருக்கு அழகல்ல. அட்லீஸ்ட் சிக்ஸரை தராமல் இருந்திருக்கலாம்.