Ratatouille - விமர்சனம்

Ratatouille
DirectionBrad Bird
Starring    Patton Oswalt, Lou Romano, Ian Holm
Music Michael Giacchino
Studio Pixar
Year2007
Language  English
Genre Animation, Comedy
எல்லாருக்கும் திறமை வந்துவிடுவதில்லை ; ஆனால் திறமையானவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்…. Anton Ego
பிக்ஸரின் படங்களில் நாம் ஏன் மனதைப் பறிகொடுக்கிறோம் எனும் காரணம் மட்டும் தெரிவதேயில்லை. விளிம்பு நிலை பாத்திரங்களை மையப்படுத்தி அதன் கோணத்தை நமக்கு ஆழமாக உணர்த்துவதாலா அல்லது பாத்திரங்களின் வடிவமைப்பிலுள்ள அசாத்தியமான நேர்த்தியாலா அல்லது அனைவரும் விரும்பும் வகையிலான ஆழமான கதை மற்றும் நகைச்சுவையாலா….
ப்ரான்ஸ் நகரில் வாழும் ரெமி, நுகரும் புலனும் ருசியறியும் புலனும் மிகுந்துள்ள ஒரு வித்தியாசமான எலி, அதற்கு பிரபல சமையல்கலை நிபுணரும் பாரிஸின் மிகப்பிரபலமான ரெஸ்டாராண்டாக விளங்கிய குஸ்தாவ் ரெஸ்டாரெண்டின் உரிமையாளருமான மறைந்த அகஸ்டெ குஸ்தாவ் (Auguste Gusteau) எழுதிய “Anyone can Cook” எனும் புத்தகமே புலனூக்கம். தான் ஒரு சமையல் வல்லுனர் ஆகவேண்டும் என்பது அதன் கனவு.
ratatouille_8ஒரு சின்ன நிகழ்வுக்குப் பின் குடும்பத்திலிருந்து பிரிந்த ரெமி, குஸ்தாவ் ரெஸ்டாரெண்டுக்கு தற்செயலாக வந்து சேர்கிறது. அங்கே உள்ள சமையல்காரர்களைப் பார்க்கும் பொழுது அல்ஃப்ரடோ லிங்கினி (Alfredo Linguini) எனும் சுத்தம் செய்யும் பையன், யாருக்கும் தெரியாமல் தவறுதலாக சூப் செய்வதைக் கண்டுபிடிப்பதோடு மட்டுமின்றி ரெமி அந்த தவறை சரிசெய்து அட்டகாசமான சூப் ஒன்றைத் தயாரிக்கிறது. இதனை கண்டுகொண்ட லிங்கினி ரெமியுடன் நட்பு கொண்டு ரெமி சொல்லச் சொல்ல சமையல் தயார் செய்யும் வித்தையைக் கற்று கொள்கிறான். ரெமி, லிங்கினியின் தலைமுடியை கண்ட்ரோலர் போல உபயோகித்து கட்டளைகளை வழங்குகிறது. ஒரு சுத்தம் செய்யும் பையன் மிக நல்ல சமையல் செய்வதைக் கண்டு பொறாமைப்படும் தலைமை சமையல்காரர், லிங்கினிக்கு எலி உதவி செய்வதை மறைந்திருந்து கண்டுபிடிக்கிறார். தவிர, லிங்கினி குஸ்தாவின் மகன் என்ற உண்மையையும் மறைக்கிறார். எப்படியோ இதனைக் கண்டு கொண்ட ரெமி லிங்கினியை குஸ்தாவ் ரெஸ்டாரெண்டின் உரிமையாளராக்குகிறது. தலைமை செஃபை வேலை விட்டு நீக்கிவிடுகிறான்.  லிங்கினிக்கு அங்கே வேலை செய்யும் கொலட் (Colette) என்ற பெண்ணோடு காதலும் ஏற்படுகிறது.
Ratatouille-ratatouilleஆண்டன் ஈகோ (Anton Ego) எனும் பிரபல உணவு விமர்சகர் நீண்ட நாட்களுக்கு முன்னர் குஸ்தாவ் ரெஸ்டாரெண்டைப் பற்றி விமர்சனம் எழுதியதில் ரெஸ்டாரெண்டுக்கு இருந்த ஐந்து நட்சத்திர தகுதி குறைந்திருந்தது. (ரெமியால்) லிங்கினியின் சுவையான சமையலால் மீண்டும் பிரபலமான குஸ்தாவ் ரெஸ்டாரெண்டை விமர்சிக்க அடுத்த நாள் வருவதாக லிங்கினியிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார் ஈகோ, அதே நேரம் ரெமியை தலைமை செஃப் சிறைபிடிக்க… மறுநாள் ஈகோ வந்த பிறகு அவருக்குப் பரிமாற சுவையான சமையல் செய்யமுடியாமல் திணறும் லிங்கினி உண்மையில் தான் ஒரு சமையல்காரனே இல்லை, எனக்கு ஒரு எலிதான் உதவுகிறது என்று உண்மையைச் சொல்கிறான். அந்நேரத்தில் குடும்பத்தினரால் தப்பித்து மீண்டும் லிங்கினியை ரெமி அடைய, அனைத்து சமையல்காரர்களும் ரெஸ்டாரெண்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். பழைய தலைமை செஃப், ஹெல்த் டிபார்ட்மெண்டுக்கு போனடித்து குஸ்தாவ் ரெஸ்டாரெண்டில் எலிகள் நடமாட்டம் அதிகம் என்று வேறு சொல்லிவிட உணவு சோதனை அதிகாரி எலிகள் இருப்பதைப் பார்த்துவிடுகிறார்.
உணவு விமர்சகர் ஈகோ சாப்பிட அமர்ந்திருக்கிறார், சமையல்கார்களும் சப்ளையர்களும் ரெஸ்டாரெண்டில் இல்லை, பழைய ஐந்து நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும், உணவு சோதனை அதிகாரியை சமாளிக்கவேண்டும்…. என்ன செய்து ஈகோவை சமாளித்தார்கள், குஸ்தாவ் ரெஸ்டாரெண்ட் இறுதியில் என்னவாயிற்று? ரெமி மற்றும் லிங்கினியின் கதி என்ன என்பதை பரபரப்பான கிளைமாக்ஸில் பார்க்கலாம்.
நகைச்சுவையும் பரபரப்புமாகச் செல்லும் ராட்டடூயில் பிக்ஸரின் அக்மார்க் தரத்தில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படம். ரெமியாக எலியின் நடிப்பு மிகப்பிரமாதமான ஒன்று. ரெமியின் நினைவுகள் குஸ்தாவைப் போல வந்து ஊக்கம் தருவதும் அதற்கு ஏற்ப ரெமியின் எக்ஸ்பிரஷன்ஸ் மிகப்பிரமாதம். சோகம், பாசம், ஏமாற்றம், சந்தோஷம், பெரிமிதம் என ஒவ்வொரு அழகுணர்ச்சிகளையும் மிகப்பிரமாதமாக வெளிப்படும்படி அனிமேட் செய்திருக்கிறார்கள். அசல் எலியின் நடிப்பைக் காட்ட அனிமேட்டர்கள் ஒருவருடங்கள் வரை எலிகளை அவதானித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தரும் தகவல்
ஒரு இன்னசண்ட் பையனாக அல்ஃப்ரடோ லிங்கினி, எப்போதும் கடுப்பில் இருக்கும் தலைமை செஃப், கோபமும் காதலும் மாறிமாறி வரும் கொலட், ஒரு விமர்சகனின் இறுமாப்பில் ஆண்டன் ஈகோ என அத்தனை பாத்திரங்களின் பங்களிப்பும் படத்தின் சுவாரசியத்திற்கு பக்க பலம்.
ஃப்ரான்ஸின் இரவுநேரக் காட்சிகள், குஸ்தாவ் ரெஸ்டாரெண்டின் சமையல்புறம், ஃப்ரான்ஸ் முகவெட்டு நடிகர்கள் என படத்தின் ஒவ்வொரு துமியும் பார்த்து பார்த்துப் பார்த்து வரைந்தவை. தலைமை செஃப் அதிகாரியிடமிருந்து ரெமிக்கான கடிதங்களைத் தூக்கிச் செல்லும் ரெமியைத் துரத்தும் செஃப் காட்சி மற்றும் ரெமி குடும்பத்திலிருந்து பிரியும் காட்சி ஆகியவை மட்டுமே சமையலறையிலிருந்து காமராவை வெளியே கொண்டு வந்த காட்சிகள். இருப்பினும் ஒரு அனிமேஷன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு எலியின் கோணத்திலிருந்து பார்க்கவைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.
2007 ம் ஆண்டில் சிறந்த அனிமேஷன் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
படத்தின் பாத்திரங்கள் :
rat
Ratatouille Trailer
பிகு: ராடடூயி என்பது ஃப்ரான்ஸ் நாட்டு சைவ உணவின் பெயராகும். கீழே அதன் படம் கொடுக்கப்பட்டிருக்கிறது; தயாரிக்கும் முறையை “இங்கே” சொடுக்கி தெரிந்து கொள்ளவும்
ratatouille_dish

Comments

தல...நீங்கதான் எழுதுறீங்களா...நா பட டைட்டிலை எதேச்சையாக திரைமனத்தில் பார்த்து இங்க வந்தா...ம்ம..என்னமோ போங்க..
உங்களுக்கு பிடித்த அனிமேசன் படங்களை சொல்ல முடியுமா...


நீங்க வேனாலாம் எனக்கு பிடித்தவைகள சொல்லியே தீருவேன்...

The Jungle Book,
lion King
Alladin

Chicken Run
Monsters Inc
Finding Nemo
Shrek - 1
Ice Age

Up
Ratatouille
All Pixar movies

Above all Kung fu panda...

நீங்க Waltz with bazir பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்..எனக்கு ரொம்பவே பிடித்தது..அதுபோலவே A Scanner Darkly. இன்செப்சனின் "மூலமான" Paprika பார்த்திட்டீங்களா..
அனிமேசன் படங்கள ஏன் நம்ம ஊருல சீரியஸா எடுதுக்குறதில்லைன்னு தெரியல...ஒருவேள உள்ள இருக்கிற குழந்தைத்தனத்தை யாரும் வெளிய காட்ட விரும்புறதில்லையோ...இல்ல இல்லவே இல்லையான்னு தெரியல..
என்ன தல..என் பேரு ciniwriters லிஸ்ட்ல...

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்கும்ன்னு தெரியாம போச்சு...
ஆதவா said…
எதைச் சொல்வது எதை விடுவது என்று இருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா அனிமேஷன் படங்களும் எனக்குப் பிடிக்கும்.

Spirit மிக அருமையான 2D அனிமேசன். திரைப்படம். அதன் பேக்ரவுண்ட் ஸ்கோரும், பாடல்களும் மிக இனிமையானவை. (பாடியது Bryan Adams)
Ice Age Triology
All Pixar Movies,
Shrek 1,2,3, ofcourse 4
How to train your dragon
The Lion King
Jungle book
Happy Feet
Madagascar
Kungfu Panda
Bolt
Beowulf
Princess and Frog

பிடிக்காதவை
Igor
Surf's Up

Waltz with Bazir எனக்குக் கிடைக்கவில்லை... தேடிக் கொண்டிருக்கிறேன். Paprika வை நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டபிறகுதான் எனக்கும் தெரியும்!!

இந்தியாவில் அனிமேஷன் என்றாலே அது குழந்தைகளுக்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அனிமேஷன் படங்கள்தான் அங்கே மில்லியன் கணக்கில் குவிக்கின்றன.. நாம் இன்னும் வளரணும்!!!