127 Hours விமர்சனம்

127-Hours

Direction

Danny Boyle

Written

Simon Beaufoy, Danny Boyle

Based on

Between a Rock and a Hard Place by Aron Ralston

Starring   

James Franco, Amber Tamblyn , Kate Mara

Music

A. R. Rahman

Year 2010
Language English

Genre

Biography, Adventure, Drama

மீண்டும் டானி பாய்ல் (Danny Boyle) மற்றும் ரஹ்மான் கூட்டணி. இம்முறை Aron Ralston என்பவரின் வாழ்வில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பத்தை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள்.

ஆரன் ரால்சன் ஒரு மலையேறும் விரும்பி. ஏப்ரம் 25, 2003 ஆம் வருடம் வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான Utah பாலைவனப்பகுதியில் மலையேறுதல் பொருட்டு கிளம்பிச் செல்லுகிறார். மலையேறும்பொழுது தேவையான பொருட்கள், உணவு, நீர், காமெரா முதற்கொண்டு எல்லாவற்றையும் எடுத்துச் செல்கிறார். 127 Hours Movie மறுநாள் அந்த மலைப்பகுதியில் மெகன், (Megan) கிரிஸ்டி (Kristi) எனும் இரு பெண்கள் வழிதெரியாமல் திணறி நிற்பதைக் கண்டு அவர்களுக்கு வழிகாட்டுகிறான் (படத்தில் இருப்பவர்கள் ரால்சன், மெகன், கிரிஸ்டி) இருவரையும் ஒரு குகைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள நீர்நிலையைக் காட்டி அவர்களோடு நல்ல நட்பு வளர்த்துக் கொள்கிறான்.

ரால்சன் தான் தேடிவந்த மலைச்சந்தில் இறங்குவதற்காக பாதுகாப்பாக இறங்கிக் கொண்டிருக்கையில் தவறுதலாக அச்சந்தினிடையே முட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறாங்கல் மீது கால்வைத்து, தடுக்கி விழுகிறான். அந்த பாறாங்கல்லும் முட்டுதலின்றி அவனோடு சந்தினுள் இறங்க, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறான்… ஆனால் அவனது கீழிடது கை சந்துக்கும் பாறாங்கல்லுக்குமிடையே சிக்கிக் கொண்டிருக்க…. 127 Hours துவங்குகிறது. ஆரன் ரால்ஸன் பாறையில் சிக்கியிருத்தல் ரால்சனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் ஃப்ரான்கோ (James Franco) ஒரு கணம் என்ன நடந்தது என்று அவதானிக்கும் போது மிகச்சிறப்பான எக்ஸ்பிரஷன்ஸ் வெளிப்படுத்தி யிருக்கிறார். மெல்ல முட்டி மோதி பாறாங்கல்லை அப்புறப்படுத்த முயன்றும் பலனில்லை, அது ஏழெட்டு பேர் இணைந்து தூக்கவேண்டிய மிகப்பெரிய பாறாங்கல்.  (படத்தில் : பாறையில் கை சிக்கியவாறு ஆரன் ரால்ஸன்) சற்றே ஆசுவாசமாகி மேலே யாராவது இருக்கிறார்களா என, தான் சந்தித்த பெண்களான கிரிஸ்டி மற்றும் மெகனை அழைக்கும் பொழுது காமரா அந்த குகைச்சந்திலிருந்து வெளியேறும் காட்சி, ஒருகணம் நம்மை உறையவைக்கும் காட்சி. ரால்ஸன் எவ்வளவு ஆழமான பகுதியில் சிக்கியிருக்கிறார் என்பதை நினைக்கவும் முடியாத சம்பவம்.

ரால்ஸன் பொறுமையாக யோசிக்கிறார். என்ன செய்யலாம்? தன்னிடம் இருக்கும் பொருட்களையெல்லாம் பாறைமேல் வைத்து யோசிக்கிறார்.  ஒரு தரமற்ற சைனா கத்தியொன்றினால் பாறையைக் குடைந்து பார்க்கிறார். கூடவே இதனை சுய ஒளிப்பதிவும் செய்து கொள்கிறார். தான் சிக்கியிருக்கும் பாறைக்கு சற்று மேலேயிருக்கும் இன்னொரு பாறையின் மேல் கொண்டுவந்திருந்த கயிறை சிக்கவைத்து மெல்ல இழுக்க முயற்சித்தும் பலனில்லை.  இரவு நெருங்குகிறது கடுமையான குளிர்.., ஆகாரம் குறைவு. ஒரு லிட்டர் தண்ணீர் மிச்சம்.. மேலே சந்தித்த பெண்கள் அழைத்திருந்த ஒரு பார்ட்டிக்கு இந்நேரம் சென்றிருக்கலாம். ரால்ஸன் நினைத்துக் கொள்கிறார். வந்திருந்த காரில் கிடக்கும் ஜூஸ் பாட்டில், ஞாபகத்திற்கு வருகிறது. தாகம்.. (இந்த காட்சியில் ஒளிப்பதிவுடன் இணைந்த CG மிகப்பிரமாதமானது)

சிறுவயதில் அவனது அப்பா இதே இடத்திற்கு அழைத்து வந்தது,. தன் தங்கையின் பியனோ வாசிப்பு, நண்பர்களோடு பார்ட்டி, காதலி தன் காதலைச் சொன்னது, பின் இருவரும் பழகி பிரிந்தது, சட்டென்று அங்கே பெரும்மழை பொழிந்து, பாறைச்சந்து முழுக்க நீரால் நிறைய பாறையை எளிதில் விலக்கி தப்பியோடி காதலியின் வீட்டின் முன் நிற்பதான கனவு, போன்றவை நினைவுகளூடாக வருகின்றது. காமராவில் அவ்வபோது ஒளிப்பதிவும் செய்து கொண்டு, ஒரு டாக்‌ஷோவில் கேள்வி பதில் கேட்பதைப் போல பேசிக் கொண்டும் இருக்கிறான். ஒரு கட்டத்தில் பிழைப்போம் என்று நம்பிக்கை பிறந்து பாறையிடுக்கில் சிக்கியிருக்கும் கையை தானே வெட்டியெடுத்து தப்பிக்கிறார் ரால்ஸன். அந்த பாறையோடு 5 நாட்கள் அதாவது 127 மணிநேரம் இருப்பதையே படத்தின் தலைப்பு காட்டுகிறது.

படத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்த விஷயம் திரைக்கதை. நினைவுகளூடாகச் செல்லும் காட்சிகள், வித்தியாசமான பார்வையனுபவத்தைக் கொடுக்கிறது. இறுதி நெருங்க நெருங்க வேகமெடுக்கும் திரைக்கதையில், ரால்ஸன் தனக்குத் தொடர்புடைய மனிதர்கள், பொருட்கள் விர்ச்சுவலாக வந்து செல்வதை உணர்கிறார். பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மனிதனின் நினைவுகள் அவ்வாறே இருக்கும்.

ரால்ஸனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் ஃப்ரான்கோ, ஸ்பைடர்மேனில் ஹாரியாக வந்து அறியப்பட்டவர். இவரது நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. சந்தோஷம், துக்கம், ஏமாற்றம், அதிர்ச்சி, போன்ற ஒவ்வொரு உணர்ச்சிகளையும் தகுந்த நிலையில் வெளிப்படுத்தியிருப்பது விருது பெறக்கூடிய நடிப்பு. இப்படி விளக்குவதைவிடவும் படத்தில் பார்ப்பதே சிறந்தது… மெகனாக நடித்திருக்கும் Amber Tamblyn க்கும் , கிரிஸ்டியாக நடித்திருக்கும் Kate Mara க்கும் படத்தில் வேலை இல்லை..

ரஹ்மான்…. ரால்ஸன் சிக்கியபிறகு Liberation Begins எனும் கிதார் இசையை மீட்டுமிடம் சிலிர்க்கவைக்கும் இசை. கனவு காட்சியில் Liberation In A Dream சற்று வேகமான கிதார் மற்றும் இதரவாத்தியங்கள்.. மிகத்தரமான இசை. இறுதியில் டிடோவுடன் (Dido)  பாடும் If I Rise பாடலோடு படம் முழுக்க அமைதியான இசையை வழங்கியிருக்கிறார் என்றாலும் Slumdog Millionaire க்கு வழங்கியதைக் காட்டிலும் சற்று குறைவாகவே தெரிகிறது. கோல்டன் க்ளோபில் இவருக்கு  இன்செப்ஷனுக்கு இசையமைத்த Hans Zimmer பெரும் போட்டியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.  ரஹ்மானின் இசை குறித்து ஏற்கனவே இங்கே எழுதியிருக்கிறேன்.

Finally, டேனி பாய்ல்… 127 மணிநேரம் சிக்கியிருப்பதை சலிப்படையாத திரைக்கதையினாலும் அலுக்காத இயக்கத்தினாலும் காட்டியிருக்கும் பாயிலுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று நினைக்கிறேன். IMDB Top 250 ல் இப்படம் இடம்பெற்றுள்ளது கூடுதல் தகவல். அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

பிகு :
Aron Ralston எழுதிய   Between a Rock and a Hard Place எனும் சுயசரிதை புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாறையில் சிக்கி வெளிவந்த பிறகு,  மூன்று வருடங்கள் கழித்து காதலியை மணந்து பிள்ளை பெற்றிருக்கிறார் என்பதோடு படம் முடிகிறது. கீழ்காணும் புகைப்படத்தில் இருப்பவர் ரால்ஸன்

Ralston

Trailer

Comments

http://ibnlive.in.com/news/aron-ralston-praises-rahman-for-127-hours-music/136985-8-67.html

நீங்க இதை பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்...தெரியாதவர்கள் பார்க்க வேண்டுகிறேன்..

இதை விட ரஹ்மானுக்கு பெரிய பாராட்டு இருக்க முடியாது..
படம் இங்க ரிலீஸ் ஆயிருச்சா..இல்ல டவுன்லோடிங்கா...

உங்க வார்த்தை பிரயோகம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.


எனக்கு அருமையான - சிறப்பான - நல்ல பதிவு, இந்த வார்த்தைகளிடம் ஒவ்வாமை உண்டு. பார்த்தீனியம் மாதிரி. அதுனால கருத்துங்கிற பேருல ஏதாவது சொல்லுவேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...
மிக நல்ல பதிவு,கொழந்த ப்ளாக் மூலமாக இங்கு வந்தேன்.... இனி அடிக்கடி வருகின்றேன்...உங்களை என் ப்ளாக் லிஸ்ட்ல் சேர்த்துள்ளேன்
டிவிடியில பாத்தீங்களா அல்லது படம் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆயிடுச்சா... இந்தப் படத்துக்காக நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...
நானும் இந்த படத்த நெட் ல தான் பார்த்தேன் எனக்கு அவ்வளவாக பிடிக்கல பிடிக்கல
ஆதவா said…

@ இராமசாமி : நன்றி

@கொழந்த

ரஹ்மான் நிச்சயம் எட்டமுடியாத உயரத்தில்தான் இருக்கிறார்... இந்த படம் இங்க ரிலீஸ் ஆகும்னு ரொம்ப நாளா காத்துட்டிருந்தேன். ஆனா அமெரிக்காவுலயே லிமிடெட் ரிலீஸ்தான்.. டிவிடியும் விசாரிச்சு கிடைக்கலை.. கடைசியா டவுண்ட்லோடிங் தான்....

@டெனிம்

மிக்க நன்றி, அடிக்கடி வாருங்கள். மீண்டும் ஒருமுறை பார்த்தால் உங்களுக்குப் பிடிக்கலாம்..

@ பாஸ்

டவுன்லோட் தான்... ஜனவரி கடைசியில ரிலீஸ் ஆகும்னு சொல்றாங்க, அப்படியே ஆனாலும் எங்க ஊருக்கு வராதுன்னு நினைக்கிறேன். நன்றி பாஸ்

@ ஐத்ருஸ் : நன்றி

ஆதவா திஸ் இஸ் டூ மச்..... :-)
நேத்துதான் இந்த படம் பார்த்தேன், டிவிடி கிடைச்சது...

நிச்சயம் இன்செப்சனுக்கு இசையிலும் சரி திரைக்கதையிலும் சரி நல்ல போட்டியாகவே இருக்கும். இரண்டு திரைக்கதைகளும் முற்றிலும் வேறு வகை என்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் இரண்டுமே, இண்ட்ரஸ்டிங் என்ற வகையில் ஒன்றுதான்.

கையை வெட்டிக்கொள்கிற காட்சியில் வலியை உணர்ந்தேன், கண்ணீர் வந்தது, இது போன்ற காட்சிகளில் அருவருப்பு மட்டுமே மிஞ்சும். எனக்கு படம் நிரம்ப பிடித்திருந்தது
ஜீ... said…
அருமையான அறிமுகம் பாஸ்! குறிப்பாக 'தல'யின் இசைக்காக பார்க்கவேண்டும்! நன்றி!
ஜீ... said…
அருமையான அறிமுகம் பாஸ்! குறிப்பாக 'தல'யின் இசைக்காக பார்க்கவேண்டும்! நன்றி!
Prabhu0505 said…
bossu kalakkiteenga, tharamaana vimarsanam.