ஒரு நாள் ஒரு இரவு (18+) பாகம் 1
எச்சரிக்கை :
1. இதை யாரும் தனியாகப் படிக்கவேண்டாம். குறிப்பாக இரவில் படிக்கவேண்டாம்
2. இதயம் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவே வேண்டாம்!!
3. ?
முன் குறிப்பு:
இச்சம்பவத்திற்கு முன்னோ அல்லது பின்னோ நிகழ்ந்தவைகள் பற்றி கேட்காதீர்கள். அதில் சுவாரசியமுமில்லை.
சரி சரி... ஓவரா சீன் போடாம விஷயத்திற்கு வாரேன்.
போன தீவாளிக்கு அடுத்த மூனாவது நாள் குன்னூர்லதான் இருந்தோம்... நான் (ஆதவா), ஸ்கூபி, ஸ்ப்ரிங்கி, கோகுல், அப்பறம் ராக்கி.... (பொம்பள பசங்க யாரும் இல்லப்பா) குன்னூர்ல என்ன வேலைங்கறீங்க... இந்த அஞ்சு பேருக்குமே வெளியூர் வந்தா சைட் அடிக்கிறத தவிர வேறெந்த குலத்தொழிலும் இல்ல. பொதுவா, பொண்ணுங்கள விட்டா வேற எந்த பேச்சும் பேசலைன்னு சொல்லலாம்.. அது ஒரு பக்கம் ஸ்வீட்டா நடந்துட்டுதாங்க இருந்தது..... ஆனா இந்த ட்ரிப் ஒரு பெரிய அனுபவத்தை உண்டாக்கும்னு நெனச்சுக்கூட பார்க்கலை.... அதுவும் திக் திக் இரவு காட்சி மாதிரி ஆயிடுச்சு....
நாங்க அஞ்சுபேரும் அம்பாஸ்டர் கார்லதான் கிளம்பினோம். முதல்நாள் ப்லாக்தண்டர், அடுத்தநாள் குன்னூர், கோத்தகிரி போகலாம்னு ப்லான்... வருஷா வருஷம் ஊட்டிக்கே போகறதுக்குப் பதிலா இப்படி மாத்தி போலாமேன்னு ஐடியா.. ப்லாக்தண்டர், முடிச்சுட்டு, நைட்டு குன்னூர்ல தங்கிட்டு, அடுத்தநாள் சிம்ஸ் பார்க் போயிட்டு......... குன்னூர்ல இருந்து கொஞ்சம் மேல போனோம்... அப்பர் குன்னூர்.. டால்ஃபின் நோஸ் போயிருப்பீங்களே.. அங்கயேதான்.. ரெண்டு மலைகள் சந்திக்கிற வ்யூபாயிண்ட் அதுக்கு நடுவில அருவி... செம ப்லேஸ் அது. இன்னும் வ்யூபாயிண்ட் நெறய இருக்கு.. அதிலயும் நீலகிரீங்கற பேர் ஏன் வந்ததுன்னு தெரிஞ்சிக்க விரும்பறவங்க அந்த இடத்துக்கு நிச்சயம் போகணும். . கல்யாணம் முடிச்சுட்டு புதுசா ஹனிமூன் போறவங்க நிச்சயம் அதை பார்க்கணூம்
"அங்க நிக்குதுபார் சோடப்புட்டி.. அந்த ஃபிகரை போட்டோ எடுக்க முடியுமா?
“ஓ”
“மாப்ல, பக்கத்தில இன்னொரு ஃபிகர் நிக்குதுபாரு, அது அவளோட புருஷன். அன்லிமிடட் மீல்ஸ்டா... பொரட்டி எடுத்திருவான்”
“ டேய் இது கேண்டியோக்ரஃபினு சொல்லி சமாளிச்சரலாம்.”
” உம். மூஞ்சி. செருப்பால அடிப்பான், அப்பறம் தெரியும் உன் கிராபி என்னன்னு..”
“எடுத்திரலாம், ஆனா க்லியரா இருக்காதுடா.. ஜூம் பத்தாதே”
”முடியலைன்னு சொல்லி”
”முடிஞ்சா எடுத்துக்காமி”
இப்படியா என்னைத் தூண்டி விட்டானுங்க.. நம்ம பசங்ககிட்ட எந்த சவால்னாலும் தோத்தரலாம். ஆனா பொண்ணுங்க விஷயம்னு வந்துட்டா, ம்ஹூம்.... தோக்கவே கூடாது.. அப்பறம் வேலைக்காகதுன்னு சொல்லிடுவானுங்க. தவிர நானும் ஒரு நல்ல போட்டோக்ராபர் அப்படின்னு காட்டித் தொலைக்க வேணாமா? ஒண்ணு, அந்த ஃபிகரை போட்டோ எடுக்கணும்.. இல்லைன்னா பசங்ககிட்ட தோல்விய ஒத்துகிட்டு அப்பப்ப பல்பு வாங்கணும். முயற்சி பண்ணுவோமே.. அந்த பொண்ணுங்க ரோட்டோரமா இருக்கிற கம்பிகள் கிட்ட நின்னு இயற்கையை ரசிச்சுட்டு இருந்தாங்க. டால்பின் நோஸ் வ்யூபாண்ட் கூடாரத்தில இருந்து முதல்ல ரெண்டு ஷாட்... தெரியாத்தனமா எடுத்தேன்.. ப்ச்.. சரியா வரலை.. கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போய் எடுத்தேன்..... ஏமி வர லேது............ ஆனது ஆச்சு,,, பக்கத்தில போயி எடுத்தரலாம்னு ரொம்ம்ம்ப பக்கத்தில நின்னு பளிச்சு எடுத்து வந்து காமிச்சேன்....
“கல்யாணம் ஆன பொண்ணைப் போய் எடுத்துட்டு வந்திருக்கான் பாரு, XXXXXXX XXXX XXXX” ன்னான் கோகுல்..
"ஏண்டா, அவளுக்கு என்னா கொறச்சல்?
“கெழவி டா”
“ஏதோ ஒண்ணு, எடுக்கச் சொல்லி எடுத்தோம்ல”
“அது எல்லாருக்கும் போஸ் கொடுக்குது, ஒனக்கு மட்டும் கொடுக்காதா?”
“டேய், நீங்க தாண்டா எடுக்கச் சொன்னீங்க?”
“சொன்னா, செஞ்சுருவியா? இந்த மலையில இருந்து குதின்னா குதிச்சிருவியா?”
“பைனலா என்ன சொல்ல வறீங்க?”
“மொதல்ல கேமராவை ஆஃப் பண்ணு, சும்மா நோண்டிட்டே இருக்காத”
“கேமராவை எடுத்தான்னா, என்னவோ இவந்தான் பிஸி ஸிரீராம் மாதிரி ஆங்கிலுங்கறா அபர்சருங்கரா, ஷட்டருங்கறா, தொல்லை தாங்கலடா..
“இவன் ஷட்டரை க்லோஸ் பண்ணிட்டா சரி”
”போங்கடா ங்கொய்யாங்கோ... ”
”டேய் இவன் ஃபிகரை போட்டோ எடுத்து ஃப்லிக்கர்ல ஏத்தறதுக்குத்தான் இவ்ளோ பண்ணிட்டிருக்கான்.”
“இங்க பாரு... இந்த கொரங்கைக் கூட உன்னால சரியா ஃபோகஸ் பண்ண முடியாது”
” மாப்ல, போட்டோ எடுக்கறேன்னு எல்லா இடத்திலயும் படுத்துக்கிறாண்டா.. சரி நல்லாருக்கும்னு பார்த்தா.....
“அதை விட்றா.. அடுத்து என்ன ப்லான்.. சாப்பிட்டுட்டு கிளம்பலாமா? இல்ல, கோத்தகிரிக்கே ஸ்ட்ரெய்ட்டா போயிடலாமா?”
..........................
இப்படியே போயிட்டிருக்க, அந்த குரங்கு போட்டோ எடுரா மாப்ல நு என்னையே பார்த்துட்டுதான் இருந்தது. இவனுங்க என்ன நம்மள சொல்றது... எப்படியாச்சும் குரங்கை க்லோஸப்ல எடுத்து ஃப்லிக்கர்ல போட்டுட வேண்டியதுதான்.. அனிமல் போட்டோகிராபியில நம்மளை மிஞ்ச எவனும் இல்லை... கொஞ்சம் பின்னாடி போனாத்தான் நல்லாயிருக்கும்..
கொஞ்சம் பின்னாடி...
இன்னும் கொஞ்சம் பின்னாடி.....
இன்னும்...
இன்னும்....................
அப்பத்தான் அது நடந்தது!!!
தொடரும்...
Comments
எது? அந்த குரங்கா????
என்னமோ போங்க!
நட்புடன்,
ராஜ்.
இதயம் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவே வேண்டாம்!!
இத்தனை பில்ட் அப் தேவையா ஆதவா!!!
பில்டப் எல்லாம் சும்மா, உதார்//// மற்ற பாகங்களையும் நீங்கள் அவசியம் படிக்கவேண்டும்!!
(இதுவரை இந்த மாதிரி ஜாலி நடையில் என் வலைப்பதிவில் ஜல்லி போட்டதில்லை!! இது புதிது!)
....? ....? ....?(என்னவா..இருக்கும் ..?)
//அன்லிமிடட் மீல்ஸ்டா... //
ஒ ... அதுதான்னா இது ....
பின்னால நாய் ஏதாவது வந்து கடிச்சிருச்சா...!
//
இங்கே படிப்பவர்கள் எல்லோரும் அண்ணாவின் இதயத்தை கடனாக வாங்கியவர்கள் தான்... நீங்க ஹி...ஹி.. தைரியமாக சொல்லுங்க.