செய்வன செய்வோம்
செவிப்படலத்தைக் கிழித்தெறியும் கொடூர கர்ஜனை, சுண்டித் தெறிக்கும் நிறத்திலான காமம் விறைக்கும் கவர்ச்சி நடனங்கள், புத்திக்கு சற்றும் எட்டாத மொழி ஆளுமை, மதுவினுள் முயங்கி அனர்த்தமாகப் பிறழ்ந்துவரும் இசை
ஆங்கிலப்பாடல்களுக்கான நமது உருவம் மேற்படி கூறியதைப் போன்றுதான் பலரின் மனதில் இருந்து வருகிறது. பரவலான இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எப்பொருளினும் தேடுபொருளுள்ளது என்பதே என் கருத்து. பாடல்கள், அது சொல்லவரும் உள்ளர்த்தம், அதனுள் பிரித்து நாமெடுக்கும் கருத்து என்று பலவகையான தேடல்களை உள்ளடக்கியது. தமிழிசைப்பாடல்களில் ஓரிரு பாடல்களைத் தவிர்த்து ஏனையவை யாவும் சகிக்க இயலாததாகவும் சலிப்பின் உச்சமாகவும் இருப்பதை மக்கள் எப்படித்தான் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் மொழி எனும் நரம்பு வெறும் சக்கைகளைப் பின்னிக்கொண்டு செல்கிறதோ எனும் உணர்வு ஒவ்வொரு பாடலினிடையேயும் தோணுகிறது. தப்பிப் பிழைப்பது சில பாடல்களின் வரிகள்.
Life for Rent (2003) தொகுப்புக்கு முன்னரே Didoவின் அறிமுகம் Thank you எனும் பாடலில் ஏற்பட்டது. உச்சஸ்தாயில் குதித்து பாடிவிடமுடியாத மென்குரலைப் பெற்றிருந்த அவள், கவர்ச்சி எனும் மாயவலையினுள் வீழ்ந்திடாதவாறு உடற்கட்டையும் வைத்திருந்தாள். டைடோவுக்கு எப்பொழுதும் இந்தியாவின் மீதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருந்திருக்கிறது. Life for Rent தொகுப்பில் Mary in India எனும் பாடலைப் பாடியிருந்தாள். இப்பொழுது சமீபத்தில் வெளிவந்த Safe Trip Home தொகுப்பில் Let's Do the Things, We Normally do எனும் பாடலில் இந்திய பெண் டாக்ஸி ட்ரைவரின் ஒருநாள் வாழ்வை மையப்படுத்தி பாடியிருப்பது அவள் கொண்டிருக்கும் இந்தியப்பாசத்தின் மடங்கு அதிகரிப்பதாகவே இருக்கிறது.
பரபரப்பாக இயங்கும் இந்திய நகரங்களில் ஒன்றான மும்பை நகரத்தின் காலைப்பொழுதில் டாக்ஸியில் முதல் பயணியைத் தேடுவதாகத் தொடங்கும் இப்பாடலின் முதல் காட்சியே மென்மையாக ரசிக்க வைக்கும் ஹைக்கூ. அந்த பெண் ட்ரைவர் சாலையின் மீதுண்டான கவனத்தையும் குழந்தைகளைக் கட்டித் தவிழமுடியா தவிப்பையும் அடுத்தடுத்த காட்சிகளிலேயே நாம் உணர்ந்து கொள்ளலாம். மும்பை நகரத்தின் சூழல் ஒரு டாக்ஸியின் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்கிறது. பயணிப்பதற்காக பயணிகள் ஏறுகிறார்கள். அந்த பெண் ஓட்டுனர் எல்லாவிதமான பயணிகளையும் சந்திக்கிறாள். ஒரு பெண் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு பச்சைப் பட்டாணியை உரிக்கும் பொழுது மாநகரத்தின் அவசர சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. அதே பெண், வீட்டுக்குள்கூட நுழையாமல், தன் குழந்தையைச் சுமந்து கொண்டு வேலைக்காகக் காத்திருக்கும் கணவனிடம் குழந்தையைப் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்புவது, நகரமயமாக்குதலின் இயந்திரத்தனத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இருவரும் ஒத்து அமர்ந்து குழந்தையைக் கொஞ்சிட நேரம் அமைவதில்லையென வாழ்க்கையின் சூத்திரம் அவர்களுக்குள் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த பெண் ஓட்டுனர், தான் வழக்கமாகச் செல்லுமிடத்திற்குச் செல்லுகிறாள். உணவு உண்கிறாள். வளையல்களை வாங்குவதற்காக அவள் சில கடைகளை நாடுகிறாள். மீண்டும் பயணம்.
ஒருநாளில் அவள் சந்திக்கும் பயணிகள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்.. குடும்பத்துடன் ஒன்றியவராய், குடும்பமே அற்றவராய், தொழில் வளர்ச்சியில் முனைந்து கொண்டிருக்கிறவராய், பணிக்கென குடும்ப சந்தோஷத்தை இழப்பவராய், ஒரு குடிகாரராய், யாருமற்ற தனிமை சிக்கிவிட்டது போன்று கட்டித் தவழும் ஒரு காதல் ஜோடிகளாய் இப்படி எல்லா வகையிலான மனிதர்களையும் அவள் பின்னிருக்கையின் வழியே சந்தித்துக் கொண்டிருக்கிறாள். இரவில் ஒரு முதியவளை இறக்கிவிட்டு அவளைப் பாசத்துடன் பார்க்கும் பார்வையில் அவளின் இன்மையும் ஏக்கமும் வழிகிறது. சட்டென்று தன்னிலை திருந்தியவளாய் பயணத்தைத் தொடருகிறாள். முடிவில் தனது டாக்ஸியையே வீடாக்கி படுத்துறங்குகிறாள்.
பெண்ணின் அரவணைப்பு, ஒரு புறாவின் இறகில் ஒளிந்து கொள்வதற்கு சமமாகிறது என்பதை நாம் வாழ்வில் காண்கிறோம். சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களை இந்த பெண் டாக்ஸி ட்ரைவரோடு ஒப்பிடும் பொழுது ஒப்பிடமுடியாத தூரத்திற்கு அப்பால் அவர்கள் விலகி நிற்பதையும், பயணிகளின் மீதான அக்கறையை ஆட்டோ ஓட்டுநர்கள் தவறவிடுவிடுவதையும் காணமுடிகிறது. இப்பாடலின் வழியே டாக்ஸி ட்ரைவரினுள் இயல்பாகவே மிதந்து கிடக்கும் அக்கறைத்தனத்தைக் காணலாம். பயணிகளோடு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது தனது சந்தோஷமெனத் துள்ளுவது, இரவில் தனிமையாக பயணிக்கும் முதியவளை தவிப்போடு பார்ப்பது, தெருவில் சாலையைக் கடந்துசெல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து சிரிப்பது போன்றவை உதாரணங்களாக்கலாம்.
இப்பாடலின் வழியே வாழ்வின் எல்லா ஆதாரங்களிலும் பெண்மையின் சுவடு இருந்தாகவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏதோவொரு குறுநகரங்களில் தனிமையை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் குறித்த எண்ணங்கள் தொடர்ந்து எழுகின்றன. வாழ்க்கையின் ஒருநாளைய பக்கத்தைத் திருப்பும் சமயங்களில் அந்நாள் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை முன்னே ஓடும் மனத்திரை முடிவு செய்வது போலும் இப்பாடல் எனக்குத் தோன்றுகிறது.
பெண் ட்ரைவராக நடித்திருக்கும் ஸஹானா கோஸ்வாமியின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. குறிப்பாக அவரது கண்கள் ஓரளவு நடித்திருக்கின்றன. பெண் டாக்ஸி ட்ரைவரைப் போன்றே மாறிவிட்ட அவளது அலங்காரம் ரசிக்கவைக்கிறது. பொருத்தமான தேர்வு. பாடல் காட்சிகளைப் பொருத்த மட்டில் டாக்ஸி ட்ரைவரின் ஒருநாள் வாழ்க்கை என்றாலும், பாடல்வரிகள் உணர்த்துவது வேறு என்னவோதான்..
Armored cars and tanks and guns
came to take away our sons
And everybody’s stood behind
The man behind the wire
என்ற வரிகள் Paddy McGuigan எழுதிய ஐரிஷ் இனப்பாடல் "The men behind the wire" என்ற பாடலிலிருந்து கடன்வாங்கி எழுதப்பட்டிருப்பதால் இப்பாடல் டைடோவை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது என்றாலும் பாடலின் வெற்றி அதனை மறைத்து நிற்கிறது..
டிடோவுக்கு இப்பாடல் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துவிடவில்லையெனினும் ஒரு இந்தியனாக, இப்பாடல் எனது புலன்களின் தாகத்தைத் தீர்த்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
சுட்டி : http://www.youtube.com/watch?v=EKR_bYiBf20
Comments
நேற்று ஒன்று முதன் முதலில் பார்த்தேன்
நண்பரே உள்ளே போயிட்டு வாறேன் ...
பாடலினை பார்க்க முடியவில்லை!
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
படங்களும் பாடலும் அருமை.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாக்கும் கொடுத்தாச்சு...
நல்ல பகிர்வு...
அதிலும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலைப் பற்றி...
நன்றி ஆதவா...
சமீபமாகக்
கேட்கவில்லை!!
பாடலை பார்க்காமலே எழுத்தில் கண்முன் அதன் அங்க அசைவுகளை கொண்டுவந்துவிட்டீர்... எழுத்தோட்டம் எப்பவும்போல் ரசனை
இருப்பினும் நீங்கள் எழுதிய விதம் ஈரப்புடையதாக உள்ளது. இப்பாடல் குறித்து உங்கள் பார்வையும் ரசனையும் அதன் முழுமையை உணர்வதும் எழுத்து வழியில் அழகாக தெரிகின்றது.
எழுத்து நடை மிக நேர்த்தி ஆதவா!
நல்ல பதிவு.
விமர்சண செல்லும் விதம் இரசிக்கும்படியாக இருக்கின்றது.
இந்த பாடலை பார்த்துவிட்டால் இன்னும் கொஞ்சம் புரியலாம் ...
நாகரீகம் எனும் பேரில் நாம் தொலைத்தவைகளின் பட்டியல்
அதிகம் ஆதவா....
வாழ்த்துக்கள் ஆதவரே....
இந்த இடம் :-)
உன் கவிதை மாதிரி
Embedding disabled by request
என்ற பிழையை துப்புகிறது.
இருந்தாலும் பதிவை படித்து விட்டு வருகிறேன்.
ஆங்கில இசை குறித்த பொது மதிப்பீடு, இந்திய மத்திய தரவர்க்கத்தின் இயல்பு வாழ்வு, இசை, பாடல். பதிவு எனப் பலவிடயங்களை அழகாகப் பதிவு செய்துள்ள இவ்வலைப் படைப்பினை நன்றியுடன் எங்கள் தளத்தில் இணைத்துள்ளோம். உங்களுடன் தனி மடலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயவு செய்து 4tamilmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவிரியில் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
ஆங்கிலப்பாடல்களுக்கான நமது உருவம் மேற்படி கூறியதைப் போன்றுதான் பலரின் மனதில் இருந்து வருகிறது.//
உங்கள் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.நிறைய ஆங்கில பாடல்கள் மனதை வருடும் மெல்லிசையால் நெஞ்சை பிழிந்திருக்கின்றன.மேலும் இசையை விட பாடல் வரிகள் அழுத்தமாக இருக்கும்.
நான் அதிகம் ரசித்தது ஜெனிஃபர் லோபஸ்..
அழகு ஆதவன்.
ஒரு பாடலுக்கான விமர்சனம் என்றில்லாமல் உணர்வுப்பூர்வமானதொரு சிறுகதையை படித்தாற்போல் ஒரு உணர்வு.
எதிர்பார்ப்பை பொய்யாக்க வில்லை.
பாடலினை பார்க்க முடியவில்லை!
காட்சிகளும், பாடலும் அருமை.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
//பெண்ணின் அரவணைப்பு, ஒரு புறாவின் இறகில் ஒளிந்து கொள்வதற்கு சமமாகிறது என்பதை நாம் வாழ்வில் காண்கிறோம்.//
அருமை...
ஆங்கில பாடல்கள் நான் அவ்வளவாக கேட்டதில்லை, மன்னிக்கனும் நண்பா எனக்கு அதைப்பற்றி விமர்சனம் தெரியவில்லை..
உங்களின் விமர்சனம் மற்றும் பாடம் நன்றாக இருக்கு
தாங்களின் வலைப்பூவை சிறந்த தமிழ் வலைப்பூக்களில் இணைத்துள்ளேன்.
நன்றி.
சிறந்த தமிழ்ப்பூக்கள் 1.0
http://best-tamil-blogs.blogspot.com
------------------
வாங்க ஜமால்.... நீங்கதான் ஃபர்ஸ்ட்.... நன்றிங்க... ரொம்ப டைம் எடுத்து படிச்சதுக்கு நன்றிங்க...
நன்றிங்க வேத்தியன். ரசித்து படித்திருக்கிறீர்கள். டைடோவையும் ரசிச்சமை அழகு. Life for Rent கேட்டுப்பாருங்க இன்னும் அழகா இருக்கும்
வாங்க கவின்.. என்னாச்சு உங்க பழைய தளம்? இப்போ புதிய முகவரிக்கு மாறிட்டீங்களா?
வாங்க வாசுதேவன். மிக்க நன்றி.. போனிலும் கூப்பிட்டு சொன்னதுக்கு நன்றி.
தேவன் சார். கேட்டுப்பாருங்க நல்லா இருக்கும்.
அபுஅஃப்ஸர், மிக்க நன்றிங்க..
ஆ.முத்துராமலிங்கம்,
குடந்தை அன்புமணி... ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்கணும்ல.. நமக்கு தமிழ்பாட்டு பிடிக்காட்டி வேற மொழி பாடல்கள்.... அதிலயும் நான் சின்ன வட்டத்திலதான் இருக்கேன்.. மற்ற மொழி பாடல்களை பார்த்ததில்லை.
வாங்க ஷக்தி மேடம் மிக்க நன்றி
மாப்ள.... நன்றிடா!!
ஜோ, இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை.. கவனிக்கிறேன்.
நன்றிங்க அ.மு.செய்யது.. சுட்டி வேலை செய்யாதது என் தவறு... சரியாக கவனிக்கவில்லை... ஜேலோ தான் உங்களுக்குப் பிடித்தவரா.... அருமை.. எனக்கும் கொஞ்சம் பிடிக்கும்.
கடையம் ஆனந்த் சார். சுட்டியைத் தட்டி பாருங்கள்... இங்கே ஏனோ வேலை செய்யவில்லை
வாங்க பிரவின்ஸ்கா... நலமா?,, நன்றி.
தமிழ்பறவை... மெல்ல கேளுங்கள்.. என்னிடம் பல தொகுப்புகள் உள்ளன.
நன்றிங்க மாதவராஜ் அவர்களே.
ஆ.ஞானசேகரன்.. நீங்கள் நேரம் கிடடக்கும்போது கேட்டுப்பாருங்கள்...
Ops16, மிக்க நன்றி!!!
சுட்டியைத் தட்டி Youtube.com இல் பாருங்கள் நண்பர்களே!!
கல்லூரியில் படிக்கும் போது ஆங்கிலப் பாடல்களை ரசித்ததோடு சரி...இப்போது உங்கள் விமர்சனம் படித்தது மீண்டும் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது...
இந்த பதிவில் நான் மிகவும் ரசித்த வரிகள்...
:)))
இறுதியில் .
Armored cars and tanks and guns
came to take away our sons
And everybody’s stood behind
அர்த்தம் பெதிந்ததாக மனத்தில் உறைந்து விடுகிறது.
பாடல் கேட்க இயலவில்லை.embedding disabled request nu வருது...
நல்ல வித்தியாசமான பதிவு...
இந்த அடைப்பலகை எங்கே இருந்து தரவிறக்கம் செய்தீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா ?!
வாழ்க தமிழுடன்,
நிலவன்.
உங்கள் அபரிமிதமான ரசனையை உங்கள் எழுத்தில் காணமுடிகிறது.
உங்கள் வலைப்பக்க வடிவமைப்பு பிரமாதமாக இருக்கிறது.
why are u taking other peoples photos..without proper permission..
maha kevalam...
எழுத்தில் ஆளுமை அருமை...
சீக்கிரமே அடுத்த பதிவு போடவும்..
உங்களின் ரசனையான பின்னூட்டங்களுக்கு என் வலையும் ஏங்குகிறது .
ஆமா, எப்ப கடைப்பக்கம் வர்றதா உத்தேசம்?