பெண்மையின் கோபம்


சாரல் தூறிய பொழுதொன்றில்
சருகோசை இசைத்து
கொலுசுகள் பாட
விரைந்தோடுகிறாள்
மலங்கழிக்க

சொட்டுத் துளிகள்
ஒன்றையொன்று உதைக்க
இலைநுனிகளை ரசிக்க நேரமின்றி
கரமறுந்த மரத்திடுக்கில்
மறைகிறாள்

புலமை நிறைந்த மரக்காடு
சப்தக் கவியெழுத
அவளுக்கு உறங்கிக் கொண்டிருந்த
அச்சத் தன்மை ரசிக்கத் துவங்குகிறது

சேறு விழுங்கிய சொட்டொலி
காது படலத்தை கிழித்தெறிகிறது
மிரட்சியால் கண்கள்
கதவு பூட்டிக் கொள்கிறது

இயற்கை அவளை
அந்நேரத்திலும் ரசிக்கிறது
அங்குல அங்குலமாய்
அவள் அங்கங்களைத்
தொட்டு நுகர்ந்து ருசிக்கிறது.

காடுவழி உட்துளைந்து
மரமெய் விட்டிறங்கி
கதிர்களோ துளிகளோ
அவளை அணைத்து முத்தமிட,

கோபத் தாக்கத்தின் வெட்கச்சிதறலில்
மெய்சிலிர்த்து முகம் சிலுப்பி
ஓடுகிறாள்..
வேற்றொருவன் காண்பதாக.
-------------------------------------------
தமிழிஷில் வாக்களிக்க..

தமிழ்மணத்தில் வாக்களிக்க..

எதிர்வாக்களிக்க.

Comments

ரொம்ப நல்லா இருக்கு ஆதவா...
படித்தேன், ரசித்தேன்...

ஓட்டும் போட்டேன்...
sakthi said…
its really nice aadava
கவிதையை அனுபவித்தேன்...
ஆராயவில்லை...
(ஏன்னா தெரியாது... :-) )
sakthi said…
கோபத் தாக்கத்தின் வெட்கச்சிதறலில்
மெய்சிலிர்த்து முகம் சிலுப்பி
ஓடுகிறாள்..
வேற்றொருவன் காண்பதாக.

vithyasamana karpanai aadava

engu erunthu than ippadi ellam

yosikarengalo

valthukkal
sakthi said…
புலமை நிறைந்த மரக்காடு
சப்தக் கவியெழுத
அவளுக்கு உறங்கிக் கொண்டிருந்த
அச்சத் தன்மை ரசிக்கத் துவங்குகிறது

marakkatil pulamai yaa

too gud word thambi

keep it up
Suresh said…
மச்சான் கலக்கிட்ட டா

//இயற்கை அவளை
அந்நேரத்திலும் ரசிக்கிறது
அங்குல அங்குலமாய்
அவள் அங்கங்களைத்
தொட்டு நுகர்ந்து ருசிக்கிறது//

இது என்னை கவர்ந்தது..
ஆதவா said…
வணக்கம் வேத்தியன்.. மிக்க நன்றி... கவிதையில் ஆராயும் அளவுக்கு என்னோட எழுத்து இருப்பதில்லை.. ஏதோ பொத்தாம் பொதுவாக.... மிக்க நன்றிங்க.. (ஓட்டுக்கும்!!!!)

நன்றிங்க ஷக்தி! உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!!!
அருமையான கவிதை, உங்கள் இக்கவிதையை கீற்றிலும் படித்திருந்தேன், ரொம்ப பிடித்தக் கவிதை. அனைத்து பத்திகளும்
நுன்னிய சிந்தனை. அழகான கவிதை ஆதவன்.
நல்ல நுண்ணிய பதிவு ஆதவா.
வழமை போலவே ஆதவனிடமிருந்து
ஒரு வித்தியாசமான கவிதை
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு களத்திலும்
சொற்களையும் அழகாக தேர்ந்தெடுத்து விடுகிறீர்கள்...
//புலமை நிறைந்த மரக்காடு
சப்தக் கவியெழுத
அவளுக்கு உறங்கிக் கொண்டிருந்த
அச்சத் தன்மை ரசிக்கத் துவங்குகிறது

சேறு விழுங்கிய சொட்டொலி
காது படலத்தை கிழித்தெறிகிறது
மிரட்சியால் கண்கள்
கதவு பூட்டிக் கொள்கிறது//

இந்த இரண்டு பத்தியிலும் வார்த்தைகள் கோர்த்த விதம்
மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஆதவன்...
Unknown said…
கலக்கல்.
thamizhparavai said…
ஆதவன் வித்தியாசமான (பார்வை) கவிதை...இக்கவிதை ஆரம்பத்தில் நான் வேறொரு பார்வையை எதிர்பார்த்தேன். ஆனால் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
நல்ல கற்பனை நண்பரே! வார்த்தைப் பிரயோகம் பிரமிக்க வைக்கிறது.
வித்தியாசமான சூழல்.. அருமையான கவிதை ஆதவா..
புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதையா ??

இல்லை கவிதைக்காக தேடப்பட்ட புகைப்படமா ??

புகைப்படத்திற்கும் கவிதைக்கும் அத்துணை பொருத்தம்.
உங்கள் கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்ததைப் போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

வித்தியாச‌மான‌ வாசிப்பானுப‌வ‌ங்க‌ளை த‌ருகிறீர் ஆத‌வ‌ன்.

காலைக்க‌ட‌ன் க‌ழிக்கச் சென்ற‌ க‌ன்னியின் க‌தை என்று டைடில் வ‌ச்சிருக்க‌லாமோ !!!!
This comment has been removed by the author.
நல்ல ரசிக்கத்தக்க வரிகள், சாரலில் நனைந்தேன்,நன்றி
இந்த முறையும் கலக்கி இருக்கீங்க...
வாழ்த்துகள்...
களம் எதுவானாலும் சொற்களால் வித்தை காட்டும் உங்கள் கவிதை அருமை ஆதவா
பயபுள்ளைங்க எப்படியெல்லாம் யோசிச்சி கவித எழுதுதுங்க...............

அசத்தல்
நல்லா இருக்குது.
/அவளுக்கு உறங்கிக்/

அவளுக்குள் என்று எழுத நினைத்தீரகளா? அல்லது அவளுக்குதானா?
ஆதவா said…
மிக்க நன்றி ஆ.முத்துராமலிங்கம்
மண் குதிரை,
புதியவன்
கே.ரவிஷங்கர்,
தமிழ்ப்பறவை
குடந்தை அன்புமணி
கார்த்திகைப் பாண்டியன்
அ.மு.செய்யது (கவிதை எழுதிய பிறகுதான் படம் தேடினேன்!!)
சுந்தர். (முதல் வருகைக்கு நன்றி)
பித்தன்
வழிப்போக்கன்
சொல்லரசன்
அத்திரி
ச.முத்துவேல் (திருத்தம் தேவையென நினைக்கிறேன்!)
Anonymous said…
பென்மையின் வவி
விதயாசமான பார்வை
Rajeswari said…
இதே சூழ்நிலையில் ஒரு தமிழ் பட பாடல் கூட உண்டு.ஜெய்சங்கர் படம் என்று நினைக்கிறேன்.

“நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்.என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்”- ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கவிதை நன்றாக உள்ளது ஆதவா
"ஒன்றையொன்று உதைக்க
இலைநுனிகளை ரசிக்க நேரமின்றி
கரமறுந்த மரத்திடுக்கில்
மறைகிறாள்..."
நல்ல கற்பனை, இனிய வரிகள். ரசித்தேன்.
மிக நுண்மையான உணர்வு, அதைச் சரியாக வெளிப்படுத்தும் வார்த்தைகள். ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்