கெல்லியை காதலியுங்கள்.. ப்லீஸ்..
இந்த உலகம் எதற்காவோ ஒரு பயணத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பம் எப்படி இருந்ததோ அதைப் போன்றே முடிவும் இருக்கலாம் இந்த இடைவெளியில் சிறு சிறு குமிழ்களாக வரலாற்றைச் சேதப்படுத்தி சேமிக்கும் துகள்களாக நிரப்புகிறது மனித வாழ்க்கை. கெல்லியிடம் நான் கற்றுக் கொண்ட பயணங்கள் எத்தனையோ..
வாழ்க்கைகளுக்கு வழிகாட்டிகளாக எவை வேண்டுமானாலும் அமையலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு துரும்புகளுக்கும் வழிகாட்டிச் செல்லுவது என்பது எத்தனை சிரமமான விஷயம். ஒரு வெங்காயம் உரிப்பதைக் கூட என் அம்மாவைப் பார்த்து செய்தேன் என்று சொல்லும் பொழுது அச்செயலுக்கான வழிகாட்டி அம்மாவாக ஆகிறாள். நான் கெல்லியை ரசிக்கும் பொழுதெல்லாம் இதனையே நினைத்துக் கொள்ளுவேன். என் நரம்பின் வழியினூடு இசைத்தட்டுகள் தொடர்ந்தோடுவதற்கும் அடிப்பாலமாக கெல்லி இருந்ததை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கமுடிகிறது. அவளே முழு நாதமும் ஆகிறாள் என்று பொய்சொல்லமுடியாது. அவள் என்று சொல்லுவதைக் காட்டிலும் கெல்லியின் படைப்புகளை என்றுவேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்தான் ஆனா படைப்புகள் அவளிடமிருந்து வருகின்றமையாலும், அதன் ஒவ்வொரு நுனியிலும் அவளது இசைவுகள் இருப்பதாலும் கெல்லியை மட்டுமே என்னால் குறிப்பிட முடிகிறது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் பழைய வீட்டில் Breakaway யின் பாடல்கள் வீட்டின் மூலையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த பொழுது எழுந்த மனக் கிளர்ச்சியும், வேறுபாடும் எந்தவகையிலும் சொல்லமுடியாதவை. வெறும் பொழுதுபோக்குப் பாடலாகவோ, அல்லது கவர்ந்திழுக்கும் கவர்ச்சிப் பாடலாகவோ இருப்பதைக் காட்டிலும் அப்பாடல் எப்படி ரசிகனை லயிக்கவைக்கிறது என்பதில்தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. எனக்கு அதன் முடிச்சு அவிழ்ந்ததும் கட்டவிழ்ந்து சிறகை விரித்து அகண்டவெளியில் பறக்கும் சிறு பறவையைப் போன்றதொரு உணர்வை ஒவ்வொருமுறையும் பெறுகிறேன். கெல்லியின் பாடல்கள் வரிகளில் மயங்கி கவிதை எழுதிய காலமும் உண்டு!!
Since you been gone பாடலின் கவிதைத்துவமும் Breakaway பாடலில் அது உச்சம் பெறுவதையும் காணும் பொழுது, கெல்லி ஒரு நல்ல கிரியேட்டிவ் பாடகியாக இருக்கவேண்டும் என்பது கருத்து. Because of you பாடலின் காட்சியமைப்பு வெகுவாக கவர்கிறது. இதைப் போன்றதொரு கற்பனையை எந்த திரையிலும் நான் கண்டதேயில்லை. அதைப் பற்றிய சிறுகுறிப்பு ஒன்றை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
கணவன் தம்பதி இருவருடையே நடக்கும் ஊடலைக் குறித்த இப்பாடல், கெல்லி எனும் பெண், தன் சிறுவயது பிராயத்தில் ஏற்பட்ட அப்பா அம்மா ஊடலைப் பார்க்க, கடந்த காலம் நோக்கிச் செல்லுகிறாள். அவள் கடந்த காலத்தில் கெல்லி சிறுவயதாக இருப்பாள்.. நிகழ்கால கெல்லியும், கடந்த கால கெல்லியும் இணைந்து அந்த ஊடலைக் கவனிப்பார்கள். ஆகவே அந்த பிரிவு மனப்பிளவை ஏற்படுத்தி உறவுகளிடையே நிலைக்குலைவை ஏற்படுத்திவிடும் என்பதால் மீண்டும் நிகழ்காலம் திரும்புகிற கெல்லி, எந்த ஊடலும் இல்லாமல் தன் கணவனோடு இருக்கப் பிரியப்படுகிறாள்!!!
அவசியம் இப்பாடலைப் பாருங்கள்... அதில் ஒளிந்திருக்கும் கவிதை தன்னாலே வெளியே வரும்!! காட்சியமைப்பில் பின்னியெடுத்திருப்பார்கள்...
இங்கே கிளிக்குங்கள்
Since you been gone இல் தொடங்கி இதோ இன்று வந்திருக்கும் My Life Would Suck Without You வரை நீண்டு நிற்கிறது எனக்கும் அவளுக்குமான இசைத் தொடர்பு.. கெல்லியின் பாடலை சலிக்காமல் கேட்டு, கணிணியே சலித்திருக்கலாம்.. அவள் சொல்லவருவது என்ன என்பதிலேயே எனது பார்வையும் ஆர்வமும் அடங்கி, அது எண்ணிக்கைகளைத் தாண்டி ரசிக்கவைக்கிறது.
இசை என்பது ஒரு பொதுமொழி. அதை ரசிக்க யாரும் எதையும் கற்றுக் கொள்ளத் தேவையில்லை. ரசிக்கும் தகுதி இருக்கும் எவரும் எதையும் செய்யலாம்.
My Life Would Suck Without You பாடல் UK யில் முதலாம் இடத்தைப் பிடித்திருப்பது இனம்புரியாத மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது.
தற்பொழுது US Hot #1 (Billboard Hot 100) உம் இப்பாடல்தான்....
ஒருமுறைதான் கெல்லியின் இசையை ரசித்துப் பாருங்களேன்.. அவளுள் நுழைந்து அவளைக் காதலித்துப் பாருங்களேன்!!
Videos :
Breakaway
Behind These Hazel Eyes
Since U Been Gone
My Life Would Suck Without You
Albums :
for torrents only : (please download utorrent before continue)
Breakaway
All.I.Ever.Wanted
இந்த பாடல்களை கேட்டுவிட்டு நிச்சயம் என்னைப் பாராட்டுவீர்கள்... பதிவு எழுதியதற்காக அல்ல, அழகான பாடல்களைப் பகிர்ந்ததற்காக....
---------------------------------------------
Comments
நல்ல பா(ப)டம்.
பிறகு பார்த்து பின்னூட்டுகிறேன்...
இசை மொழிக்குள் சிக்குவதல்ல
எந்த வகையில் இசை வெளிப்பட்டாலும் அதை ரசிக்க முடியும். உங்கள் ரசனை நல்லதாக உள்ளது. இசையில் லயித்து இசை மீட்டியவரை (அதாங்க கெல்லியை)
காதலித்து.. காதலிக்கவும் சொல்லிதருகின்றீர்கள், உண்மையில் உங்கள் ரசனை உயர்ந்தது தான்.
எனக்கு மென்னிசை பிடிக்கும் ஆனால்
அந்தளவுக்கு இசையில் பரிட்சயம் இல்லை. ஆனால் என் நன்பர் ஒருவர்
ஆங்கில இசையில் மிக ஈடுபாடு மிக்கவர் அவருக்கு இது நல்ல அறிமுகமாக இருக்கும். அவர் தற்போது ஊருக்கு போய் இருக்கின்றார் அவர் வந்ததும் நிச்சயம் கெல்லியை காதலிப்பார்.
ஆரம்பமே மிக அருமையாக எழுதிருக்கீங்க ஆதவா.
நல்ல பதிவு+பகிர்வு
\\
அருமை ஆதவா!
ரொம்ப நன்றாகவுள்ளது
ஆனால் எனக்கு என்னவோ ஜெலோ வைத்தான் ரெம்ப பிடிக்கும்.
நன்றி ஆதவா !!!!
நன்றி ஆதவா !!!!
thanks a lot
ஒரு இசையின் லயத்தோடு பகிர்ந்திருக்கிறீர்கள். பாடலைக் கேட்கும் முன், அதை பகிர்ந்து கொண்ட விதத்திற்காக இந்த பாராட்டுக்கள்.
அருமையான பாடல்!
தமிழில் படிப்பது இது முதல் முறை...
விமர்சனங்களும் அழகாக எழுதுகிறீர்கள் ஆதவன்...
உண்மையான வார்த்தைகள்...ரசிக்கத் தெரிந்தால் போதும் இசையை மட்டுமல்ல எந்த ஒரு கலையையும் ரசிப்பதற்கு அருமை...
அழகான விமர்சனம். பாடல்களை டவுன்லோட் செய்தாச்சு!
mankuthiray