பேய்களைக் காதலித்தவன்



பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல் சிலநாட்கள் வரையிலும் முடிவில்லாத தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. முன்பு சில மாதங்களுக்கு முன்னர் வெறுமை படிந்த அறையில் தனிமையைத் துணைக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பொழுதுகளில் பேய்களோடுதான் என் காதல் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் என்னோடு புணர்ந்த பேய்கள் மறுநாள் விடிவை நெருங்குவதற்குள் இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன. இருளும் இருள் சார்ந்த பொருளும் ஒவ்வொரு தினத்திய பேய்களை உற்பத்தி செய்வதற்காக காத்திருக்கும் பொழுது என் கோரைப்பாய்க்கு அடியில் உலர்ந்து போன என் காதலும் காத்திருக்கும்.

பேய்களுக்கும் எனக்குமான தொடர்பு மிகச் சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. அதன் தொடக்கத்தில் என்னை இறுக்க அணைத்துக்கொண்டு இரவுகளில் சுற்றியலையும்.. கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன். திகில் படக் கதாநாயகிகளைப் போன்று இரவில் அலறி விழித்து எனக்கருகே இருக்கும் பொருட்கள் தூரத்தில் ஓடுவதைக் கண்டு பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருப்பேன்.

பேய்கள் என்னைக் காதலிக்கத் தொடங்கிய தினங்கள் அவை. அவைகளின் முத்தங்களின் அளவுக்கு எண்ணிக்கை இல்லாமல் போகவே, என் பெற்றோருக்கு இந்நிலையைச் சொல்லவேண்டிய கட்டாயம். தூக்க கலக்கத்தில் அப்பா எழுந்து என்னாச்சுடா என்பார். அவர் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மிக மெல்லிய குரலில் பேசுவதாகவும், அவர் நீட்டும் கரங்கள் என் அருகே நீண்டு என்னைக் குத்துவதாகவும் தோன்றும். அவர் என்னுடைய நிலையை அவர் புரிந்து கொண்டாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் என்னை பேய்களிடமிருந்துபிரிக்கும் உத்தியை நன்கு அறிந்திருந்தார். ஒருவகையில் என் அப்பா ஒரு பேயோட்டிதான். அந்த சிறு அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குத் தட்டில் கிடந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசிவிடுவார். "அப்பா, அப்பவும் பேய் போகலைன்னா" என்று சந்தேகத்தோடு கேட்பேன். கையில் புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்து அந்த விளக்கு வெளிச்சத்தில் படிக்கச் சொல்லுவார். நான் படித்த பள்ளி கிறித்துவப் பள்ளி என்பதால் அருகே இருந்த தேவாலயத்திற்கு தினமும் செல்வது என் வழக்கமாக இருந்தது. அங்கே சுவிசேஷ பாடல்கள் (சுவிசேஷம் என்பது சரியான சொல்லா தெரியவில்லை), குறும் பைபிள்களும், இலவசமாகக் கிடைக்கும்.. அவை பின்னுக்கு என் பேயோட்டும் புத்தகங்களாக இருக்கப் போகின்றன என்பதை அறியவில்லை.

கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா. மெலிந்த சிவப்பு வர்ணத்தில் நடுவே இருந்து பிம்பம் உடைந்ததைப் போன்ற விரிசல்க்ளுக்கு இடையே பூத்திருக்கும் மரக்கிளைகளில் ஒன்றில் நான் அமர்ந்திருப்பேன். எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான். இது என் உறக்க காலத்தில் எத்தனை நொடிகள் நீண்டது என்பது தெரியாது. ஆனால் அடுத்த நொடியில் பிம்ப விரிசல்களின் ஒவ்வொரு கீற்றுகளிலும் என் அங்கங்கள் சிதறிக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

கிட்டத்தட்ட ஓவியங்களை ஒத்திருந்தன பேய்கள் என் காதில் ஓதிய கவிதைகள். இருளும் நிசப்தமும் உடன் ஓடிவரும் சொற்களை மடித்து கவிதைகள் கொட்டின. அவைகளின் ஓங்காரத்தில் கொட்டிய கவிதைகளிலெல்லாம் யாருடைய குருதியோ நிறைந்திருக்கும். காகிதத்தில் விரிசலுற்று

தற்காலிக பேயோட்டிகள்தான் என் வாழ்நாளில் பலநாட்களில் நான் கண்டிருந்தவையாக இருந்தது. பைபிள்கள் காகித அரிப்பில் இரத்தம் தீர்ந்துபோய் இறந்து கிடந்தன, ஆன்மீக முடிச்சுகளை அவிழ்த்து விட்டதால் எந்த புத்தகமும் பேயோட்ட முன் வரவில்லை. பெரும் மரணத்தினிடையே போராடி எழும் மனிதர்களைப் போன்று உறக்கத்தில் எழுந்து, மாளாத் துயரில் அங்கங்கள் வெடித்து இறக்கும் நொடிகளைப் போன்று பேயோடு உறவாடிக் கொண்டிருந்த அந்த இரவுகளை எப்படி மறப்பது? கொஞ்சம் வயது ஆகிவிட்டது. இந்த விஷயத்தை யாரிடம் சொல்லுவது எனும் மானப் பிரச்சனையாக வேறு இருந்தது. பேய்கள் என்னை நிர்வாணமாக்கி நடுச்சாலையில் நிற்கவைத்ததைப் போன்று ஒவ்வொரு இரவுகளிலும் மானம் பறிபோனது.

பின்வந்த நாட்களில் வேறு வழியின்றி எனக்குத் தெரிந்த ஒரு சென்னை தோழியிடம் என் பிரச்சனையைப் பகிர்ந்தேன். சாதாரணமாக யாரிடமும் சொல்லக்கூடாதென்று நினைத்த விஷயங்களை வேறு வழியின்றி சொல்லவேண்டியதாக ஆக்கிவிட்டது.. அந்த தோழியும் ஒரு கிறித்துவள் என்பது குறிப்பிடத்தக்கது. அவளை நேரில் கண்டதில்லையெனினும் அவளே எனக்கு நிரந்தர பேயோட்டியாக இருந்திருக்கிறாள் என்பது அப்பொது தெரியாமல் போய்விட்டது. யோகாக்களில் கவனத்தைச் செலுத்தச் சொன்னாள். பதினைந்து நாட்கள் யோகா என்று "வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. தியானங்களின் ஆற்றலுக்கு என்னைப் பீடித்திருந்தவைகள் மெல்ல மெல்ல அகலத் துவங்கின. பதினைந்தாம் நாளில் என்னோடுண்டான தொடர்ப்பை முற்றிலும் அற்றுவிட்டு வேறு எவரையோ பீடிக்கச் சென்றுவிட்டது பேய்கள்.

இப்பொழுது பேய்கள் இல்லாத இரவுகளைத்தான் ஒவ்வொரு நாளும் கழித்துக் கொண்டிருக்கிறேன். தியானங்களுக்கான பேயோட்டும் வேலை பதினைந்தாம் நாளோடு முடிந்துவிட்டது. என்னைவிட்டு அகன்ற பேய் இப்பொழுது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. தூரத்தில் இருக்கும் பொழுதுதான் காதலியின் அருமை புரியும். இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் பேய்களைப் போன்று எனக்கு நவீன ஓவியங்களையும் கவிதைகளையும் புகுத்தியவர்கள் வேறு எவருமில்லை!

தமிழிஷில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் வாக்களிக்க.

தமிழ்மணத்தில் எதிர்வாக்களிக்க

Comments

ஆதவா என்ன இது தலைப்பே பயமுறுத்துகிரது
//பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல் சிலநாட்கள் வரையிலும் முடிவில்லாத தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது//

பேய்களுடன் காதலா, உங்க கற்பனா சக்தி அளவில்லா போய்கிட்டிருக்கு
படிக்க படிக்க என் கண்களில் ஒரு மிரட்சி தெரிகிறது என்பது என்னவோ உண்மைதான்
//என்னை இறுக்க அணைத்துக்கொண்டு இரவுகளில் சுற்றியலையும்.. கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன்//

ஒஹ்ஹ் மிரட்சியூட்டம் வரிகள்
இந்த பதிவில் ஒரு திகில்... திக் திக் ஒரு திரைப்பட காட்சியை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கீங்க... நல்ல எழுத்தோட்டம்...
//தூரத்தில் இருக்கும் பொழுதுதான் காதலியின் அருமை புரியும். இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். //

ஆகா இப்படி எத்தனைபேரு கிளம்பிருக்கீங்க தல
//எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான்///

படிக்கவே பயங்கராமா இருக்கு...

விளக்கப்ட்ட ஒவ்வொரு காட்சியும் அருமை ஆதவா
மிரளவைக்கும் தலைப்பு! உங்களுடனான அனுபவம் வித்தியாசமானதாக இருக்கிறது. எனக்குகூட சில சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. புதிதாக ஒரு இடத்தில் இரவு தங்க வேண்டியிருந்தது. இரவு அனைவரும் தூங்கிவி்ட்டார்கள். என் கழுத்தை பிடித்து யாரோ இழுப்பது போன்று உணர்ந்தேன். கைகளிரண்டையும் கீழே அடித்து பக்கத்திலிருப்பவரை பார்த்து கத்துகிறேன். யாரும் உதவிக்கு வரவில்லை. சிறிது நேரம்தான். அதன்பிறகு பழைய நிலைக்கு வந்துவிட்டேன். விடிந்ததும் நண்பர்களிடம் கூறினேன். விடியற்காலையில் பூமி குளிர்ந்து, நீரோட்டங்கள் அதன் தன்மை மாறுமாம். அப்போது இதுபோல் நீரோட்டம் உள்ள இடத்தில் படுத்திருப்பவர்களுக்கு சில வைப்பரேசன் ஏற்படும். அதன் விளைவுதான். மற்றபடி பேயாவது...பிசாசாவது என்றார்கள். விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் கூறுங்கள்!
//வெறுமை படிந்த அறையில் தனிமையைத் துணைக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பொழுதுகளில் பேய்களோடுதான் என் காதல் ஓடிக்கொண்டிருந்தது. //

எனக்கும் தான்,, என்ன சூப்பர் பிகரா பேய் ஒன்னும் கிடக்கல

//என்னோடு புணர்ந்த பேய்கள் மறுநாள் விடிவை நெருங்குவதற்குள் இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன. //

என்னை பார்த்தா, பேய் உடனே இறந்து போய்டுது...

//கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா//

ஆமா ஆமா.... வேற்றுகிரத்து பேயி எல்லாம் என் கனவுல வருது.. புதுசு புதுசா ஓவியத்த காட்டுது.... வித்தியாசமா இருக்கு....

//எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. தியானங்களின் ஆற்றலுக்கு என்னைப் பீடித்திருந்தவைகள் மெல்ல மெல்ல அகலத் துவங்கின. பதினைந்தாம் நாளில் என்னோடுண்டான தொடர்ப்பை முற்றிலும் அற்றுவிட்டு //

யோகத்தினால் நம்மை சுற்றி,, அன்பு என்னும் அதிர்வலை உருவாக அதுவே நம்மை காக்கிறது அல்லது காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.... குப்பை உடலை (மனதை) கூட்டிபெருக்கி கோவிலாக மாற்றுகிறது...

//வேறு எவரையோ பீடிக்கச் சென்றுவிட்டது பேய்கள்//
வேருயார எனத்தான்... :)

சாமானியனுக்கும் ,,, எழுத்தாளனுக்கும் உள்ள வித்தியாசம்... ஒரு விசயத்தை பார்க்கும் விதம்..

அதில் நீ எப்பொழுதோ தேர்ச்சிபெற்றுவிட்டாய்....
வந்துடேன்... என்னா ஆச்சு தலைப்பு பயமா இருக்கு
\பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல் சிலநாட்கள் வரையிலும் முடிவில்லாத தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது\\

வித்தியாசமான துவக்கம்.
//என் கோரைப்பாய்க்கு அடியில் உலர்ந்து போன என் காதலும் காத்திருக்கும்.//

அம்மாடியோ...



//கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா. மெலிந்த சிவப்பு வர்ணத்தில் நடுவே இருந்து பிம்பம் உடைந்ததைப் போன்ற விரிசல்க்ளுக்கு இடையே பூத்திருக்கும் மரக்கிளைகளில் ஒன்றில் நான் அமர்ந்திருப்பேன்//

கனவுக்கு கலர் கிடையாது என்று விஞ்ஞானம் கூறுகின்றதே... கனவுகள் எல்லா கருப்பு வெள்ளைதானாம்.. மற்றொன்று நாம் காணும் கனவு வெறும் 60வினாடிகள் தானாம்..
.// ஏனெனில் பேய்களைப் போன்று எனக்கு நவீன ஓவியங்களையும் கவிதைகளையும் புகுத்தியவர்கள் வேறு எவருமில்லை!//

நல்ல விளக்க உறை பாராட்டுகள்..

ஆதவா, இதையும் பார்க்கவும்
ஆஆவியாஆஆஆஆஆ!...ஆவிகள் பற்றிய மனிதன் நம்பிக்கை
Suresh said…
@ ஆதவா

//படம் நல்லா இருக்குங்க சுரேஷ்.//

நன்றி ஆதவா

//நல்ல ரைமிங் வார்த்தைகள்!! //

ஹா நன்றி தலை :-)

//உங்களது முந்தைய சோளப்பயிர் கவிதையின் தரம் இதில் இல்லையென்றாலும்..//

எனக்கும் தெரியும் இது சும்மா ஜாலி :-) மொக்கை

நல்லா எழுதுறத விட மக்கள் இதப்போய் நிறையா படிக்கிறாங்க அதான் ஒரு வருத்தமும் கூட

பாருங்க அந்த அரசு பள்ளி பதிவுக்கு தமிழ் மணத்தில் - மைனஸ் ஒட்டும் விழுந்துருக்கு ஆது ஒரு நல்ல பதிவு என்னை பொருத்த வரையில்

ஆனா இதுக்கு ஒரே வோட்டு தான் ஹா

//சிலர் இதை கவுஜ என்பார்கள்!!! என்னைப் பொறுத்தவரை கவிதை என்றால் எல்லாமே ஒன்றுதான்!!! அதிலென்ன பிரிவு!!/??? //

சரியாய் சொன்னிர்கள் :-0 நானும் உங்கள் கட்சிதான்

// எதுகை வார்த்தைகளை இம்மாதிரி கவிதைகளின் மூலம் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.. இது ஒரு பயிற்சியும் கூட!!!//

:-) கரெக்ட்

உங்கள் மின்னஞ்ல் வேண்டுமே

mail to suresh.sci@gmail.com
Suresh said…
படித்து வருகிறேன் .. தலைப்பே அலறவைக்குது
Suresh said…
//பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல் சிலநாட்கள் வரையிலும் முடிவில்லாத தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. //

என் தோழியிடம் சொன்னா ஆஆ ஆவரோட பழகாதிங்க என்று பயப்பிடுவாள்

நீர் வித்தியாசமான ஆளூதான்யா
Suresh said…
//வெறுமை படிந்த அறையில் தனிமையைத் துணைக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பொழுதுகளில் பேய்களோடுதான் என் காதல் ஓடிக்கொண்டிருந்தது//

ஹா ;-) அருமையான நடை

காதலிக்க ஆளாயில்லை
kuma36 said…
முதல்ல பூச்சாண்டி இப்போ பேய் ஆஹா ஆளவிடுங்க சாமி நான் போயிட்டு வரவா
Suresh said…
//இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன. //

சூப்ப்ர் :-) ரசித்தேன்

//என் கோரைப்பாய்க்கு அடியில் உலர்ந்து போன என் காதலும் காத்திருக்கும்//

:-) என்ன சொல்லி உன்னை பாராட்ட
Suresh said…
//கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன்.//

ஹ ஹா இந்த பதிவ படிச்ச பொண்ணு தர மாட்டாங்க ஹ அஹ்
Suresh said…
//பைபிள்களும், இலவசமாகக் கிடைக்கும்.. /

எங்களுக்கும் கொடுத்தார்கள்
kuma36 said…
///"வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. ///


நானும் போயிருக்கிறேன். நம்ம தியானம் கட்டுரைக்கு ஒரு பலம் கொடுத்துவிட்டிங்க ஆதவா. இப்பதானே விளங்குது!!!!!
Suresh said…
//பேய்கள் என்னைக் காதலிக்கத் தொடங்கிய தினங்கள் அவை./

வேற பொண்ணே இலலையா

//கிட்டத்தட்ட ஓவியங்களை ஒத்திருந்தன பேய்கள் என் காதில் ஓதிய கவிதைகள். //

பேயை ரசிச்ச முதல் ஆளு நீர் தான்
Suresh said…
//பதினைந்து நாட்கள் யோகா என்று "வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.//

அருமையாண முடிவு என் தோழியும் அங்கே தான் பயின்றாள்
Suresh said…
//தூரத்தில் இருக்கும் பொழுதுதான் காதலியின் அருமை புரியும். //
ஹா அருமை ஆதவா

//இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். //

பேயே விட்டாலும் நீர் விட மாட்ட போல ஹா

//ஏனெனில் பேய்களைப் போன்று எனக்கு நவீன ஓவியங்களையும் கவிதைகளையும் புகுத்தியவர்கள் வேறு எவருமில்லை!//

அதுக்கு இந்த பதிவே சான்று
Suresh said…
தமிழ்மணத்தில் வோட்டு போட்டச்சு
kuma36 said…
///இப்பொழுது பேய்கள் இல்லாத இரவுகளைத்தான் ஒவ்வொரு நாளும் கழித்துக் கொண்டிருக்கிறேன்///

ரொம்ப நல்லதாய் போச்சு, உங்களுடைய படத்தை பாத்தாலே புரியுது நீங்க பேய்களை காதலித்தவருனு! நீங்க ரொம்ப நல்லவரு ஆதவா!

வழமையான வித்தியாசமான கற்பனைகள் சூப்பர்!
பேயா......... அய்யோ.......மீ த எஸ்கேப்.........
எனக்கு என்னமோ இங்கே பேய்கள் நம் மனதின் ஆழமான காம எண்ணங்களின் குறியீடாகவே தோன்றுகின்றன.. எல்லாருக்கு உள்ளேயும் இந்தப் பேய்கள் உண்டு.. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்பவர்கள் கம்மி.. நல்ல பதிவு நண்பா..
ஆதவா said…
வாங்க அபுஅஃப்ஸர்...

எல்லோரும் பயந்து நடுங்கி படிக்கவேண்டும் என்பது தாழ்மையான கருத்து!! ஹிஹி... நன்றி சார்.. உங்களது நீண்ட விமர்சனத்திற்கு மிக்க நன்றி அஃப்ஸர்...

----------------------------------------

வாங்க குடந்தை அன்புமணி!

அனுபவங்கள் சுமார் ரகம்தான்... அதை எழுத்துக்களால் ஓரளவு மிரள வைக்க நினைத்தேன்!! உங்கள் நீரோட்ட விளக்கம் அறிந்தேன்!! அது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு!!

----------------------------------------

ஆஹா.. வாங்க பித்தன்.. உங்களுக்கு பேய் பீடிச்சிடுச்சா... நம்மளை விட வித்தியாசமான அனுபவம் போலிருக்கே!! மிக்க நன்றிங்க!!

------------------

வாங்க ஞானசேகரன்... கலர் கனவுகள் என்பது ஒருவகையான உணர்வு.. கனவுகளில் நீங்கள் எப்படி தொடுகையும், பாலினமும் பிரித்து உணருகிறீர்களோ அதைப் போன்றது!! (உண்மையில் என்ன கலர் என்பது தெரியாது.. ஆனால் உலர்ந்து போன கொடூரக் கனவுகள் நிறைய என்னுள் வந்ததுண்டு!! )

மிக்க நன்றிங்க ஞானசேகரன்... உங்கள் பக்கம் வருகிறேன்..
ஆதவா said…
வாங்க சுரேஷ்... தோழியிடமெல்லாம் சொல்லாதீங்க..!! மிக்க நன்றி நண்பா!!! ரசித்த வரிகளுக்கு மிக்க நன்றி நண்பா!! ஓட்டுக்கும் நன்றி!!

-------------------------------------------

வாருங்கள் கலை பூச்சாண்டிகளைப் போல உருவமற்றது பேய்கள்!!! தியானப் பதிவுக்கு உங்களிடம் வேண்டியதன் காரணம் இப்போது தெரிந்திருப்பீர்களே!!

-----------------------

என்னங்க அத்திரி... அவ்வளவு பயமா??

-----------------------

இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் கார்த்திகைப் பாண்டியன்.. படிப்பவர்கள் சலித்துவிடக்கூடுமோ எனும் அச்சத்தில் குறைத்துக் கொண்டேன்.. நீங்கள் சொல்வது உண்மைதான்!!! நன்றி நண்பரே!
Anonymous said…
சுவிசேஷம் என்பது சரியான சொல்லா தெரியவில்லை//

சரியான சொல்தான் ஆதவா!
\\யோகாக்களில் கவனத்தைச் செலுத்தச் சொன்னாள். பதினைந்து நாட்கள் யோகா என்று "வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. தியானங்களின் ஆற்றலுக்கு என்னைப் பீடித்திருந்தவைகள் மெல்ல மெல்ல அகலத் துவங்கின. பதினைந்தாம் நாளில் என்னோடுண்டான தொடர்ப்பை முற்றிலும் அற்றுவிட்டு வேறு எவரையோ பீடிக்கச் சென்றுவிட்டது பேய்கள்.\\

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

வாழ்த்துக்கள்...
Anonymous said…
வித்தியாசமான ஆரம்பத்துடன் ஆரம்பித்து.. எழுதி இருக்கிறீங்க!
முடிவில கொஞ்சம் தடுமாற்றம் தெரியுது! இல்லையா???
//ஒவ்வொரு இரவும் என்னோடு புணர்ந்த பேய்கள் மறுநாள் விடிவை நெருங்குவதற்குள் இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன.//

அருமை.. வார்த்தை ப்ர்யோகம் அருமை... ஓட்டும்போட்டாச்சு... முடிவில் ஒரு தடுமாற்றம் இருப்பதைப் போலஒரு உணர்வு...
\\பேய்களுக்கும் எனக்குமான தொடர்பு மிகச் சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. அதன் தொடக்கத்தில் என்னை இறுக்க அணைத்துக்கொண்டு இரவுகளில் சுற்றியலையும்..\\

என்ன ஆதவா!

ரொம்ப பயமுறுத்துறீங்க
எல்லோருக்குமே பேய் நெருக்கமானதுதான். அதை எத்தனை முறை வெறுத்தாலும் அடுத்த நிமிடம் அது நம் மனதில் தானாக வந்து ஏறி உட்கார்ந்து கொள்ளும்.
பால்யித்தில் எல்லொரது இரவும் பேயின் கதைகளை நிரப்பிவிடிருக்கின்றது. அதை பற்றி பேசிவிட்டு பழகி தெருவில் கூட நடக்கவே பயமாக இருக்கும்.
அது எப்போதுமே விரித்த தலைமுடியுடன் நகங்கள் நீண்டு வெடித்த முகத்துடன் தான் வரும்.
ஆனால் உங்களுக்கு நவீன ஓவியமாக வந்திருப்பது ஆச்சரியமா இருக்கு அதெப்படி பேயை கூட ஓவியமாக, காதலியாக, கவிதை தருபவையாக.... எப்படி இப்படி சிந்திக்க முடிந்தது.. வியப்பாக இருக்கு. அதுவும் பேயினுடன் காதல் வேறு புரிந்திருக்கின்றீரகள்.
காதல் லீலைகளை எழுதியவிதம் அருமை எங்கும் இடறவையில்லை
அத்தனையும் ரசனை (சற்று பயத்துடன்)

ஆதவா உங்கள் கற்பனை பேய்களை போலவே மர்மங்கள் நிரைந்ததாக உள்ளது.
வாழ்த்துகள்.
சிறு வயதில் ஏற்பட்ட பேய் பீதியை பின்நவீனத்துவ பதிவாகி மிரட்டியிருக்கிறீர்கள்.

படித்து விட்டு வருகிறேன்.
//ஒவ்வொரு இரவும் என்னோடு புணர்ந்த பேய்கள் மறுநாள் விடிவை நெருங்குவதற்குள் இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன. //

பேய்களுடனா ???????

அதீத‌ க‌ற்ப‌னை..மிர‌ட்ட‌ல்.
//ஒவ்வொரு தினத்திய பேய்களை உற்பத்தி செய்வதற்காக காத்திருக்கும் பொழுது என் கோரைப்பாய்க்கு அடியில் உலர்ந்து போன என் காதலும் காத்திருக்கும்.
//

உங்க‌ள் வார்த்தைக‌ள் என்னை அடித்து துவைத்து விட்ட‌ன‌.

உருவ‌க‌ அணியை உரை ந‌டையில் ப‌ய‌ன் ப‌டுத்தியிருக்கும் வித‌ம் அருமை.
//எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான்.//

கனவுகளில் நிகழ்வதை கூட வைத்து ஒரு திகிலூட்டும் பதிவெழுதலாம் என உங்களிடமிருந்து கற்று கொள்ளலாம்.

ஒவ்வொரு வரியிலும் ஸ்கோர் பண்றீங்க ஆதவன்.
படிப்பவர்களை எழுத்தால் கட்டிப் போடும் வித்தைக்காரனய்யா நீர் ......

மாயாஜால மந்திரவாதி ஆதவன் !!!!

இந்த பதிவை நான் படிக்கும் போது இங்கு நள்ளிரவு ஒரு மணி !
Anonymous said…
Jesus christ shed his blood to save us from all evils.Come un to his hands and sure he will guide u and fill u with his power.God bless you ...
பேய் நல்லாத்தானே இருக்கு
குடந்தைஅன்புமணி said...

//புதிதாக ஒரு இடத்தில் இரவு தங்க வேண்டியிருந்தது. இரவு அனைவரும் தூங்கிவி்ட்டார்கள். என் கழுத்தை பிடித்து யாரோ இழுப்பது போன்று உணர்ந்தேன். கைகளிரண்டையும் கீழே அடித்து பக்கத்திலிருப்பவரை பார்த்து கத்துகிறேன். யாரும் உதவிக்கு வரவில்லை. சிறிது நேரம்தான். அதன்பிறகு பழைய நிலைக்கு வந்துவிட்டேன். விடிந்ததும் நண்பர்களிடம் கூறினேன். விடியற்காலையில் பூமி குளிர்ந்து, நீரோட்டங்கள் அதன் தன்மை மாறுமாம். அப்போது இதுபோல் நீரோட்டம் உள்ள இடத்தில் படுத்திருப்பவர்களுக்கு சில வைப்பரேசன் ஏற்படும். அதன் விளைவுதான்.//

அனபுமணி சார் உங்கள் அனுபவம் போல நிறையபெருக்கு இப்படி நேர்ந்ததாக சொல்கின்றனர் (எனக்கு இன்னும் அப்படி ஒரு அனுபவம் நேரவில்லை) என் நண்பர்கள் கூட நிறைய பேர் இப்படி சொன்னதுண்டு.
அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் அறிவியல் விளக்கம் சரினய பட்டாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேம் எழுகின்றது... இந்த அனுபவம் முதல் மாடி, இரண்டாம் மாடி,3,4,5,6 இப்படி மாடியில் படுத்திருப்பவர்களுக்கு உண்டானால் இந்த காரணம் சரியானதாக இருக்குமா
சரியானதாக இருக்குமா என்று சந்தேகம் எழுகின்றது.
இல்லையா அன்புமணி சார்.
\\கிட்டத்தட்ட ஓவியங்களை ஒத்திருந்தன பேய்கள் என் காதில் ஓதிய கவிதைகள்\\

நல்ல இரசணை
கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன். திகில் படக் கதாநாயகிகளைப் போன்று இரவில் அலறி விழித்து எனக்கருகே இருக்கும் பொருட்கள் தூரத்தில் ஓடுவதைக் கண்டு பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருப்பேன்.\\

காட்ச்சிகள் கண்முன்னே தெளிவாய்

அதுவும் விழித்திருக்கும் போதே


அருமை ஆதவா
ஆதவா said…
வாங்க ஷீ!!! என்ன கருத்தையே கானோம்?? மிக்க நன்றி
------------------------------
அறிவே தெய்வம்.. வாங்க... மிக்க நன்றீ
-------------------------
கவின்... இது அனுபவப் பகிர்வு!! கதை இல்லை!! மிக்க நன்றிங்க!!
-------------------
மிக்க நன்றி கடைக்குட்டி!!!
ஆதவா said…
வாங்க ஆ.முத்துராமலிங்கம். உங்கள் பயம் கலந்த வாழ்த்துக்கு நன்றி! மிக்க நன்றிங்க.>!! அன்புமணிக்கு உங்கள் பதில் யோசிக்க வைத்தது!!
-------------------
வாங்க அ.மு.செய்யது!! உங்கள் திகிலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!! ஒருமணிக்குப் பிறகு நன்கு தூங்கினீர்களா?
-------------
வாங்க அனானி! எல்லா இறைவர்களும் இப்படித்தானே!!
--------------
நன்றி நசரேயன்!!!
---------------
வாங்க ஜமால்.. பொறுமையாக படித்து பின்னூட்டியமைக்கு நன்றிங்க...!!!
Suresh said…
ஆதவா இனிமே பேய் சொன்ன ..
நேற்று நைட் 2 மணிக்கு தான் தூங்க போனேன் ... நான் பேய் படம் நைட் ஷொ பார்த்துட்டு கூட தூங்கி இருக்கேன் ஆனா நேற்று எப்ப்டி பேய் காதலிக்கும், வருமா என்று ஒரு மிரச்சி ஆனது என்னவோ உண்மை

பார்த்து எழுது :-) பயமுற்த்தாத
erbalaji said…
என்ன நண்பரே உங்களை எஸ்.ராமகிருஷ்ணனில் எழுத்துக்கள் மிகவும் பாதித்துள்ளதா என்ன?
அவரை மாதிரியே எழுத்து நடை என அமர்க்களப்படுத்துகிறீர்கள்.
ராம்.CM said…
தலைப்பே பயமுறுத்துகிற‌து.. அருமை..
பதிவு ரொம்ப சுவாரசியமாக இருந்தது ரசித்துப் படித்தேன்...

ஆதவன் இது உங்கள் உண்மை அனுபவமா...?

எனக்கு இந்த மாதிரி அமானுஷ்ய விசயங்கள் பற்றி படிக்கப் பிடிக்கும் ஆனால், அதில் நம்பிக்கை இல்லை...
அமுதா said…
/*இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன்*/
நிம்மதியாக இருப்பதில் விருப்பமில்லையோ?

சிறுவயதில் பேயைப் பற்றிய பயம் இருந்த பொழுது பேய்க்கனவுகள் வந்து திகிலடைந்து திருநீறு வைத்ததுண்டு. இப்பொழுதெல்லாம் கனவுகளே வருவதில்லை.

எப்பொழுதும் போல் சரளமான் நடையில் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்
Joe said…
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஆதவா!

சுவிசேஷம் என்பது சரியான சொல்தான். விவிலியம் என்றும் சொல்லலாம்.

"குறும் பைபிள்" என்பதை "குறு விவிலியம்" என்று சொல்லியிருக்கலாம்.
Anonymous said…
பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல்
//
அய்யயோ என்னங்க இது? வில்லங்கமாக இருக்கு?
ஆதவா,
வழக்கம்போலவே விவரணை அருமை, கவிதையாக சொல்லியிருந்தாலும் இன்னும் சிறந்திருக்கும்.
வாழ்த்துக்கள்,
ஆதவன்.. ஒரு சின்ன சந்தேகம்,
உதவியும் கூட.
உங்கள் பதிவில் எப்படி இரண்டு followers ஐ நிருவி உள்ளீர்கள், என் பதிவில் ஒரு followers கூட நிருவ முடியவில்லையே. நீங்கள் எப்படி இரண்டாமாவதை நிருவிநீங்கன்னு சொல்ல முடியுமா.
திக் திக் திகில்
Unknown said…
ஆதவா,

புனைவு எழுதுவதற்க்கும் ஒரு திறமை
வேண்டும்.அது உங்களிடம் இருக்கிற்து.
sakthi said…
பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல்
//
அய்யயோ என்னங்க இது? வில்லங்கமாக இருக்கு?

hahhahaha
ஹேமா said…
ஆதவா,ஒரு கிழமைக்குப் பிறகு வ்வருகிறேன்.நீங்க என்னான்னா பேயை வச்சி விரட்டி பயமுறுத்திறிங்க.பயமா இருக்கு.ஆனாலும் விபூதி பூசிக்கிட்டு வாசிச்சேன்.,ம்ம்ம்...

//எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான்///

காட்சிகள்அபாரம்.கற்பனையா...
உண்மையா?அதை கவிதையாக்கிய கோர்வை உங்களுக்கே பாராட்டுக்கள்.இண்ணைக்கு ராத்திரிக்கு என் கனவிலயும் ஒரு வேளை பேய் வந்தால்...!
நன்றி ஆதவன்.
நீங்கள் கொடுத்த சுட்டிகளில் சென்று
என்னுடைய Followers பிரச்சனையை
தீர்த்து விட்டேன்.
மிக்க நன்றி உதவியதற்கு.

அதே போல் எழுத்து பிழையையும் திருத்திக் கொண்டேன்.

ரொம்ப நன்றி ஆதவா.
dharshini said…
வித்யாசமாக இருந்த்தது..
// கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா. மெலிந்த சிவப்பு வர்ணத்தில் நடுவே இருந்து பிம்பம் உடைந்ததைப் போன்ற விரிசல்க்ளுக்கு இடையே பூத்திருக்கும் மரக்கிளைகளில் ஒன்றில் நான் அமர்ந்திருப்பேன். எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான். இது என் உறக்க காலத்தில் எத்தனை நொடிகள் நீண்டது என்பது தெரியாது.//
நல்ல ரசனை. :)