யாழினியின் காதல் - விஞ்ஞான சிறுகதை


யாழினி ஒரு தீர்க்கமான முடிவோடு அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கோபங்களும் ஏமாற்றங்களும் நிறைந்திருந்தன. தன் தந்தை ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று மாறி மாறி யோசித்தாள். தன் தோழிகள் எல்லோரும் பெற்றோர்கள் பேச்சை மதிப்பதில்லை ; தான் மதித்து நடந்தும் தன் வழியில் குறுக்கிடுகிறாரே என்று அழுதாள்.. அவளது அறையில் உடைகள் கலைந்து சிதறிக் கிடந்தன. பொருட்கள் நொறுக்கப்பட்டிருந்தன. சற்று முன் அவளது கோபத்தின் தாண்டவத்தை நினைத்து தன்னைத் தானே நொந்தவாறு அமர்ந்திருந்தாள்.

யாழினி C-MC சாக்லேட் நிறுவனத்தில் மேலதிகாரியாக பணிபுரிகிறாள். நல்ல அழகுவாய்ந்த முகம், திறமைகள் கொட்டிக்கிடக்கும் அவளது இளமை, எல்லாவற்றையும் விட, அவளது பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் அந்நிறுவனத்திற்கு பெருமையும், அந்நிறுவனத்திற்குத் தூணாக விளங்கும் தன்மையும் சேர்த்தது. அவளுடன் பணிபுரியும் அருள்மொழியுடன் உண்டான காதல் தான் இப்பொழுது பிரச்சனையே.. யாழினியின் தந்தை இந்த காதலுக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. யாழினியின் காதல், அவளது கண்களை மறைத்து இருந்தது.

தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. மருத்துவரைச் சந்திக்க இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருக்கிறது. இப்பொழுது கிளம்பினால் சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தவாறே அலங்காரம் செய்யவிருக்கும் எந்திரனை அழைக்க, தன் கைக்கடிகாரத்தின் இடது மூலையில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினாள். அவளது அறையின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த எந்திரம் அவள் இருக்குமிடத்திற்கு வந்து அவளது அலங்கார வேலைகளை எப்பொழுதும் போல செய்யத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, அறையை விட்டு நீங்க தயாரானாள். அறைக்கதவின் தாழில் பொதிக்கப்பட்டிருந்த எண்களில் சிலவற்றை அழுத்தி தன் கட்டை விரலால் முத்திரை வைத்துவிட்டு லிஃப்டை நோக்கிச் சென்றாள்.

அருள்.... நம் காதலின் ஒவ்வொரு மூலையிலும் தெய்வீகம் அடங்கியிருக்கிறது. நம்மைப் பிரிக்க எவராலும் முடியாது. அருள்... மிசிசிபியில் நாமும் நம் குழந்தையும் மணல் வீடுகட்டி ஆடுகிறோம் பார்த்தாயா.. ஏனடா... அந்த வீட்டை கலைத்துவிட்டாய்? ... பார்..... அதோ தெரிகிறதா.. என் முதுமையிலும் உன் காதலை எப்படியெல்லாம் கொட்டுகிறாய்... நமக்குப் பின்னால் இருந்து கொண்டு நம் பிள்ளைகள் கேலி செய்வதைப் பார்த்தாயா?? ஒரு அந்நியோன்யமான குடும்பமாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேனடா.. அருள்.... அருள்.....

அவளது நினைவுகள் எல்லாம் கண்முன்னே திரைகட்டி ஓடுவதைப் போன்று காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. லிஃப்ட் நின்றது. வாசலை நோக்கி வேகமாக நடந்தாள். செல்லும் பொழுது வாசலோரத்தில் பூத்திருந்த ரோஜாவைத் தொட்டு ரசித்துவிட்டு ஏதேதோ எண்ணியவாறு மீண்டும் நடந்தாள். யாழினிக்கு நடப்பது மிகவும் பிடித்த விஷயம். அவள் மற்ற பாதசாரிகளைப் போன்று நகரும் தளங்களில் (Moving Platform) செல்லமாட்டாள். சாவகாசமாக, ஏதாவது ஒரு மின் காகிதத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டு மூவிங் ப்ளாட்ஃபாரங்களில் செல்லும் மனிதர்களை அவளுக்குப் பிடிக்காது... நடப்பது தேக ஆரோக்கியம் என்பதால் அவள் அதை எப்போதும் விரும்புவாள்.

அருள்மொழியைப் பற்றி சொல்லவில்லையே... யாழினியின் திறமைக்கு ஈடானவன் என்றே சொல்லலாம். ஆண்களுக்குரிய வசீகரம், வலிமை, சிலசமயம் கோபம் ஆகிய எல்லாமும் அடங்கியிருந்தது அவனிடம். யாழினியுடன் பணிபுரிந்தாலும் பணி நேரங்களில் அவன் யாழினியை தன் காதலியாக எண்ணமாட்டான்... ஒரு சக கொலிக்.. அவ்வளவுதான்.. இந்த அணுகுமுறையும் யாழினிக்குப் பிடித்திருந்தது. அருள் முதலில் VC (வீடியோ கான்ஃப்ரன்ஸ்)யில்தான் பணிசெய்து கொண்டிருந்தான்... ஆனால் அவனது திறமையை நன்கு அடையாளம் கண்டுகொண்ட நிறுவனம், அவனை நிறுவனத்திற்கு வந்து பணிபுரியும்படி சொல்லியிருந்தது... இவர்கள் இருவருக்கும் காதல் எப்படி வந்தது என்பது இருவருக்குமே தெரியாத விசயம்... அதை அவர்கள் பேக்வர்ட் மெஷின் மூலமாக தெரிந்து கொள்ள என்றும் ஆசைப்பட்டதில்லை.... இருந்தாலும்....... ஏதோ ஒன்று...... யாழினியின் தந்தை அருளை வேண்டாமென்று சொல்லக் காரணமாக இருந்தது...

யாழினி தன் பின்னங்கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். ஃபாலோயர் சிப் பதிக்கப்பட்டிருந்தது... முந்தைய தினம் தான் அவளது தந்தையின் ஐடியை தன் சிப்பிலிருந்து அழித்தாள். இனி அவள் எங்கே செல்கிறாள் எனும் விபரங்கள் அவளது தந்தைக்குச் செல்ல வாய்ப்பில்லை... நடை ப்ளாட்பாரத்தில் வேகமாக நடந்தாள். தன் வாழ்வின் முக்கிய தினமும், மிகமுக்கிய முடிவும் எடுக்கப் போகும் நாள்... தன் பரம்பரையில் யாருமே செய்யாத காரியத்தை அவள் செய்யப்போகிறாள்.. தனது அலைபேசியில் மருத்துவமனைக்கான பாதையை சரிபார்த்துக் கொண்டாள். இதோ... மருத்துவமனையை அடைந்தும் விட்டாள்.

கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பலமாடிகளை அடுக்கியிருந்தது அந்தக் கட்டிடம்... 325 C ப்ளாக்கிற்குச் செல்லவேண்டும் என்று ரிஷப்ஷனில் அமர்ந்திருக்கும் ஒரு எந்திர பொம்மையிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில் மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் நேரம் என்ன சிகிச்சை ஆகிய அத்தனை விபரங்களும் அடங்கியிருந்தது. அந்த பொம்மை ஒரு ஸ்க்ராச்சிங் கார்டை அவளிடம் கொடுத்தது. யாழினி நேராக கட்டிடத்தின் பின்புறம் சென்றாள். அங்கே ஃப்ளையர்கள் இருந்தன. பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடங்கள் இந்தமாதிரி ஃப்ளையர்களை வைத்திருந்தன. உடனடியாக எந்த மாடிக்குச் செல்லவேண்டுமோ அங்கே சென்றுவிடலாம்.. நிறைய மனிதர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். யாழினி நேராக அந்த ஸ்க்ராச் கார்டை ஒரு ப்ளையருக்கு முன் அமர்ந்திருந்த பொம்மையிடம் நீட்டினாள். அது யாழினியைப் பார்த்து, " நீங்கள் மூச்சை இழுத்தும், இரத்த அழுத்தம் அதிகமாகவும் வந்திர்க்கிறீர்கள். உங்களை ஓய்வுக்குப் பின்னரே அனுமதிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு, அடுத்த மனிதரைப் பார்த்தது... யாழினி ஓய்வறைக்குச் சென்றாள்...

யாழினியின் எண்ணங்கள் மீண்டும் கண்ணைக் கட்டின... அப்பா.... அருள்மொழியோடு உண்டான காதலை மறுப்பது மிகவும் தவறு.. நான் மற்றவர்களைப் போல் பாசமின்றி வளர்ந்திருந்தால் உங்களைக் கேட்கவேண்டிய எண்ணமே இல்லை.. ஆனால் என்னால் பாசத்தையும் காதலையும் மறக்கமுடியவில்லை... வேறு வழியுமில்லை அப்பா... என்னை நீங்கள் குழாயிலிருந்து எடுத்தது முதல் இந்த இருபத்தி ஐந்து வருடங்கள் பாசமாக வளர்த்தீர்கள்.. ஆனால் அடுத்து வரும் தொண்ணூறு வருடங்கள் அருள்மொழிதான் எனக்குத் துணையாக இருப்பான்.. ஆமாம் அப்பா.... நான் அவனைத் திருமணம் செய்யப் போகிறேன்.... உங்களது பிரச்சனை அருள்மொழி ஒரு அந்நிய கிரகத்தவன் என்பதுதானே!! இதோ.... அக்கிரகத்திய முறைப்படி நான் உருமாறப் போகிறேன்.. அக்கிரகத்து பிரஜை ஆகப்போகிறேன்.. மன்னித்துவிடுங்கள் அப்பா... ஒரு மனிதனாக இருந்தால் எம் காதலை நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்.. நான் ஒரு ஏலியனாக இருந்தால்???

யாழினிக்கு ஃப்ளையர் தயாராகிவிட்டது... அவளை அண்டியிருக்கும் சோகங்களோடு அவளும் பறக்கவிருக்கிறாள்.. 325 C ப்ளாக்கில் இருக்கும் மனிதர்களை ஏலியன்களாக்கும் மருத்துவமனைக்கு.................

Comments

Suresh said…
வணக்கம் தலைவா .. காலை வணக்கங்கள் ... படித்து விட்டு வருகிறேன்
Suresh said…
இந்த மாத சக்கரைக்கட்டி - குழந்தை ஒவியம் - ஆதவா
Arasi Raj said…
தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. //////

Can i have one?
Arasi Raj said…
யாழினி தன் பின்னங்கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். ஃபாலோயர் சிப் பதிக்கப்பட்டிருந்தது...////


aahaa!!
Arasi Raj said…
உங்களது பிரச்சனை அருள்மொழி ஒரு அந்நிய கிரகத்தவன் என்பதுதானே!!///

இது வேறயா ?


அருமை.....நல்ல கற்ப்பனை....சரி நீங்க எந்த கிரகத்து மனுஷன்?
Suresh said…
//செல்லும் பொழுது வாசலோரத்தில் பூத்திருந்த ரோஜாவைத் தொட்டு ரசித்துவிட்டு //

அருமை

//யாழினிக்கு ஃப்ளையர் தயாராகிவிட்டது... அவளை அண்டியிருக்கும் சோகங்களோடு அவளும் பறக்கவிருக்கிறாள்.. 325 C ப்ளாக்கில் இருக்கும் மனிதர்களை ஏலியன்களாக்கும் மருத்துவமனைக்கு...//
:-(

மனிதன் காதலுக்கு ஜாதி போய் இப்பொ இதுவா அருமை ...
Suresh said…
oru suthavin science fiction mathiri super a irunthuchu ( its not comparision oru compliment)
ஆஹா..!
காலையிலே ஒரு நல்ல எழுத்தை
படித்து விட்டேன் போலிருக்கின்றது.

விஞ்ஞான சிறு கதை உங்களுக்கு
லாவகமாகவே வருகின்றது. உங்களுடைய முந்தைய எலக்ராவின் பிறப்பும் எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்தது. தற்போது இதுவும் என்னை ஈர்த்துக் கொண்டது.

நல்ல கற்பனைதிறன் உங்களுக்கு
எழுத்து நடையும் கதையும் மிக அழகு.
kuma36 said…
சூப்பர் விஞ்ஞானம். ம்ம்ம்ம்ம்
C-MC சாக்லேட் நிருவனமா CMC இங்கு என்றால் COLOMBO MUNICIPAL COUNCIL
ஹீஹீஹீ
kuma36 said…
//தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. //

எங்க கிடைக்கும் இது!!!!!

நல்லாயிருக்கு ஆதவா
Suresh said…
//கலை - இராகலை said...

//தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. //

எங்க கிடைக்கும் இது!!!!!

நல்லாயிருக்கு ஆதவா//

ஹா ஹா :-)
யாழினி - அழகு பெயர்.
Rajeswari said…
யாழினி ஒரு தீர்க்கமான முடிவோடு அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கோபங்களும் ஏமாற்றங்களும் நிறைந்திருந்தன. //


ஆதவா, ஜெஸிக்கா கதாநாயகி கிடையாதா??
Rajeswari said…
தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது..//

எனக்கும் ஒண்ணு ப்ளீஸ்
Rajeswari said…
காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான் போல.
Rajeswari said…
கதை நன்றாக இருந்தது
//விஞ்ஞான சிறுகதை //


இண்ட்ரஸ்டிங்..இருங்க படிச்சிட்டு வரேன்.
அமுதா said…
கதை நன்றாக இருந்தது.

/*அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. */
ம்.. நல்லா இருக்கே...
பல புதிய விசயங்களை சேர்த்து இருக்கிறீர்கள் ஆதவா.. எந்திரன், சிப், கோபத்தின் அளவைக் காட்டும் வாட்ச்.. இதெல்லாம்.. வழக்கம் போல் நடையும் அருமை.. ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.. படித்து முடித்தும் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை..
//தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது..//

நல்ல வர்ணனை...ரசித்தேன்.
//நம் காதலின் ஒவ்வொரு மூலையிலும் தெய்வீகம் அடங்கியிருக்கிறது. நம்மைப் பிரிக்க எவராலும் முடியாது.//

நவீன உலகம் எந்த உச்சியை அடைந்தாலும் இந்த வசனங்கள் மட்டும் என்றுமே மாறுவதில்லை..
//அருள்... மிசிசிபியில் நாமும் நம் குழந்தையும் மணல் வீடுகட்டி ஆடுகிறோம் பார்த்தாயா.. ஏனடா... அந்த வீட்டை கலைத்துவிட்டாய்? ... பார்..... அதோ தெரிகிறதா.. என் முதுமையிலும் உன் காதலை எப்படியெல்லாம் கொட்டுகிறாய்... நமக்குப் பின்னால் இருந்து கொண்டு நம் பிள்ளைகள் கேலி செய்வதைப் பார்த்தாயா??//

டைம் மிஷின்...( ரிவர்ஸ் டைரக்க்ஷனிலா ) !!!

உங்க‌ எழுத்துக்க‌ள்ல‌ ஒரு க‌வ‌ர்ச்சி..வ‌சீக‌ர‌ம் இருக்கு ஆத‌வ‌ன்..

அத‌ எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌ல‌..
//நான் அவனைத் திருமணம் செய்யப் போகிறேன்.... உங்களது பிரச்சனை அருள்மொழி ஒரு அந்நிய கிரகத்தவன் என்பதுதானே!! //

எதிர்காலத்தில் காதலுக்கு இப்படியும் எதிர்ப்பு வருமா? நல்ல கற்பனை ஆதவா! மீண்டும் இதைப்போல எதிர்பார்க்கிறோம்.
அழகான எழுத்து நடையில் ஒரு ஆங்கில படம் பார்த்த மாதிரி உணர்வு.

ஆக‌ வ‌ருங்கால‌த்தில் சாதி மத‌ பேத‌ங்க‌ள் ஒழிந்தாலும், இது போன்ற‌ வேற்று கிர‌க‌ பேத‌ங்க‌ள் ஆர‌ம்பித்து விடும் என‌ சொல்கிற‌து உங்க‌ள் பி.ந‌வீன‌த்துவ‌ சிறுக‌தை.

GPS டிராக்கிங் சிஸ்டம், பேக்வர்ட் மெஷின் கற்பனை அடர்த்தி...
நிறைய சுஜாதாக்களும்,பால் வெர்ஹோவன்களுன் உங்களுக்குள் ஒளிந்திருக்கின்றனர் ஆதவன்...

எழுத்துலகில் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்..

ஒரு காகிதத்தில் உங்கள் ஆட்டோகிராப் போட்டு, அதை ஸ்கேன் பண்ணி,எனக்கு மின்னஞ்சல் செய்து விடுங்கள்.
Anonymous said…
கலக்கல் பதிவு...!
தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது..
சூபர்ப்!
சுஜாதாவைப் படிப்பது போலிருந்தது. நல்ல விறுவிறுப்பான நடை. வாழ்த்துக்கள்.
அட ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு விஞ்ஞான காதல்

சுஜாத்தாவிற்கு பிறகு

(நான் படித்தது)
மீண்டும் ஒரு விஞ்ஞான காதல் கதை, அருமை ஆதவா
படித்தேன், ரசித்தே, பிரமித்தேன்...
நம்பமுடியவில்லை, வருகிற காலங்களீலும் காதல் காதல் காதல்... இருக்கும் என்பதை நிரூபிக்கும் வரிகள் ஆதவா

மீண்டும் ஒரு சகாப்தம்.. வாழ்த்துக்கள்
எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களென ஆச்சரியமாக இருக்கிறது.
நல்ல கற்பனை ! தொடருங்கள் !
நண்பா அருமையான கற்பனை...
எழுத்தில் என்ன சுவாரசியம்...
கலக்கல்...
வாழ்த்துகள்..
தொடர்ந்து இது மாதிரி எழுதவும்..
படிக்க நானிருக்கிறேன்..
சின்ன வயசிலிருந்து இது மாதிரியான கதைகள் வாசிக்க எனக்கு மிகுந்த விருப்பம்..
நல்ல கதை..
நன்றி...
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு விஞ்ஞானக் கதை படித்த திருப்தி ஆதவன்...

கதையில் காதல் கலந்திருப்பது அழகு...

முடிவில் அந்த ஏலியன் மருத்துவமனை ...அதீத கற்பனை...அருமை...
ஆதவா said…
வாங்க தலைவா!!!~!!! சுரேஷ்!! உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி! உங்கள் பதிவில் பதில் எழுதுகிறேன்!!! நன்றி தல!

வாங்க பொன்னாத்தா!!! உங்களுக்கு கடிகாரம் வேணும்னா எங்க ஊருக்கு வாங்க... நான் இந்த கிரகம்தான்!!! எங்கம்மா என்னை கிரகம்னு சொல்லிதான் திட்டுவாங்க..! ஹிஹ் இ..

--------------------

நன்றி ஆ.முத்துராமலிங்கம்... இக்கதை ஒரு கவிதை எழுதப் போய் கதை எழுதும் சூழ்நிலையாகிவிட்டது!!! நன்றிங்க....

-----------------------

நன்றி கலை!! CMC பற்றி தெரிந்து கொண்டேன். கடிகாரம் எல்லாம் கற்பனை!! நன்றி தல.

-------------

வாங்க டீச்சர், ஜெஸிகாதான் போடலாம்னு நினைச்சேன். ஆனா, எதிர்காலம் என்பதால் நல்ல தமிழ் பெயரைப் போட்டேன்!!! அடுத்தடுத்த க்தைகள் ஜெஸிகாதான்!!!

------------------------

வாங்க அ.மு செய்யது!! என் எழுத்து அப்படி நன்றாக இருக்கிறதா... எனக்கு பெருமையாகவும் பயமாகவும் இருக்கிறது! உங்கள் விமர்சனம் எனக்கு நெகிழ்வைத் தருகிறது!! என்னால் இயன்றதைக் கொடுத்திருக்கிறேன்... மிக்க நன்றி செய்யது!!


/////ஒரு காகிதத்தில் உங்கள் ஆட்டோகிராப் போட்டு, அதை ஸ்கேன் பண்ணி,எனக்கு மின்னஞ்சல் செய்து விடுங்கள்.
////

ஆஹா.... என்னங்க இது!!! ரொம்ப கூச்சமாவும் இருக்கு!!!! உங்களது எதிர்பார்ப்பும் பாராட்டும் மரியாதையும் என்னை மிகவும் மகிழ்வுறுத்துகிறது!!!
------------------------

ஜமால்.... வாங்க... விஞ்ஞானக் காதலை கொஞ்சமாவது வித்தியாசம் காட்டியிருக்கேனா??? நன்றிங்க ஜமால்!!!!
------------------------

வாங்க அமுதா சகோதரி!!! மிக்க நன்றி!!

--------------------

வாங்க கார்த்திகைப்பாண்டியன்.. மிஸ்ஸிங் இருந்தாத்தானே தேடல் இருக்கும்.... எதுன்னாலும் நேரடியா சொல்லுங்க நான் அதை பாஸிட்டிவாத்தான் எடுத்துக்குவேன்!! நன்றி தல./
-------------------
வாங்க அன்புமணி!!! நிச்சயம் எழுதுகிறேன்... என்னால் இயன்றவரை!

--------------------
வாங்க கவின்!!! ரொம்ப பிஸியா?? மிக்க நன்றி!!

-------------

வாங்க வித்யா... புதுவரவுக்கு நன்றி!!! சுஜாதா சார் எல்லாம் ரொம்ப தூரம்ங்க!! சொல்லப்போனா, இந்த எழுத்துக்கள் சுஜாதாவின் எழுத்துக்களை ரசிப்பவன் எனும் முறையில் பிறந்தவை!!! அவ்வளவே!!

--------------------
வாங்க அபுஅஃப்ஸர்... மிக்க நன்றி... காதல் என்றும் அழியாதது.. அது எந்த உருவிலிருந்தாலும்!!! நன்றிங்க அஃப்ஸர்
--------------------

வாங்க ரிஷான்!! உங்களை மாதிரி பெரிய கவிஞர்களே நம்மளைப் படிக்கும் பொழுது இன்னும் எழுதத் தோணுது!!!

------------------

மிக்க நன்றி வேத்தியன் எழுதுகிறேன்!!! நிச்சயமாய்ய்

நன்றி புதியவன் ஏதோ நம்மளால முடிஞ்சது!! உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி புதியவன்...

பார்வையிட்ட அனைவருக்கும் நன்றி!!!
உங்க‌ள் டெம்பிளேட் அழ‌காக‌ உள்ள‌து.

இதே மாதிரி டெம்பிளேட் க‌லெக்ஷ‌ன்க‌ள் கொண்ட‌ வ‌லைத‌ள முக‌வ‌ரி இருந்தால் என‌க்கு அனுப்பி விடுங்க‌ள்...

syed.kadhar@wipro.com
காதல் எந்த கிரகத்தில் இருந்தாலும், அங்கு ஒரு வில்லன் இருப்பானோ??
Unknown said…
ஆதவா,

நடை நன்றாக இருக்கிறது.நல்ல எழுத்து ஆற்றல் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

ஆனால்.....?

ஏதோ ஒன்று குறைகிறது.Operation success but patient diedங்கற மாதிரி ஆயிடிச்சு.

இவர்களே இயந்திரங்கள் மாதிரிதான்
வாசகனுக்குப் படிகிறது.இவள் alien
ஆகுவது அவ்வளவு சுவராஸ்யமாக இல்லை.


ஒவர் காவிய நடை விஞ்ஞான சிறுகதைக்கு அவசியமா?கதையில் விறு விறுப்பு கூட்டலாம்.

படிப்பவர்களுக்கு இவள் என்ன செய்யப் போகிறாள் என்பதான் சஸ்பென்ஸ்.அது
சுவராஸ்யமாக இருந்திருக்கலாம்.


ந்ன்றி!
விஞ்ஞான சிறுகதையில் யாழினி,அருள்மொழி என்று அழகிய பெயர்கள் வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, ஆதவனின் முந்தைய கதைகளில் இது போல பெயர்கள் வந்திருந்தால், அந்த கதைகளின் அழகும் இன்னும் அதிகரித்திருக்கும்.
kuma36 said…
//நன்றி கலை!! CMC பற்றி தெரிந்து கொண்டேன். கடிகாரம் எல்லாம் கற்பனை!! நன்றி தல.///

ஆஹா ஹா நானும் தலையாயிட்டேன்
ஆதவா said…
செய்யது... உங்களுக்கு நாளைக்கு மடல் அனுப்புகிறேன்!!!

மிக்க நன்றி உழவன்!!!

வாங்க ரவிஷங்கர்.. உங்களது திறந்த விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!! கார்த்திகைப் பாண்டியனும் இக்கருத்தை வெளியிட்டிருந்தார். (இக்கதை வேறு தளத்தில் முன்பே பதிவிட்டு, அங்கிருந்தவர்களும் ஏதோ ஒன்று விடுபட்டதாக சொன்னார்கள்!!!!) எல்லோரும் அதைச் சொல்லும் பொழுது என்னவோ குறைகிற குறையை அடுத்த கதையில் நிவர்த்தி செய்ய முனைகிறேன்!!!

மிகவும் நன்றி ரவிஷங்கர்!!!!

----------------

முதல் வருகைக்கு (முன்பே படித்திருக்கிறீர்களெனத் தெரிகிறது) வரவேற்புகள் பித்தன்...

ஜெஸிகா என்ற பெயருக்குப் பின்னால் காரணம் இருக்கிறது.... பின் வரும் பதிவுகளில் அதைக்குறித்து விளக்கமாகச் சொல்லுகிறேன் நன்றீ பித்தன்!!!

0000000000000

ஹாஹா.... கலை = தலை!!!!
//யாழினி தன் பின்னங்கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். ஃபாலோயர் சிப் பதிக்கப்பட்டிருந்தது... முந்தைய தினம் தான் அவளது தந்தையின் ஐடியை தன் சிப்பிலிருந்து அழித்தாள். இனி அவள் எங்கே செல்கிறாள் எனும் விபரங்கள் அவளது தந்தைக்குச் செல்ல வாய்ப்பில்லை...//

வரபோகும் நிஜத்தை நிகழ்காலத்தில் காட்டிய கதை அபாரம் ஆதவா.
Anonymous said…
நல்லாயிருக்கு ஆதவா
RAMYA said…
//
தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது..
//


பரவா இல்லை 67% தானே சமாளிச்சுடலாம்.

என்ன சொல்லறீங்க யாதவா??
RAMYA said…
//செல்லும் பொழுது வாசலோரத்தில் பூத்திருந்த ரோஜாவைத் தொட்டு ரசித்துவிட்டு
//

அருமை, அருமை சொல்லி இருக்கும் விதம் நல்லா இருக்கு.

படிக்கறவங்களும் ரசிக்கும் பசியா இருக்கு.
RAMYA said…
நல்ல கற்பனை மற்றும் எழுத்து நடையும் அற்புதமா இருந்தது.

நல்ல கதை படிச்ச மனநிறைவோடு உங்கள் பதிவை முடித்தேன்.
வாவ்வ்வ்... ஆதவா எப்படி இதெல்லாம்... நல்லா இருக்கு. மறைந்த சுஜாதா சார் கதைபோல முயற்சி .. அந்த அளவிற்கு இல்லை என்றாலும் .. எழுத்தும் நடையும் நல்லாவே வந்திருக்கு... பாராட்டுகள்.. இன்னும் இன்னும் முயற்சியுங்கள் நண்பரே..
பாத்திரங்களின் பெயர் தேர்வும் நல்லா இருக்கு... அதேபோல கதைகலம் பிரமாதம்.... பாராட்டுகள்
ஆதவா....ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்தினைப் பார்த்தது போல இருக்கிறது பதிவு...

விஞ்ஞானவியல் சிந்தனை அருமை.....
தொடருங்கோ....
ஜேம்ஸ் பாண்ட் படத்தினைப் போல விறு விறுப்பாக உள்ளது கதை?? எப்பிடி இதெல்லாம்???
நல்லா விறு விருப்பா இருக்கு
Suresh said…
This comment has been removed by the author.
Suresh said…
@ ஆதவா

#சோலை இல்லை சுரேஷ்... சோளம்#

ஹி ஹி நிங்க சொன்னது தான் சரி :-) திருத்திவிட்டேன்

உங்களிட்ம் பிடித்ததே மனதில் பட்டதை சொல்லுவது ..


//கண்ணில் படும் காட்சிகளைக் கவிதையாக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.//

ஆமாங்க.. அது கொஞ்சம் இருக்கு இன்னும் வளர்க்கனும்

//கவிதை எக்ஸலண்ட். சுவைத்து எறிவது எனும் சொல் தாங்கி நிற்கும் கரு அடர்த்தியாகவும், ஆழமாகவும் இருக்கிறதென்னவோ உண்மைதான். அதிலும் கவிதை நன்கு கட்டப்பட்டிருக்கிறது!! (Well Built) //

ரொம்ப நன்றி உங்கள மாதிரி உண்மை ரசிகர் சொன்னால் தான் எனக்கு சந்தோசம்

//கீழிருந்து மேலாய் எனும் சொல் தேவையற்றது!! //

முதலில் அந்த வரி இல்லை..
ஆனால் சோளத்தின் தொலை கீழ் இருந்து தான் அவன் பிரித்தான் ... அதுவும் ஒவ்வொரு தோலாய்

//ஏனெனில் மேலிருந்து கீழாகவும் சுவைக்கப்படலாம். //
நான் இங்கு சுவைக்கப்படுவதை சொல்லவில்லை அதன் தோலை ஒன்னு ஒன்னாக பிரிப்பதை சொன்னேன் அது கீழே இருந்து மட்டும் தான் :-) பிரிக்கமுடியும்

//அணு அணுவாய் எனும் சொல் சோளக் கணுக்களையும், பெண்ணை நசுக்குவதையும் குறிப்பிடுவது சிறப்பு!!!//

சரியாண புரிதல் ஆதவா..
ரொம்ப சந்தோசம்
ஆதவா எப்படி இதெல்லாம்? இத தவிர எதுவுமே கேக்க தோன்ற மாட்டேங்குது உங்க விஞ்ஞான கதைகளை படிக்கும் போது... சூப்பர்... very good writing flow... சான்ஸே இல்ல போங்க... வாழ்த்துக்கள்
ஆதவா இத்தனை விஞ்ஞான அறிவு எப்படி சாத்தியம்?ம்ம் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது உங்களை நினைக்கையில்...