பழைய புத்தகம்



மீண்டும் ஜெஸிகாவை பின் தொடருகிறேன். ஜெஸியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தெரிந்துகொள்ளாமலே இருப்பதுதான் நல்லது. ஒருமுறை நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அதை அளவில் அளக்கமுடியாது ;

பனி மயக்கும் மார்கழி கோலங்களைச் சிதைத்தவாறே வண்டியை நிறுத்தி, அவசராவசரமாக என் அறைக்குள் நுழைந்தேன்.. ஏன் என்கிறீர்களா?, 'அவளை' பார்த்தேன்.. அவளா? அவள் யார் என்று கேட்கிறீர்களா?, இப்போது சொல்லமாட்டேன், இந்த விசயம் ஜெஸிகாவுக்குத் தெரியாது. தெரிந்தால் அவள் பத்ரகாளி ஆகிவிடுவாள். சரி விட்ட இடத்தில் தொடருகிறேன், அவள் என்னிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு பழைய நோட்டு என் அறையின் வலது மூலையில்.... ஆங்.. இல்லையில்லை, இடது மூலையில் தேமேயென்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரும்பு அலமாரியில் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருக்கிறது..

என்ன தைரியம்? 'அவளுடைய' புத்தகம் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருந்தால் ஜெஸி கவனிக்காமல் இருக்கமாட்டாளா... ம்ஹூம்.... இப்பொழுதெல்லாம் அதிகம் ஜீன்ஸ் டாப்ஸ் அணிவதால் எப்போதாவது உடுத்தும் புடவைகளுக்கு மத்தியில் வைப்பதுதான் பிரச்சனை இல்லாதது.. மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! நூறுசத பாதுகாப்பு..

திரும்பவும் விட்ட இடத்திற்கு வருகிறேன். அந்த பழைய நோட்டில் அவள் எனக்காக எழுதிக் கொடுத்த கவிதைகள் இருந்தது.. கவிதைகள் என்பது சாதாரணமானவை அல்ல, அவை மறைந்து போயிருந்த ஞாபகக் கிடங்கை திறக்க வல்லவை. ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.

திடீரென்று படித்துக் கொண்டிருக்கும்பொழுதே, ஜெஸியும் வந்துவிட்டாள்.. என்ன செய்வது?? சிறிது நேரம் என்னை நான் அவளிடம் தொலைத்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் தொலைந்தவள் என்னைத் தொலைக்க வந்தாள். சட்டென்று மூடிய அந்த பழைய புத்தகத்தை கவனிக்காமல், என்மீது ஒரு கிறங்கப் பார்வை வீசிவிட்டு, இடைவெளியேதுமின்றி தழுவினாள்.. அவள் மந்தகார தழுவலில் அந்த பழைய நோட்டு நொறுங்கிப் போயிருந்தது...


இனி, இக்கதை பற்றிய என் கருத்து அல்லது கவிதை :

வெளிக்காட்டாமல் அடங்கியிருந்த
மெளனப்படலத்தைக் கிழித்து
நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்

நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது

பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று

நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு

ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.

Comments

//இப்பொழுதெல்லாம் அதிகம் ஜீன்ஸ் டாப்ஸ் அணிவதால் எப்போதாவது உடுத்தும் புடவைகளுக்கு மத்தியில் வைப்பதுதான் பிரச்சனை இல்லாதது.. //

இங்கேயும் நுண்ணரசியலா...??
Arasi Raj said…
ஏன் என்கிறீர்களா?,///

இல்லையே
-------

அவள் யார் என்று கேட்கிறீர்களா?,////

கேட்கலியே ..

இது என்னடா வம்பா போச்சு....சும்மா பதிவு படிக்கலாம்னு வந்தா அது ஏன் கேக்குற இது ஏன் செய்யுறன்னு வம்பு பண்றீங்க
//அவை மறைந்து போயிருந்த ஞாபகக் கிடங்கை திறக்க வல்லவை. //

கருத்துக்களை வெளிப்படுத்திய விதம் அருமை.
//ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.
//

அவ்ளோ திறமைசாலியா உங்க ஜெஸிகா..??
//வெளிக்காட்டாமல் அடங்கியிருந்த
மெளனப்படலத்தைக் கிழித்து
நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்//

பல நூறு கவிதைகளில் உங்கள் கவிதைகளை எளிதில் இனம் கண்டு விடலாம்.
Arasi Raj said…
தெரிந்தால் அவள் பத்ரகாளி ஆகிவிடுவாள்///

இப்போ நான் பத்ரகாளி ஆயிட்டேன்
//இப்பொழுதெல்லாம் அதிகம் ஜீன்ஸ் டாப்ஸ் அணிவதால் எப்போதாவது உடுத்தும் புடவைகளுக்கு மத்தியில் வைப்பதுதான் பிரச்சனை இல்லாதது.. மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! நூறுசத பாதுகாப்பு..//

மிகப் பாதுகாப்பான இடத் தேர்வு தான் ஆதவன்...
//நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது
//

சொல் அடர்த்தி..நேர்த்தி..இடறி விழாமல் பொருளை கண்டு பிடித்தேன்.
//பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று//

ரசித்தேன்..இவ்வரிகளை...
//நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது//

வார்த்தைகள் விளையாடி இருக்கின்றன...
Arasi Raj said…
பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று///

சாட்சியா ?
-----------------
ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்///

"உணர்வு "

---------------
நல்லா இருக்கு ஆதவா

ரெண்டாவதா வந்தாலும் நான் தான் நிறைய பின்னூட்டம் போட்ருக்கேன்..அதுனால நான் தேன் மொத...சரியா
//பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று//

ஹா...மிகவும் ரசித்தேன்...
//ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.//


இறுதியில் ஒரு நிதர்சன‌ முற்றுப் புள்ளி.

ப‌ழைய‌ புத்த‌க‌ம் எட்டாத‌ தூர‌த்தில் இருந்தாலும் ர‌சிக்க‌ முடிந்த‌து.
//தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது//

இப்படி நிறைய புத்தகங்கள் இன்னும் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன...அருமையான கவிதை ஆதவன்...
கவியுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்..

கிரேட் ஆதவன்.
ஆதவா said…
ஆஹா... இன்ப அதிர்ச்சி!!!! ஜெஸிகாவுக்கு இத்தனை ரசிகர்களா.... ஹி ஹி
ஆதவா said…
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி செய்யது!!

ஜுஸ்ட் மிஸ் செய்திருந்தாலும் நிலாவும் அம்மாவுக்கு என் நன்றி!!! (கவலைப்படாதீங்க, அடுத்த தடவை உங்க கிட்ட பதிவு போடறதுக்கு முதல்லயே சொல்லிப்புடறேன்!! ஹிஹி)
ஆதவா said…
அ.மு.செய்யது said...

இங்கேயும் நுண்ணரசியலா...??

அவ்ளோ திறமைசாலியா உங்க ஜெஸிகா..??

பல நூறு கவிதைகளில் உங்கள் கவிதைகளை எளிதில் இனம் கண்டு விடலாம்.

மிக்க நன்றி அ.மு.செய்யது... தேடிப்பிடித்து பின்னூட்டமிடும் உங்களையெல்லாம் நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது!!!
ஆதவா said…
நிலாவும் அம்மாவும் said...
//ஏன் என்கிறீர்களா?,///
இல்லையே
-------

அவள் யார் என்று கேட்கிறீர்களா?,////
கேட்கலியே ..
இது என்னடா வம்பா போச்சு....சும்மா பதிவு படிக்கலாம்னு வந்தா அது ஏன் கேக்குற இது ஏன் செய்யுறன்னு வம்பு பண்றீங்க

ஹிஹிஹி... சும்மாதான்.. அப்படியாச்சும் ஏதாவது வெளியே வரும்னுதான்...

இப்போ நான் பத்ரகாளி ஆயிட்டேன்

ஆத்தா.... நான் எஸ்கேப்

நல்லா இருக்கு ஆதவா
ரெண்டாவதா வந்தாலும் நான் தான் நிறைய பின்னூட்டம் போட்ருக்கேன்..அதுனால நான் தேன் மொத...சரியா

மிக்க நன்றிங்க நிலாவும் அம்மாவும் உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு நிறைவாக இருந்தன (முதல்ல வந்தவரு கோவிச்சுக்காம இருந்தா சரி!!!)

நன்றிங்க!!
ஆதவா said…
புதியவன் said...

மிகப் பாதுகாப்பான இடத் தேர்வு தான் ஆதவன்......
வார்த்தைகள் விளையாடி இருக்கின்றன...

ஹிஹி... இந்தமாதிரி புத்திசாலித்தனமான முடிவு நம்மளால மட்டுந்தேன் எடுக்கமுடியும்!!! ஹி ஹி
மிக்க நன்றி புதியவன்...
kuma36 said…
//மீண்டும் ஜெஸிகாவை பின் தொடருகிறேன்//

நாங்களும் தான்.
kuma36 said…
//பனி மயக்கும் மார்கழி கோலங்களைச் சிதைத்தவாறே வண்டியை நிறுத்தி, அவசராவசரமாக என் அறைக்குள் நுழைந்தேன்.//

ஆமா அந்த கோலம் யாரு போட்டது!

//ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.///

அவள் மட்டுமா சாரி சாரி அவுங்க மட்டுமா நீங்களும் தானே ஆதவா!!
kuma36 said…
///நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு

ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது//


ரொம்ப அழகாக இருக்கு! இரசித்து ரசித்து படித்த வரிகள்
Anonymous said…
எனக்கு ரொம்பவும் பிடித்த கவிதை இது ஆதவா....

அதில் மெல்லியதாய் இழையோடிருக்கும் அந்த பழைய நினைவுகள்... படிப்பவர் ஒவ்வொருவரையும் தங்களின் நினைவுகளை பின்னோக்கி வைத்திட செய்யும்!
மனதில் ஞாபக் கிளறல்களை ஏற்படுத்திவிடுகின்றன உங்கள் கவிதைகள்...
Rajeswari said…
//தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.//

சூப்பர் ..
Rajeswari said…
//மீண்டும் ஜெஸிகாவை பின் தொடருகிறேன். ஜெஸியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தெரிந்துகொள்ளாமலே இருப்பதுதான் நல்லது. ஒருமுறை நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அதை அளவில் அளக்கமுடியாது ;//

ஐ ! எங்களுக்கு தெரியுமே
Rajeswari said…
ஆதவா...உங்களுடைய எழுத்துக்கள் அருமையாக உள்ளது
ஆதவா கவிதை அருமையாக
எழுதிருக்கீங்க. அழகு
நண்பா,
முதலில் வந்த கதையும் தொடர்ந்து வந்த கவிதையும் அருமையிலும் அருமை...
வாசிக்கும் போதே உணர்வு வருகிறது...
வாழ்த்துகள்...
மீண்டும் ஜெஸ்ஸிகா புராணமா.. நடத்துங்க .. காதல் என்பது ஒருவர் மீது மட்டும் வருவது அல்ல.. பழைய நினைவுகளைத் தேடிச் சொல்லும் கவிதை.. அருமை ஆதவா...
//அ.மு. செய்யது said..
//ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.
//
அவ்ளோ திறமைசாலியா உங்க ஜெஸிகா..??//

நண்பா.. கவிதைய கொஞ்சம் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. இது ஜெஸ்ஸிகா எழுதியது அல்ல.. அதற்கு முன்னர் ஆதவா கரக்ட் செய்த "அவள்" எழுதியது..
ஹேமா said…
//இப்பொழுதெல்லாம் அதிகம் ஜீன்ஸ் டாப்ஸ் அணிவதால் எப்போதாவது உடுத்தும் புடவைகளுக்கு //

சாட்டையடிதான்.

//ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும்.//

உண்மைதான் ஆதவா நானும் உணர்ந்திருக்கிறேன்.சிலசமயங்களில் அன்று முழுதுமே சில் கவிதைகள் என்னோடு சுற்றியும் திரியும்.

//பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று//

எப்படி...கவிஞனின் நினைவாற்றலும்,தேடுதலும் யாருக்குமே கிடைக்காத ஒன்று.அசத்தல்.

////தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது//

இல்லை...இது பொய்.இன்னும் ஒரு நாளில் தேவதைகளின் வருகையின்போது அந்தப் புத்தகம் மீட்டு எடுத்து வரப்படும்.அழகு.
//பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று//

நச்..... நன்று
/////கார்த்திகைப் பாண்டியன் said...
//அ.மு. செய்யது said..
//ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.
//
அவ்ளோ திறமைசாலியா உங்க ஜெஸிகா..??//

நண்பா.. கவிதைய கொஞ்சம் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. இது ஜெஸ்ஸிகா எழுதியது அல்ல.. அதற்கு முன்னர் ஆதவா கரக்ட் செய்த "அவள்" எழுதியது..////


என் எண்ணமும் அதுதான்
//ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.//

கவிதைக்கு பொய் அழகுதானே
//தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.///

ம்ம்ம்ம்ம்ம்....
//மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! நூறுசத பாதுகாப்பு..
//

நல்லதுதானே
//பழைய நோட்டு நொறுங்கிப் போயிருந்தது...
//

ம்ம் ம்ம் நடக்கவேண்டியதுதானே
//நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது
//

வார்த்தை விளையாட்டு.. கலக்கல் ஆதவா
//தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.
//

அழகு அருமை, படித்தேன் ரசித்தேன் யோசிக்கிறேன்..!!!
ஆரம்பிச்சா ஆதவா

//பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று//

நல்ல க(வி)தை
//அ.மு. செய்யது said..
//ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.
//
அவ்ளோ திறமைசாலியா உங்க ஜெஸிகா..??//

நண்பா.. கவிதைய கொஞ்சம் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. இது ஜெஸ்ஸிகா எழுதியது அல்ல.. அதற்கு முன்னர் ஆதவா கரக்ட் செய்த "அவள்" எழுதியது..//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஆ.ஞானசேகரன் உங்களுக்கும்தான்,ஆதவன் சின்னபையன் கண்டதை சொல்லி
கெடுக்கதீங்க‌
//தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.//

ம்ம்ம்ம்.. தூரமா இருந்தாத்தான் நல்லது
அருமையாக மொழியைக் கையாளுகிறீர்கள் ஆதவா !

ரசித்தேன் !
அருமையாக மொழியைக் கையாளுகிறீர்கள் ஆதவா !

ரசித்தேன் !
அருமையாக மொழியைக் கையாளுகிறீர்கள் ஆதவா !

ரசித்தேன் !
\\நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்\\

அழகு துவக்கம்.
\\மீண்டும் ஜெஸிகாவை பின் தொடருகிறேன். ஜெஸியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தெரிந்துகொள்ளாமலே இருப்பதுதான் நல்லது. ஒருமுறை நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அதை அளவில் அளக்கமுடியாது\\

இது உங்களுக்கு கற்பனையோ காவியமோ தெரியாது

ஆனால் எனக்கு ...
\\மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! நூறுசத பாதுகாப்பு..\\

ஆஹா!

அவுரா நீங்க ...
\\அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.\\

இதுவே கவிதை தான்.
\\அவள் மந்தகார தழுவலில் \\

ஐயா! கிளப்பள்ஸ்
\\பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று
\\

நல்லாயிருக்கு ஆதவன்.

(எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது - நானும் என் அமீகாவை தவழ விடுகிறேன்)
ஜெஸியும் கவிதையும் அருமை, ஜெஸியைத் தொடருங்கள்
ஆதவா said…
கலை - இராகலை said...
//மீண்டும் ஜெஸிகாவை பின் தொடருகிறேன்//
நாங்களும் தான்.

தொடருங்கோ தொடருங்கோ

ஆமா அந்த கோலம் யாரு போட்டது!

அது சஸ்பென்ஸ்... ஹி ஹி

மிக்க நன்றி கலை!!1
ஆதவா said…
மிக்க நன்றி ஷீ!! ,குடந்தை அன்புமணி, ராஜேஷ்வரி, முத்துராமலிங்கம், வேத்தியன், கார்த்திகைப் பாண்டியன்

கார்த்திகைப்பாண்டியன்,

அ.மு.செய்யது கற்பனையாகவே கேட்டிருப்பார். இருக்கட்டும் விடுங்கள், ஜெஸிகா எப்போமே திறமை சாலிதான்!!!
ஆதவா said…
நீண்ட விமர்சனத்திற்கு நன்றி ஹேமா சகோதரி!

இன்னும் ஒரு நாளில் தேவதைகளின் வருகையின்போது அந்தப் புத்தகம் மீட்டு எடுத்து வரப்படும்.அழகு.

அது தற்காலிக பிரிவுதான்... ஆனால் ஒரு மனைவியின் நெருக்கத்தில் அப்பிரிவும் நிரந்தரமாகவேண்டும்!!!
ஆதவா said…
ஆழ்ந்து படித்த ஞானசேகரன் அவர்களுக்கு என் நன்றிகள்!!!

வாங்க அஃப்ஸர்... ரசித்து படித்தமைக்கு நன்றி நண்பரே!

சொல்லரசன் சார், என்னை ஒருத்தர், பால் வடியும் முகம்னு சொல்றார், நீங்க சின்னப் பையன் என்று சொல்றீங்க.... ம்ஹும்....ம்கும்...ம்கும்..
ஆதவா said…
அத்திரி, ரிஷான் ஷெரீப் யாத்ரா ஆகியோருக்கு நன்றி

ஜமால்... இன்னைக்கு பிஸியா... மிக்க நன்றீ ஜமால். உங்கள் அமீகாவை (பெயரே புதுமை) மிகவும் எதிர்பார்க்கிறேன்.
//மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! //

நல்ல பாதுகாப்பு உத்தியும் தேர்வும். பாவம் அவங்க. கணவா நீவிரே கண்கண்ட கடவுளாரெண்டு இருக்கா போல...

சாந்தி
ஒரு கடந்த நினைவை மீளவும் இரகசியமாக உணர்ந்து பதியமிட்டது நன்று.

கலீல் ஜிப்ரானின் 'முறிந்த சிறகுகள் ' போலொரு இலக்கியம் உங்கள் ஞாபகப் பகிர்வுகளிலும் பூக்கலாம். எழுதுங்கள்.

சாந்தி
Suresh said…
//பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று//
சூப்பர் அதவ ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ... படிச்சு
விரைவில் ஒரு புத்தகம் போடுங்க நண்பா
//அவள் மந்தகார தழுவலில் அந்த பழைய நோட்டு நொறுங்கிப் போயிருந்தது...//

அருமை ஆதவா...
அதோட ‘கட்‘ பண்ணிட்டு கவிதைக்கு போயிட்டீங்களே... ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு.

//வெளிக்காட்டாமல் அடங்கியிருந்த
மெளனப்படலத்தைக் கிழித்து
நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்

நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது

பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று

நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு

ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.//

ஒவ்வொரு வார்த்தைகளும் கவனமாக கோர்க்கப்பட்ட அருமையான கவிதை ஆதவா...
மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது. ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு புரிதல். காதலையும், கவிதையையும் முழுமையாக புரிந்துணர்வது கடினம் என்பதை உணர்த்திய ஆகச்சிறந்த கவிதை.
வாழ்த்துக்கள் நண்பா...

- பொன்.வாசுதேவன்
ராம்.CM said…
ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்////
அழகாக இருந்தது...ரசித்தேன்.
மோனி said…
ஒவ்வொருவரையும்
வாழ்வை திரும்பிப் பார்க்க வைத்த கவிதை ...
உண்மையிலும் இது மிக அழகான கவிதை ...
ஹூம் பிளாஷ் பேக் ...
கவிதை ட்யூப் வந்துட்டுப் போகிறேன்!
kuma36 said…
நான் தான் 70வது பின்னுட்டம்..
ஹிஹிஹி
சுருங்கச் சொல்லி ,விளங்க வைத்தல்,அல்லது உணர்த்துதல், உரை நடையில் நன்றாக வந்துள்ளது.

மனைவி வந்துவிட்ட பிறகு, காதலியின்
நினைவுகள், புத்தகம்போல் விலகிப்போவதுதான் சரியான தீர்ப்பு.
71 வது ஆளா நானு. எப்டி இதெல்லாம்?!
:)
பனி மயக்கும் மார்கழி கோலங்களைச் சிதைத்தவாறே வண்டியை நிறுத்தி, அவசராவசரமாக என் அறைக்குள் நுழைந்தேன்.. ஏன் என்கிறீர்களா?, 'அவளை' பார்த்தேன்.. அவளா? அவள் யார் என்று கேட்கிறீர்களா?, இப்போது சொல்லமாட்டேன், இந்த விசயம் ஜெஸிகாவுக்குத் தெரியாது. தெரிந்தால் அவள் பத்ரகாளி ஆகிவிடுவாள். சரி விட்ட இடத்தில் தொடருகிறேன், அவள் என்னிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு பழைய நோட்டு என் அறையின் வலது மூலையில்.... ஆங்.. இல்லையில்லை, இடது மூலையில் தேமேயென்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரும்பு அலமாரியில் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருக்கிறது..//

அடடே....விசயம் ரோஜாக் கூட்டம் மாதிரியெல்லோ போகுது???
பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று//


கவிதையும் கதையுமாக நகர்கிறீர்கள்???
நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு//


வார்த்தைகளை வண்ணமயப்படுத்துவதற்கும் எத்தனை எளிமை வேண்டும் என்பது உங்கள் கவிதைகளில் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது...

கவிதை ஜெஸிக்காவின் முத்தம் கலந்த சூடான சுகப் பிரசவம்.!
ஆதவா said…
நசரேயன்
சாந்தி
சுரேஷ் (உங்கள் தளத்தில் எழுத முடியலை!) [புத்தகமா???]

அகநாழிகை (அதுக்கு மேல போட்டா சென்ஸார் ஆக்கிடுவாங்க)

ராம்
மோனி
ராஜநடரான் (என்ன இப்படி சொல்லிட்டீங்க...)

கலை (நன்றி தலை)

ச.முத்துவேல் (எத்தனாவது ஆளாக இருந்தாலும் உங்கள் பின்னூக்கமே எனக்குப் போதும்)

கமல்

ஆகிய எல்லோருக்கும் என் நன்றி!!!
ஆதவா! ஓட்டைவிட உங்கள் கருத்துரையே முக்கியம். எனவே பழைய முறைக்கே இரண்டு தளத்தையும் மாற்றிவிட்டேன்.
Unknown said…
அன்பின் ஆதவா, இன்றுதான் முதல்முறையாக உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். முதல் பதிவே மிகவும் பிடித்தது. கவிதை நன்றாக இருக்கிறது..மற்ற பதிவுகளையும் வாசித்துவிட்டு சொல்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று///

அருமை ஆதவா!!
பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று////

மிக அபாரமாக எழுதியுள்ளீர்கள்!
Anonymous said…
ஒரு நல்ல பதிவை படிக்க ரொம்ப லேட்டா வந்திடியே கவின்!