ஒழுகியது புவிப்பந்து
மேக விசும்பலால்
கண்ணயற, கடைவானைப் பார்த்தேன்.
துருத்திய மூக்கின் நுனி
குருதி பட்டு சிவந்தது
இடி மீறும் குண்டொலியால்
செவிபிளந்து ஊன் கதறியது
நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா
கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது.
"ஏ! கடவுளே!
பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும்
அண்ட மீன்களை ஒருமுறை
இவ்வேழை நோக்கவியலாதா?
நாளுமோர் மீன் முளையும்
நானும் போய் நுழையவியலாதா?"
நீட்டிய உயிர்க்கிளை மீதொரு
நாட்டிய விழி புதைய
விண்ணுலகன் நாவில் பிரிந்து
எச்சில் ஊறியது என்னுள்
செவிப் பறைகள் அறைந்து கொண்டது.
செல்க! செல்க! மானிடனே செல்கவே!
புவிக் கோளம் தாண்டி
அக்கினியில்லா மீன்களைத்
துண்டிக்கச் சென்றேன்
என்னில்லப் புறாவின் சிறகெடுத்து.
சாந்தமில்லா மீன்கள் வீணிலெதற்கு?
"மூளை சிறுத்த ஆறறிவுயிர்
ஈங்கில்லை மானிட!
உயிர் முளைத்தால் நாளை வருக,
அன்றி, இன்று போ" வென்றது அது.
பிரபஞ்ச மூலை வரை
நானறிந்தேன் புற்களுமில்லை
மூச்சிறைத்தே உயிர் கொல்லும்
மானிடனுமில்லை யென
இல்லம் திரும்புகையில்,
அதற்குள்
உருக்குலைந்து ஒழுகிக் கொண்டிருந்தது
புவிப்பந்து.
கண்ணயற, கடைவானைப் பார்த்தேன்.
துருத்திய மூக்கின் நுனி
குருதி பட்டு சிவந்தது
இடி மீறும் குண்டொலியால்
செவிபிளந்து ஊன் கதறியது
நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா
கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது.
"ஏ! கடவுளே!
பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும்
அண்ட மீன்களை ஒருமுறை
இவ்வேழை நோக்கவியலாதா?
நாளுமோர் மீன் முளையும்
நானும் போய் நுழையவியலாதா?"
நீட்டிய உயிர்க்கிளை மீதொரு
நாட்டிய விழி புதைய
விண்ணுலகன் நாவில் பிரிந்து
எச்சில் ஊறியது என்னுள்
செவிப் பறைகள் அறைந்து கொண்டது.
செல்க! செல்க! மானிடனே செல்கவே!
புவிக் கோளம் தாண்டி
அக்கினியில்லா மீன்களைத்
துண்டிக்கச் சென்றேன்
என்னில்லப் புறாவின் சிறகெடுத்து.
சாந்தமில்லா மீன்கள் வீணிலெதற்கு?
"மூளை சிறுத்த ஆறறிவுயிர்
ஈங்கில்லை மானிட!
உயிர் முளைத்தால் நாளை வருக,
அன்றி, இன்று போ" வென்றது அது.
பிரபஞ்ச மூலை வரை
நானறிந்தேன் புற்களுமில்லை
மூச்சிறைத்தே உயிர் கொல்லும்
மானிடனுமில்லை யென
இல்லம் திரும்புகையில்,
அதற்குள்
உருக்குலைந்து ஒழுகிக் கொண்டிருந்தது
புவிப்பந்து.
Comments
yahaaaaaa
தலைப்பே சொல்லுது படத்தை
கண்ணயற, கடைவானைப் பார்த்தேன்.
துருத்திய மூக்கின் நுனி
குருதி பட்டு சிவந்தது
இடி மீறும் குண்டொலியால்
செவிபிளந்து ஊன் கதறியது
நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா
கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது.//
வார்த்தை பிரயோகம் சூப்பரோ சூப்பர்.
நாட்டிய விழி புதைய
விண்ணுலகன் நாவில் பிரிந்து
எச்சில் ஊறியது என்னுள்
செவிப் பறைகள் அறைந்து கொண்டது.
செல்க! செல்க! மானிடனே செல்கவே!
//
கடினமான வார்த்தைகள், இதையெல்லாம் புரிந்துக்கொள்ள தமிழ் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் ஆதவா
வார்த்தை கோர்வை அழகு
ஆரம்பமே அசத்தல் ஆதவா...
கலக்கல் வரிகள்...
போட்டாச்சுங்க...
:-)
அபு அஃப்ஸர்
வேத்தியன்
மூவருக்கும் நன்றி....(கொஞ்சம் வேலை.... அதான் அடிக்கடி வரமுடியவில்லை///)
அறுமை
- பொன்.வாசுதேவன்
//"மூளை சிறுத்த ஆறறிவுயிர்
ஈங்கில்லை மானிட!
உயிர் முளைத்தால் நாளை வருக,
அன்றி, இன்று போ" வென்றது அது.//
பதில் இப்படியாய்க் கிடைத்திருக்கிறது.சரியா?
திரும்பி வருவதற்கிடையில் பூமி உருக்குலைந்து ஒழுகிக் கொண்டிருந்தது.
அக்கினியில்லா மீன்களைத்
துண்டிக்கச் சென்றேன்
என்னில்லப் புறாவின் சிறகெடுத்து.
சாந்தமில்லா மீன்கள் வீணிலெதற்கு?
//
வாய்ப்பே இல்லை.
இங்க தான் நீக்கறீங்க..
ஆனா என்ன எழுதியிருக்கீங்கனு தாங்க கொஞ்சம் பிரியல..ஐ மீன் மீனிங்..
புதசெவி !!!!!
நாட்டிய விழி புதைய
விண்ணுலகன் நாவில் பிரிந்து
எச்சில் ஊறியது என்னுள்
செவிப் பறைகள் அறைந்து கொண்டது.
செல்க! செல்க! மானிடனே செல்கவே!//
வார்த்தைகள் வியக்க வைக்கின்றன ஆதவன்...தலைப்பிலேயே வித்தியாசத்தை உணரமுடிகிறது...
ஈங்கில்லை மானிட!
உயிர் முளைத்தால் நாளை வருக,
அன்றி, இன்று போ" வென்றது அது.//
மிக அற்புதமான கற்பனை ஆதவன்...கவிதைக்கு ஏற்ற படம்...
//அதற்குள்
உருக்குலைந்து ஒழுகிக் கொண்டிருந்தது
புவிப்பந்து.//
தலைப்பின் வரிகளை இறுதியில் கொண்டு வந்து முடித்திருப்பதும் அருமை...
வாழ்த்துக்கள் ஆதவன்...
லேபில் பின்நவீனம் என்று கொடுக்கலாம் ஆதவன்...
அக்கினியில்லா மீன்களைத்
துண்டிக்கச் சென்றேன்
என்னில்லப் புறாவின் சிறகெடுத்து.
சாந்தமில்லா மீன்கள் வீணிலெதற்கு?////
துண்டிக்கவா? தூண்டிலில் இழுக்கவா ?
அக்கினியில்லா மீன்களைத்
துண்டிக்கச் சென்றேன்
என்னில்லப் புறாவின் சிறகெடுத்து.
சாந்தமில்லா மீன்கள் வீணிலெதற்கு?//
இது ரொம்ப அருமை..
That Picture's not drawn by me. I just downloaded it from google.. But i can draw like this using Photoshop.
Thank you brothers/
ஈங்கில்லை மானிட!
உயிர் முளைத்தால் நாளை வருக,
அன்றி, இன்று போ" வென்றது அது.//
கவிதைக்குள்ளேயும் தத்துவமா?? வாழ்க.......
பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும்
அண்ட மீன்களை ஒருமுறை
இவ்வேழை நோக்கவியலாதா?
நாளுமோர் மீன் முளையும்
நானும் போய் நுழையவியலாதா?"//
கவிஞர்கள் பெரும்பாலும் கடவுளிடமும் நிலவிடமும் தான் விண்ணப்பம் வைப்பார்கள்?? ஏன் ஆதவா?? கடவுளுக்குக் காது கேட்குமா? கேட்கும் என்றால் ஈழக் கவிஞர்கள் முப்பது வருடமாக விண்ணப்பம் வைக்கிறார்களே?? கடவுள் ஏன் கண் திறக்கவில்லை??
கண்ணயற, கடைவானைப் பார்த்தேன்.
துருத்திய மூக்கின் நுனி
குருதி பட்டு சிவந்தது//
இந்தக் கற்பனை? அபாரம்...நீங்கள் ஆரம்பத்தில் எங்கையோ போயிட்டீங்கள்....
நானறிந்தேன் புற்களுமில்லை
மூச்சிறைத்தே உயிர் கொல்லும்
மானிடனுமில்லை யென
இல்லம் திரும்புகையில்,
அதற்குள்
உருக்குலைந்து ஒழுகிக் கொண்டிருந்தது
புவிப்பந்து.//
ஆதவா...கவிதை ஆரம்பத்தில் அபரிமிதமான சொல்லாடலால் அழகுபடுத்தப்பட்டு இறுதியில் சோகமயம் கலந்து கீழிறங்குகிறது???
இறுதியில் எல்லாமே வெறுமை தான் என்பதைக் கவிதை வெளிப்படையாச் சுட்டுகிறது...தொடருங்கோ......
வார்த்தைகளின் வீச்சு மிக அழகு!
என்ன சொல்ல வாழ்த்துக்கள் எனதருமை நண்பா!
அபு
வேத்தியன்
ஆ.முத்துராமலிங்கம்
மாதவராஜ்
ஞானசேகரன்
அகநாழிகை (படத்தில் என் கைவண்னம் இல்லை)
யாத்ரா
ஹேமா (பதில் சரிதான்,, ஆனால் வாதாடவில்லை)
அ.மு.செய்யது... (என்ன தல... புரியலைன்னு சொல்லிப்புட்டீங்க)
புதியவன் (பின், நடு, முன் நவீனம் குறித்து நான் தற்குறிங்க..)
நிலாவும் அம்மாவும் (உங்கள் பதில் ரசிக்க வைக்கிறது)
கார்த்திகைப் பாண்டியன்
ராம்
அமுதா,
கமல் (கடவுள் குறித்த உங்கள் ஆதங்கம் புரிகிறது!!!)
ரீனா...
ஷீ!! (மன்றத்தில் கவனிக்கப்படாத கவிதை இது!)
ஆகிய அனைவருக்கும் என் மனமாழ்ந்த நன்றி!!
தலைப்பு வரிகளும் அருமை
நாட்டிய விழி .." அந்த வரி மட்டுமல்ல முழுக் கவிதையும் நன்றாக வந்திருக்கிறது.
ரவீ!! இந்த கேள்விகளை யார் கேட்பார்கள்? நானே கேட்டு பதில் எழுதவேண்டுமா.. அல்லது உங்கள் கேள்வியை காப்பி பண்ணவா?//
கேள்விகளை மட்டும் காப்பி பன்னுங்க ... பதில சேர்த்துடுங்க. :)
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
4).பிடித்த மதிய உணவு என்ன?
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?
பிடிக்காத விஷயம் என்ன ?
9.உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
12.என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?
14.பிடித்த மனம் ?
15.நீங்க அழைக்கப் போகும் பதிவர்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.
அவரை அழைக்கக் காரணம் என்ன ?
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்
பிடித்த பதிவு எது?
17. பிடித்த விளையாட்டு ?
18.கண்ணாடி அணிபவரா?
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
20.கடைசியாகப் பார்த்த படம்?
21.பிடித்த பருவ காலம் எது?
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?
23.உங்கள் டெச்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
31.மனைவி(கணவர்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
விதி முறை
.மூணு பேரை மட்டுமே அழைக்கலாம்.
.இந்த அழைப்பு மணி எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்க உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரைப் போட வேண்டும்.
நன்றி:
உப்புமடச் சந்தி - ஹேமா மற்றும்
நிலாவும் அம்மாவும் -(எ)பொன்னாத்தா சண்டைக்கோழி.