எலக்ட்ராவின் பிறப்பு


நேற்று இரவு என் மகள் எலெக்ட்ரா பிறந்தாள். அலுவலக விடுப்பை வீடியோ கன்பெரன்ஸில் சொல்லிவிட்டு நேரே மருத்துவமனைக்குச் சென்றேன். ஜெஸி எனக்காகக் காத்திருந்தாள். எலக்ட்ரா பார்ப்பதற்கு ஜெஸியைப் போலவே இருந்தாள். அதே முல்லைக் கண்கள். குடைமிளகாயைப் போல மூக்கு. அழகான கழுத்து, செர்ரி பழத்தைப் போன்ற சிவப்பான உதடு... அடேயப்பா.. ஜெஸியைக் கூட இப்படித்தான் வருணிப்பேன். அந்த வர்ணிப்பே குழந்தையாகப் பிறந்ததில் சந்தோசம் எனக்கு...

இருவரும் மருத்துவமனையை விட்டு காரில் ஏறினோம். ஜெஸி, தனக்கு தலைவலிப்பதாகச் சொன்னாள்... இரவு கண்முழித்துக் கிடந்ததில் தலைவலியாக இருக்கும்.. மாத்திரை விழுங்கினால் சரியாகிவிடும்... நேற்றுதானே குழந்தை பிறந்தது... டாக்டர்கள் அறிவுரைப்படி ஒருநாளாவது இருக்கவேண்டும். என்னைக் கேட்டால், குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு வந்திடலாம். இன்னும் டாக்டர்கள் பணம் கறப்பது போனபாடில்லை.

சாலையில் ட்ராஃபிக் அதிகமில்லை. எப்போதாவது சில ரோபோட்டுகள் மட்டும் மண்டை குழம்பிப் போய் மோதிக்கொள்ளும்போது ட்ராஃபிக் நேர்வதுண்டு. சென்னையின் மத்திய சாலைகள் இப்படி ஹாயாக இருப்பதே தனி வித்தியாசம்தான். என் தாத்தா காலத்தில், ஒரே மனிதத் தலைகள் தான் தெரியுமாம். எப்போது பார்த்தாலும் அழுக்குகள், குப்பைகள் இத்யாதி இத்யாதி... ஒரே கலீஜ் என்றூ சொல்வார்.. நல்லவேளை நான் இந்த காலகட்டத்தில் பிறந்து தொலைத்தேன்...

ஜெஸி, மின் காகிதத்தை தட்டச்சிக் கொண்டிருந்தாள். அவளிடம் . " என்ன ஜெஸி, குழந்தை பிறந்திருக்கா, ட்ரீட் இல்லையா? " என்று வினவினேன்.. " டார்லிங், எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் மி. மெடிக்கல் செலவு எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு. செக் பண்ணுங்க.. நான் தூங்கறேன்... " என்று மடமடவென சொல்லிவிட்டு காரின் பின்புறத் தொட்டிலில் குழந்தையைப் போட்டுவிட்டு, இருக்கையை இறக்கி தூங்க முயற்சித்தாள்... நான் புன்னகைத்தவாறே வண்டியைச் செலுத்தினேன்.

எனக்கும் ஜெஸிக்கும் பெற்றோர்கள் நிச்சயித்தபடிதான் திருமணம் நடந்தது. ஜெஸி ஒரு எலக்ட்ரானிக்ஸ் அலுவலகத்தில் வரவேற்பாளினியாக இருந்தாள். பெரும்பாலும் அந்தக் கம்பனியின் க்ளைய்ண்டுகள் ரோபோக்களையோ அல்லது ப்ளேட் எனச் சொல்லப்படும் காமிரா பொருந்திய ரோபோக்களையோதான் அனுப்பி வைப்பார்கள். ஆதலால் மனித முகத்தைப் பார்ப்பதே அவளுக்கு அரிதாக இருக்கும். தற்செயலாக அவளது அலுவலகத்திற்கு நான் சென்றேன். எனது வருகையை அவள் உன்னிப்பாக கவனித்தாள். அந்த எலக்ட்ரோ கம்பனியில் ஒரு சின்ன வேலைக்காக வந்திருந்தேன். பொதுவாக நான் நானோ கம்பனிகளை மட்டுமே நாடுவது வழக்கம். எனது தொழில் அனைத்து நானோ டெக்னாலஜியை மட்டுமே சார்ந்திருந்தது. ஆனால் எனது நண்பன் ஒரு உதவிக்காக அழைத்திருந்ததால் அங்கே சென்றேன்.. அவள் என்னை வரவழைத்து இருக்கையில் அமர வைத்தாள்...

ஜெஸியை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு, நேரே நண்பன் ராமின் அலுவலகத்திற்குச் சென்றேன்.. என்னை வரவேற்று அமர வைத்தான். அவன் கேட்டது சிறு உதவிதான்.. மாரடைப்பில் இறந்து போனவர்களுக்கு தற்காலிக, அல்லது நிரந்தரமாக உயிர்கொடுக்கும் ஒரு சிறு எலக்ட்ரானிக் சம்பந்தமான முயற்சியில் இறங்கியிருந்தான். " அது ஒண்ணும் பெரிய விசயமில்லை ராம். ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல். " என்று சொல்லி முடித்தேன்...

எனக்குப் பின்னே ஜெஸி வந்து நின்றாள். உங்க கார் மேல ஹெக்ஸ் கம்பனியோட ரோபோகார் மோதிட்டு குழம்பி நிக்குது. . நீங்க உடனே கான்ஃபிகர் பண்ணா, அந்த ரோபோவை நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரலாம்" என்றாள்..... எனக்கு அது ஏழாவது தடவை.. ஏதாவது ஒரு கார் வழுக்கிட்டு வந்திடும்.. நம்ம கார்ல மோதும்.. ஜெஸியைத் தொடர்ந்த வாறு எழுந்து செல்கையில், ராம் மீண்டும் கேட்டான்.. " கதிர், இது ஒத்துவருமா? "

"ராம் நீ ரொம்ப லேட்பா.. இந்த டெக்னாலஜிதான் இப்போ சீப்.. இதுக்குப் பின்னாடி பல மேட்டர் வந்தாச்சி... ஏதோ உன் பட்ஜெட்ல அடங்கட்டுமேன்னு சொன்னேன்.. கவலை விடு, எல்லாம் நாம பார்த்துக்கலாம் "என்று சொல்லிவிட்டு ஜெஸியை நோக்கினேன்...

ஜெஸிக்கு என்னைப் பற்றிக் கேட்கவேண்டுமென்ற ஆவல் பிறந்த தருணம் அது... " உண்மையிலேயே இப்படி பிழைக்கவைக்க முடியுமா சார் ?" என்று கேட்டாள்.. ஜெஸியின் குரல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.. எப்படி இந்த மாதிரி? ஒரு பொருளை நாக்கு சுவைத்தால் தானே இனிக்கும்?? இங்கே குரலைச் சுவைத்தாலே இனிக்கிறதே!!

" ஹலோ மிஸ்.......?? '

" ஐ ஆம் ஜெஸிகா "

" ஜெஸிகா, இது பழைய மெதட். நீங்க கவலைப்படாதீங்க... இப்ப ஃபைபர் வெச்சு ஹார்ட்ட சார்ஜ் பண்றாங்க.. இன்னும் ஆராய்ச்சி நடக்குது. ஸ்பென்ஸர்ஸ் ஹாஸ்பி போனீங்கன்னா, மலிவு விலைக்கு இதயத்த விக்கிறாங்க... எல்லாம் ஏழைங்களுக்கு........ "

" சார், எங்கப்பாக்கு ரெண்டுதடவ ஹார்ட் அட்டாக் வந்திட்டுது.. அவரை எப்படியாச்சும் நல்லபடியா கொண்டுவரமுடியுமா ?

" வெரி சிம்பிள் ஜெஸி. ஆ.. ஐ ம் சாரி,. உங்களை ஜெஸின்னு கூப்பிட்டுட்டேன்.

" இட்ஸ் ஓகே "

" நீங்க அப்பாவைக் கூட்டிட்டு நேரா நான் சொல்ற ஆஸ்பிடல் போங்க, க்ளீன் செக்கப் பண்ணுவாங்க.. அதிக நேரம் ஆகாது. அப்பவே என்ன ஸ்பேர்ஸ் மாத்தணும்னு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுப்பாங்க. நீங்க அதை எடுத்துட்டு என்னோட செல்லுக்குக் கூப்பிடுங்க... நான் மீதியை அப்பறமா பாத்துக்கீறென்.. " சொல்லிவிட்டு செல் நம்பரைக் கொடுத்தேன்....

" சார் நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க? "

" கவலை வேண்டாம் ஜெஸி.. இதோ பாருங்க ஸ்பெக்ட்ரம். இது வழியா என் வீட்டுக்குள்ள இருக்கிற என் காருக்கு சிக்னல் கொடுத்திடுவேன்.. அது நேரே நான் இருக்கிற இடத்திற்கு வந்திடும்.. அப்படியும் இல்லைன்னா நடராஜாதான்.. எனக்கு நடக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்... " சொல்லிவிட்டு சிரித்தேன்..

" சார், நீங்க வேணும்னா என்னோட ஸ்கூட்டரை எடுத்துட்டு போங்களேன்... அப்பறம் நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன்... "

அவளது இந்தக் கோரிக்கை எனக்குப் பிடித்திருந்தது.. மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பை அவளே வழங்குகிறாள் அல்லவா...

எனக்கும் ஜெஸீக்குமான முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. அவளது அப்பாவுக்கு இருதயக் குழாய்களில் மட்டும் சின்ன அடைப்பாக இருந்தது... அதாவது அது வளரும் சூழ்நிலையில் இருந்தது. அரதப்பழசான ஆஞ்சியோவை விட்டுத்தான் பார்த்தார்கள்... சில டாப்லெட்ஸ், சில செக்கப்புகள், சில ஆலோசனைகள்.... அவ்வளவுதான், ஜெஸியின் அப்பாவுக்கு நல்ல ஆயுள் என்று முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள்.. எனது இந்த உதவிக்குக் கிடைத்த பலன்தான் ஜெஸி.... அம்மாவிடம் கலியாணம் செய்வதாகச் சொன்னேன். ஒத்துக் கொண்டார்கள். இருவரது வீட்டிலும் சம்மதத்திற்குப் பின்னர் ஒரு நல்ல நாளில் நால்வர் புடைசூழ கலியாணம் செய்துகொண்டோம்..

எனது நினைவை கொஞ்சம் அதிக நேரம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம்தான்... ஜெஸிக்கு எலக்ட்ரா முதல் குழந்தை... ஆஃப் கோர்ஸ், எனக்கும்தான். . சில மாதங்களுக்கு முன் இரண்டு பேருக்கும் பயங்கர போட்டி, எந்த பெயரைக் குழந்தைக்கு வைப்பது என்று.. நான் சொன்னது 'ப்ரோட்டினி' என்பது.. ஆனால் அவளுக்கோ எலக்ட்ரா என்ற பெயர் மீது காதல்.. சரி போனால் போகிறது என்று அவளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்... என்னதான் சொல்லுங்கள் எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...

எனது வீட்டை அடைந்ததும் ஜெஸியை எழுப்பி விட்டேன். குழந்தை இன்னும் தூக்கத்தில்தான் இருந்தது. வீட்டுக்கதவு என் கண்கள் பட்டதும் திறந்துகொண்டது, கதவில் ரெடார் போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனோடு ஐடெண்டிஃபை என்று ஒரு கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.. என் மற்றும் ஜெஸியின் கண்களை இது தானாக ஸ்கேன் செய்து திறக்கும்.. அப்படியும் அதில் கோளாறு ஏற்பட்டால், இரண்டாம் வழியான சாவி உள்ளது...

ஜெஸி நேரே குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய் படுக்கையறையில் வாங்கப்பட்டிருந்த தொட்டிலில் கிடத்தினாள்.. அவளைப் பார்த்தவாறே நானும் எனது சட்டைகளைக் கழற்றிப் போட்டு படுத்துத் தூங்கினேன்.... என் வாழ்நாளில் எனக்கு இப்படி ஒரு குழந்தை கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எத்தனையோ டெக்னாலஜிகள் வந்து விட்டாலும் குழந்தை என்ற ஒரு பாசம் நம் மடியில் கிடந்தால்தானே நமக்கு நிம்மதி... அதற்கு முதலில் இந்த டெக்னாலஜிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்..பின்னே! மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?

------------------------------------
தமிழ்மணம் ஓட்டுப்பெட்டி

Comments

நாந்தேன் மொதோ...
ஆரம்ப பந்தியே அசத்தல் ஆதவா...
வரவேற்பாளினியாக இருந்தாள்//

அட தமிழ்....
கலக்கல் பாஸு...
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு...
மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?//

அட கடைசியில போட்டீங்களே ஒரு போடு...
ரொம்ப நல்லா இருக்கு ஆதவா...
வாழ்த்துகள்...
தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சு...
நல்லாயிருக்கு ஆதவா, சுஜதா சாரை போல முயற்சி அவரை பொல இல்லை என்றாலும் பரவாயில்லை
kuma36 said…
நான் தான் மூன்றாவது ஆள் ஆஹா..
ஆதவா

மிக அருமை

ஒன்றி படித்தேன்

கவிதை தான் இங்கு அதிகம் ஈர்க்கும் என்னை

இன்று தங்கள் கதையும், அதுவும் science fictions மாதிரி எல்லாம்.

எழுத தூண்டுகிறது என்னை.
kuma36 said…
//உண்மையிலேயே இப்படி பிழைக்கவைக்க முடியுமா சார் ?" என்று கேட்டாள்.. ஜெஸியின் குரல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.. எப்படி இந்த மாதிரி? ஒரு பொருளை நாக்கு சுவைத்தால் தானே இனிக்கும்?? இங்கே குரலைச் சுவைத்தாலே இனிக்கிறதே!!//

அடடா எவ்வள்வு அருமையான வர்ணனை
kuma36 said…
பொதுவாக கிராமத்து சாயலோடு கூடிய சிறு கதைகள் தான் சூப்பராயிருக்கும் என நினைத்திருந்தேன் விஞ்ஞான காதல் கூஅ சூப்பரா இருக்கே!!

கடைசி வரிகளில் கொன்னுடிங்க!!

//மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?//
kuma36 said…
அழகான ஆங்கில படம் பார்த்த மாதிரியே இருந்துச்சி!!!

இதில் எனக்கு கொஞ்சம் தெளிவில்லை. என் அறிவிற்கு எட்டத விடயமோ தெரியல‌

//எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...//
ஜெஸியை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு, நேரே நண்பன் ராமின் அலுவலகத்திற்குச் சென்றேன்.. என்னை வரவேற்று அமர வைத்தான். அவன் கேட்டது சிறு உதவிதான்.. மாரடைப்பில் இறந்து போனவர்களுக்கு தற்காலிக, அல்லது நிரந்தரமாக உயிர்கொடுக்கும் ஒரு சிறு எலக்ட்ரானிக் சம்பந்தமான முயற்சியில் இறங்கியிருந்தான். " அது ஒண்ணும் பெரிய விசயமில்லை ராம். ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல். " என்று சொல்லி முடித்தேன்...//


ஸ்ப்பா....முடியலை....?

அப்ப நீங்கள் ஒரு விஞ்ஞானியா??
எனக்குப் பின்னே ஜெஸி வந்து நின்றாள். உங்க கார் மேல ஹெக்ஸ் கம்பனியோட ரோபோகார் மோதிட்டு குழம்பி நிக்குது. . நீங்க உடனே கான்ஃபிகர் பண்ணா, அந்த ரோபோவை நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரலாம்" என்றாள்..... எனக்கு அது ஏழாவது தடவை.. ஏதாவது ஒரு கார் வழுக்கிட்டு வந்திடும்.. நம்ம கார்ல மோதும்.. ஜெஸியைத் தொடர்ந்த வாறு எழுந்து செல்கையில், ராம் மீண்டும் கேட்டான்.. " கதிர், இது ஒத்துவருமா? "//


கற்பனை கொஞ்சம் அதிகம்....:))
ராம்.CM said…
கதை நல்லாயிருக்கிறது... இந்த நவீன காலக்கட்டத்திலும் தன் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கும் கதிர்! பிள்ளை பாசத்தை வரும்பும் தம்பதிகள்! நல்லாவே யோசித்துள்ளீர்கள்!... வாழ்த்துக்கள்! கீப்பிட்டப்...
ராம்.CM said…
ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல்.///


இதெல்லாம் என்ன கணக்கு???.....கலக்கிட்டீங்க....
எனது நினைவை கொஞ்சம் அதிக நேரம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம்தான்... ஜெஸிக்கு எலக்ட்ரா முதல் குழந்தை... ஆஃப் கோர்ஸ், எனக்கும்தான். . சில மாதங்களுக்கு முன் இரண்டு பேருக்கும் பயங்கர போட்டி, எந்த பெயரைக் குழந்தைக்கு வைப்பது என்று.. நான் சொன்னது 'ப்ரோட்டினி' என்பது.. ஆனால் அவளுக்கோ எலக்ட்ரா என்ற பெயர் மீது காதல்.. சரி போனால் போகிறது என்று அவளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்... என்னதான் சொல்லுங்கள் எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...//


ஆதவா கையைக் குடுங்கோ??
கலக்குறீங்கள்...என்ன சிந்தனை?
//பின்னே! மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா? //


ஆதவா ஏன் இந்த வேலை?

திடீர் திருப்பம்? கதையில் திடீரென்று எதிர்ப்பார்ப்பை வரவழைத்து விட்டுப் பின்னர் இறுதியில் மனசை நோகடிக்கச் செய்து விட்டீர்கள் / மனசைத் தொட்டு விட்டீர்கள்..


நல்லதொரு கற்பனை கலந்த விஞ்னான மொழிக் கலவை கதை...
Anonymous said…
விறுவிறு சுறுசுறு...கதையின் ஓட்டமும், நடையும் அழகு.
ரொம்ப நல்லாருக்குங்க.

ஜமால் சொன்னது போல
எழுதத் தூண்டுகிறது.
ஆதவா said…
வாங்க வேத்தியன்... முதல் பின்னூட்டத்திற்கு நன்றி!!!
ஆதவா said…
வேத்தியன் கூறியது...
தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சு...

சும்மா கடைசியில ஒரு ட்விஸ்ட்  நன்றி வேத்தியன்... வோட்டுக்கும் பாராட்டுக்கும்...
ஆதவா said…
ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்லாயிருக்கு ஆதவா, சுஜதா சாரை போல முயற்சி அவரை பொல இல்லை என்றாலும் பரவாயில்லை

சரக்கு உள்ள எவரும் யாரைப் போலவும் முயற்சி செய்யவேண்டிய அவசியமில்லை ஞானசேகரன் சார். " மார்கழி திங்களல்லவா" என்று வைரமுத்து எழுதிய பொழுது யாரும் ஆண்டாளைப் போன்ற முயற்சி, ஆண்டாளாக இல்லை என்று சொல்லவில்லை....

சுஜாதா ஒரு மாமலை
நான் கடுகு..

நீங்கள் என்னை அவரோடு ஒப்பிட முயன்றதே தவறுதான்...

நன்றி சார்.
ஆதவா said…
மூன்றாவது நண்பர்... கலை... அவர்களுக்கு... மிக்க நன்றி கலை..

இதில் எனக்கு கொஞ்சம் தெளிவில்லை. என் அறிவிற்கு எட்டத விடயமோ தெரியல‌
//எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...//

மின்னியலில், எலக்ட்ரான்களைக் காட்டிலும் ப்ரோட்டன்களுக்குத்தான் அதிகம் மவுசு!!! அதை வெச்சுத்தான் எழுதினேங்க...
ஆதவா said…
நட்புடன் ஜமால் கூறியது...
ஆதவா
மிக அருமை

அதுவும் science fictions மாதிரி எல்லாம்.
எழுத தூண்டுகிறது என்னை.


எழுதுங்க, எழுதுங்க.... ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்..  மிக்க நன்றி ஜமால்
ஆதவா said…
கமல் கூறியது...

ஸ்ப்பா....முடியலை....?
அப்ப நீங்கள் ஒரு விஞ்ஞானியா??

ஹாஹா.... நன்றி கமல்... விஞ்ஞானம் என்பது எல்லோருடைய உடலிலும் கலந்து இருக்கிறது.... ரசித்து படித்தமைக்கு நன்றி நண்பா//
ஆதவா said…
கடையம் ஆனந்த் கூறியது...
விறுவிறு சுறுசுறு...கதையின் ஓட்டமும், நடையும் அழகு.

மிக்க நன்றி ஆனந்த்....


இப்னு ஹம்துன் கூறியது...
ரொம்ப நல்லாருக்குங்க.
ஜமால் சொன்னது போல
எழுதத் தூண்டுகிறது.


முதல் வருகைக்கு நன்றி இப்னு.... நீங்களும் எழுதுங்கள்...
கடைசியில் நெகிழ வைத்து விட்டீர்கள்.
ஆதவா கலக்கல்
வாவ் சொல்லவைத்த எழுத்துக்கள் (Scientific)
//சாலையில் ட்ராஃபிக் அதிகமில்லை. எப்போதாவது சில ரோபோட்டுகள் மட்டும் மண்டை குழம்பிப் போய் மோதிக்கொள்ளும்போது ட்ராஃபிக் நேர்வதுண்டு./

ரோபோக்களின் ராஜ்ஜியம்
// ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல்.///

சுஜாதா ரேஞ்சுக்கு கதை சொல்கிறீர், நல்லாருக்குப்பா
//ஒரு நல்ல நாளில் நால்வர் புடைசூழ கலியாணம் செய்துகொண்டோம்..//

ரோபோக்கள் இருந்ததா
ஆதவா said…
ராம்.CM கூறியது...
இதெல்லாம் என்ன கணக்கு???.....கலக்கிட்டீங்க....

ஒரு எலக்ட்ரீசியன் எனக்கு இதைச் சொன்னார்.. ஓரளவு புரிந்து கொண்டு எழுதினேன்... தவறாக இருந்தாலும் தவறில்லை... ஹி ஹி..

நன்றி ராம்.
ஆதவா said…
நன்றி அஃப்ஸர்..

நால்வரில் ரோபோக்கள் இருந்ததா என்று இனியொரு கதைதான் எழுதவேண்டும்!!! ஹி ஹி..
கதையின் முடிவு வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது. மனத்தில் கதையை சுருக்கென நிறுத்துகிறது
நல்ல கதை.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஆதவா said…
டாக்டருக்கும் முதல்வருகை தந்த கேபிள் சங்கருக்கும் என் நன்றி!!!!

அன்புடன்
ஆதவா!
Rajeswari said…
அருமையான வர்ணனை..நன்றாக இருந்தது.(ஒரு சந்தேகம் ஆதவா சார்,கதை நாயகிகள் பெயர் எல்லாம் ஜெசிக்கா என்றே இருக்குது ..யாரது ?)
Anonymous said…
கலக்கல்டா ஆதவா!
சயன்ஸ் பிக்கசன்! நல்லா இருக்கு,
unmayaa karpanayaa இல்லை unmaikarpanayaa nu thikku mukkaditten.
ரொம்ப அருமையா இருக்கு.
வாழ்த்துக்கள்.
ஆதவன்...கதையை படித்து வியந்தேன் வரும் காலத்தில் நடக்கக் கூடியதாய் இருந்தாலும் உங்கள் எழுத்துநடையில் அறிவியல் அழகாக தெரிகிறது...
//அதற்கு முதலில் இந்த டெக்னாலஜிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்..பின்னே! மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?//

முடித்திருக்கும் விதம் யூகிக்க முடியாத ஒன்று...வாழ்த்துக்கள் ஆதவன்...
ஆதவா said…
வாங்க ராஜேஷ்வரி...

ஜெஸிகா என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர் ... வேறெந்த காரணமுமில்லை சகோதரி..

நன்றி!~!!
=============
வாங்க ரவீ!!
மிக்க நன்றி ரவீ!!

வாங்க புதியவன்
மிக்க நன்றி புதியவன்.... !!!
இது எலக்ட்ராவின் பிறப்பு மட்டுமல்ல..

ஆதவன் என்கிற தரமான எழுத்தாளரின் பிறப்பு..
Suresh said…
//மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?//

அருமை நண்பா ! அதிலும் இந்த வரிகள் ரொம்ப புதிதாய் இருக்கு :-) நெகிழ்ச்சியை எற்படுத்து
விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கை அப்படியே தொடருமா என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் உங்கள் கதை அருமையாக இருக்கிறது. தொடருங்கள்... எங்களுக்கு இன்னொரு சுஜாதா கிடைப்பதில் மகிழ்ச்சிதான்!
கவிதை,கதை,விஞ்ஞானம்.. அப்படின்னு பல துறைகளை பட்டய கிளப்புறீங்க. வாழ்த்துக்கள்
அறிவியல் சார்ந்த சிறுகதை பதிவு.மிக மிக அருமையான பதிவு,இதுபோல் பதிவுகள் தொடரவேண்டும்.வாழ்த்துகள்
ஹேமா said…
ஆதவா,விஞ்ஞானம் கொண்டு ஒரு சிறுகதை.முடிவை அசத்தலாய் முடிக்க நினைத்து அசத்தியே விட்டீர்கள்.அருமை.
ஹேமா said…
கவிதைதான் சொற்கள் கோர்த்து மாலைகள் ஆக்குகிறீர்கள் என்று பார்த்தால், கதைகளும் அதன் நடையும் உங்களுக்கென்று ஒரு தனித் தன்மையையே அமைக்கிறது.
பாராட்டுக்கள்.
ஆதவா said…
செய்யது!!! மிக்க நன்றிங்க...

மிக்க நன்றி சுரேஷ் நண்பரே!

அன்புமணி, சுஜாதா எல்லாம் இல்லைங்க... ஏதோ கடவுள் புண்ணியம்... ஓடிட்டு இருக்கு

மிக்க நன்றி நசரேயன், சொல்லரசன், சகோதரி ஹேமா.

உங்கள் அனைவருக்கும் என் நன்றியை மனமாரச் சொல்லிக் கொள்கிறேன்.