தெய்வக் குடிலுக்குள்.....
குளத்துப் படிகளில் மண்டியிட்டு
நீ அள்ளி வீசிய தண்ணீரின்
தெறிப்பை பார்த்து மகிழுவேன்.
குளத்து மீன்கள் வெட்கலாம்
நான் இரைத்த பொரிகளை தின்றுவிட்டு...
கொலுசாணியை சரிபார்க்க
முதல்படியில் நீர் நனைய
கால் பரப்புவாய்.
வெட்கி ஓடும் நீரைக் குடிக்க
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..
பொரிகளுக்கு ஏங்கிய மீன்கள்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...
உன் நனைந்த ஆடைகளைப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........
உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...
எழுந்தோம்; நடந்தோம்.
ஆன்மீகம் குடிகொண்டிருக்கும்
ஒரு சிலையை வணங்குவதற்கு முன்
ஒரு பூக்கடைக்குப் புறப்படுவோம்
ஒப்பனைகள் புரிய..
வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும்
பூக்களில் எல்லாம் உன் வாசனை
உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்
உன் கூந்தலில் ஏறிவிட்டு
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.
என் கரம் பிடித்தவாறு
ஒரு குழந்தையாக தவழ்ந்து வருவாய்.
தரிசன வரிசையில்..
உன் வியர்வைகளை
என் ரேகைகள் ருசிக்கும்
உன் ஈரத்தை என் மனம் ரசிக்கும்
இறுதியாக அந்த சிலை வந்ததும்
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,
ஒரு தெய்வக் குடிலுக்குள்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..
Comments
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...//
ரசித்த வரிகள்.
மென்மையான அணுகுமுறை. படிப்படியாக அழைத்துச் செல்கிறீர்கள்.
அருமை ஆதவா.
அன்புடன்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...//
விழி மீனில் நிஜ மீன் சிக்கியதில் ஆச்சர்யமில்லை தான்...
பூக்களில் எல்லாம் உன் வாசனை//
ஹா...மிகவும் ரசித்தேன்...
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..//
ஆத்திகமும் நாத்திகமும் கலந்த வரிகள்...கவிதை அருமை ஆதவன்...
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........
உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...///
அருமையனா வரிகள் அனுபவமா சார்?
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,
ஒரு தெய்வக் குடிலுக்குள்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்//
சூப்பர்.
இதை தான் கணவனே கணவனே கண் கண்ட தெய்வம் என்பார்களோ!!!!!
சூர்யாஜிஜி
கார்த்திகைப் பாண்டியன்
புதியவன்...
எல்லோருக்கும் நன்றி!!!
இதை தான் கணவனே கணவனே கண் கண்ட தெய்வம் என்பார்களோ!!!!!
ஹிஹி அனுபவமெல்லாம் இல்லீங்க கலை!! நன்றியுடன்/////
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..
//
அட சொல்ல வைத்த வரிகள்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...
/
ஆச்சரியமில்லைதான் வலை விரித்தது யாரு.... சிக்கியது நீங்களும்தான் ஆதவா
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்//
ஹா ஏக்கப்பெருமூச்சு..!!! இருக்காதா பின்னே
பூக்களில் எல்லாம் உன் வாசனை
உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்//
ஆஹா கலக்கல் வரிகள்
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.///
ரசித்த ரசனைமிக்க கற்பனை வரிகள் ஆதவா சூப்பர்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..
//
ம் ம் இது பாய்ண்ட்
நல்லருக்கு ஒவ்வொரு வரிகளும்..
வாழ்த்துக்கள்
இருங்க படிச்சுட்டு வரேன்...
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........//
அட...
கலக்குங்க பாஸு...
:-)
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..//
அருமை...
சூப்பர்...
அது என்னமோ தெரியல... உன் கவிதைக்கு மக்கள் பின்னூட்டமா போட்டு அள்ளி தெளிக்கறாங்க..... :)
வாழ்த்துக்கள்... ஆதவா!
ஒரு சிலையை வணங்குவதற்கு முன்
ஒரு பூக்கடைக்குப் புறப்படுவோம்
ஒப்பனைகள் புரிய..//
நல்ல வரிகள் நண்பரே. இன்றைய நிலையும் இதுதான்.
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.//
ஆதவா,உங்களைப்போல எனக்கு
விமர்சிக்கத் தெரியாவிடாலும் ரசிக்கத் தெரிகிறது.ஒவ்வொரு...ஒவ்வொரு வரியிலும் கற்பனைத் திறன் அருவியாய் சீராய்க் கொட்டுகிறது.
நீங்கள் வர்ணித்த
பின்னரே
யோசித்தால்...ஆமாம் இப்படியும்தான் என்பதுபோல அதிசயித்துக் கொள்கிறேன்.
கவிஞன் பொய்யே சொன்னாலும் அழகாய்த்தான் இருக்கிறது.
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,
நல்லவரிகள்!..
இத மாதிரியான அனுபவங்கள் என் வாழ்க்கைக்கு கிடைக்கவில்லை!
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..//
நிதர்சன உண்மை.ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் விளங்கும்.என்னை மிகவும் கவர்ந்த வரிகள் .பல உவமைகளை என்னோடு புதைத்து விட்டு சென்ற வரிகள்..Really superb..!
நான் இரைத்த பொரிகளை தின்றுவிட்டு...//
ஆதவா? என்ன வேலை இது?? அருமை? ஆரம்பத்திலேயே கவிதை அழகுடன் விரிகிறது...
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...//
இந்த வர்ணனையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது??? ஏனெனில் ஒரு பெண்ணின் கண் பார்வைகளுக்குள் ஒருவர் தான் எளிதாக மாட்டலாம். ஆனால் நீங்கள் இங்கே விளிப்பது அங்கே உள்ள அனைத்து மீன்களையும் என்னும் போது அருகே இருந்த அவளின் நாயகனை விட மீன்களுக்கா மாட்டும் சக்தி அதிகம்??
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........//
இதனை நினைக்க சிரிப்புத் தான் வருகிறது?? ம்.......எத்தனை வடிவில் ஒரு பெண்ணை ரசிக்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் குடுத்து வைச்சவர்கள்...
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...//
யோ இது அருகே இருக்கும் ஆதவனின் மூச்சுக் காற்றின் வெப்பத்தினால் என்று வந்திருந்தால் மிகவும் யதார்த்தமாக் இருந்திருக்கும்???
பூக்களில் எல்லாம் உன் வாசனை
உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்//
யாரந்தப் பைங்கிளி ஆதவா???
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.//
இது உயர்வு நவிற்சி மாதிரித் தெரியுது?? ம்...என்ன தமிழா பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பாடமாய்ப் பயின்றீர்கள்?? உங்கள் இலக்கணப் புலமைக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு ஒஸ்ரேலியா வந்தவுடன் இந்த அணிகள் எல்லாம் மறந்து விட்டது....இனி உங்களிடம் கேட்டு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..//
அது சரி கல்லாய் இருக்கும் தெய்வத்திற்கு உயிர் இருந்திருந்தால் நாமெல்லா??
கவிதை தேடல். ஊடல், கூடல் கொண்டு மனதைக் கொல்கிறது?
வரிகளில் காதல் உணர்வு சுவையுடன் விஞ்சி நிற்கிறது. கவிதை எளிமை கலந்த இன்ப ரசம்.
படிக்கையில் உணர்வூட்டும் அமுதம்...
இன்னும் சொல்லின் ஆதவனின் நிஜ வாழ்வின் அனுபவமும் கலந்து கவிதை நகர்கிறதோ என்று எண்ணத் தூண்டும் யதார்த்தம்...
இன்னும் நிறைய இலக்கிய நயப் படைப்புக்களைத் தங்களிடம் எதிர்பார்க்கின்றோம்...
அண்டங்காக்கா..கொண்டைக்காரி..
என்று அர்த்தமில்லாமல் பாடல்களைக் கேட்டுச் சலிப்படைந்திருந்தவர்களுக்கு இணையத்திலும் தமிழ் இலக்கியம் வளர்கிறது. சொல்லாடல் கலந்து மீண்டும் துளிர்க்கிறது என்பதற்கு இது தக்க சான்று..!
வேத்தியன்
ஷீ-நிசி
சொல்லரசன்
ஹேமா
ராம்.CM
Rajeswari
கமல்
Anbu
ஆகிய அனைவருக்கும்... குறிப்பாய் ரசித்து ருசித்துப் படித்த கமலுக்கும் என் மனமார்ந்த நன்றி!!!!
--------------------
அனுபவமெல்லாம் இல்லை கமல்... ஏதோ கற்பனை.. அவ்வளவே!!!!
நன்றி தல.
//வெட்கி ஓடும் நீரைக் குடிக்க
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..//
மிக ரசித்தேன்.
அன்புடன்,
உழவன்
எளிமைவார்தைகள் நல்லா இருக்கு