பிளவுபட்ட கரைகள்
நீர்தேடச் சென்று
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.
ஊதமுடியா சங்குகள்
அங்கே வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது
மணல் தொட்ட வியர்வைத்துளி
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது
தொண்டை அடைத்த
ரணத்தோடு
ஓவியம் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.
ஊதமுடியா சங்குகள்
அங்கே வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது
மணல் தொட்ட வியர்வைத்துளி
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது
தொண்டை அடைத்த
ரணத்தோடு
ஓவியம் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.
Comments
படிச்சிட்டு அப்பாலிக்கா வாரேன்
உணர்வுகள் அருமையாக வெளிக்காட்டும் வரிகள்.
வாழ்த்துக்கள்.
திரிதுகள்...என்றால் (அலைச்சலை குறிப்பிடுகிறீர்களா?)
அன்புடன்
அருமை...
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்\\
ஆரம்பமே அசத்தல் ...
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.
/
நல்ல வரிகளின் தொடக்கம்
அங்கே வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது
மணல் தொட்ட வியர்வைத்துளி
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது\\
மிகவும் அருமை
இயல்பு சொல்லும் வரிகள்
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது
அழகான வரிகள்..!
அங்கே வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே //
கொஞ்சம் யூகிக்க முடிந்த வரிகள் ஆதவா
ரணத்தோடு
ஓவியம் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.
/
உண்மையை சொல்லும் வரிகள்
இருங்க இன்னொரு தரம் படிச்சுட்டு வரேன்...
சூப்பர் ஆதவா...
வாழ்த்துகள்...
[நமக்கெல்லாம் கவிதையை அனுபவிக்க மட்டுமே தெரியும், ஆராயத் தெரியாது :-)]
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.//
//பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.//
இந்த இரண்டு வரிகளையும் அடுத்தடுத்துப் படிக்கும்போது தொலைந்து போகாத நினைவுகள்
உறைக்கின்றன.
கவிதையாய் நினைவுகள் நீண்டிருக்கின்றன.
வாழ்த்துக்கள்.
அங்கே வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது//
பிரிவுக் கவிதையில் வார்த்தைத் தேர்வுகள் அருமை ஆதவன்...
ரணத்தோடு
ஓவியம் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.//
ஏதோ ஒரு விதத்தில் எப்போதாவது பிரிவு நம்மை ஆட்க்கொள்ளத்தான் செய்கிறது...அருமையான கவிப் படைப்பு ஆதவன்...
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.//
காதல்!
கடற்கரை
மணலை அள்ளினேன்
கைகளில் அவள்பாதங்கள்!
அங்கே வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது//
இது ஏதோ நரக நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது.வாழ்க்கையின் இறுதிப் படிமங்களும் இப்படித்தான் இருக்குமோ??
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது//
ஆதவா...சந்தமும் வர்ணனையும் சுபம்...
பிரபஞ்சத்தில் அனைத்தையும் இழந்த மனிதன் வெறுமையாக நிற்கையில் ஏற்படும் நினைவுகளைப் போல கவிதையும் அனல் மூட்டுகிறது...
தொடருங்கோ...........
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது//
மனம் கொள்ளை கொண்ட வரிகள் .மிக நன்றாக உள்ளது
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது
*******************
கலக்கல் வரிகள்
வார்த்தை குவியல் ஆதவன்...!!!!!!
அருமை...
*************
ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இது நல்ல ஊக்கம் கொடுக்கிறது :-)
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.//
அருமை , உங்களோட
ஹோம் பேஜ் புகைப்படம் மிகவும் அருமை
யாருன்னு தெரிஞ்சிகலமா உங்கள் தளமே அருமையாக உள்ளது :-)
நீங்க ஒரு நல்ல ரசிகர் :-) என்று உங்க தளத்தை பார்த்தாலே தெரியுது
சூர்யா ஜிஜி
திரிகுதுகள்... அலையுதுகள்.. நீங்கள் சொன்னது சரி!!
அ.மு.செய்யது
நட்புடன் ஜமால்
ராம்.CM
வேத்தியன்
மாதவராஜ்
புதியவன்
அன்புமணி
கமல்
ராஜேஷ்வரி,
கவின்
கார்த்திகை
கலை
ஆகிய அனைவருக்கும் என் மனம் தேடும் நன்றி!!!!
உங்கள் அனைவரையும் நண்பர்களாகப் பெற்றது பெருமைக்குரியது!!!!
நன்றி நண்பர்களே!!
அருமை , உங்களோட
ஹோம் பேஜ் புகைப்படம் மிகவும் அருமை
யாருன்னு தெரிஞ்சிகலமா உங்கள் தளமே அருமையாக உள்ளது :-)
நீங்க ஒரு நல்ல ரசிகர் :-) என்று உங்க தளத்தை பார்த்தாலே தெரியுது
நன்றி சுரேஷ்...அந்த புகைப்படக் குழந்தை யாரோ.... ஆனால் குழந்தைகள் தெய்வம் என்பதால் என் தளத்தின் தெய்வமும் அக்குழந்தையே!!!
முதலில் நான் ரசிகன்.... பிறகே படைப்பாளி!!! மிக்க நன்றி சுரேஷ்.... தொடர்ந்து வாருங்கள்...
"மணல் தொட்ட வியர்வைத்துளி
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது"
வாழ்த்துக்கள்.
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாலையில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்
மணல் தொட்ட வியர்வைத்துளி
வீணாக நோகிறது
மனம் தொட்ட நீர்தடங்கள்
காணாமல் போகிறது\\
தொலைத்தலும் தேடலும் எங்களுக்கே உண்டான சாபம்.கவிதை உருவகப்படுத்தியிருக்கும் விதம் அருமை.
ரணத்தோடு
ஓவியம் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.
கலக்கல்..!
அருமை...!
அழகான வரிகள்..!
தொடரட்டும் ஆதவா!
நிலாவும் அம்மாவும்
ஷீ-நிசி
ஆகிய அனைவருக்கும் என் நன்றி
வாழ்த்துக்கள்..
முதலில் உங்களின் கவிதை நன்றாக உள்ளது , நீங்கள் சொன்னது போல எனது பதிவு "யாதார்த்தத்தின் --" எனக்கே பதிவிட விருப்பமில்லை தான் , ரொம்ப நாட்களாக பிளாக்கில் எதுவும் போடாததால் போட்டுவிட்டேன், மனதை பாதிக்காத விஷயங்களை எழுதும் போது வார்த்தைகளும் வலிமையின்றி போகின்றது,இப்பொழுது நீக்கிவிட்டேன்,,முதன் முதலாக பதிவை நீக்கியது இப்பொழுதுதான்.சற்று வருத்ததம்தான்,
பார்ப்போம்,எனது எல்லைக்குள் வார்த்தைகள் கைகூடும் போது எழுத முயற்சி செய்கிறேன்
தோழமையுடன்
ஜீவா
நன்றி ஜீவா.. அதுக்காக பதிவை எதுக்குங்க தூக்கினீங்க.... குழந்தையின் கிறுக்கல்தான் நாளை ஓவியமாகும்... தொடர்ந்து எழுதுங்கள்.