ஜெஸிகாவின் முதல் முத்தம்



வணக்கம் மக்களே!

கதையைப் படித்தபின் என் அலுவலகத்திற்கு ஆட்டோ சகிதம் ஆட்களை அனுப்பப் போகிறீர்கள்... !!! சகிப்புத் தன்மையோடு படியுங்கள். படித்து முடித்தபின் அடச்சே! இதெல்லாம் ஒரு கதையா என்று சொல்லக்கூடாது ஆமாம்... உங்களை நம்பிதான் எழுதியிருக்கேன்..

ஆதவனும் (அட நானில்லைங்க) அவன் காதலியும் முத்தமிடும் அந்தி நேரம். அந்த முத்தத்தில் விளைந்த சத்தங்கள் இடியாக ஒலிக்க, கண்கள் மின்னல் பார்வைகளை ஆதவன் வீச, சூழ்ந்து மறைத்துக் கொண்டிருந்த மேக மாமாக்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு காதல் அரங்கேறுவதை கண்கொண்டு பார்த்து சிரிக்கிறது பூமி, அந்த பூமியில் ஒரு புழுவாக நெண்டிக் கொண்டிருக்கும் பல உயிர்களில் ஆறறிவு உயிரனமாக கதிரவன் இருந்தான்..

மாலை நேரத்தின் மது மயக்கத்தில் பூக்கள் சொறிந்துகொண்டிருந்த சோம்பலை தன் புன்னகையில் வழித்துக்கொண்டு நேரே மேனியை சுத்தம் செய்யப் புறப்பட்டான். அதுவரை என்ன செய்துகொண்டிருந்தான் என்று கேட்கிறீர்களா? கதிரவனுக்கு ஏது வேலை? எல்லாம் கனவுகள் தான். காதல் கனவுகள். அதைவிடுங்கள். நாம் கதைக்குள் வருவோம்.

கதிரவன் என்றுமே தன் தலையை நீர் நனைய குளிக்கும் போது அருகிலிருப்பவர்கள் கண்கள் குளித்துக்கொண்டிருக்கும்.. அந்த நேரத்தில் தன் அகோரக் குரலில் பாட்டு ஒன்று பாடுவான் பாருங்கள்.. முத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஆதவனும் இரவுக் காதலியும் பயந்தே ஓடிவிடுவார்கள். பூமி அலறிஅடித்துக்கொண்டு சுற்றும்.. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருக்கும்.. அதற்கு பெயர் காதல். இப்படித்தான் அவனே சொல்லிக் கொள்வான். மெல்ல , தண்ணீரின் கண்ணீரை துடைத்துவிட்டு குளித்துவிட்டு வரும் கதிரவன் மிக அழகாக இருப்பான்.

அங்குள்ள ஆண்களில் கதிரவன் அழகு என்றாலும் சற்று அழுக்குதான். சூரியனின் பாசத்தில் பொங்கி வழியும் வியர்வைத் தண்ணீர். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் குடம் எடுத்து வந்து பிடிப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கண்கள் அயிரை மீன் மாதிரி.. வேறென்ன சொல்ல, மீன்களைத் தவிர வேறொன்றும் உவமையே சிக்கமாட்டேங்கிறது!. மூக்கு ஆங்கில எழுத்தான 'எல் ஐ கவிழ்த்தமாதிரி இருக்கும். செவிகளிரண்டும் யானைசெவிகள்.. சற்று நீளமான வாய்.. எத்தனை இன்ஞ் என்று கேட்டுவிடப்போகிறீர். இப்படியே வருணித்துக்கொண்டு போனால், போடா இதெல்லாம் ஒரு கதையா என்று என் வலையை மூடிவிடுவீர்கள்.. அதனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்,.

இந்த நேரத்தில் இவன் எங்கு புறப்படுவான்?.. எல்லாம் காதலியைத் தேடித்தான்... நிற்க, காதலி என்றால் இவன் மட்டுமேதான் காதலிக்கிறான். அவளில்லை. கிட்டத்தட்ட இது ஒருதலைக் காதல். பாவம் கதிர், பலதடவைகள் காதலை பல கோணங்களில் சொல்லிப் பார்த்தான்.. ம்ஹீம்.. அவள் இணங்கவே இல்லை. எல்லா முயற்சியும் கடலில் கலந்த நதிநீர்தான்.. காதலிக்கு ஒரு பெயர் இருக்குங்க. ஜெஸ்ஸிகா. அவள் ஒரு கிறிஸ்டீயன்.. ஜெஸ்ஸிகா என்ற பெயர் வைத்துக்கொண்டு பின்ன என்ன முஸ்லீமா என்று நீங்கள் அரிவாளை எடுப்பது தெரிகிறது... ஜெஸீகா மிக அழகு என்றாலும் கர்வம் ஜாஸ்தி. தான் தான் உலகிலேயே பேரழகி என்று குதிகுதி என்று குதிப்பாள். அவளைப் பற்றிய வருணனைகள் கீழே தருகிறேன். நினைவில் கொண்டு சென்று பெருமூச்சு விட்டுக்
கொள்ளுங்கள்..

ஜெஸ்ஸிகா பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருப்பாள். கேசம் இருக்கிறதே அது மலையிலிருந்து விழும் அருவியாக அப்படி ஒரு அழகு... கேசத்தை சுருட்டி கொண்டை போடும் பழக்கமே இல்லை இவளிடம். ஒவ்வொரு முடியையும் கையில் எடுத்துக் கொண்டு ஆனாலப்பட்ட ஆலமரத்தையே சாய்க்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதை அங்கேயும் இங்கேயும் ஆட்டிக்கொண்டு அவள் நடக்கும்போது கேசத்தின் பொலிவைக் கண்டு பாதைகள் எல்லாம் சுத்தமாகிவிடும் என்று கதிரவன் சொல்லுவான். நெற்றி இருக்கிறதே நெற்றி, ஆறாம் பிறை நிலவைப் போல அரை நெற்றி. அதில் பொட்டு இருக்காது. நெற்றியில் உள்ள சுருக்கங்களை ஒப்பிட கவிஞர்கள் பொருளைத் தேடுகிறார்களாம். கண்களின் வசீகரத்தைப் பற்றி நான் எழுதவே முடியாது. அட அட என்ன ஒரு அழகு போங்கள். நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல இமைகளை மூடி திறக்கும்போது ஒரு ஒளிவெட்டு கண்களில் ஏற்படும் பாருங்கள்... சூரிய கிரகணத்தைவிட சூடானது.. மூக்கு கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் கொக்கு மூக்கோடு ஒப்பிட வேண்டாம். மூக்கின் நுனியில்தான் எப்போதுமே அமர்ந்துகொண்டிருப்பாள். அத்தனை கோபம் அவள் காட்டுவாள். மூக்கில் இரு துவாரங்கள்.. (பின்ன பல துவாரங்களா என்று எரிச்சலாவது தெரிகிறது... கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்!! ஹி ஹி) துவாரத்தின் வழியே என்ன இருக்கிறது என்று அறியாமல் காற்று நுழைந்துவிடும்.. அங்கிருந்து பெருத்த அழுகையோடு இன்னொரு காற்று வெளியே வரும்... பேசாமல் காற்றாகவாவது பிறந்து இருக்கலாம் என்று தோணும். நுதல்களைப் பொறுத்தவரை அவள் உருவத்திற்கு பொருத்தமாகவும், குறைவான நீளம் கொண்டனவாகவும் இருக்கும்.. உதடுகளில் வெடிப்பு இருக்கும்.. கதிரவன் அங்கேயே படுத்துக்கொள்ள பார்ப்பான். எந்த பருவத்திலும் 0 டிகிரியில் வைத்திருப்பாள். அவ்வப்போது நாக்கைக் கொண்டு தடவித் தடவியே குளிர்பிரதேசமாக வைத்திருப்பாள். பொதுவாக கழுத்தை சங்குக்கு ஒப்பிடுவார்கள். நான் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறேன். தண்ணீர் குடத்தின் விளிம்பை கவிழ்த்துப் போட்ட மாதிரி இருக்கும். கழுத்தில் அவ்வப்போது நரம்புகள் எட்டிப்பார்க்கும்.. அப்படியே இறங்கி வந்தால்........ (வேண்டாமய்யா பொதுமாத்து!! இத்தோட நிறுத்திக்கிறேன்.)

அப்பாடா! ஒருவழியா முக அழகை வர்ணிச்சுட்டேன்.. இனியாவது கதைக்குள் போவோம்...

கதிரவன் ஒரு பூங்காவில் நின்றுகொண்டிருந்தான். காதலித்தவர்கள் பைத்தியம் என்று கவிஞர்கள் கவிதை பாடுகிறார்களல்லவா அதனால் அவன் பூக்களோடு பைத்தியக்காரத்தனமாகப் பேசிக்கொண்டிருந்தான்.. அங்குள்ள பூக்கள் பல வகைகள் ரோசாப்பூக்கள்தான் நிறைய இருந்தன.. அவன் மனதிற்கு பிடித்த பூவான சிவப்பு வர்ண ரோசாப்பூக்கள் அன்றைய இரவை எதிர்நோக்கி தன் கன்னத்தில் கைவைத்து சோகமாக இருந்தது.. எதிர்நோக்கியதர்க்கும் சோகத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. என்னிடம் கேட்காதீர்கள்.. எனக்கே தெரியாது. அந்த ரோஜாப் பூ சொன்னது, அடப்பாவி கதிரவா! இப்படி நடமாடும் பூவுக்காக காத்திருக்கிறாயே! எங்களையும் கொஞ்சம் கவனித்து ஒரு முத்தம் கொடுத்தால்தான் என்ன? என்று கேட்டன. கதிரவன் சும்மா இருந்தானா? இல்லை. வேலியைத் தாண்டிப் போய் ஒரு முத்தம் கொடுத்தான்... ரோசா முற்கள் அவன் சட்டையை பிடித்துக்கொண்டு இன்னும் இரு முத்தம் கொடு என்று கேட்டன... பாவம் அவன்.. அப்படி கொடுத்துக் கொடுத்தே எச்சில் செய்துவிட்டான்... நல்லவேளை அந்தநேரம் பார்த்து விஜயகாந்த் இல்லை. (பூந்தோட்டக் காவல்காரன்).

தன் கையில் உள்ள கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். மணி 6.10. இன்னும் வரவில்லையே அவள்... சலித்துக்கொண்டான். அங்குள்ள பாறை ஒன்றில் அமர்ந்து நிலவோடு பாட்டுக்குப் பாட்டு பாடிக்கொண்டிருந்தான்... சரியாக 6.20க்கு அவள் வந்தாள்... பூங்காவில் ஒழுங்காக எரியாத விளக்குகள் கூட எரிந்தன.. நிலவு தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு ஃபேர் அன் லவ்லி போட்டதைக் காணமுடிந்தது,. அவன் அப்படியே கனவுக்குள் போய் விட்டான். காதல் செய்யும் பாட்டைப் பாருங்கள். நன்றாக இருந்த கதிரவன் இப்படி ஆகிவிட்டானே என்று ஒரு ஓரமாக இரு காதல் புறாக்கள் கண்ணீர் விட்டன... (நன்றாக கவனித்துப்பார்த்தால் ஆண் புறா மட்டுமே, "சிக்கிவிட்டானே" என்று கண்ணீர் விட்டது தெரிந்தது.) அவள் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறாள். அவனுக்கோ குளிர்தேவதை வந்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட்டாள்... உடலெல்லாம் ஒருவித நடுக்கம் ஏற்பட, கண்களாலேயே வலைவிரித்தாள் அவள்..

அவள் புன்னகைத்தாள்... இவனோ அந்த புன்னகையில் உள்ளே நுழைந்து தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டான். அட அட... காதலியின் புன்னகை என்ன ஒரு அற்புதம் போங்கள்... அதை அனுபவிக்கனுமே!!... மெல்ல அதரம் திறந்தாள். ஒருநிமிடம் உலகத்திலுள்ள அனைத்து கோள்களும் நின்றுவிட்டன. அவள் எச்சில், உதடுகளை முத்தமிட்டு பிரிய, அவள், " கதிர் உன்னை நான்............................. போடா " என்று வெட்கிச் சிரித்தாள்..

" கதிர் உன்னை நான்...... போடா " ... இந்த வார்த்தைகள் அவனை அப்படியே சொர்க்கத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது.. அங்கே ரதியும் மன்மதனும் கட்டிபிடித்து முத்தமிட்டு நடனமாடுவதைக் கண்டு களித்தான்... சொர்க்கத்தைப் பற்றி வர்ணனை????? வேண்டவே வேண்டாம்... கொஞ்சநஞ்சமாக என் வலையில் படித்துக் கொண்டிருந்தவர்களும் வராமலே போய்விடுவார்கள். ....... ஒரு தேவதை இறகுகளைப் பொருத்திக்கொண்டு கதிரவனை தன் மடியில் வைத்து அதே பூங்காவில் இறக்கிவிட்டது... அவள் இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். சிரித்தவள் சும்மா இருந்தால்தானே ஆகும்? நம் கதைக்கு முக்கிய காரணியான முத்தத்தை காற்றிலே கலந்துவிட்டு சென்றாள்... ஆம்.. அவள் தன் கைகளை உதடுகளுக்கு அருகே வைத்து தன் காதலின் அடையாளமாக முத்தத்தை ஊதிச் சென்றாள்... (அதாங்க ஃப்ளையிங் கிஸ்ஸு!! 'பறக்கும் முத்தமா தமிழ்ல???)

கதிரவன் தெளிவான நிலைக்கு வந்த பின் ரொம்பவே வருத்தப்பட்டான்... பாழாய்ப் போன மன்மதனும் ரதியும் நம்மை மயக்கிவிட்டார்களே ! இதனால் நம் உதடுக்கு வரவேண்டிய முத்தம் காற்றில் மிதக்கிறதே என்று ரொம்பவே வருத்தப்பட்டான்... முத்தக் கறை காற்றில் மிதந்துகொண்டுதான் இருந்தது.. கரையாமல்.



அவன் அதை மெல்ல பிடிக்க முயன்றான்.. அந்த நேரம் பார்த்தா தென்றல் வீசவேண்டும்.. பூச்சாண்டி வேலைகள் காண்பித்தது இந்த காற்று... முத்தம் அப்படியே பறந்து போய் பூங்காவின் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டிருக்கும் செம்பருத்திச் செடி மீது அமர்ந்தது.. இவன் அதறிப்பதறி ஓடிப்போய் அந்த பூவை சாத்து சாத்து என்று சாத்தினான்.... அடப்பாவமே! கதிரவனுக்கு அதிட்டமே இல்லை.. காற்று மீண்டும் வேலையைக் காட்டியது.. இம்முறை பூவிலிருந்து அப்படியே வானம் நோக்கி பறந்தது ஜெஸ்ஸிகா இட்ட அழகிய முத்தம். மேக வீரர்கள் அதைத் தடுத்து நிறுத்தினார்கள். இவன் எப்படியோ காதல் தந்த சக்தியில் பறந்து வந்தான்.. மேகம் அதுவரை அடைக்கலமாய் அந்த முத்தத்தை பத்திரமாக பாதுகாத்துவைத்திருந்தது. இவன் ஒரு போர்வீரனைப்போல் ஆவேசமாக பறந்துவந்தான்.. கையில் ஒரு கேடயம் இருந்ததையும் கவனிக்கவேண்டும். மேகம் பயந்ததோ என்னவோ தன் வேகத்தைக் குறைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. முத்தம் மேகத்தின் அணைப்பில் தூங்கியது. கதிரவனுக்கு பெட்ரோல் தீர்ந்துவிட்டதோ என்னவோ மெல்ல மெல்ல வேகம் குறைந்து வந்தான்.. களைப்பு வேறு வாட்டியது. கண்கள் முத்தத்தைக் காணாமல் வலித்தது. கண்களின் நரம்புகள் வெளிறியது. காதுமடல்கள் சம்மட்டியில் அடித்தவாறு சட்னியானது. இத்தனைப் புலன்களும் ஒரேசமயத்தில் மயக்கமுற்றாலும் மனம் மட்டும் ஒளிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென ஜெஸிகா அவன் கண்களில் வந்து போனாள். " மச்சான்! நல்லா பறந்துபோடா என்னோட முத்தத்தை மறக்காம புடிச்சுடுடா " என்று சொன்னாளே பாருங்கள்... எங்கிருந்துதான்
வந்ததோ அத்தனை வேகம்..... ஒரே மூச்சில் தனக்கு மட்டுமே சொந்தமான முத்தத்தை சீதையைக் கவர்ந்த ராவணனனாகச் சென்றுகொண்டிருக்கும் மேகத்தை அடைந்து அதனோடு சண்டையிட்டான்... அவளை நினைத்துகொண்டு அவள் கண்களின் நரம்புகளை எடுத்து பின்னி ஒரு கத்தியை நொடிப்பொழுதில் தயாரித்துவிட்டான்... மேகம் அந்த கத்தியின் பளபளப்பைக் கண்டதும் முத்தத்தை கீழே விட்டுவிட்டு ஒரே ஓட்டமாக சென்றுவிட்டது..

கீழே வீழ்ந்துகொண்டிருந்த முத்தம் கனவிலிருந்து மீண்டது... அநாதையாக வானில் விடப்பட்டதை உணர்ந்துகொண்டது... இம்முறை மழை முத்தத்திற்கு அடைக்கலம் கொடுத்தது.. கதிரவனுக்கு அன்று மழையென்றாலே பிடிக்காமல் போனது...

ஓடிப்போன மேகம் தன் கோபத்தை மழையாகக் காண்பித்தது. மழைத் தண்ணீர் முத்தத்தை கரைக்காமல் தன் இடுக்குகளில் சொறுகிக்கொண்டு மண்ணை நோக்கி விழப் பார்த்தது... மேகத்திடமிருந்து விடுதலை வாங்கித் தந்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் வானில் குச்சிப்புடி ஆடிக்கொண்டிருந்த கதிரவன் அவன் சக்தியை இழந்து தரையை நோக்கி விழுந்தான்... மழையிடம் சிக்கிய முத்தம் காணாமல் போனது... மழையைவிட அதிக அளவு தண்ணீரை இமைகள் என்ற மேகம் சொறிந்தது. அப்போது இரவாகையால் மின்னல் அடித்த போது எங்கோ ஒரு ஆட்டோடு கொம்பில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த முத்தத்தைக் கண்டுவிட்டான்.... தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த முத்தத்தை ஆடு தன் குளிரைப் போக்க தலையை ஆட்டி வெளியே வீசியது.... தன் மேனியெல்லாம் சேறாகப் போனாலும் பரவாயில்லை என்று அங்கிருந்த சேற்றுக் குளத்துக்குள் விழுந்து தேடினான்.... அடக் கதிரவா!! உனக்கு மூளையே இல்லையடா!! நேரே ஜெஸ்ஸிகாவிடம் கேட்டாள் இன்னொரு முத்தம் கொடுக்கப் போகிறாள் என்று சேறு அவன் முகத்தில் சேற்றைப் பூசப் பார்த்தது... அப்போழ்து சொன்னான்.. " உனக்கென்ன தெரியும் முதல் முத்தத்தின் அருமை... நான் தொலைத்துவிட்டு நிற்கிறேனே என்ன செய்வேன்..." என்று அலறினான்....

மழை ஓய்ந்தது.. இரவு பனி படர்ந்தது... பனியிடன் இந்த மனிதன் கஷ்டப்படுவது பார்க்கும் இயற்கை அனைத்திற்கும் வருத்தமாக இருந்தது.. என்ன செய்ய? முத்தம் கிடைக்காமல் இவன் போகமாட்டானே!! மெல்ல அந்த சேற்றிலேயே உறங்கிப் போனான்.. மழையின் துளிகள் அவனுக்குத் தாலாட்டு படித்தது. இரவு கனவில் ஜெஸிகா மிரட்டுவது தெரிந்து சீக்கிரமே அதிகாலையில் எழுந்துவிட்டான்... இம்முறை தன் தேடுதல் வேட்டையில் முத்தம் கிடைக்காவிட்டால் மேனி வானுக்கு மனமோ அந்த மானுக்கு என்று சபதம் பூண்டுகொண்டான்... அவன் ஆயத்தமாவதை சூரியன் கைகொட்டி வரவேற்த்தான்.. அவனின் கதிர்கள் கதிரவனின் நெற்றியில் குங்குமத்தைப் பூசின. இரவெல்லாம் கனவில் வாட்டிய மகராசி தற்போழ்து நினைவில் வந்தாள்...

காற்று, மேகம், மழைம, சேறு இப்படி பல தடைகளைத் தாண்டி முத்தம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்றால்
சும்மாவா என்ன? அத்துணை சக்தி... காதல் எவ்வளவு தெய்வீகமானது தெரியுமா? . இப்படியொரு நொடிப்பொழுதில் அவன் கடற்கரைக்குச் சென்றான்... சேற்றின் வழி நதியில் கலந்து கடலை அடைந்திருக்கவேண்டும் என்னவள் கொடுத்த முத்தம் என்று
நினைத்துக்கொண்டான்.. கடல் ஒன்றுமே தெரியாமல் தேமே என்று படுத்துக்கொண்டிருந்தது. சீற்றமில்லை, சுனாமி இல்லை, ஒரு மண்ணுமில்லை... ஜெஸ்ஸிகாவை நினைத்துக்கொண்டு ஹாரிபாட்டர் மந்திரத்தை உபயோகித்து கடலுக்குள் சென்றான்....

அலைகளின் அடுக்குகளில் ஒளிந்துகொண்டிருக்குமா என்று முதலில் துலாவினான். ம்ஹீம்... கடலில் துலாவுவது என்பது அத்துணை சுளுவா? இல்லை.. அலையடுக்குகளில் இல்லை... அடடா! கடலிள் இறங்கியபின் எப்படி போய்க் கேட்பது என்று அந்த திட்டத்தைக் கைவிட்டான்... திடீரென ஒரு சந்தேகம்.. தன் சட்டைப் பையினுள் இருந்து அலைபேசியை எடுத்து ஒரு போன் செய்தான்.. காதல் தேவதைக்கு.... என் முத்தத்தைக் களவாடிவிட்டாய் என்று குற்றம் சாற்றினான்.. அவள் இரக்கப்பட்டு, வானிலிருந்து இறங்கி வந்தாள்

காதல் தேவதையிடம் கதிரவன் கேட்டான். ம்ம்ஹீம்.. அவர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு க்ளூ மட்டும் கொடுத்தார்... இந்த
வானமும் கடலும் முட்டிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு மூலையில் பொத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்...

இவன் வேகவேகமாக நீந்தி அந்த இடத்தை அடைந்துவிட்டான். வானும் கடலும் ஒருவரையொருவர் மனம் தவிர்த்துவிட்டு
முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.. அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது ஜெஸ்ஸிகாவின் முத்தம்... மெல்ல அடியெடுத்து வைத்து கதிரவன் , அந்த முத்தத்தை லபக் என்று பிடித்துவிட்டான்... பிடித்தவன் அந்த முத்தத்தை தன் உதடுகளுக்குள் பொருத்திவிட்டான்.... திடீரென ஒரு ஆக்ரோசப் புயல் தாக்கியது.. முத்தத்தின் வேலையை அது
காட்டியது. கண்கள் சொறுகின.. அப்படியே மயங்கிவிட்டான்... கதிரவன் முத்தத்தைப் பெறும் காட்சியைப் பார்க்க வந்த நம் வலை மக்கள் எத்தனையோ முயற்சி செய்தும் அவனை எழுப்பமுடியவில்லை.. ம்ஹீம்... இதற்கு ஒரே மருந்து ஜெஸிகா தான்..




ஜெஸிகா அவனை எழுப்ப முயன்று நீரைத் தெளித்தாள்... அவள் கையில் பட்ட அமிர்த நீர் அவனின் கண்களைத் திறக்கவில்லை.. அவன் காதில் ஒன்று சொன்னாள்... உடனே எழுந்துவிட்டான்....

அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்...

கதை என்ற பெயரில் நான் இட்ட விதையைப் பார்த்துவிட்டு, பதை பதைக்க ஓடிவந்து என்னை உதைக்கப் போகிறீர்கள்... என் சதை கிழியப் போகிறது.. எதையும் செய்யும் முன் யோசித்துவிடுங்கள்..

Comments

யம்மாப்பிரிய பதிவு....

கொஞ்சம் இருங்க மூச்சி வாங்குது
அழகை வர்ணிப்பதில் நீங்கள்..? எப்படி சொல்றதுனு தெரியலே தல‌

கலக்கிட்டீங்க.. ஆனா என்ன சொல்ல வார்ரீங்கனுதான் தெரியலே
ஆதவா said…
ஆனா என்ன சொல்ல வார்ரீங்கனுதான் தெரியலே

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... அப்ப அம்பேல் தானா??? எனக்காக திரும்பவும் படிச்சுப் பாருங்க.... இது ஒரு கற்பனைக் கதை!!!
எதை சொல்வது, எதை விடுவது
ஆஹா உங்கள் கற்பனா சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பதிவு ஆதவா
ரொம்ப நல்லாருக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

முத்தத்தை வைத்தே மொத்த கதையையும் நகத்திருக்கீங்க‌
ஆதவனும் (அட நானில்லைங்க) அவன் காதலியும் முத்தமிடும் அந்தி நேரம். அந்த முத்தத்தில் விளைந்த சத்தங்கள் இடியாக ஒலிக்க, கண்கள் மின்னல் பார்வைகளை ஆதவன் வீச, சூழ்ந்து மறைத்துக் கொண்டிருந்த மேக மாமாக்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு காதல் அரங்கேறுவதை கண்கொண்டு பார்த்து சிரிக்கிறது பூமி, அந்த பூமியில் ஒரு புழுவாக நெண்டிக் கொண்டிருக்கும் பல உயிர்களில் ஆறறிவு உயிரனமாக கதிரவன் இருந்தான்//

ஆரம்பமே அணிகள் கலந்து சொல்லாடல்கள் நிறைந்து சிதறி விழுகின்றது..........மிகுதி படித்து முடித்த பிறகு.........
//அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்... //

நல்லாத்தானே போயிகிட்டிருந்திச்சு... அப்பறம் ஏன் இந்த பிரேக்? என்ன சொல்லியிருப்பாள்? சரி, அதை விடுங்க... கதைகளுக்கு நடுவில அடைப்புக்குறிக்குள்ளே... அட அட... மிக நன்று.(சூப்பர் திமிழில்)
//ஜெஸ்ஸிகா பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருப்பாள். கேசம் இருக்கிறதே அது மலையிலிருந்து விழும் அருவியாக அப்படி ஒரு அழகு... கேசத்தை சுருட்டி கொண்டை போடும் பழக்கமே இல்லை இவளிடம். ஒவ்வொரு முடியையும் கையில் எடுத்துக் கொண்டு ஆனாலப்பட்ட ஆலமரத்தையே சாய்க்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்//

அழகை வர்ணிப்பதில் கூட உங்களின் லொள்ளுகள் இடம்பெற்றது இந்த கதையோட்டத்தை மேலும் மெருகூட்டுகிறது
அங்குள்ள ஆண்களில் கதிரவன் அழகு என்றாலும் சற்று அழுக்குதான். சூரியனின் பாசத்தில் பொங்கி வழியும் வியர்வைத் தண்ணீர்//

உயர்வு நவிற்சி அணி உணர்வுகளுக்கு அழகு சேர்க்கிறது போலும்???
Rajeswari said…
வர்ணனை அருமை
சும்மாவா சொன்னார்கள் " முதல் காதலையும் முதல் முத்தையும் மறக்க முடியாதென்று"
சரி ,நான் சொல்லவா ஜெசிக்கா அவனிடம் என்ன சொல்லியிருப்பாள் என்று ..
"எழுந்திரிடா ,நான் ஜெசிக்கா வந்திருக்கேன்" ன்னு சொல்லி இருப்பாள் ,
ஆதவா said…
அபுஅஃப்ஸர் கூறியது...
ரொம்ப நல்லாருக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

முத்தத்தை வைத்தே மொத்த கதையையும் நகத்திருக்கீங்க‌


மிக்க நன்றி அபு!!... ஒவ்வொருவருக்கும் முத்தம்தானே மொத்தமும்!!!!
ஆதவா said…
கமல் கூறியது...
ஆரம்பமே அணிகள் கலந்து சொல்லாடல்கள் நிறைந்து சிதறி விழுகின்றது..........மிகுதி படித்து முடித்த பிறகு.........

படியுங்கோ படியுங்கோ.....  நன்றி கமல்!!!
ஆதவா said…
அன்புமணி கூறியது...
//அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்... //
நல்லாத்தானே போயிகிட்டிருந்திச்சு... அப்பறம் ஏன் இந்த பிரேக்? என்ன சொல்லியிருப்பாள்? சரி, அதை விடுங்க... கதைகளுக்கு நடுவில அடைப்புக்குறிக்குள்ளே... அட அட... மிக நன்று.(சூப்பர் திமிழில்)

அன்பு... ... என்னன்னுதான் கண்டுபிடியுங்களேன்..... .... உண்மையிலேயே அந்த அடைப்புக்குறிக்குள்ள வேற மேட்டர்கள்தான் இருந்தது.... கொஞ்சம் எடிட் பண்ணிட்டேன்!!!!ஹி ஹ் இ...
ஆதவா said…
அபுஅஃப்ஸர் கூறியது...
அழகை வர்ணிப்பதில் கூட உங்களின் லொள்ளுகள் இடம்பெற்றது இந்த கதையோட்டத்தை மேலும் மெருகூட்டுகிறது

கமல் கூறியது...
உயர்வு நவிற்சி அணி உணர்வுகளுக்கு அழகு சேர்க்கிறது போலும்???

நன்றி நண்பர்களே!!!....  ஏதோ நம்மளால முடிஞ்சது!!! ஹி ஹி ஹி
ஆதவா said…
Rajeswari கூறியது...
வர்ணனை அருமை
சும்மாவா சொன்னார்கள் " முதல் காதலையும் முதல் முத்தையும் மறக்க முடியாதென்று"
சரி ,நான் சொல்லவா ஜெசிக்கா அவனிடம் என்ன சொல்லியிருப்பாள் என்று ..
"எழுந்திரிடா ,நான் ஜெசிக்கா வந்திருக்கேன்" ன்னு சொல்லி இருப்பாள் ,


ஹா ஹா.....  அப்படியும் ஏதாச்சும் சொல்லியிருக்கக் கூடும்..>!!! நன்றி சகோதரி!!!!  எனது பதிலை இறுதியில் தருகிறேன்...
kuma36 said…
//ஆதவனும் (அட நானில்லைங்க) அவன் காதலியும் முத்தமிடும் அந்தி நேரம். அந்த முத்தத்தில் விளைந்த சத்தங்கள் இடியாக ஒலிக்க, கண்கள் மின்னல் பார்வைகளை ஆதவன் வீச, சூழ்ந்து மறைத்துக் கொண்டிருந்த மேக மாமாக்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு காதல் அரங்கேறுவதை கண்கொண்டு பார்த்து சிரிக்கிறது பூமி, அந்த பூமியில் ஒரு புழுவாக நெண்டிக் கொண்டிருக்கும் பல உயிர்களில் ஆறறிவு உயிரனமாக கதிரவன் இருந்தான்..///

ஆரம்பமே அட்டகாசம்!! தூள்
kuma36 said…
ஒரு முத்ததை வைத்து இவ்வளவா ம்ம்ம்ம் சூப்பர் !!!!!
kuma36 said…
அவன் காதில் ஒன்று சொன்னாள்... உடனே எழுந்துவிட்டான்....

அப்படி என்ன சொல்லியிருப்பாள்??

என்ன சொல்லியிருப்பா எழுந்திருடா தூங்க மூஞ்சி அப்படினு சொல்லிருப்பாலே? ஒரு வேளை அவள் இந்த கால பெண்ணாக இல்லாமல் அந்த கால பெண்ணாக இருந்தால் என்ன சொல்லிருப்பாள் கதிர் கதிர் என்னை மன்னித்துடுஙக கதிர் உங்கள புரிந்து கொள்ளாமல் இருந்திட்டேன் என்ன உங்களுக்கு இப்போ முத்தம் தானே வேண்டும் இதை நம்ம திருமணத்திற்க்கு பிறகு ஒன்றல்ல நெறையவே தாறேனேனு சொல்லிருப்பாளோ?
ராம்.CM said…
ரொம்ப நல்லாருக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ஆதவா said…
நன்றி கலை... நீங்கள் சொன்னதும் ரசிக்கும்படி இருந்தது..

நன்றி ராம்.CM (CM னா சீஃப் மினிஸ்டரா??)
ஆதவா!

ஏழு கடல் தாண்டி, எரி மலைக்குள் புகுந்து அங்கு ஒரு வண்டிற்குள் இருக்கும் மந்திரவாதியின் உயிரைத் தேடிச் செல்லும் இராஜகுமாரன் முயற்சிகள் போலிருந்தன. முதல் முத்தத்தில் உங்கள் கற்பனையும், நடையும் மயங்கிப் போய் இருக்கின்றன. தமிழ்ச்செல்வன் எழுதிய முதல் முத்தம் என்னும் சிறுகதையை முடிந்தால் படியுங்கள்.
ஆதவா.. கதையிலும் கவிதையின் தாக்கம் தூக்கல்.. எல்லா வர்ணனையும் அருமை.. கடைசியில அவ என்னதான் சொன்னா?
Anonymous said…
ரொம்ப நல்லாருக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
ஆதவா said…
நன்றி மாதவராஜ்... நன்றி கார்த்திகைப் பாண்டியன்... சும்மா குறும்பாக எழுதியது இக்கதை!!!!

அவ கடைசியில என்ன சொன்னா???

அதை நீங்க கண்டு பிடிக்கணும்!!!ஹ் ஹஹ
ஆதவா said…
கடையம் ஆனந்த் கூறியது...

ரொம்ப நல்லாருக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

ஆஹா... முதல் வருகைக்கு நன்றி ஆனந்த்.... தொடர்ந்து வாங்க..
ஹேமா said…
ஆதவா,கதை பதிவாக்கி ஒரு நாள் ஆச்சு.யாராச்சும் அலுவலகம் பக்கம் வந்தாங்களா?எதுக்கும் பாதுகாப்போட இருங்க கொஞ்சம்.நான் எப்பவும் லேட் தான்.ஆமா...முன்னுக்கு வந்தாலும்....எதுக்கு வேணாம்.
ஹேமா said…
காதல் செய்யும் பாட்டைப் பாருங்கள். நன்றாக இருந்த கதிரவன்(ஆதவா) இப்படி ஆகிவிட்டானே!

நேற்று "குழந்தைகளின் உலகம்"பதிவு இடும் வரை நல்லாத்தானே இருந்தான்.


"ஜெஸிகாவின் முதல் முத்தம்"
முத்தத்தால் நனைக்கப்பட்ட முழுநீள வர்ணனைச் சித்திரம்.
ஹேமா said…
ஜெஸ்ஸிகா என்ன சொல்லியிருப்பான்னா...டேய் முட்டாள் எழும்படா.இல்லாட்டி பக்கத்தில-கொஞ்சம் தூரத்தில ஆதவா பாத்துக்கொண்டிருக்கிறான்.
அவனுக்கு....!
FunScribbler said…
//அழகை வர்ணிப்பதில் நீங்கள்..? எப்படி சொல்றதுனு தெரியலே தல‌

கலக்கிட்டீங்க.. ஆனா என்ன சொல்ல வார்ரீங்கனுதான் தெரியலே//

ரீப்பீட்டு!!!!!
பாரதியையும்,வான்காவேயையும்
படம்பிடிதானே
பூலோக கவியாக வலம் வந்தானே
வழக்கொழிந்ததை
வளமபெறசெய்தானே
குழந்தை உலகயறிந்து‍ இருந்தவரை!
முத்ததில் மயங்க வைத்த ‍‍ஜெஸிகா
சந்திரன் வந்திருக்கிறேன்
தட்டி எமுப்பிடு
தமிழ்க்கு ஆற்றும் சேவை
பல உண்டு அவர்க்கு
//கதையைப் படித்தபின் என் அலுவலகத்திற்கு ஆட்டோ சகிதம் ஆட்களை அனுப்பப் போகிறீர்கள்...//

ச்சே.. ச்சே.. வேனில் ரெடியாக சொல்லி இருக்கிறேன்.
ஆதவா said…
ஆதவா,கதை பதிவாக்கி ஒரு நாள் ஆச்சு.யாராச்சும் அலுவலகம் பக்கம் வந்தாங்களா?

வந்தாலும் ஜெஸிக்கா கூட இருக்கிறாள்ல ... சமாளிப்போம்ல.......

"ஜெஸிகாவின் முதல் முத்தம்"
முத்தத்தால் நனைக்கப்பட்ட முழுநீள வர்ணனைச் சித்திரம்.


மிக்க நன்றி சகோதரி..
ஆதவா said…
Thamizhmaangani கூறியது...
//அழகை வர்ணிப்பதில் நீங்கள்..? எப்படி சொல்றதுனு தெரியலே தல‌
கலக்கிட்டீங்க.. ஆனா என்ன சொல்ல வார்ரீங்கனுதான் தெரியலே//
ரீப்பீட்டு!!!!!



முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி தமிழ்மாங்கனி
ஆதவா said…
சொல்லரசன் கூறியது...
//கதையைப் படித்தபின் என் அலுவலகத்திற்கு ஆட்டோ சகிதம் ஆட்களை அனுப்பப் போகிறீர்கள்...//

ச்சே.. ச்சே.. வேனில் ரெடியாக சொல்லி இருக்கிறேன்.


நன்றி சொல்லரசன்.... (வேன் அனுப்பறதுக்கு இல்லை. ஹி ஹி )
ராம்.CM said…
இராமச்சந்திரமூர்த்தி என்பதுதான் இராம்.CM.மாறி விட்டது.
இவளிடம். ஒவ்வொரு முடியையும் கையில் எடுத்துக் கொண்டு ஆனாலப்பட்ட ஆலமரத்தையே சாய்க்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். //

இது ரொம்ப ஓவரா இல்லை???
பொதுவாக கழுத்தை சங்குக்கு ஒப்பிடுவார்கள். நான் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறேன். தண்ணீர் குடத்தின் விளிம்பை கவிழ்த்துப் போட்ட மாதிரி இருக்கும். கழுத்தில் அவ்வப்போது நரம்புகள் எட்டிப்பார்க்கும்.. அப்படியே இறங்கி வந்தால்........ (வேண்டாமய்யா பொதுமாத்து!! இத்தோட நிறுத்திக்கிறேன்.)//


கப்டன் மகள் படத்தில் வந்த ‘’ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது வர்ணனை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
கதிரவன் தெளிவான நிலைக்கு வந்த பின் ரொம்பவே வருத்தப்பட்டான்... பாழாய்ப் போன மன்மதனும் ரதியும் நம்மை மயக்கிவிட்டார்களே ! இதனால் நம் உதடுக்கு வரவேண்டிய முத்தம் காற்றில் மிதக்கிறதே என்று ரொம்பவே வருத்தப்பட்டான்... முத்தக் கறை காற்றில் மிதந்துகொண்டுதான் இருந்தது.. கரையாமல். //

உண்மையாவா?? ஏனுங்க நீங்கள் எட்டிப் பிடிக்க மாட்டீங்களா??
நண்பா....எழுத்து விதமும். சொல்லாடல்களும், கதையை நகர்த்திய விதமும் அருமை...சுவாரசியமாகக் கதையைக் கொண்டு வந்து விட்டுக் கடைசியில் கேள்வி கேட்டுச் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்...இது தேர்ந்த ஒரு கற்பனா வாதியின் எழுத்து நடைக்குச் சான்று..


இன்னும் இன்னும் வித்தியாசமான கோலத்தில் தங்களிடமிருந்து படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்...!

தொடருங்கள்...
Anonymous said…
அன்பின் ஆதவா,

வர்ணனைகள் அதிர வைக்கின்றன.

சலிக்காமல் வாசிக்க வைத்துவிட்டீர்கள். நகைச்சுவையும் தந்திருக்கிறீர்கள்.

தொடருங்க...

அன்புடன்
Anonymous said…
ஆதவா,கதை பதிவாக்கி ஒரு நாள் ஆச்சு.யாராச்சும் அலுவலகம் பக்கம் வந்தாங்களா?எதுக்கும் பாதுகாப்போட இருங்க கொஞ்சம்.நான் எப்பவும் லேட் தான்///////
அக்கா நானும் லேட்தான்...
Anonymous said…
கதை வர்னணை சூப்பர்.... (முத்தம்.. முத்தம்.. ம்ஹீம்... கொடுத்து வைச்சவன் ஆதவன் ( நானும் உங்களை சொல்லை)
ஆதவா said…
நன்றி கமல்.. ஒவ்வொரு அங்குலமாய் ரசித்திருக்கிறீர்கள்.... மிக்க நன்றி

சூர்யா ஜி!!!! மிக்க நன்றி!!!!
ஆதவா said…
கவின் கூறியது...
கதை வர்னணை சூப்பர்.... (முத்தம்.. முத்தம்.. ம்ஹீம்... கொடுத்து வைச்சவன் ஆதவன் ( நானும் உங்களை சொல்லை)

யாருடா அது!! நம்மகூட படிக்கிறதுன்னு பார்த்தா.... அட நம்ம கவின்!!!! நன்றி தல....
குடிக்க குவாட்டரும், தொட்டுக்க பிரயாணி இருக்குன்னு சொல்லி இருப்பா
\\ஹேமா கூறியது...

ஜெஸ்ஸிகா என்ன சொல்லியிருப்பான்னா...டேய் முட்டாள் எழும்படா.இல்லாட்டி பக்கத்தில-கொஞ்சம் தூரத்தில ஆதவா பாத்துக்கொண்டிருக்கிறான்.
அவனுக்கு....!\\

ஹா ஹா ஹா
கதையைப் படித்தபின் என் அலுவலகத்திற்கு ஆட்டோ சகிதம் ஆட்களை அனுப்பப் போகிறீர்கள்... !!! சகிப்புத் தன்மையோடு படியுங்கள். படித்து முடித்தபின் அடச்சே! இதெல்லாம் ஒரு கதையா என்று சொல்லக்கூடாது ஆமாம்... உங்களை நம்பிதான் எழுதியிருக்கேன்.\\

இத படிச்ச உடனே பாஷா அண்ணாவுக்கு போன் போட்டாச்சு
\\கதை என்ற பெயரில் நான் இட்ட விதையைப் பார்த்துவிட்டு, பதை பதைக்க ஓடிவந்து என்னை உதைக்கப் போகிறீர்கள்... என் சதை கிழியப் போகிறது.. எதையும் செய்யும் முன் யோசித்துவிடுங்கள்..\\

இது அழகாயிருக்கா ...
ஆதவா said…
ஜமால்.... போன் போட்டாலும் சரி, அருவா தூக்கினாலும் சரி,


பிரச்சனையே இல்ல.... ஜெஸிகா இருக்கிற வரைக்கும்..

நன்றி ஜமால்...... தொடர்ந்து வாருங்கள்
ஆதவா said…
குடிக்க குவாட்டரும், தொட்டுக்க பிரயாணி இருக்குன்னு சொல்லி இருப்பா////


ஹா ஹா...... நசரேயன்.... பிரியாணிய எப்படி தொடமுடியும்???

ஹி ஹிஹி.