வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!

வேத்தியர் எத்தனை நாள் என் மேல் கோபமாக இருந்தாரோ தெரியவில்லை. இப்படி கோர்த்துவிட்டுட்டு போய்விட்டார்...
சரி முயற்சி செய்வோமே!!!

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!!!!

அகண்டெடுத்த தமிழகழியில் உலாத்தும் கெண்டை நான். வேத்திய வலைஞன் ஆற்றிலிட்ட தூண்டிலில் சிக்கி, ஆற்றினை விட்டகல்ந்தால் தமிழெனும் சாகரம் கைநீட்டி வரவேற்கிறது. வேத்தியருக்கு நன்றி

நெடுநாட்களுக்கு முன்னர் வேற்றொரு பெயரில் நான் எழுதிய காதல் பா'வை உங்களிடம் சொல்லிவிட்டு தொடர்கிறேன்..

ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.


முதலில் வழக்கொழிந்த சொற்கள் என்பது.... வழக்கில் அல்லாதன யாவும் வழக்கொழிந்தன எனலாம்.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எழுத்தாளுமை என்பது அவசியம். எழுத்தாளுமைக்கு அவசியமானது மொழியை ஆழ்ந்து உணர்ந்து புரிதல். மொழி பிறக்குமிடத்து உட்துளைந்து மூச்சிறங்கக் கிறங்கல். தன்னிகர் எவருமில்லை எனும் இறுமாப்பில் உலவுதல். இவை யாவும் ஒருசேர அமையப்பெற்றவனுக்கு அம்மொழி ஒரு குழந்தையாக மடியில் தவழும்.

முதன் முதலில் நாம் பார்க்கவிருப்பது :

பாங்கி - சிநேகிதி சகி, தோழி.. பாங்கியர் என்பது பன்மை. இதை பாரதி சிற்சில இடங்களில் சொந்தப்படுத்தியிருப்பார்.

தகழி - அகல், விளக்கு..

சகடம் - சக்கரம்... சென்ற மார்கழியில் குளிரோடு குளிராக, ஆண்டாளை லவ்விக் கொண்டிருந்த பொழுது அவள் காட்டிய வார்த்தை... 'கள்ளச் சகடம்'

திகழ்ச்சி - தோற்றம், அல்லது பிரகாசம், அல்லது விளங்குதல். 'நீ ராஜாவாக திகழ்கிறாய்'

நெக்கு - உருகு.... நெக்கு எனும் சொல், நெகிழ்விலிருந்து பிறக்கிறது.. அல்லது இரு சொற்களும் சகோதர் சொற்களாக இருக்கலாம். நெகிழ்வு - மலர்ச்சி


பிணக்கு - சண்டை

மிடிமை - தரித்திரம் - பாரதியின் ' மிடிமையும் அச்சமும்....

இதே பாட்டில்.. மேவி - பரவி - அல்லது கலந்து...

புனைவு -... அலங்கரிப்பு!!! புனை என்றால், அலங்காரம் செய் என்று அர்த்தம்.. புனைவு என்பது ஆக்கம் அதாவது தம்மால் உருவாகும் ஒரு பொருள் அல்லது படைப்பு என்றும் சொல்வார்கள்.

முறுவல் - சிரிப்பு ... புன்முறுவல், புன்சிரிப்பு!!

நிந்தனை - இகழ்ந்தல்,

மாட்சிமை - அழகு, மாணம் உம் அழகுதான்..

அரவம் - ஒலி.. பாம்பு

போதுமய்யா போதும் என்று பேரரவம் ஓதுபவர்க்கு...... இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.. மேற்கண்ட வெண்பாவுக்கு விளக்கம் கீழே!!!


ஒண்மை = அழகு

ஒண்மை உயர் = அழகில் உயர்ந்த
வெண் முடியாள் = வெண்மை நிற (நரைத்த) முடிகொண்ட கிழவி
ஒருமுக = ஒரேமுகமாய்
நுண்துளை = நுண்ணிய துளையால்
நூற்மனதால் = நூற்ற மனதால்.. (நூற்ற என்பதற்கு சரியான வழக்கு தமிழ் தெரியவில்லை செய்த என்று கூட சொல்லலாம். )
நூற்ற = செய்த (நூல் நூற்றல் அதாவது கட்டுதல் என்பார்கள்.)
புலமிகு = புலமை மிகுந்த
வண்குழை = வண்மை மிகுந்த
வாயெழுத்து = வாய் எழுதும் எழுத்து = பேச்சு
வெண்ணிற மீனுறங்கும் = வெண்ணிறமாய் சுடரும் மீன்கள் உறங்கும்
விண்ணை - வானை
விறைக்காதோ சொல்...... விறைச்சுடாதா சொல்லுங்க..

அதெல்லாம் சரிதாங்க, அதென்ன வண்மை? விளக்கறேனே!!!

வண்ணம் - அழகு
வண்ணம் ஒரு பண்பு. அதிலும் எவ்வண்ணமும் அழகு நிறைந்த பண்புகள்.
வண்ணம் நிறைந்த பூக்கள், வண்ணத்துப் பூச்சிகள்.. நிறமற்றவை என்று எதுவும் சொல்லவியலாது. ஏனெனில் நிறமற்றவைகளும் ஒரு நிறம்தானே!

அழகு..

வண்ணம் = திருமுகம்.
வண்ணன் = அழகு நிறைந்தவன்.

வண்மையும் அழகென்றே பொருளாகும்.

இன்னொன்று,

வன்மை = கடுமை,
வன்சொல் = கடுஞ்சொல்....

இது எதிர்மறையாக அல்லாமல், இப்படிச் சொல்லலாம்..

வன்மை = உறுதி
வன்சொல் = உறுதியான சொல்..

இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹேமாவையும், கார்த்திகைப் பாண்டியரையும் தொடர் எழுதச் சொல்லியிருப்பதால் தற்சமயம்

அபுவும், செய்யதும் ஏற்கனவே தேவாவின் பிடியில் இருப்பதால்

புதியவன்,
மாதவராஜ்

இருவரையும் அழைக்கிறேனுங்கோ!!!

Comments

ஹேமா said…
நான்தான் முதலாவதா !!!!!!
நல்ல தமிழில் எழுதுகின்றீர்கள்.... நிறைய வார்த்தைகளை புதிதாக பார்க்கின்றேன்.. நன்றி
ஹேமா said…
//இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹேமாவையும், கார்த்திகைப் பாண்டியரையும் தொடர் எழுதச் சொல்லியிருப்பதால்//

ஆதவா,கொஞ்சம் நல்ல மனசோட கருணை காட்டிட்டீங்க போல!ஏற்கனவே நான் தொடர் போட்டாச்சு.(இன்னைக்கு காலேல தேவாவும் கேட்டு இப்பிடியே சொல்லி தப்பிக்கிட்டேன்.)புதுசா ஒரு தொடர்ல மாட்டி விட்டிருக்கீங்க.இன்னும் முழிச்சுக் கிட்டே இருக்கேன்.எனக்குப் பிடிச்சவங்க யார்ன்னு இப்போதான் ஒரே குழப்பம்.

உங்க "தல"கள் கமல்,கவின் தப்பிக்கிட்டே இருக்காங்க.மாட்டி விடலாம்தானே!
ஹேமா said…
ஆதவா,நிறையத் தெரியாத தமிழ்ச் சொற்கள்.பாவனையில் இருந்த சொற்களா?திரும்பவும் பார்த்தேன்.எல்லாம் புதுசா இருக்கு.
படித்திருக்கிறேன்.பாவிப்புக்கு இருந்ததில்லை.
முறுவல் வழக்கொழிந்த சொற்களா?
வென்பா அருமை,விளக்க உரையும் நன்றாக இருந்தது.வாழ்த்துகள்.
Anonymous said…
அத்தனையும் பயன் படுத்தியிருக்காத சொற்களே... புதுசா கேள்விபடுறன்.
Anonymous said…
ஹேமா சொன்னது…
//இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹேமாவையும், கார்த்திகைப் பாண்டியரையும் தொடர் எழுதச் சொல்லியிருப்பதால்//

ஆதவா,கொஞ்சம் நல்ல மனசோட கருணை காட்டிட்டீங்க போல!ஏற்கனவே நான் தொடர் போட்டாச்சு.(இன்னைக்கு காலேல தேவாவும் கேட்டு இப்பிடியே சொல்லி தப்பிக்கிட்டேன்.)புதுசா ஒரு தொடர்ல மாட்டி விட்டிருக்கீங்க.இன்னும் முழிச்சுக் கிட்டே இருக்கேன்.எனக்குப் பிடிச்சவங்க யார்ன்னு இப்போதான் ஒரே குழப்பம்.

உங்க "தல"கள் கமல்,கவின் தப்பிக்கிட்டே இருக்காங்க.மாட்டி விடலாம்தானே
***********
ம்ம்..ரொம்பதான் பாசம்... தேவசார் மாட்டிவிட்டதுகே.. வீட்டு விட்டத்தை பார்த்திட்டு இருக்கன்...
Anonymous said…
வெண்பா=விளக்கம்... :)
Anonymous said…
ஹேமா கூறியது...
நான்தான் முதலாவதா !!!!!!

February 24, 2009 11:51 PM
********
பரிசு ஒன்னும் கொடுக்கலையா??? ஆதவா???
தமிழ் said…
முதலில் பதிவிற்கு நன்றி நண்பரே

அதிலும் அருமையான பதிவு

அன்புடன்
திகழ்
தமிழ் said…
/எத்தனை நாள் என் மேல் கோபமாக இருந்தாரோ /

கோபமில்லை நண்பரே
தமிழ் மேலுள்ள காதலைச் சொல்ல சொல்லிருக்கிறார்

அவ்வளவு தான்
தமிழ் said…
/அகண்டெடுத்த தமிழகழியில் உலாத்தும் கெண்டை நான். வேத்திய வலைஞன் ஆற்றிலிட்ட தூண்டிலில் சிக்கி, ஆற்றினை விட்டகல்ந்தால் தமிழெனும் சாகரம் கைநீட்டி வரவேற்கிறது./

ஆரம்பமே அருமை
தமிழ் said…
/ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்./

வெண்பாவும் விளக்கம் அருமை
ஆதவா said…
நன்றி சகோதரி ஹேமா!!! முத்லாவது பின்னூட்டம் கொடுத்துவிட்டதால்.... (பரிசெல்லாம் கிடையாதுங்க) அடுத்த தொடர் எழுத உங்களை அழைக்கிறேன் (ஏண்டா கொடுத்தோம்னு ஆயிடும்!!!ஹி ஹி)
ஆதவா said…
மிக்க நன்றி ஞான சேகரன்.

///உங்க "தல"கள் கமல்,கவின் தப்பிக்கிட்டே இருக்காங்க.மாட்டி விடலாம்தானே!////

வாய்ப்பு கிடைக்கும்போது அதையும் செஞ்சிடுவோம்!!!
தமிழ் said…
பாங்கி,தகழி ,சகடம்,நெக்கு,
பிணக்கு,மிடிமை,மேவி,புனைவு,
முறுவல்,தடாகம்,நிந்தனை,மாட்சிமை,
அரவம்

இத்தனைச் சொற்களை மீண்டும்
நினைவுப் படுத்தமைக்கு நன்றி நண்பரே
தமிழ் said…
/திகழ்ச்சி - தோற்றம், அல்லது பிரகாசம், அல்லது விளங்குதல். 'நீ ராஜாவாக திகழ்கிறாய்'/

என் பெயருக்கு விளக்கம் கொடுத்தார் போல் இருக்கிறது

வாழ்த்துகள்
தமிழ் said…
மீண்டும் ஒரு முறை

வாழ்த்துகள்


அன்புடன்
திகழ்
ஆதவா said…
////முறுவல் வழக்கொழிந்த சொற்களா?///

எனக்கு பழைய சொற்கள் சில தெரியும் நண்பா..... வழக்கொழிந்ததா வழக்கில் இருந்ததா என்ற ஆராய்வெல்லாம் என்னிடமில்லை. ஏனெனில் அவ்வகை ஞானியாகவும் நானில்லை.
பிணக்கு தவிர மற்ற அனைத்து வார்த்தைகளுமே புதியவை.

இங்கேயும் ஒரு புலவர் இருக்கிறார் என்பது எனக்கு உங்கள் காதல் பா விலிருந்து புரிகிறது.
நானும் இப்படித்தான் பள்ளிக்காலங்களில் செய்யுள் இயற்றி அது யாருக்கும் புரியாமல் போகவே, அதை படிமக்கவிதைகளாக மாற்றினேன்.( அதுவும் யாருக்கும் புரியல )

தொடர்ந்து இதுபோன்று பாக்களை இயற்றுங்கள்.

வாழ்த்துக்கள் ஆதவா !!!!!!!!!
ஆதவா said…
கவின் கூறியது...
////

/// தேவசார் மாட்டிவிட்டதுகே.. வீட்டு விட்டத்தை பார்த்திட்டு இருக்கன்...///

இன்னும் விட்டத்தையே பார்த்துட்டு இருந்தா எப்படி???

நன்றி தல.. அடுத்த குறி உங்களுக்குத்தான்!!!
//அகண்டெடுத்த தமிழகழியில் உலாத்தும் கெண்டை நான். வேத்திய வலைஞன் ஆற்றிலிட்ட தூண்டிலில் சிக்கி, ஆற்றினை விட்டகல்ந்தால் தமிழெனும் சாகரம் கைநீட்டி வரவேற்கிறது. //

இதுவே ஒரு செய்யுள் போலத்தானிருக்கிறது.
ஆதவா said…
மிக்க நன்றி திகழ்....

உண்மையிலேயே திகழ்மிளிர் எனும் உங்கள் பெயரை நினைத்துத்தான் திகழ்ச்சி என்ற சொல்லைக் கொடுத்தேன்..

உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர் என்னைப் போன்ற சிறியவர்களுக்குப் பின்னூக்கம் தருவதே எமக்குப் பெருமைதான்!!!

மிக்க நன்றீ!!!
//நுண்துளை//

இந்த ஒரு சொல் இப்போது வழக்குக்கு மீண்டும் வந்திருக்கிறது.

நுண்துளை அறுவை சிகிச்சை.

Laproscopic Surgery.
ஆதவா said…
அ.மு.செய்யது கூறியது...

பிணக்கு தவிர மற்ற அனைத்து வார்த்தைகளுமே புதியவை.

இங்கேயும் ஒரு புலவர் இருக்கிறார் என்பது எனக்கு உங்கள் காதல் பா விலிருந்து புரிகிறது.
நானும் இப்படித்தான் பள்ளிக்காலங்களில் செய்யுள் இயற்றி அது யாருக்கும் புரியாமல் போகவே, அதை படிமக்கவிதைகளாக மாற்றினேன்.( அதுவும் யாருக்கும் புரியல )

தொடர்ந்து இதுபோன்று பாக்களை இயற்றுங்கள்.

வாழ்த்துக்கள் ஆதவா !!!!!!!!!


எனக்கும் சிறுவயதிலிருந்து பாக்கள் எழுதவேண்டும் என்ற ஆவல்தான் மேற்கண்ட வெண்பா... இன்னும் நிறைய எழுதியிருக்கிறேன்.. தளத்தில் கொடுத்தால், எல்லோரும் மண்டையைப் பிய்க்கவேண்டும்!!!

நன்றி செய்யது!!! உங்களை மாட்டிவிடலாம்னு நினைச்சேன்... நீங்க ஏற்கனவே மாட்டிக்கிட்டதால, ஆளை மாத்திப்புட்டேங்க!!!
ஆதவா said…
அ.மு.செய்யது கூறியது...
//நுண்துளை//
இந்த ஒரு சொல் இப்போது வழக்குக்கு மீண்டும் வந்திருக்கிறது.
நுண்துளை அறுவை சிகிச்சை.
Laproscopic Surgery.

ம்ம்ம்ம்......  எடுத்துக் காட்டியமைக்கு நன்றி தல....
தமிழ் said…
/உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர் என்னைப் போன்ற சிறியவர்களுக்குப் பின்னூக்கம் தருவதே எமக்குப் பெருமைதான்!!!

மிக்க நன்றீ!!!/

இது தான் வேண்டாம் என்பது
நண்பரே

நடக்கட்டும்
ஆதவா said…
///கவின் கூறியது...
ஹேமா கூறியது...
நான்தான் முதலாவதா !!!!!!


பரிசு ஒன்னும் கொடுக்கலையா??? ஆதவா???///

கொடுத்திடலாம் கவின்... பரிசு இல்லை... எங்கயாச்சும் மாட்டிவிடலாம்... ஹ ஹா ஹா..
ஆதவா!

நேற்று பின்னரவில்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.(தூக்கத்தில் உங்களை எழுப்ப மனம் வரவில்லை)

நண்பரே!
முதலில் தொடர் குறித்து சொல்லுங்களேன். வழக்கொழிந்த தமிழ் சொற்கள் சொல்ல வேண்டுமா?
//அகண்டெடுத்த தமிழகழியில் உலாத்தும் கெண்டை நான். வேத்திய வலைஞன் ஆற்றிலிட்ட தூண்டிலில் சிக்கி, ஆற்றினை விட்டகல்ந்தால் தமிழெனும் சாகரம் கைநீட்டி வரவேற்கிறது. //

அறிமுகமே அழகு ஆதவன்...
//ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.//

காதல் பா...ரொம்ப நல்லா இருக்கு...
வழக்கொழிந்த சொற்களின் தொகுப்பு அருமை...எல்லாம் முன்பு படித்த நினைவிருக்கிறது...
வந்துட்டோம்ல...
வேத்தியர் எத்தனை நாள் என் மேல் கோபமாக இருந்தாரோ தெரியவில்லை.//

:-)))))
//அபுவும், செய்யதும் ஏற்கனவே தேவாவின் பிடியில் இருப்பதால்

புதியவன்,
மாதவராஜ்

இருவரையும் அழைக்கிறேனுங்கோ!!!//

நான் ஏற்கனவே இந்த தொடர் பதிவில் மாட்டி வெளியே வந்து விட்டேன்...

http://puthiyavanonline.blogspot.com/2009/02/blog-post_10.html
நண்பரே...
'தடாகம்' எனும் சொல்லை நானும் எனது பதிவில் கூறியிருந்தேனே...
அது விசயமல்ல,
திரு.கோவி.கண்ணன் அவர்கள் எனது பதிவுக்கு இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி இதோ :
"கோவி.கண்ணன் said...
24 February 2009 18:42

போஜனம், தடாகம், காதம், துமிதம் சமஸ்டி - இவையெல்லாம் வடமொழிச் சொற்கள்."

ஆக, தடாகம் தமிழ் சொல் இல்லையாம்...
திருத்திக் கொள்க...
மிகுதி எல்லாம் அருமை ஆதவா...
வாழ்த்துகள்...
நல்ல பதிவு,
இன்னும் நிறைய தமிழ் சொற்க்களை
அறியதாருங்கள்.
ஆதவா said…
மாதவராஜ் கூறியது...
ஆதவா!
முதலில் தொடர் குறித்து சொல்லுங்களேன். வழக்கொழிந்த தமிழ் சொற்கள் சொல்ல வேண்டுமா?

சொற்கள் ஒவ்வொன்றாக மருவி, அருகி வரும் வேளையில் அதைப் புதுக்கித் தருவது கவிஞர்களின் ஓர் கடமை.

படைப்புகள் எழுதப்படுவது எதற்கு? மக்கள் மறந்துபோன அல்லது அறியாமல் போன விஷயங்களை வெளிச்சம் போடுவதற்காகத்தானே..  படைப்புகள் சொற்கள் இன்றி பிறக்க வாய்ப்பில்லல.. சொற்கள் மொழியின் ஆதாரம்.

தமிழுக்கு நிச்சயம் இச்சேவை தேவை!!!

நன்றி நண்பரே!
ஆதவா said…
புதியவன் கூறியது...
காதல் பா...ரொம்ப நல்லா இருக்கு...

மிக்க நன்றி புதியவன். நேரம் கிடைத்த பிறகே மெதுவாக செய்யுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.
ஆதவா said…
வேத்தியன் கூறியது...
வந்துட்டோம்ல...

வந்துட்டான்யா.... வந்துட்டான்யா!!! (சும்மா.. வடிவேலு மாதிரி சொல்லிப் பார்த்தேன்!! கோச்சுக்காதீங்க.)
எப்படியோ உங்களுக்கு இப்ப திருப்திதானே!!!! வ்வ்..........
அதவா! பிரமிப்பாய் இருக்கிறது...முதலில் என் வாழ்த்துக்கள்!அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். அதிலும் உங்களோட மரபு கவிதை ... நீங்க அர்த்தம் சொல்லலேன்னா எனக்கு புரிந்திருக்காது. நமக்கு அந்தளவுக்கு ஆழ்ந்த ஞானமில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்!
ஆதவா said…
ஆ.முத்துராமலிங்கம் கூறியது...
நல்ல பதிவு,
இன்னும் நிறைய தமிழ் சொற்க்களை
அறியதாருங்கள்.


நன்றி முத்துராமலிங்கம் அவர்களே! வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நிச்சயம் தருகிறேன்...
ஆதவா said…
அன்புமணி கூறியது...
அதவா! பிரமிப்பாய் இருக்கிறது...முதலில் என் வாழ்த்துக்கள்!அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். அதிலும் உங்களோட மரபு கவிதை ... நீங்க அர்த்தம் சொல்லலேன்னா எனக்கு புரிந்திருக்காது. நமக்கு அந்தளவுக்கு ஆழ்ந்த ஞானமில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்!

ஆஹா..... நன்றி அன்புமணி!!! ஆழ்ந்த ஞானம் என்பது யாருக்கும் இல்லை... ஏதோ சில வார்த்தைகளைத் தெரிந்து எழுதிவிட்டால் மட்டும் எனக்குக் கிடைத்துவிடுவதுமில்லை.... நீங்க வெண்பா படிச்சீங்கன்னா நல்லா எழுதலாம்....

வெண்பா ரொம்ப ரொம்ப எளியது!! அவ்வளவே!!
புன்முறுவல்,முறுவலித்தாள் போன்ற சொற்கள் இன்றளவும் கதை,கவிதைகளில்,சொல் பயன்படுவதை பார்த்தால் உங்களிடையே கேட்டேன்.இது உங்களை சங்கடபடவைத்த‌து என்றால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்
என்னப்பா.. ஏதாவது தொடர் பதிவு வாரம் கொண்டாடுரோமா? நல்ல வேலை.. ஏற்கனவே நான் ரெண்டு பதிவு தொடர்ல போட .. இன்னொரு தரம் மாட்டாம தப்பிச்சுட்டேன்.. நல்ல பதிவு நண்பா..
பாத்தீங்களா தல நம்மள விடமாட்டீங்களே
வருவோம்லே!
ஹ்ஹ்ம் நிறைய சொல்லிருக்கீங்க‌
நன்றி அனைத்தையும் நினைவுப்படுத்தியதற்கு

எப்பவோ படித்த ஞாபகம்

இல்லேனா பாஸ் பண்ண முடியாதே
ஆதவா said…
சொல்லரசன் கூறியது...
புன்முறுவல்,முறுவலித்தாள் போன்ற சொற்கள் இன்றளவும் கதை,கவிதைகளில்,சொல் பயன்படுவதை பார்த்தால் உங்களிடையே கேட்டேன்.இது உங்களை சங்கடபடவைத்த‌து என்றால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்

சேசே!! அப்படியெல்லாம் இல்லை சொல்லரசன்... எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை...
ஆதவா said…
கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
என்னப்பா.. ஏதாவது தொடர் பதிவு வாரம் கொண்டாடுரோமா? நல்ல வேலை.. ஏற்கனவே நான் ரெண்டு பதிவு தொடர்ல போட .. இன்னொரு தரம் மாட்டாம தப்பிச்சுட்டேன்.. நல்ல பதிவு நண்பா..

நன்றி நண்பரே! எங்கெங்கயோ மாட்டிவிடறாங்க...   நானும் கொஞ்சம் கொஞ்சமா எஸ்கேப் ஆயிட்டு வாரேன்.... பார்போம்..

அபுஅஃப்ஸர் கூறியது...
பாத்தீங்களா தல நம்மள விடமாட்டீங்களே
வருவோம்லே!



வாங்க தல..!!!!! நன்றீ!!
ஆதவா,நிறையத் தெரியாத தமிழ்ச் சொற்கள்.பாவனையில் இருந்த சொற்களா?திரும்பவும் பார்த்தேன்.எல்லாம் புதுசா இருக்கு.
படித்திருக்கிறேன்//

நானும் சொல்லிக்கிறேன்
//நுண்துளை//

இந்த ஒரு சொல் இப்போது வழக்குக்கு மீண்டும் வந்திருக்கிறது.

நுண்துளை அறுவை சிகிச்சை///

ஆமாம் நண்பரே!
ஹேமா கூறியது...
//இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹேமாவையும், கார்த்திகைப் பாண்டியரையும் தொடர் எழுதச் சொல்லியிருப்பதால்//

ஆதவா,கொஞ்சம் நல்ல மனசோட கருணை காட்டிட்டீங்க போல!ஏற்கனவே நான் தொடர் போட்டாச்சு.(இன்னைக்கு காலேல தேவாவும் கேட்டு இப்பிடியே சொல்லி தப்பிக்கிட்டேன்.)புதுசா ஒரு தொடர்ல மாட்டி விட்டிருக்கீங்க.இன்னும் முழிச்சுக் கிட்டே இருக்கேன்.எனக்குப் பிடிச்சவங்க யார்ன்னு இப்போதான் ஒரே குழப்பம்.

உங்க "தல"கள் கமல்,கவின் தப்பிக்கிட்டே இருக்காங்க.மாட்டி விடலாம்தானே!//

ஏற்கனவே ஆளாளுக்கு மாட்டி விட்டுச் சந்தோசப்படுறாங்கள்?? அதுக்கை நீங்கள் வேறையா??
ஆதவா பதிவு புதுமை....சுருக்கமாய் இருந்தாலும் சுவையாக உள்ளது...

வெண்பா எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
அப்ப இனிமேல்க் கலக்கல் தான்?

தொடருங்கோ...........
ஹேமா கவிதை ரகுமானின் இசையை விட மிஞ்சிவிடும் போல இருக்கு:)))
ரகுமானின் விசிறியா நீங்களும்??? நல்லது தான் தொடருங்கோ...

கவிதை அவ்வப்போது ஏறி இறங்கியிருக்கிறது.. மற்றும் படி ரகுமானின் இசையைப் போல எல்லோருடனும் ஒத்துப் போகிறது....

வரிகள் சுவை கலந்தவையாக சிதறி விழுந்துள்ளன,
ஹேமாவிற்கு அனுப்பிய பின்னூட்டங்கள் தங்கள் தளத்தில் இடம்பெற்று விட்டன,..பொறுத்தருள்க...
ஆதவா said…
நன்றி தேவன், கமல்.... மற்று அனைத்து மக்களுக்கும்....
Unknown said…
அருமையான பதிவு நன்றி
Unknown said…
அருமையான பதிவு நன்றி
Unknown said…
This comment has been removed by the author.
Sivapalu.T said…
திருக்குறள் ஒண்மை என்பதற்கு அறிவுடமை என்னும் பொருளைத்தருகின்றது.
இங்கு தரப்பட்ட கவிதையில் ஒண்மை உயர் வெண்முடியாள் என்பதற்கு அழகு என்பது பொருத்தமானதா?
ஒண்மை ஔவையைக் குறிப்பிடும்போது அறிவாற்றல் மிக்க நரைமுடிகொண்டவர் என்பதுதானே பொருளாக முடியும்

844 திருக்குறளைப் பார்த்தால் அதில் அறிவாற்றல் மிக்கோம் யாம் என்னும் அகந்தை இருத்தல் மடமை என இடித்துரைக்கப்பட்டிருக்கின்றதே.

அன்புடன் த.சிவபாலு (கனடா)

This comment has been removed by the author.
நற்பதிவு! படித்தும் விளங்கிடா சில சொற்களை உணர இயன்றது! பணி சிறக்க வாழ்த்துக்கள்!