பூலோகக் காவியர்கள்
என்றோ ஒரு நாள்
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்
என் கண்களுக்குத் தெரிவது
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்
என்னைச் சுற்றி
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்
இந்த தெருவே என் வீடு
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை
நினைவுகளின் பிணைப்புகளினால்
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.
என் வீட்டில்
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை
பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?
Comments
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.
//
வார்த்தைச் செறிவு...அருமை...
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்//
பலூனைப் போல மனசும் உடைந்ததனைக் கவிதை உணர்த்துகிறது.
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.
என் வீட்டில்
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை//
நண்பா வாழ்க்கை என்ன இந்தளவிற்கு ஒரு பெண்ணினால் வேடிக்கை பார்க்குமளவிற்கு வீதிக்கு வந்து விட்டதா??
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்//
பாரதி தன்னைச் சுற்றி நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி நின்றவர்களைத் திட்டியது போல நீங்களும் யாரையோ திட்டுவது தெரிகிறது??
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?//
அழகான முடிவுரை...
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை//
சாத அறைனா....??? புரியலீங்க...
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை//
நிஜமாவா? மனதின் தாக்கமும். நிஜத்தின் பிரதிபலிப்பும் கவிதைக்கு இவவிடத்தில் அணி சேர்க்கின்றன.
//இந்த தெருவே என் வீடு
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை//
சாத அறைனா....??? புரியலீங்க...//
நண்பரே நான் நினைக்கிறேன். இங்கு ஆதவா யாருமற்றவராய் வீதியில் தனது வாழ்க்கையைக் கழிக்கும் ஒரு மனிதனைப் பற்றிச் சொல்லாமற் சொல்லுகிறார்/ பூடகாமாகச் சொல்லுகிறார் என்று??
ஆதவா தொடருக............. !
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்
//
கடைந்தெடுத்த கோர்வையான வார்த்தைகள்
மற்ற வரிகளில் புதைந்திருக்கும் ஆழம்,படிமம் கீழே குறிப்பிட்டுள்ள வரிகளை அந்நியப்படுத்துகிறதே !!!!!!
//என் கண்களுக்குத் தெரிவது
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்//
Looks like odd man out ??????? !!!
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்//
குழந்தையையும் ஐஸ் குச்சியையும் பார்த்தா அது தெரியாம வேற என்ன தெரியும் ???
சும்மா ஜோக்குக்கு சொன்னேன்..
அருமையான வரிகள்...
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்//
ஐயையோ...
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்
//
கரைந்த ஐஸ் குச்சியாய் வாழ்க்கை, பிரதிபலிப்பு உங்கள் வரிகளில்
"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு"ன்னு சும்மாவா பாடி வச்சாங்க...
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை//
ஸ்லம்டாக் படம் பார்த்த எஃப்பக்ட் வரிகளில்
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு? //
அருமையான வரிகள்...
ஆதவா தொடருக............. !//
கமல் !!!! நன்றி தங்கள் பதிலுரைக்கு...
எனக்கு கவிதையின் சாராம்சமும் உள்ளர்த்தமும் புரிகிறது.
"சாத அறை" என்ற ஒற்றை வார்த்தைக்கு மட்டும் யாரேனும் பொருள் கூறினால்
நன்று.
சாத அறை என்பது உணவுக் கூடமா ??
இல்லை 'சா' மரண அறையா ??
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை
//
சொல்ல வார்த்தையில்லை, மழலை இல்லா வீடு புல்வெளி இல்லா பூங்கா
கவிதை அதைவிட அருமை...
கலக்கல் ஆதவா...
வாழ்த்துகள்...
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?//
மற்றவர்களின் வசச்சொல் தாங்கமுடியா சோகம்,
பிரார்த்திக்கிறேன்
//நண்பரே நான் நினைக்கிறேன். இங்கு ஆதவா யாருமற்றவராய் வீதியில் தனது வாழ்க்கையைக் கழிக்கும் ஒரு மனிதனைப் பற்றிச் சொல்லாமற் சொல்லுகிறார்/ பூடகாமாகச் சொல்லுகிறார் என்று??
ஆதவா தொடருக............. !//
கமல் !!!! நன்றி தங்கள் பதிலுரைக்கு...
எனக்கு கவிதையின் சாராம்சமும் உள்ளர்த்தமும் புரிகிறது.
"சாத அறை" என்ற ஒற்றை வார்த்தைக்கு மட்டும் யாரேனும் பொருள் கூறினால்
நன்று.
சாத அறை என்பது உணவுக் கூடமா ??
இல்லை 'சா' மரண அறையா ??
//
அது உணவு கழிக்கும் அறை என்று பொருள் கூறலாம்
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.//
வார்த்தைகளை சூப்பரா கோர்த்திருக்கீங்க ஆதவா...
அருமையான வரிகள்...
ஆஹ்!!! அதுக்குள்ளாக இருபத்தி ஆறு ஊக்கங்களா???? மயங்கிவிட்டேன்!! (யாராச்சும் எழுப்பிவிடுங்க!!)
//
ஒரு கோலி சோடா பார்சல்...
இது ஒரு பைத்தியக்காரியின் கதை. "மனம் கோளாறுகள் நோண்ட...." அவள் மனநலக்குறைவால் குழந்தையாக இருக்கிறாள். அவளுக்குத் தெரிவதெல்லாம் குழந்தைகளும், அவர்கள் வைத்திருக்கும் விளையாட்டுப் பொருட்களும்....
வீடில்லாத அவளுக்கு, சாக்கடைதான் குளியலறை.... குப்பைத்தொட்டியில் விழும் சாதங்கள்தான் அவளின் உணவறை
செயற்கைத் தோல்கள் - ஆடைகள்
ஆடைகளைக் கிழிக்கிறாள்.. அங்கே குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் இருக்கிறார்கள்.
பெளர்ணமி- முழு நிலவு... அதாவது நிர்வாண நிலவு இப்பொழுது அந்தப் பெண்ணை பெளர்ணமியாக உருவகிக்கிறேன்
அவள் கிழிப்பதால் ஏற்படும் நிர்வாணத்தை முழுமையாக ரசிக்கிறார்கள்... பூலோகக் காவியர்கள்...
மேகங்களாக மறைத்து நின்ற அவளின் நிர்வாணத்தை போர்த்திவிட, கவலை எதற்கு இவர்களுக்கு??
நிற்க..
பூலோகக் காவியர்கள் - கவிஞர்களாக உருவகம்.. ஒரு பொருளை உருவகிக்கும்பொழுது, அதற்கு ஒப்ப எதிர் பொருளும் உருவகிக்க வேண்டும்.... பெளர்ணமியாக மனநிலை பாதிக்கப்பட்டவள், மேகங்களாக ஆடைகள், இவற்றைப் போர்த்திவிட கவிஞர்களாக காம வெறியர்கள்....
இது என் ஊரில் நான் பார்த்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது (ஆமாம்... அந்த பூலோகக்காவியர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்)
இக்கவிதை எழுதப்பட்டு இரண்டு வருடங்களாகிறது!!!!
மேலும் கவிதையில் குறையிருந்தால் சொல்லுங்கள்.. நான் என்றென்றும் தவறென நினைக்கமாட்டேன்....
அன்புடன்
ஆதவா
கோலி சோடா ஊற்றி என்னை எழுப்பிய செய்யது அவர்களுக்கு ஸ்பெசல் நன்றீ!!! :)
கவிதையில் குறையொன்றுமில்லை ஆதவா...
உங்கள் தெளிவுரை தெளிவாக இருந்தது. சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.
கவிதை முழுமையடைந்து விட்டது. வெற்றி உமக்கே !!!!!
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?//
ஒரு அவலாமான நிலையை மிக நாகரிகமாக சொல்லிய விதம் அருமை...
அதானே கவலைகள் எதற்க்கு? ஏன் கவலைப்பட வேண்டும்?
"கவலைகள் உன்னை கவலைப்படுத்தும் வரை நீ கவலைப்படாதே"
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை
*****
யதார்த்தம்
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?
*********************
வேடிக்கை பார்பதே எங்கள் தொழிலாகிவிட்டது. எங்க ஊரில் ஒழுங்க இருக்கிறவங்களே.. கவனிக்கபடுவதில்லை. மனநலம் குண்றியவர் நிலை கேடகவே வேண்டாம்.
ஓவியப் பெண்ணுக்கும் கவிதைப் பெண்ணுக்கும் சம்பந்தமில்லை.. (பாவம் அந்தப் பெண்!!)
///எங்க ஊரில் ஒழுங்க இருக்கிறவங்களே.. கவனிக்கபடுவதில்லை. மனநலம் குண்றியவர் நிலை கேடகவே வேண்டாம். ////
சமூக ஆர்வலர்கள் ஊரில் சுற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட இடத்தில் சேர்ப்பிக்க வேண்டும்... நாமும் இச்செயலில் இறங்கவேண்டும்!!!
//அய்யய்யோ! கலை என்ன சொல்றீங்க!!!//
சும்மா ஏதாவது கிறுக்கலாம்னுதான்......
அப்புறம் உங்க பின்னூட்டம்தான் சரியா புரியவச்சுது.அதுக்கு அப்புறம் பாத்தா...கவிதை இன்னும் அழகா இருக்கு.
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்//
மனம் உடைத்த வலிகள்.
ஆதவா,ஒவ்வொரு உணர்வுகளோடும் வாழ்ந்து வடிக்கிறிர்கள்.
படம் நானும் ஒற்றி எடுத்துக்கொண்டேன்.
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்//
வேடிக்கை பார்க்கும் மடக்கூட்டங்கள் நடுவில் ஓர் வழி தவறிய மான்.
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை//
அப்புடியா?!?!?
கலை... சும்மா கேட்டேன்...
நன்றி கவின்! நான் தவறாக நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்!
மிக்க நன்றி சகோதரி.. உங்கள் வருகையில் பெருமை அடைந்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இவ்வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன...
நன்றி
நன்றி நசரேயன்
ஆதவா சொன்னது…
முதல் வருகைக்கு நன்றி பிரபு!!
////
முத்ச்ல் வருகையா???!!! திருத்திக்கொள்ளுங்கள்
வருகை பல முடிந்தது
இதுதான் முதல் பின்னூட்டம்
முதல் வருகைக்கு நன்றி அன்பு!!
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை*/
/*பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு*/
வேதனை தளும்பிடும் வரிகள். நன்றாக உள்ளது
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்///
ஆரம்பமே அலம்பலா இருக்கே
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?///
ஆஹா பிரமாதமா வந்திருக்கு கவிதை
ஒரு வேலை இருக்கு...
:-)
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்\\
துவக்கம் நல்லா இருக்கு ...