கழிவறை ஓவியங்கள்
கழிவறையில்
ஓவியம் தீட்டுவதில்
அலாதி சுகமெனக்கு.
மனதிற்கு உகந்தவளை
சுவற்றில் தீட்டுவதும்
மனதார இகழ்ந்தவர்களை
சொல்லத்தகா திட்டுவதும்
இங்கேதான்..
சில புகழ்பெற்ற ஓவியங்கள்
வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான்.
இங்கே சுழிப்பவர்கள்
அங்கே இளிப்பார்கள்.
கழிவறைக் கதவைத் திறந்து
வெளியே செல்லுகையில்
ஆழ்ந்த திருப்தி எனக்கு.
இன்னும் நால்வர்
அதைக் காணக்கூடுமல்லவா?
ஓவியம் தீட்டுவதில்
அலாதி சுகமெனக்கு.
மனதிற்கு உகந்தவளை
சுவற்றில் தீட்டுவதும்
மனதார இகழ்ந்தவர்களை
சொல்லத்தகா திட்டுவதும்
இங்கேதான்..
சில புகழ்பெற்ற ஓவியங்கள்
வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான்.
இங்கே சுழிப்பவர்கள்
அங்கே இளிப்பார்கள்.
கழிவறைக் கதவைத் திறந்து
வெளியே செல்லுகையில்
ஆழ்ந்த திருப்தி எனக்கு.
இன்னும் நால்வர்
அதைக் காணக்கூடுமல்லவா?
Comments
இது தவறு செய்பவர்களின் கோணத்தினாலான கவிதை.. இங்கே தவறு செய்பவன் தன் தவறை நியாயப்படுத்தி விட்டு செல்கிறான்..
மற்றபடி கழிவறையில் அசிங்கமாக ஓவியங்கள் வரைவது தவறு என்றுதான் என் கவிதை மறைமுகமாகச் சொல்லுகிறது.
சுவற்றில் தீட்டுவதும்
மனதார இகழ்ந்தவர்களை
சொல்லத்தகா திட்டுவதும்
இங்கேதான்..//
இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விசயமே...
வித்தியாசமான முயற்சி தொடருங்கள் ஆதவன்...
வாழ்த்துகள்...
ஓ கிரேட்...
நல்ல முயற்சி...
இந்த மாதிரி பின்னூட்டங்கள் எனக்கு அவசியம் தேவை!!!!
----------------------------------
ஆமாம் புதியவன்... நகராட்சி கழிவறைகள் முழுக்க, இப்படிப்பட்ட ஓவியங்கள்தான் நிரம்பி வழியும்!!!! வருந்தவேண்டிய விசயம்
----------------------------
மிக்க நன்றி வேத்தியன்
மிக முக்கியமான விஷயத்தை கவிதைக்களமாக தேர்தெடுத்து இருக்கிறீர்கள்.
நன்றாகவே வந்திருக்கிறது. இன்னும் செறிவாக்குவதற்கான space இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
உங்கள் கவிதைகள் புதிய திசைகளில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன.
கலக்குங்க
சுவற்றில் தீட்டுவதும்
மனதார இகழ்ந்தவர்களை
சொல்லத்தகா திட்டுவதும்
இங்கேதான்..//
ஹா ரசிச்சேன்
நாகரீகமற்ற செயலை
சொல்ல வந்ததும் கூட
உங்கள் தளம் அழகாக இருக்கு ஆதவா.
அந்தக் குழந்தை கொள்ளை அழகு.உங்கள் (உறவு)குழந்தையா?கன்னத்தில் ஒரு "இச்"
சரியா சொன்னிங்க...
இப்ப திருந்திட்டிங்களா???
இங்கை சுவரிலை ஒவியம் வரஞ்சுகலாம் என்ன கரிகட்டைதான் இல்லை!!! திருந்திட்டம்
பதிவுகளைபோலவே!!!
ஆமா யாருங்க அந்த கு(சு)ட்டி பொண்னு////
உங்கள் கவிதைகள் புதிய திசைகளில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன.
மிக்க நன்றி மாதவராஜ் அவர்களே! உங்கள் வாழ்த்துக்களுக்கு!!!!
ஆதவா,நீங்களுமா!நீங்க நல்ல பிள்ளைன்னுதான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.வாலுதான்.
அய்யோ!!!!!! ஹி ஹிஹி... நான் அப்படியில்லீங்கோ!!!!!
நன்றி சகோதரி...
புது template.. படமும் ரொம்ப நல்லா இருக்குப்பா..
---------------------
நன்றி நண்பரே! ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன்.. நல்ல டெம்ப்ளேட் வேணும்னு... ஒருவழியா கிடைச்சுத்து!!
கவின் கூறியது...
வலைதளம் சூப்பரா இருக்கு!
பதிவுகளைபோலவே!!!
ஆமா யாருங்க அந்த கு(சு)ட்டி பொண்னு////
-------------------
நன்றி கவின்.... அந்த சுட்டிப் பொண்ணு யாருன்னு தெரியலை. இணையத்திலதான் கிடைச்சுது. எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். அதனாலதான் ஒரு குழந்தை, அதுவும் தமிழ்நாட்டுக் குழந்தையோட படம் போட்டேன்!!!
சகோதரி ஹேமா.... உங்கள் முத்தங்கள் எங்கேயோ இருக்கும் அந்தக் குட்டிப் பெண்ணுக்குச் சேரும்...!!!
அன்புடன்
ஆதவன்!!
ம்..நல்ல வடிவமைப்பு............
தொடருங்கள்!
சுவற்றில் தீட்டுவதும்
மனதார இகழ்ந்தவர்களை
சொல்லத்தகா திட்டுவதும்
இங்கேதான்..//
எல்லாம் அனுபவமோ???
கமல்!!! என்னைப் போய்????? நான் பச்ச மண்ணுப்பா!!!
சுவற்றில் தீட்டுவதும்
மனதார இகழ்ந்தவர்களை
சொல்லத்தகா திட்டுவதும்
இங்கேதான்..//
ஆதவா இப்படித்தான் நிறைய பேர் இருக்காங்க.
மிகவும் வருத்தமான விஷயங்கள் தான்.
தொடருங்கள்.
அருமையா எழுதி இருக்கீங்கள்,
எனது வாழ்த்துக்கள் ஆதவா!!!
கமல்... எனக்கு இவைகள் எல்லாம் தோன்றின.... உங்கள் அனுமதியிருப்பின் உங்கள் படத்தையும், இக்கவிதைகளையும் என் தளத்திலும் வெளியிடுவேன்..
அன்புடன்
ஆதவா//
ஆம்...........நீங்கள் தாராளமாக இவற்றை வெளியிடலாம்..!