கண்ணனில்லை

அவளிடம் பாலருந்தி விட்டு
முகம் துடைப்பதற்குள் எழுந்தோடி
பொருள் கலைப்பதற்கும்

எதிர்வீட்டு அன்னையிடம்
அருமைகளை அளந்து கட்டி
பின்னாளில் புகார் பெறவும்

ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்

மயிலிறகைத் தலையில் சூடிய
கண்ணன் ஒருவன்
என் இல்லத்தில் இல்லை.

ஆதலின்

நான் நந்தரில்லை
அவளும் யசோதையில்லை

Comments

மனது கனக்கிறது.
//அவளிடம் பாலருந்தி விட்டு
முகம் துடைப்பதற்குள் எழுந்தோடி
பொருள் கலைப்பதற்கும்

எதிர்வீட்டு அன்னையிடம்
அருமைகளை அளந்து கட்டி
பின்னாளில் புகார் பெறவும்//

ஒரு தாய் எதிர் பார்க்கும்
குழந்தையின் குறும்புகள்...
//ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்//

எப்போதும் தெவிட்டாத மழலை மொழி...
ஆதவா said…
நன்றி மாதவராஜ் அவர்களே..

நன்றி புதியவன்.......

இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மழலை மொழிக்கு ஈடு இணை ஏது.காதல்,திருமணம், உறவுகள் என எல்லாவற்றையும் மீறி நம்மை கட்டிப்போடும் ஒரு சக்தி மழலைக்குத்தானே உண்டு.
மனது கனத்தது
எந்த ஒரு சோகத்தையும் மறக்கச்செய்யும் மழலையின் முகம்
//ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்//

மழலை பேச்சு எதற்கும் ஈடாகாது
//மயிலிறகைத் தலையில் சூடிய
கண்ணன் ஒருவன்
என் இல்லத்தில் இல்லை.
//

படைத்த இறைவனிடம் வேண்டுவதைவிட வேறு வழி தெரியவில்லை
ஆதவா கவிதைகள் பின் நோக்கி நகர்கிறது?? கற்பனை லயிக்க வைக்கிறது...கூடவே எதிர் பார்ப்பையும் புலப்படுத்துகிறது.
ஆதலின்

நான் நந்தரில்லை
அவளும் யசோதையில்லை//

அந்த அவள் யாருங்க???
//ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்//
குழந்தையின் மழலையை விட சிறந்த ஒன்று உலகில் உள்ளதா என்ன.. நல்ல பதிவு ஆதவா..
ஹேமா said…
ஆதவா,வர வர நீங்களே குழந்தையாகிறீங்க.அருமை.

குழந்தை மொழியில் ஒரு கவிதை வரும் இனி!
ஹேமா said…
கண்ணன் ஆதவனுக்கு மழலைப் பருவமும்,அம்மா யசோதாவையும் ஞாபகம் வந்திருச்சா!
கவிதை சூப்பர்ங்க...
வாழ்த்துகள்...
kuma36 said…
//ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்///

:)
ஆதவா said…
அன்புமணி
அபு அஃப்ஸர்
கமல்
கார்த்திகைப் பாண்டியன்
ஹேமா
வேத்தியன்
கலை

ஆகிய எல்லோருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்..

அன்புடன்
ஆதவன்
அமுதா said…
/*எதிர்வீட்டு அன்னையிடம்
அருமைகளை அளந்து கட்டி
பின்னாளில் புகார் பெறவும்

ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்*/
அருமை.
ஏம்ப்பா.. பின்னூட்டம் போடுற மக்கள் அப்படியே உங்க ஓட்டையும் குத்துங்கப்பா.. ஆதவாவோட கவிதைகள் கண்டிப்பா எல்லாரையும் போய் சேர வேண்டிய தரமுள்ளவை..
//முகம் துடைப்பதற்குள் எழுந்தோடி
பொருள் கலைப்பதற்கும்

எதிர்வீட்டு அன்னையிடம்
அருமைகளை அளந்து கட்டி
பின்னாளில் புகார் பெறவும்//

நல்ல வார்த்தை பிரயோகம். அருமை, வாழ்த்துக்கள்.
ஆதவா said…
மிக்க நன்றி சகோதரி அமுதா!!!

ஆஹா... நன்றி கார்த்திகை பாண்டியரே!!! மனம் குளிர்கிறது!!!! மிகவும் நன்றீ!!

நன்றி சதங்கா!! உங்கள் முதல் வருகைக்கு என் வரவேற்புகள்...
அப்ப நான்கூட ஹம்சன் இல்லை.

மிக அருமையான வார்த்தை ஜாலம் ...
நன்றாக உள்ளது.
Learn said…
வாழ்த்துக்கள்
நல்லதொரு கவிதை ஆதவா !