விகடனில் என் கவிதைகள்
விகடனில் என் கவிதைகள்
நீ கடவுளைத் தொழுகிறாய்
என்னை நினைத்துக் கொண்டே
கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.
*****
கற்பூரம் கறைந்து ஒழுகுவதைப் போல
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.
அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்.
*****
பஸ்நிறுத்தத்தில்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.
*****
கவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..
*****
பிரசவித்திடும் ஒவ்வொரு கவிதையும்
உன் பெயர் சொல்லியே அழுகிறது.
ஒரு தாயாக வேண்டாம்
ஒரு செவிலியாகவாவது
இனிப்பூட்டு அந்த புதுக் கவிதைக்கு...
நீ கடவுளைத் தொழுகிறாய்
என்னை நினைத்துக் கொண்டே
கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.
*****
கற்பூரம் கறைந்து ஒழுகுவதைப் போல
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.
அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்.
*****
பஸ்நிறுத்தத்தில்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.
*****
கவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..
*****
பிரசவித்திடும் ஒவ்வொரு கவிதையும்
உன் பெயர் சொல்லியே அழுகிறது.
ஒரு தாயாக வேண்டாம்
ஒரு செவிலியாகவாவது
இனிப்பூட்டு அந்த புதுக் கவிதைக்கு...
Comments
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு//
//உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.//
நன்றாக இருக்கின்றன வரிகள்.
விகடனில் வந்திருக்கிறதா?
வாழ்த்துக்கள்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.//
வாழ்த்துக்கள் தலைவா.. ஆவியில கவிதை எல்லாம் போடுறீங்க.. தூள் கிளப்புங்க..
வாயைத் திறவுங்கள் இனிப்பு உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்.
http://aambalmalar.blogspot.com/
-தவப்புதல்வன்
என்னை நினைத்துக் கொண்டே
கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு//
அடடா ஒவ்வொரு செயல்களும் ஒரு கவிதையே அதை அழகாக சொல்லும் போது. அருமையாக சொன்னீர்கள் ஆதவா!!
வாழ்த்துக்கள் இன்னும் பல கவிதகள் விகடனில் இனி வரட்டும்
அழகு கவிதைகள்.
கவிதை பிரசுரம் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
சூர்யா ஜிஜி
அலாதி சுகமெனக்கு.//
ஹிஹி எனக்கும் தான்...
:-)
//பஸ்நிறுத்தத்தில்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.//
அருமைங்க...
ரொம்ப நல்ல இருக்குங்க...
தொடர்ந்து எழுதுங்க...
வாழ்த்துகள்.
/*பஸ்நிறுத்தத்தில்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.*/
மிகப் பிடித்தது
"கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு."
விகடனில் வந்ததற்கு பாராட்டுக்கள்.
முட்டை உடைத்து வெளி வந்த ஒருசிறு குஞ்சுக் கவிஞன் ஆதவன்.இப்போதைக்கு...
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.
*****
கற்பூரம் கறைந்து ஒழுகுவதைப் போல
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.
அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்.//
கடவுளிடம் உங்கள் கவிதைகள் முட்டி மோதுகின்றன.
என்னை நினைத்துக் கொண்டே
கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.//
நல்ல கற்பனை வாழ்த்துகள்
என்னை நினைத்துக் கொண்டே
கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.//
கடவுளை தொழும் போது நம்மில் பலர் இப்படித்தான்
நினைத்துக் கொள்கிறோம்...அருமை ஆதவன்...
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.//
ஆதவா அருமையான கற்பனை. நல்ல அணி நடை...தொடருங்கோ...
வாழ்த்துக்கள்!
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.
அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்.//
இதனைத் தான் சொல்லுவதோ கற்பனையின் உச்சம் என்று?
நல்லா இருக்கு, அருமையான வரிகள்
இன்னும் நிறைய எழுத்துக்கள் பிரசுரமாவதற்கு வாழ்த்துக்கள்
விகடன் இணையத்தில் இதை பிரசுரம் செய்திருக்கிறார்கள்., அதற்கான இணைப்பும் இங்கேயய கொடுத்திருந்தேன்...
மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்...
மிக மிக அற்புதமாக எழுதியிருக்கீங்க!
நானெல்லாம் சும்மா ஜல்லியடிக்கிற ஆளு..!
அதுவும்
//உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.//
மிகமிக அழகாக வந்திருக்கிறது.!
வாழ்த்துக்கள் ஆதவா!
திகழ்மிளிர்... உங்கள் பெயரின் இனிமை என்னை சொக்க வைக்கிறது..
நன்றி நண்பர்களே!!
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.
அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்..//
உங்கள் கவிதையில் கறைந்து.... என்னசெய்வதென்று தெரியாமல் நான் கூட அமர்ந்துள்ளேன்.