சமாதானம்

சமாதானம் என்பது
இயற்கை, ஊமையாக அலையும்
அமைதி அல்ல
போர்க்கரங்கள் ஒன்றையொன்று
தழுவிக் கொள்வது
முதல்நாள் மனைவி போல
முழுநாளும் பிணைந்திருப்பது.

இங்கு சமாதானக் குழந்தைகள்
குறைபிரசவத்திலேயே பிறக்கின்றன
சில கருவிலேயே கலைக்கப்படுகின்றன.

மீறி பிறப்பவைகளுக்கு
யாரோ சிலர்
சமாதானக் கல்வி கற்பிக்கிறார்கள்
அதற்காக தண்டனையும் பெறுகிறார்கள்.

சமாதானம் ஒவ்வொரு நாட்டிற்கும்
வாரிசு

சிலநாடுகளுக்குப் பாவம்
இனவெறி வறுமை போலும்
ஒவ்வொரு ஆயுத விற்பனையிலும்
விலைபேசப்படுகிறது

மிகச் சில நாடுகளுக்கு
மதம் மேல் காமம் போலும்
ஒவ்வொரு குருதிபடுக்கையிலும்
கற்பழிக்கப்படுகிறது

தெருவினில் வீசப்பட்ட சமாதானத்தை
புறாக்கள் எடுத்துச் செல்லுகிறது
அந்தோ பரிதாபம்
நரமாமிசம் திண்ணும் குண்டுகளால்
முட்டையோடு கருகுகிறது புறாக்கள்

உலகம் சமாதானத்தில்
உலவும் வாய்ப்புண்டு ; அப்பொழுது
அதைத் தழுவிக்கொள்ள
கரங்கள் இருக்காது.

Comments

இங்கு சமாதானக் குழந்தைகள்
குறைபிரசவத்திலேயே பிறக்கின்றன
சில கருவிலேயே கலைக்கப்படுகின்றன.//


எங்கள் நாட்டு நிலமையும் இது போலத்தான். தொடர்ந்தும் எழுதுங்கோ..
ஆதவா said…
மிக்க நன்றி கமல்...

ப்ளாக்கர் வொர்க் ஆவுது... ரொம்ப நன்றி கமல்....
ஹேமா said…
//இங்கு சமாதானக் குழந்தைகள்
குறைபிரசவத்திலேயே பிறக்கின்றன
சில கருவிலேயே
கலைக்கப்படுகின்றன.//

மனதைத் தட்டிப் போகிறது.
geevanathy said…
////உலகம் சமாதானத்தில்
உலவும் வாய்ப்புண்டு ; அப்பொழுது
அதைத் தழுவிக்கொள்ள
கரங்கள் இருக்காது. ////

உண்மையான வரிகள்