காவிரி ஆறும், நண்டுகளும்

ஆற்றங்கரையில்
நீச்சல் தெரியாமல்
அமர்ந்திருப்பேன்.

ஆற்றில் எங்கோ சென்ற அப்பா
நண்டுகள் பிடித்து வருவார்
இறந்து போன நிலையில்

கொடுக்கு துண்டிக்கப்பட்டு
பிரசவத்தோடு இறந்திருக்கும்
சில பெண் நண்டுகள்

ஓடைப் பிரித்தால் காற்று புணர்ந்து
மாய்ந்து போகும் லட்சம் உயிர்கள்.
இறப்பதைக் கண்டால் மகிழ்ச்சி எனக்கு.

அப்பா சொல்வார்,
நண்டு உடலுக்கு நல்லதென்று

சொன்னவர் இங்கில்லை,

நண்டு வேட்டையில் இறங்குகிறேன்
என் அப்பாவைப் போலவே

Comments

Anonymous said…
ஓடைப் பிரித்தால் காற்று புணர்ந்து
மாய்ந்து போகும் லட்சம் உயிர்கள்.
இறப்பதைக் கண்டால் மகிழ்ச்சி எனக்கு.
//
ஒன்றை அழித்து ஒன்று
அருமை

தேவா..
Anonymous said…
அப்பா சொல்வார்,
நண்டு உடலுக்கு நல்லதென்று

சொன்னவர் இங்கில்லை,

நண்டு வேட்டையில் இறங்குகிறேன்
என் அப்பாவைப் போலவே//

நண்பா நல்ல கவித் துளிகள்... தொடருங்கள்.... நீங்கள் உங்கள் பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்க முயற்சி செய்யலாம் தானே??? அது நிறைய வாசகர்களைச் சென்று சேர வழிசமைக்கும்...www.tamilmanam.net