மீதமின்றி தின்று விட்டோம்..

உலக உருண்டையை சுக்கலாக்கினோம்
வாழும் உயிர்களைத் தீர்த்தோம்
நிலவை சுட்டுத் தள்ளினோம்
நஷத்திரங்களும் அஃதே

சூரியனைக் கரைத்துக் குடித்தோம்
அவனொளி இருட்டாக்கினோம்
காரிருள் படைத்த வானை
இப்போது மென்று பசியடக்கினோம்

அண்ட பேரண்டங்கள் குடித்தோம்
பால்வளிகள் அனைத்தோடும்
உண்ட இவையனைத்தும்
எமக்கு அடங்க வில்லை

ஏதுமற்ற வானை
ஏன் பார்க்கவேண்டும்?
சூதுஅற்ற எம்மைப் போல்
பசியடங்கா தவர் பலர்

வாதமிட்ட ஏது பயன்-இங்கே
கேட்பார் எவருமில்லை.
மீதமின்றி தின்றுவிட்டோம்
எம் உடலையும் சேர்த்து...

Comments