முத்தம்

பழைய கவிதைகளில் ஒன்று.... முத்தம்.
முத்தம் ஒன்றும் அபாயகரமானதோ அல்லது அசிங்கமானதோ அல்ல. உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மன அலைகளின் மோதல். அன்பு ஆரோக்கியத்தின் தளபதி.

இது காதலன் காதலியின் முத்தம்

சத்த மொன்றில்லாமல்
நின்றன் நாவிலே
நித்தம் நானெழுதும்
கவிதை இந்த
முத்தம்.

புத்தம் புதிதாய் பூத்திருக்கும்
ரோஜா போல் உன்னிதழ்
புத்துணர்ச்சியாய் பொங்கும்
காரண மென்
முத்தம்

கத்தும் காக முதல்
பிளிரும் யானை வரை
மொத்த முள்ள உயிரும்
செய்யும் காதலில்
முத்தம்

ரத்தம் கலந்துண்ணும் பல
தீவிர வாதிகள் திருந்த,
யுத்த மொன்று மில்லாமல்
செய்யும் காதல் தரும்
முத்தம்

சத்தாய் அமையுமென் மேனிக்கு
இனி நீ நின்னிதழால்
பித்தம் தலைக்கேறு முன்
தந்துவிடு எனக்கொரு
முத்தம்

Comments