மதி

மஞ்சள் மதியழகே மதிமயங்கும்
செண்பகமே யென
பஞ்சப் பாட்டிசைத்து
வழியெல்லாம் பூவிரைத்து
நெஞ்சம் உருகி நினைவெல்லாம்
நீயென்று
கொஞ்சு தமிழ் பேசி, குலவி,
நினைப்பேனடி!

உறங்கவோ உயிரில்லை
நினைவினிலே
மறக்கவோ முகமில்லை
என
கிறங்கவோ நீ வந்தாய்
அமுதே
திறந்துவிடு மனதை
எனக்காய்!

கொதித்தெழ தெம்பில்லை
நாவினிலே,
மிதித்தெழ வலுவில்லை
நினைவினிலே
விதித்த தண்டனை இனியுமோ?
என்றேன்
விதியே! விளக்கே! எனக்கு
விளங்காதவளே!

ரதியே! ரம்பே! நான்
வணங்கும் தேவகியே!!
வா வந்தணை என்னை!
வானம் முழுவதும் விடியும்வரை
காத்திருப்பேன்.

Comments