வெகு நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு கடிதம் வந்தது
சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மாயையை
அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்
இன்னும் கிழித்துப் படிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்
எதன் அடையாளமாகவேனும்
தெரிந்து கொள்ளும் ஆவலில்
கடிதத்தைக் கிழித்தேன்
அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது

வெகுநாட்களுக்குப் பிறகு காணாமல் போனவன் என்ற அடைப் பெயரோடு வீடு திரும்பியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக வித்தியாசமில்லாத உணர்வுகளோடு பதிவுகளை எழுத ஆரம்பிக்கையில் மறந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டிருக்கும் மொழியிச்சை தானாகவே வந்தமர்ந்து கொள்கிறது. ஒருவகையில் எச்சிலெனத் துப்பித்தான் காணாமல் போவதற்கான ஆயத்தங்களை முதலில் மேற்கொண்டிருந்தேன். (விலாவாரியாகச் சொல்லவேண்டுமல்லவா.... வரலாறு மிக முக்கியம்..!!)
பொன்னாத்தாவின் சவலை பாய்ஞ்சிடுச்சு சிறுகதையைப் போன்றே, எழுத்துக்குப் பின்னைய என்னுலகம் குறித்த சிந்தனைகள் இப்பொழுதே (ஒன்றும் சாதித்துவிடாமலேயே) தோன்ற ஆரம்பித்துவிட்டன. தேவையற்ற எண்ணங்கள், மனக்குழப்பத்தின் மையத்தில் நொரண்டிக் கொண்டிருந்தன. எழுத்து, மழை வடிந்தபிறகு காய்ந்திருக்கும் ஈரமண்ணாக மனதின் துளைகளில் நிரம்பியே கிடக்கிறது. வெளிப்பாட்டு வாழ்வு, தோண்டியெடுத்து விடக்கூடாத எச்சரிக்கை உணர்வில் வழிந்து கிடக்கிறது... இதில் நான் எதைவிடுத்து எதைச் செய்ய? பரவலாக நண்பர்களின் அழைப்பு, நெகிழ்ச்சியான நொடிகளை குமிழ்களென உருவாகி, அழைப்பு முடிந்த பிறகு உடைந்து தெறித்தது. பொதுவாகவே நான் யாரிடமும் சொல்லிக் கொண்ட தற்காலிக சமாதானம், வேலைப்பளு என்பதாக இருந்தது. ஆனால் வேலைப்பளு மட்டுமே காரணமல்ல என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மிக அதிக வித்தியாசமில்லாமல், கடைகள் (Blogs) திறந்து கிடக்கின்றன. புதிய பொருட்கள் பார்வைக்கு பதியப்பட்டிருக்கின்றன. அவரவர் மனக்கோப்பையில் தவறி விழுந்த எழுத்துக் கனங்களை அவரவர் பருகிக் கொண்டிருக்கின்றனர். மிகக்குறுகிய காலத்தில் நான் சேகரித்துக் கொண்ட நட்புகள் குறுகிய தவிர்ப்பை நிராகரிக்கின்றனர் எனும்பொழுது என்மீதான, எழுத்தின் மீதான அண்மைய கோபங்கள் விலக முற்பட்டு, பெருமையாகவும் இருக்கிறது.
எழுதக் கிடைப்பது அளவில்லாததாக இருக்கிறது. யாருக்கும் எதற்கும் எழுத்து மு(றி)டிந்துவிடப் போவதில்லை. சூழ்ந்திருக்கும் சூழ்நிலையின் இறுக்கம், அளவற்ற எழுத்தின் கழுத்தை முறித்து விடப்பார்க்கிறது. நுகர்நிலையை விட, வாழ்நிலை மதிப்பு மிகுந்தது. பல சமயங்களில் அதுவே மிக முக்கியமானதுமாகிறது.
அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்புசால் நன்றிகள்.
தீபாவளி வரைக்கும் எனக்கு பணிப்பளு இருப்பதால் அவ்வப்போது வந்து போகிறேன். முற்றிலுமாக எழுத முடைப்பட்டு வராமல் போய்விடாமல்... தவிர, நேரம் என் கைக்குள் அகப்படும்பொழுதெல்லாம் நண்பர்களின் வலைத்தளங்களுக்கென நேரத்தை அவிழ்த்துவிடுகிறேன்.
வரும் 27-07-09 முதல் 02-08-09 வரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். அவ்வாரம் முழுக்க நண்பர்கள் அங்கே எட்டிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்!
சுவாரசியமான பதிவர் என எனக்கென மதிப்பளித்து விரு(ந்)தளித்த நண்பர்கள் குடந்தை அன்புமணி மற்றும் விதூஷ் ஆகியோருக்கும் போன் செய்த, மடல் அளித்த, மனதில் நினைத்த நண்பர்கள் அனைவருக்கும் அளவில்லாத நன்றிகள்!!
அன்பின்
ஆதவா
Popular Posts
Genre
Academy Awards
ஏனைய
பேழை
-
►
11
(49)
-
►
March
(13)
- பாகிஸ்தானை வி(மி)ரட்டிய இந்தியா
- இலங்கையின் மிரட்டல்: பயத்தில் இந்தியா
- தென்னாப்பிரிக்கா = துரதிர்ஷ்டம்
- வென்றது இந்தியா : சறுக்கியது சாம்பியன்
- மினி பைனல்: இந்தியா vs ஆஸ்திரேலியா
- அய்யய்யோ!! காலிறுதியில் இந்தியா
- உலகக்கோப்பை–காலிறுதிகளின் பலம்
- அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!!
- உலகக்கோப்பை 2011: Updates (10-03-11)
- உலகக்கோப்பை 2011 : Updates (07-03-11)
- சச்சின், ஜூஜூ, 1 கிலோ தங்கம்
- உலகக் கோப்பை 2011 : Updates (04-03-11)
- உலகக்கோப்பை 2011 : Updates (03-03-11)
-
►
February
(17)
- உலகக்கோப்பை 2011 : Updates–28-02-11
- உலகக்கோப்பை 2011 : Updates (26-02-11)
- உலகக்கோப்பை 2011–Updates
- Call of Duty : Black Ops–விமர்சனம்
- உலகக்கோப்பை 2011 : Updates
- நடுநிசி நாய்கள் (18+)
- Jennifer's Body (18+) - விமர்சனம்
- இன்னுமொரு ஞாயிறு 13-02-2011
- ஜெஸிகாவுக்குப் பிடிக்காத ஓவியம்
- கற்பனையற்ற சினிமாக்காரர்கள்
- தூங்காநகரத்தில் தூங்கியவர்கள்
- யுத்தம் செய்–படத்தைப் பார்ப்பது எப்படி?
- புத்தக(க்) கண்காட்சியும் ஞானும்
- உலகக் கோப்பை யாருக்கு? - கணிப்பு
- No இலக்கியம் No தமிழ்
- Bi-mong (Bad Dream)
- Transsiberian - விமர்சனம்
-
►
March
(13)
நண்பன் எழுத்து
-
-
-
-
-
Nothing but Rahman.........2 days ago
-
-
உதிரிப்பூக்கள் - 122 days ago
-
LOTR EBook - Sneak Peek!3 days ago
-
உறவுப் பாலமும், உணர்வுச் சிதறல்களும்!4 days ago
-
ரசிகனின் நினைவில்...4 days ago
-
புல்லறுக்க வந்தவன் தந்த புதையல்5 days ago
-
நம்பிக்கை - அதானே எல்லாம்6 days ago
-
விலக்கப்பட்ட கனி1 week ago
-
-
ஈரக் கனாக்கள்2 weeks ago
-
-
-
-
“அப்பா, நீங்க ஃபெயிலா?”1 month ago
-
-
-
-
A separation ( 2011) - Iran3 months ago
-
சப்தா3 months ago
-
கடைசிக் கோமாளி3 months ago
-
ஏன்? எதற்கு? எப்படி?....154 months ago
-
-
எழு(த்)து4 months ago
-
தப்பிப் பிழைத்த கரப்பான்பூச்சி6 months ago
-
-
-
உணர்வீர் வஞ்சப்புகை நெடி!1 year ago
-
புதுக் கவிதை...1 year ago
-
நரன் கவிதைகள்1 year ago
-
நீ ரசமா?... ரசாயனமா?...1 year ago
