நெருப்பு நீ,
நீர் நான்.

சூரியத் தகட்டில்
வெப்பந் தணியா நெருப்பு நீ,
வா!
வந்தனை பூமியை
உருட்டு; திரட்டு;
என்னோடு இணைந்து பிரட்டு.
என்னுள் ஊடுருவி
உள் துளை
கக்கிய தீயெடுத்து
நாக்கிலே குழை.

அணை என்னை; அல்லது
அணைப்பேன் உன்னை.
பிதுக்கி யெடுத்தவாறு
பதுங்கி வா!
தொடு
முத்தமிடு
தீ முழுவதுமாய் கக்கு,
முடிந்தவரை போராடுகிறேன்.

சத்தமிடு,
மொத்தமும் இடு.
இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை
தாக்கு;
தேக்கு
காதல் ரசங்களை
(உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு.
சுவடெரித்து விட்டு திரும்பச் செல்;
இல்லயெனில்
எனை நீரென்றும் பாராமல் கொல்.

உடுத்து;
படுத்து;
உன் கோப வெறிக்கு ஆளாகாத
என்னை உன் சாம்பலிலே கிடத்து.

அகல விரி
விழி;
உன் தீயால் என்னிதயம் பிழி.
திடமான் பொருள் எனக்கதுவே.

குதி;
கூச்சலிடு;
அக்னி விட்டு கும்மாளமிடு
சலனமாய் கவனித்தே
அணைக்கிறேன் உன்னை.

சாபமிடு;
கோபமிடு;
ஆக்சிஜன் பொருள்களில்
தாளமிடு;
இசையாகி வழிகிறேன் நீரிலிருந்து,
எரித்துவிடு இந்த இசையை.

சூடு தாங்காது ஓடுவிடுவேனோ?
வெப்பம் என்ன செய்யும் நீருக்கு?
அணைக்க ஓடி வந்து விடு.
வரும் போது,
யாவற்றையும் அழி;
வேண்டியவர்களை கழி;
மிச்சம் வை துளி.
வெறி தலைக்கேறி வந்தாய்
சுடுகிறாய் இன்னமும்.
என் நீர் வற்றியது நெருப்பே!

குனிந்து பார்!
எரிகின்ற ஆழி நெருப்பில்
தீபமாய் கிடக்கின்றேன்..........

30.6.07

இறுதி நொடியில்....

|

உலரவைத்த நெருப்பின் வாசனை
ஊடுறுவித் துளைத்து
ஓலங்களின் ஜலங்களால்
ஊசிப் போகிறது நாசி

அற்றை நாளில் அடிபணிந்து
ஒடிந்துபோய் ஓய்ந்து
அற்ற எலும்புகளின் ஓசை
சுவீகாரமாய் கேட்கிறது காது

மடித்து வைத்த உள் நாக்கில்
மரித்துப் போன பொய்மை ரணங்களையும்
அவலக் கிணறுகளையும்
அதட்டி ருசி பார்க்கிறது நாக்கு

அடமானம் வைக்கப்பட்ட
வைராக்கியத்தைத் திரும்பப் பெறாமலே
செத்தொழிகிறது
செதிலடைந்து பாழ்போன கண்கள்

சொல்லப் படாமல் அதக்கிய
அந்தரங்கங்களை நிழலாடிச் சொல்கிறது
கனவின் ரூபத்தில் கோலோச்சும்
மந்தார மனது

கரிசல் மண் துகள்களுக்குள்
தங்கம் தேடிய யாக்கை
பரிதவித்துக் கிடப்பதைக்
கவனிக்கிறது அனுதாபங்கள்

உலகறியும் தவறுகளுக்கு
உடந்தையிறா கால்,கைகளும்
இற்றுப் போய் அமிழ்கிறது
ஊற்றிய இருதுளி மரண திரவத்தில்..

இன்னும் ஓரிரு நிமிடங்கள் தான்
அக்னி தின்று ஏப்பம் விடும்
இவனின் அனைத்து ரகசியங்களையும்.....

சில நேரங்களில்
செவிடர்களாகிறோம்
பிச்சைக்காரனின் குரல்.

10.6.07

மணமாகும் வரை.

|

நீயும்
நானும்
காதலித்துக் கொண்டிருந்தோம்
மணமாகும் வரை.

31.5.07

உறுத்தியதொன்று...

|

துயில் களைந்த
ஆதவன்
தூக்கி எறிந்த
கதிரெல்லாம்
கயல் ஓடிய
கண்மணியைக்
கட்டியணைத்ததுவே

உலர்ந்த மேனியை
நீர்கொண்டு
புலர்த்திய பின்னாலே
முடக்கிய சோம்பலை
முடுக்கிய தென்றலாய்

ரோமங் கலைந்து
நிலைக் கண்ணாடியில்
மேவிச் சீவி
வறத்த வதனத்தில்
பொடியெடுத்துப்
புலர்த்திவிட்டு
நெஞ்சு நிமிர்க்க
நேரம் தவிர்க்க

கண்மணி
ஓடி வந்தாள்.

சில்லறைபெற்று
சிரிப்பொன்று நாட்டினாள்.

ஒருவனிடம் வாங்கியிருந்தால்
மகிழ்வொன்று பூத்திருப்பேன்.
என்று நெக்கிய நெஞ்சத்தை
புதைக் குழியில் புதைத்துவிட்டு
பொய்ச் சிரிப்பை
விடைக்கனுப்பினேன்.
சூத்திரங்கள் அறியாது
போகிறாள் என் மகள்..

வேட்கைகளின்
தொகுப்புக்களோ
கோபக் கனலின்
கொஞ்சல்களோ

என் கண்,
முன்னர்,
வெளிறித் தொங்கிய
அனலிலிருந்து
இன்று
மெளனமாய் நீண்டு
வெறியாடுகிறது
மதக் குருத்துக்கள்

சிந்திய துளிகளுல்
மதச் சூட்டு இருக்குமோ என.
சூள்கொண்டு மாய்ந்த
கண்கள் தேடியது
பார்வையை இழந்துவிட்டு.

இவ் வுலோபிகளின்
உயிர்ச் சடலங்களை
உருவாக்கிய
என்னை

யாரென்று வினவிய
வினாவினால்
குருதி தொய்ந்த
என் சிரத்திலே
சீழ்ந்து ஒழுகியதைத்
தொட்டு ருசித்தேன்
நான்
இந்துவா?
இஸ்லாமியனா?

வெட்டுபட்ட இலைகளால்
வீடிழந்து நிற்கிறார்கள்
பூச்சிகள்.

கோடை வெப்பத்தின் உக்கிரம் பாறையைப் பிளக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க திடீரென
உதித்த யோசனைதான் ஊட்டி பயணம்... சென்ற சனி இரவு அலுவல் வேலைகளை முடித்துவிட்டு மன்றத்தில் விடுப்பு
சொல்லிவிட்டு கிளம்பினேன்... நண்பர்கள் சிலர் மீன் கடையில் இருக்கவும், உடனே இரு மீன்களை உள்ளே தள்ளிவிட்டு
பயணத்திற்கு யாரார் வருகிறார்கள் என்று அலைபேசியில் கேட்க, சிலர் குறைந்து இறுதியில் நான்கு பேர் மட்டும் என்று
குறுகிப் போனது.. சரி என்று ஞாயிறு அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து (வேதனையான தருணங்கள்) பல்லு விளக்கு
குளித்து முடித்து 5.45 க்கு நண்பர்கள் நால்வரும் ஒன்றிணைந்தோம்.


நண்பர்கள் நாங்கள் யார் யார் எப்படி என்று சொல்கிறேன் ..

நான் ஆதவன் - என்னைப் பற்றி சொல்லவேண்டியதில்லை PJP நான்.
Hell - சிறுவயது முதல் நெருங்கிய நண்பன்... ஒரே வளவள... ஏன் இந்த பெயர் அவனுக்கு என்று தெரிந்ததா?
Be or Scooby - சிறுவயது நண்பன். சென்னையில் இன்னும் படித்துக் கொண்டு அவனோட வேலையான லவ்விக்
கொண்டிருக்கிறான்
Rocky - என்னுடைய வேலை.... இவனுக்கு கவிதை, கதை போன்றவற்றில் விருப்பம்.. விரைவில் மன்றத்திற்கு வருவான்..
அப்போது இன்னும் தெரிந்துகொள்வீர்கள்.

நால்வரில் கடைசி மனிதரைத்தவிர மற்ற மூவரும் PJP. நாலாமவன் ரொம்ப நல்ல பையன் (?!)

ஒருவழியாக வண்டியை முறுக்கிக் கொண்டு கிளம்பினோம். நன்றாக ஞாயம் பேசிக்கொண்டே..... அந்த நேரத்திலேயே
நல்ல வெளிச்சம் இருந்தது. அவினாசி அருகே இரண்டு வண்டிக்கும் பெட்ரோல் ஐந்து லிட்டர்கள் அடித்துவிட்டு
கிளம்பினோம்.... ஒரே மூச்சில் முக்கால் மணிநேரத்தில் பிளாக் தண்டர் வந்து சேர்ந்தாயிற்று. (ஏற்கனவே இங்கு வந்து
அடித்த கூத்துக்கள் எனக்கே மறந்துவிட்டது..) அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிதுநேர
இளைப்பாறலுக்குப் பிறகு வண்டியை உசுப்பி ஊட்டி மலையில் ஏற ஆரம்பித்தோம்... நாங்கள் சென்ற நாள்
மலர்கண்காட்சிக்குண்டான நாளாகியமையால் சரியான கூட்டம்... ஊட்டியில் சுற்றுலா பயணிகள் மட்டுமே 2 லட்சம்
பேராம்.... பின் எப்படி மலைப்பாதையில் வேகமாக செல்லமுடியும்..?? ஒரே ட்ராஃபிக்... கிட்டத்தட்ட இரண்டு
மணிநேரங்கள் பிடித்தது.. குன்னூரைத் தொட... அப்படியே மலை அழகுகளை சில இடங்களில் ரசித்துவிட்டு குன்னூர்
தாண்டி ஊட்டியைத் தொட, மணி 10 ஐ நெருங்கியது... ஞாயிறு அன்று ஏக கூட்டம்... சுள்ளென இல்லாவிடினும் ஓரளவும்
வெயில். ஊட்டி டீ அருந்திவிட்டு திட்டம் போட்டோம்... முதலில் பைகாரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு பிறகு
பொடானிகல் கார்டன் முடித்துவிட்டு சீக்கிரமே வீடு திரும்பிவிடவேண்டும் என்பது... அடுத்தநாள் வரை நாங்கள் திட்டம்
போடவில்லை.. ஊட்டியிலிருந்து பைகாரா கூடலூர் செல்லும் வழியில் இருக்கிறது. கிட்டத்தட்ட 20 கி.மீ மேலே.. மலை என்பதால் இயற்கையின் அழகு அற்புதமாக இருந்தாலும் பாதை மிக மோசமாக இருந்தது.. வெறும் கற்களே தாருக்கு மேலே இருந்தன.. வண்டியை ஓட்டிக் கொண்டு போவதில் மிகச் சிரமமாக இருந்தது. சிலசில இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு மிக மெதுவாக அழகை ரசித்துவிட்டு பைகாரா சேர்ந்தோம்...

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு பைகாரா படகு இல்லத்திற்கு வந்து பார்வையிட்டோம்... அங்கங்கே சில படங்கள் எடுத்துவிட்டு சில பெண்டுகளை ரசித்து ஜொல்லிவிட்டு நேரே நீர்வீழ்ச்சிக்குச் சென்றால், அங்கே வறண்டு போயிருந்தது. இருந்தாலும் விடுவதாக இல்லை. அதையும் படம் பிடித்துவிட்டோம்... அங்கே ஜொல்லமுடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது... ஒரு பக்கம் இயற்கை அழகு வறண்டு போயிருந்தாலும் இன்னொருபக்கம் இயற்கையாகவே அழகிகளின் அழகு ஊறிக் கொண்டிருந்தது... பாதிக்கும் மேற்பட்டவர்கள் வடநாட்டவர்கள். சில வெளிநாட்டவர்களும் கூட.... மறக்க முடியாத தருணங்கள். செய்த கூத்துக்களை நான் வெளியிடவும் மாட்டேன்

இப்படியாக மதியம் சென்றுவிட்டது. அப்படியே நடந்துவந்து பஜ்ஜி சொஜ்ஜிகளைத் தின்றுவிட்டு கிளம்பினோம்... நேரே ஷூட்டிங் ஸ்பாட்... ஊட்டிக்கும் பைகாராவுக்கும் நடுவே இருக்கிறது.. மிக அழகிய பசுமை பிரதேசம். அங்கே கண்ட காட்சிகளை நான் சொல்லவா ? ஜொல்லவா? மதியம் 3 வரை தத்தளித்துவிட்டு பல படங்களை பல கோணங்களில் எடுத்துவிட்டு மீண்டும் வண்டியேறினோம்... இடையிடையே தின்றதையெல்லாம் சொல்லமுடியாது... கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தின்று தீர்த்தோம்...

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஏரி ஒன்று இருந்தது... மரங்களுக்கு ஊடான பாதையில் நடந்து சென்று ஏரியைக் காணும்போது.. அடட்டா!!!! என்னே அழகு!!!! அங்கேயும் சில படங்களை எடுத்துத் தள்ளிவிட்டு வண்டியில் கிளம்பினால், ஊட்டிக்கு 8 கி.மி இருக்கையில் மழை பின்னி எடுத்தது.... மணி கிட்டத்தட்ட 4 ஆகிவிட்டது. சீக்கிரமே பொடானிகல் கார்டன் ரசித்துவிட்டு வீடு திரும்பவேண்டும். மலைப்பாதை என்பதால் 7 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மழை பின்னி எடுத்தது. கிட்டத்தட்ட 5 மணி வரை..... என்ன செய்ய???

யோசித்துக் கொண்டிருந்தோம்... காரணம் அன்று சீசன் காலம் என்பதால் அறை வாடகைக்குக் கிடைக்காது. இரவுக்குள் வீடு திரும்பவேண்டும்... வீட்டுக்கு கிட்டத்தட்ட 100 கி.மி இருப்பதாலும் மலைப்பாதையே 40 கி.மி என்பதாலும் பல சிக்கல்... மாட்டிக் கொண்டோம்..... இந்த சூழ்நிலையில் ஊட்டியை இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை....
---------------------------------
சரி இது இப்படியே இருக்கட்டும்.. வரும் வழி முதல் இதுவரை செய்த லூட்டிகள் என்ன?? நிச்சயமாக அசிங்கமாக ஏதும்
செய்யவில்லை. ஊட்டிக்கு ஏறும் வரை எங்களது வழக்கமான பேச்சுக்கள் மட்டுமே இருந்தன. அங்கே சேர்ந்ததும்
நாங்கள் மாறிவிட்டோம். எங்கள் கண்கள் எங்களிடமே இல்லை.. பைகாரா செல்லும் வரை நாங்கள் நல்லவர்களாக
இருந்தோம்.. பைகாரா அடைவதற்கு முன்பாக ஒரு கேரட் விற்கும் பெண்மணி எங்களை அழைத்து கேரட் வாங்கச்
சொன்னார். நாங்கள் கொஞ்சம் தூரம் சென்று நிறுத்தினோம்... அவசரம் வேறு.. அந்த பெண் ஓடிவந்து கேரட்டுகளை
எங்களுக்கு விற்றுச் சென்றாள்... ஹி ஹி. அந்த பெண்மணி மிக அழகாக இருந்தாள். ஆனால் கை மட்டும் சூம்பிப் போய்
ஆகாரம் திங்காத கோழிமாதிரி இருந்தாள்... மற்றபடி அவளுக்கு பெரிய மனசு.. இல்லாவிடில் எங்களுக்காக சுவை
மிகுந்த கேரட் வழங்க ஓடி வந்திருக்கமாட்டாள்.. சரி சரி. ரொம்ப ஓவரா போறேன். பைகாரா அடைந்ததும் வாலிபம்
வேலை செய்ய ஆரம்பித்தது. எங்கு திரும்பினாலும் கண்கள் பெண்களிடமே நின்றது. படகு இல்லத்தில் ஏகப்பட்ட
இளசுகள்.. கையில் பாப்கார்ன், மாங்காய், ஐஸ்கிரீம் என்று இஷ்டத்திற்கு செலவு செய்துகொண்டு
திரிந்துகொண்டிருந்தார்கள் சரி எதற்கு மொபைல் வைத்திருக்கிறோம்? படமெடுக்கலாம் என்று பார்த்தால் மொபைல்
குறிப்பிட்ட தொலைவு வரை ஜூம் ஆகவில்லை. படகு இல்லத்தில் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருக்கும்
காதலர்கள் முதல் தம்பதியவர் வரை ஒருவரையும் விடவில்லை. இதில் உச்சகட்டமாக ஒரு தம்பதியரின் கொஞ்சலை
படமெடுத்து சாதனை புரிந்தோம்... ம்ம்... மனைவியோடு இம்மாதிரி இடங்களுக்கு வந்தால் அது அலாதி சுகம்.. நமக்கு
இன்னும் காலம் இருக்கிறது ... அந்த படகு இல்லத்தில் பயணம் செய்ய நாங்கள் திட்டமிடவில்லை... ஊட்டியில் சென்று
பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தோம்.. சில ஊடல்களையும் அங்கே காணமுடிந்தது.

அப்படியே பைகாரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் ஒரே அழகிகளின் அணிவகுப்பு. எங்களுக்கு திக் திக் என்று இருந்தது.
(ஒரு போலீஸ் காரியைக் கூட விடாமல் ஜொல்லினோம். ) வெளிநாட்டவர்கள் வேறு வந்திருந்தார்கள்... சிலதுகள்
பஞ்ச உடை.... நாங்கள் எங்களையே படமெடுக்கிறோம் பேர்வழி என்று சிலரை படமெடுக்க முயன்றோம்... ஆனால்
முடியவில்லை.. எங்களுக்குண்டான நாகரீகமே தடுத்துவிட்டது. அங்கே சிறிது நேரம் அமர்ந்து இயற்கையை
ரசித்தோம்.. கூடவே பலவும்.. மெல்ல கடைக்குச் சென்று வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி என்று
ஒரு ஐயிட்டம் விடாமல் துரத்தித் துரத்தித் தின்றோம். ஒரு பெண் அருகே அமர்ந்திருக்கிறாள் என்பதற்காகவே ஒரு
மினரல் வாட்டரை வாங்கி அதில் முகம் கழுவி நாங்கள் அதிசுத்தமானவர்கள் என்று உணரவைத்தோம்...ம்ம்ம்ம்ம் அந்த
பெண் எங்களைப் பார்ப்பதாகத் தெரியவில்லை. மெல்ல நடந்து வந்து அந்த போலீஸ் காரியை மீண்டும் ரசித்துவிட்டு
பைகாராவிலிருந்து இறங்கினோம்... ஹி ஹி மீண்டும் அதே கேரட் வாங்கலாம் என்று நினைத்தோம்... எங்கள் நினைவில்
யாரோ மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள். அட குரங்குகளைக் கூட விடவில்லை. பல சேஷ்டைகள் செய்துவிட்டு
நேரே ஷூட்டிங் ஸ்பாட் இறங்கினால், அங்கே ஆரம்பமே அமர்களம்.

நாம் ரசிப்பதற்காகத்தான் பெண்கள் மேக்கப் செய்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து... வெறும் ரசிப்போடு இருப்பது
ஒன்றுதான் சாலச் சிறந்தது. அளவுக்கு மீறிய ரசிப்புத் தன்மை என்னிடம் விட்டு விலகியிருந்தது நான்
அறிந்துகொண்டேன். இதில் கொடுமை என்னவென்றால் பல பெண்கள் எங்களையும் ரசித்தார்கள். ஊட்டியில் சேலை
கட்டிய பெண்களை நான் பார்த்தது மிக மிக குறைவு.. ஆனால் அதற்கு நேரெதிரே ஆடை குறைந்த பெண்களையே
பார்க்க முடிந்தது. இம்மாதிரியான இடங்களுக்கு முழு சுதந்திரம் எடுத்துக் கொண்டு இப்படி செய்கிறார்களா அல்லது
அவர்கள் வாழ்க்கை முறையே இப்படித்தானா என்று சந்தேகம் எழும்புகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வதற்கு
முன்பாகவே இரு மாங்காய்களை வாங்கி கொறித்துக் கொண்டே இருவரை பின் தொடர்ந்தோம்... ஒரே மேடாக
இருந்தமையால் என்னால் அவ்வளவாக ஏற முடியவில்லை. மெல்ல மெல்ல ஏறினால் அய்யோ... அப்படி ஒரு அழகுக்
கூட்டமாக ஊட்டி மலைகள் இருந்தன,, எல்லாவற்றையும் மொபைல் படம் பிடித்துக் கொண்டது.. நாங்கள் ஒரு ஓரமாக
நின்று/படுத்துக் கொண்டு பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் செல்ஃப் டைமர் வைத்து நாங்களே
படமெடுத்தோம்.. அது ஒரு அழகிய அனுபவம்./ அப்படியே நடந்து சென்று குதிரை ஏற்றத்தைக் கண்டு ரசித்தோம்..
ஏனோ எனக்கு குதிரை ஏறவேண்டும் என்று தோணவில்லை. அங்கே மொபை டவர் கிடைத்தது என்பதால் அவரவர்கள்
தன் உட்பிக்கு அலை(ழை)த்தார்கள்.. நான் மட்டும் இயற்கையோடு காதல் புரிந்துகொண்டிருந்தேன். உடன் ஓடி
விளையாடும் சில பெண்களையும் குழந்தைகளையும் சந்தோசமாகவும் அதேசமயம் நாம் குடும்பத்தோடு வந்திருந்தால்
இந்த சந்தோசம் மேலோங்கியிருக்கும் என்றும் வருத்தப்பட்டேன். சிலருக்கு எல்லாமே அமைந்துவிடாதல்லவா? சரி.

மெதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க, அதையும் விடாமல் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள்..
அதில் என்னென்னவோ பேசினேனே!!! இறங்கும்போது யாரும் ஏறவில்லை.. அதனால் மனம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே
சுற்றீக் கொண்டிருந்தது. அப்படியே வண்டியை உசுப்பிவிட்டு கொஞ்ச தூரம் சென்று ஸ்கூபி வண்டியை நிறுத்தி ஏரி
ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டுவிட்டு செல்லலாம் என்றும் சொன்னான். கொஞ்சம் இறக்கமாக செல்லவேண்டும்.
அங்கிருந்த நீளமான மரங்கள் எங்களை வசீகரப்படுத்தின.. அந்த ஏரியை அடைந்ததும் ஒரு பெண்ணிடம் சொல்லி
எங்கள் நால்வரையும் படம் எடுக்கச் சொன்னோம்... அவர்கள் சிரித்துக் கொண்டே படமெடுத்தார்கள். பின்னர் பஞ்சு
மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிக் கொண்டே ஏரியிலிருந்து பாதைக்கு ஏற முற்பட்டால் சத்தியமாக முடியவே இல்லை.
இதற்கு இரு காரணங்கள் உண்டு.. ஒன்று இறங்கிவரும் பெண்கள் கூட்டம்,. அடுத்து உயரமான மேடு... நடக்க
முடியவில்லை. எப்படியோ ஏறி வண்டியில் ஊட்டிக்குச் சென்றால் பாதி தூரத்தில் மழை. வண்டியை ஓரம் கட்டிவிட்டு
மழை நின்றதும் கிளம்பினோம். இடைப்பட்ட சம்பாசணைகளை ஏற்கனவே படித்திருப்பீர்களே!!
பைகாராவிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. அந்த மலைபிரதேசங்களில் எப்போதுமே வானிலை மழை வரும்படியாகவே இருக்கும் ஆதலால் நாங்கள் மழை பிடித்ததும் ஒரு இடத்தில் ஒதுங்கிக் கொண்டோம். மழையென்றால் சாதாரண மழையல்ல. பனிக்கட்டிச் சாரல்.. ஒவ்வொருதுளியும் சுள் சுள்ளென பிடித்தது. அதோடு பனிக்கட்டி மழை பார்த்து வெகு நாட்களாகிவிட்டமையால் ரொம்ப சாலியாக இருந்தது. அருகே இருந்த டீக்கடையில் பிஸ்கோத்துகளும் டீயும் சாப்பிட்டோம்... வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான தேநீர். மழை மிகவும் வழுத்தது. அதோடு மண்வாசனையும் சேர்ந்து பனிக்கட்டிகள் தாளமிட எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நோட்டும் பேனாவும் இருந்திருந்தால்........
வேறவழியில்லை... பொடானிகல் கார்டன் சுற்றிப் பார்க்க இயலாது. ஆக அடுத்தநாள் தங்கி இருந்து பார்த்துவிட்டு போக முடிவு செய்தோம். ஸ்கூபியின் மாமாவுக்கு போன் செய்து ஊட்டியில் இருக்கும் சித்தப்பாவை அறை வாடகைக்குப் பிடிக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னோம்... அதற்குண்டான ஏற்பாடும் நடந்தது.. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் மழைக்குப் பின் வண்டியை எடுத்து கிளம்பினோம்... நேரே ஊட்டி..
ஊட்டியில் பொடானிகல் கார்டன் செல்லும் வழியில் ஒரு திரையறங்கு உள்ளது. அதனருகே வண்டியை நிறுத்திவிட்டு நால்வரும் ஸ்கூபியின் சித்தப்பா வருகைக்குக் காத்திருந்தோம். அப்போதே மாங்காய்களையும் மசாலா கடலைகளையும் சோளக்கருதுகளையும் வாங்கித் தின்று வயிறு உப்பிப் போய்,,,, இடம் தேட வேண்டிய சூழ்நிலைக்கு வந்து அப்பறமாக வயிறை சுத்தம் செய்துவிட்டு வந்து நிற்பதற்குள் மணீ ஆறாகிவிட்டது. பிறகு வேறொரு இடத்திற்கு சித்தப்பா வந்து சேர்ந்தார்.. வண்டியை உசுப்பி விட்டு ஸ்கூபி ராக்கி சித்தப்பா மூவரும் ஒரு ஹோட்டலுக்குச் செல்ல நானும் ஹெல்லும் நடந்துவந்தோம்... இரு கி.மீ தாண்டி அந்த ஹோட்டல் இருந்தது. வாடகை எவ்வளவு என்று கேட்டால் ஆயிரத்தி இருநூறு என்றார்கள்... எங்களுக்கு பக் பக் என்று இருந்தது.. அவ்வளவு பணமும் கொண்டுவரவில்லை.. ஆனால் ஸ்கூபி அந்த பணத்தை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். சரி என்று ஒருமனதாக ஊட்டியில் அறையில் தங்க முடிவு செய்தோம்... இதற்கிடையே கொண்டு சென்ற கேமிரா போன்களின் பேட்டரி லோ என்று காண்பித்தது... பேட்டரி சார்ஜரும் கொண்டு செல்லவில்லை. இன்னும் அறையும் பதிவு செய்யப்படவில்லை.. வேறு யாரோ அறையைக் காலி செய்ய இருப்பதாகச் சொல்லி வரவேற்பறையிலேயே தங்க வைத்தார்கள். சரி இந்த விஷயத்தைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று சரியாக 7 மணிக்கு சாப்பிட கிளம்பினோம். செல்லும் வழியிலேயே எங்களுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. கண்கள் பாதையைக் காணாமல் பேதையைக் கண்டது. ஒருவழியாக மூன்று கிமீ வரை நடந்து வந்து ஏதாவது பொருட்கள் வாங்கலாம் என்று ஒரு கடைக்குச் சென்று நாங்கள் செய்த கூத்து இன்னும் நினைவிருக்கிறது.
ஸ்கூபி பைனாகுலர் வாங்குவதாக விலை விசாரித்தான்.. 300 க்கும் மேலே விலையைச் சொல்ல, அவன் குறைக்கச் சொன்னான்.. கடைக்காரனும் வாங்குவதாக இருப்பின் நிச்சயம் குறைப்பேன் என்றும் பைனாகுலர் ஜூம் 2 கி.மீ தாண்டும் என்றான்... நான் வாங்கிப் பார்த்தேன். அது 50 அடியைக் கூட உறுப்பிடியாக ஜூம் செய்யவில்லை.. ஆதலால் 160 ரூபாய்க்குக் கேட்டான்.. கடைக்காரனும் ஒத்துக் கொண்டான்.. இருப்பினும் எங்களுக்குத் திருப்தி இல்லை.. கடைசிக்கு 1 கி.மீ ஜூமாவது ஆகவேண்டும்.. இது பக்கதிலிருக்கும் ஒரு பலகையைக் கூட ஒழுங்காக காண்பிக்கவில்லையாதலால் நாங்கள் வேண்டாம் என்று ஒதுங்க, அவனோ பெரும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டான்.. நான் அமைதியாக இருந்தேன்.. ஸ்கூபி திட்ட, அவன் திட்ட, இறுதியில் நாங்களே வெளியேறினோம்.. நேரே இசைக்கச்சேரி நடந்த இடத்திற்குச் சென்றோம். மனம் நிலைகொள்ளவில்லை.. சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்ல முடிவெடுத்து திரும்புகையில் ஒரு சம்பவம்.
ஒரு ஆள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணை இடித்துவிட்டுச் சென்றான்... எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். ஏனென்றால் சில பெண்களே வேண்டுமென்றே எங்களை இடித்த சம்பவம் நடந்தது அங்கேதான்.. ஆனால் அந்த ஆசாமி இடித்த முறையும் கைபட்ட இடமும் அறுவறுக்கத் தக்கவகையில் இருந்தது. அந்த பெண் மிகவும் சோகமாக இருந்தாள். அவளோட அப்பா அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்... அவனோ எப்படியோ தப்பி அடுத்த பெண்களை இடிப்பதற்குச் சென்றுவிட்டான்... பெண்களை ரசிக்கலாம் கமெண்ட் அடிக்கலாம்.... ஆனால் இப்படி தகாமல் புண்படும்படி நடப்பது வேதனை.. அநாகரீகம்..
இப்படியே சிறிது நேரத்தில் அதாவது 9 மணி அளவில் ஹோட்டலுக்குச் சென்றால் அறைக்கு வாடகை 1500 என்றும் அதற்கு வேறு ஆள் வந்துவிட்டார்கள் என்றும் சொல்லவே, எங்களுக்கு திக் என்று ஆகிவிட்டது.. ஊட்டியில் 9 மணிக்கு அதுவும் அந்த கடும்குளிரில் வண்டியை எடுத்து 100 கி.மி தொலைவில் உள்ள எங்கள் வீட்டுக்குச் செல்வது நடக்கக் கூடிய காரியமா? நினைக்கும்போதே நடுக்கமாக இருந்தது.. ஹோட்டலைவிட்டு வெளியே நின்றோம்... ஒருவித பயம் எங்களைத் தாக்கியது...

19.5.07

மறந்துவிட்டதாய்

|

கிண்ணச் சோறுகளில்
எண்ணை பூசிய உணவுகள்
அடமற்ற பிள்ளையாகி
அன்பூட்டத் தின்றேன்.
நிலவு கோபிக்கவில்லை
பூச்சாண்டிகள் தோன்றவில்லை.

காலத்தை நீராய்
ஒழுக்கிய அரக்கனால்
ஊட்டல் குறைந்து
ஊட்டம் மிகுந்து
காளையன் நான் அவள்
கழுத்தைத் தாண்ட
பிடி விலகிய கயிறாய்
நழுவல் கண்டேன்.
உண்டவைகள்
செருக்கெடுத்து ஓடியது.

நித்திரைக் கனவுகள்
தாண்டிப் போய்
நிஜக் கனவுகளைத்
தோண்டி
வாழ்விலொருத்தி
வந்து சேர்ந்தாள்
வாழ்விலொருத்தி
இழக்கக் கண்டேன்

முன்பெல்லாம் பசிக்கையில்
அம்மா என்பேன்.
இன்று தேடுகிறேன்
மனைவியை!

தேகங்களில் நீர்படர்ந்தவாறே
வர்ணக் கலவைகளை
அப்பிக் கொண்டு
மிதக்கும் கனவுகளில்
தூரிகைகள் துடைக்கப்படுகிறது
ஓவியனின் எச்சிலில்..

கூர் விழுதுகளால்
நேர் பார்க்கப்பட்ட
வர்ணக் கோலங்களைத்
தூக்கிக் கொண்டு செல்லும் முன்
மனம் கனக்க
பார்வையிடுகிறான்
கனவுகள் ஒடிந்த
கண்களில்

விட்டுப் போன தூரிகைகளை
பிணமாக்கி ஓடுகிறது
எலிக் குஞ்சுகள்.
வர்ணப் பெட்டிகளை
விசிறியடித்துச் செல்லுகிறது
பூனைக் குட்டிகள்

எல்லாம் எழுதியவை
வாங்கித் தருமோ?

கனவுகளை
வாங்குவார் யாருமில்லை
கனவெனப்பட்ட கைங்கரியங்களை
வாங்குவாருண்டோ?

என்றாவது ஒருநாள்
விற்கப்படும் அந்த ஓவியம்
அதுவரை தூரிகைகள் அற்ற
ஓவியக் கூடத்தை
எலிகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்கும்..

16.5.07

பிளவுபட்ட கரைகள்

|

நீர்தேடச் சென்று
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாதைகளில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.

ஊதமுடியா சங்குகள்
வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது

பிழிந்த வியர்வைகள்
மகிழ்கின்றன
இன்றாவது இங்கே
இருக்கிறோமே என்று..

தொண்டை அடைத்த
ரணத்தோடு
ஓவியங்கள் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.

நிலவெடுத்துப் பண்படுத்திச் சிக்கிய கூந்தல்
உலகெடுத்துக் கொத்திய ஏந்திழை - ஈசன்
வலமிருந்து போற்றும் மறத்தி மனதை
சிலைபடுத்தி சிற்பிகள் அப்பிய சிற்பம்
அலைநிறுத்தி ஆழ்படுத்தி வங்கத் துமைநீ
முலைநிறுத்தி ஊண்தரு வாயே உனையே
கலைமகளே காண்பேனோ நான்.

12.5.07

எங்கே என் காதலி?

|

எங்கே என் காதலி?
விழித்திரையை மூடியெழும்போது
முன்னே நிற்பவர்களின் ஒருத்தி
என் காதலியா?

விரல்கள் அழுத சில வார்த்தைகளில்
நிஜமாய் உதித்தவள்
என் காதலியா?

இருள் படர்ந்த விண்ணுக்குள்
இன்னும் புலப்படாத
தூரத்தில் நகைத்துக் கொண்டிருப்பவள்
என் காதலியா?

எங்கே என் காதலி?
உடல்களை விரும்பும்
உணர்வற்றவர்கள் மத்தியில்
உலவும் என்னையும்
தவறாய் நினைத்துக் கொண்டாளோ
என் காதலி?

சொற்களைப் பிடித்து
பாடல்கள் எழுதினேன்
உணர்வுகளைப் பிடித்து
கவிதைகள் எழுதினேன்
எவளைப் பிடித்து
வாழ்க்கை எழுத?

எங்கே என் காதலி?

- காதலின்றி வாடும் கவிஞன்.(:D)

சுள்ளுனு காத்து அடிக்குது ஊருக்குள்ள,
மே மாசம் வேறயா, வெயிலு கொளுத்துது. கண்ணு திறந்து சனத்தைப் பார்த்த போதும்ல, ஒரே வலியாத்தான் இருக்கும். செருப்பு இல்லாம அங்கிட்டு இங்கிட்டு நெகர முடியாதே மண்ணா இருந்தாலுஞ் சரி தார் போட்டு இருந்தாலுஞ் சரி. வெளுத்துப் புடும்.
கருங்குதிர காயைப் பொறுக்கறதுக்கு கிளம்பினான் காலாங்காத்தால. பல்லு வெளக்கல, வாயைக் கொப்புளிக்கல, இஸி கூட பேழல, என்ன செய்யறது. கிழவி காத்தால இருந்தே கத்துச்சு,
டேய் கிறுக்குபைய மவனே! கவுண்டர் ஊட்டுல ஊருக்காரய்ங்க மேஞ்சுபுடுவாங்கய்யா! வெல்லனே போய் காயைப் பொறிடா!, இல்லனா காண்டி அள்ளிட்டு போய்டுவாங்க,
இரு த்தா, இப்பொதான் சிம்பரன் கூட கூத்து கட்டியிருக்கேன். இப்ப போய் எழுப்பீட்டு
அடி த்தா, செருப்பால, அவனவன் ஊருல உசிரில்லாம திர்றான், உனக்கு மார்ல மசுறு வேணுங்குதா, எந்திர்றா,
சொன்ன கிழவி, சீவக்கட்டைய தூக்கிட்டு வந்துட்டா, கருங்குதிர இதுக்குமேலயும் கனவு கண்டான்னா, நாளப்பண்ண புது வெளக்குமாரு வாங்கோனும்.
பொறுங்க ஆசாமிகளா, இவேன் பேரு கருங்குதிர இல்ல. வேலைச்சாமி. எப்படி இந்த பேரு வந்துச்சுனு கேக்கிறீங்களா? இருங்க சொல்லுறேன்.
வேலைச்சாமியோட பாட்டன் காலத்துல இவனோட பாட்டனுங்க பொய்கால குதிர ஆடிப் பொழச்சவனுங்க, அந்த காலத்துல தேவய்யா கூத்துன்னா, கூழுக் கம்பக் கூட கீழ ஊத்திட்டு வருவாய்ங்க, அத்தன பேமசு, தேவய்யா ஒரு நாளு செத்துப் போனாரு, மனுசன் பொறந்தா செத்துதான போகனும். அவன் மகன் வந்தான், கருமூஞ்சி னு பேரு.. தேவய்யா அந்த காலத்துலயே கலப்பு கலியாணம் புடிச்சாரு. அதனால அவன் சாதிக்காரங்க ஒதுக்கிப்புட்டாங்க, தேவய்யா சம்சாரத்தில இப்படித்தான் பேரு வெப்பாங்களாம்ல, கருமூஞ்சி, வெள்ளைப் பன்னி, பணியாரம், இப்படித்தான் பேரு இருக்கும். சரி, கருமூஞ்சி ஓரளவுக்கு குதிரக் கூத்து ஆடினாலும் அவனுக்கு இதுலெல்லாம் இஷ்டமில்ல. இவிங்க ஊரு நத்தம் பக்கதுல கொத்தம்பட்டி கிராமம். கயிறு திரிக்கிறதுதான் இங்க தொழிலே. கட்டுக் கயிறு ன்னு சொல்லுவாங்க. மக்க ஒரு பக்கத்துல தென்னைமட்டைத் திரியை வெச்சுக்குட்டு நீளமா இழுப்பாங்க, எடையிடையே திரிய வச்சு தேச்சுக்கிட்டே திரிக்கணும்.. அந்த தொழில்லதான் கருமூஞ்சிக்கு நாட்டஞ் ஜாஸ்தி. இவன் காலத்துலயே எம்சிஆரு படமெல்லாம் திருவிழாவுல ஓட்டுவாய்ங்க,. சனங்க அதப் பாக்க வெள்ளமாட்டம் ஓடுங்க. பொய்கால் பொய்ச்சுப் போச்சு அப்பவே! கருமூஞ்சி மவன்ந்தான் கருங்குதிரயோட அப்பன். இவனுக்கு கோடிசாமினு பேரு.. ஊரு கோடியில இருக்கற சாமிய வேண்டி மகன் பொறந்ததால கருமூஞ்சி, கோடிசாமினு பேர வெச்சான்..
கோடிசாமி நல்லா கருகருன்னு காக்கா மாதிரி இருப்பான். இழவு சாதி பிரச்சனை மட்டும் இல்லாங்காட்டி பயபுள்ள விசயகாந்த் மாதிரி கும்ம்னு ஆயிருப்பான்... சாதி சாதின்னு இவன அடக்கியே போட்டாய்ங்க,. பாவம் கோடிசாமி, சிறுத்து கருத்து போய்ட்டான்.. அப்படி இப்படியுமா காசச் சேத்து பொண்டாட்டி மூக்கி ய கட்டிகிட்டான். இதுகளுக்குப் பொறந்து தொலைச்சுது வேலைச்சாமி. கோடிசாமிக்கும் கொடுத்து வெக்கல.. வெள்ளனே போய்ச் சேந்துட்டான்.
அம்புட்டுத்தான். வேலைச்சாமி பரம்பரை கத. ஆளும் ஒசரமா கருப்பா இருப்பான் பாருங்க, அதனால ஊருக்காரங்க கருங்குதிரன்னே கூப்பிட்டாங்க.. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, அந்த காலத்தில இருந்தே அய்யாரு முதக்கொண்டு குதிரக் கூத்துத் தான் ஆடுவாங்க, வேலைச்சாமி காலத்தில அங்கிட்டிங்கிட்டு ஏதோ நடக்கும். அதுக்கே பக்கத்து கிராமத்துல போட்டி வேற..
இப்படித்தான் பாருங்க, மகமாயி கும்பாபிசேகம் ஒருநா நடத்திச்சி. கிழவி இவன மேக்காப்பு போட்டு பொய்க்கால் குதிரயை ரெடி பண்ணி அனுப்பி வெச்சுது. இவனும் ராசாவாட்டம் போனான்.. குதிரைய தூக்கிட்டுத்தான் போகோணும். கூட ஆடறதுக்கு, இளத்தி, வெங்காயி, முனிம்மா அதுகூட சம்புலி, கடப்பாரை எல்லாம் போவாணுங்க,, எல்லாருமே கயிறு திரிக்கிறவனுங்கதான்.. கூத்து நடக்கறப்ப ஊருக்குள்ள சனங்க யாருமே வேலக்கி போகமாட்டாங்க.. ஆத்தா கோயிலுக்குள்ள இவனுங்கள தூர நிக்கவச்சே பாக்க உடுவானுங்க. ஏதோ பாத்தமா கும்புட்டமான்னு கிளம்பிப் போயிருவானுங்க..
ஆட்டம் போடற அன்னிக்கி, கம்பு, சிலம்பு, ஒயிலாட்டம், நாட்டுப்புற கெழவி பாட்டு அதுகூட குத்துப்பாட்டு கூட பாடுவாங்க.. ஊடால பொய்க்கால் குதிரையை இவங்க ஆட்டோனும். ஊடால பாட்டு பாடுவாங்க பாருங்க, அடா அடா.... நம்ம தமிழ்நாட்டுல நல்லது செத்துப்போவுது, உள்ளது வெளங்காம போவுது... ஒரு பாட்டோட நாலுவரி எடுத்து உடறேன் பாருங்க ஆசாமிகளா..
மச்ச முள்ள புள்ளக் காரி நீஉச்சங் காட்ட ஆட வாடிகுருவி ரெண்டும் ஆடக் கண்டுஊருக்குள்ள அலம்பல் தாண்டீ..
வயிர நிரப்ப ஆச மச்சான்எனக்குமானம் ரோசம் கூட வெச்சான்.மானம் ரோசம் இல்லாட்டினா நானும்ஓங்கூட வே பாசம் வெப்பேன்..
ஓங் கூட வே பாசம் வெப்பேன்...
பருவம் வந்த சின்னப் புள்ள நீயும்உருவம் கொஞ்ச சின்ன புள்ள.ஊரு சனங்க உன்னைப் பாக்கஆறு வருசம் ஆகுமடி..மூனு நாளா கஞ்சி இல்லமூஞ்சப் பாத்து சொல்லு புள்ளதேரு இழுக்க தெம்பில்லாமகூத்து கட்டப் போறேன் புள்ளகூத்து கட்டும் ஆளை நீயும்பாத்துக் கட்டுடி கூண்டுக் கிளியே!
இப்படி இடையிடையில வரிக வரும்.. எழுதுன ஆசாமி எப்பவோ செத்துப்போய்ட்டான், இன்னமும் பாட்ட மாத்தல.. இப்படி ஆடிட்டிருந்தவன் சும்மா இல்லாம, குதிரையை வெச்சு மேல்சாதி புள்ளைய இடுச்சுப் புட்டான். அதுக்கு வந்தது பாருங்க கோவம். ஓடிப் போய் அப்பன்கிட்ட சொல்லிப்பிடிச்சு. அவன் சும்மா உடுவானா? ஆள இழுத்து வந்த நாலு சாத்து சாத்தி குதிரையை ஒடச்சிப் போட்டுட்டானுங்க...
பாவம் கருங்குதிர, அத வெச்சுத்தா ஆட்டம் போட்டுட்டு திரிவான்.. அதையும் ஒடச்சி போட்டுட்டானுங்களே!
கவுண்டர் ஊட்டுல காயைப் பொறிக்கரதுக்கு போனான்.. கவுண்டரைப் பார்த்தான். அவர் காலுமேல காலு போட்டு இங்கிலீசு பேப்பரு படிச்சுட்டு இருந்தாரு. போய் நடுங்கிட்டு நின்னான்...
" அய்யே. காயி பொறிக்கிறதுக்கு வந்தேஞ் சாமி.."
கவுண்டர் வேலைக்காரியப் பாத்து, " ஏலா! தா, இவன் காயி பொறிக்கனுமா, தோட்டத்துக்கு கூட்டி போ, கிலோ போட்டு வித்துரு. டேய் குதிர காசுகீசு ஒழுங்கா குடுத்துரனும்டா, இல்லா நாளப்பண்ண பொறிக்கப்படாது.
" சரி சாமி"
கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..
" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"
" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"
" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."
" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..
" சரிங்க சாமி"

கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..
" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"
" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"
" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."
" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..
" சரிங்க சாமி"
கருங்குதிர ஆகாசத்துல பறந்தான்... பின்ன,, புதுக்குதிர வருதுல்ல... கெழவிகிட்ட சொன்னா அது சிரிக்கும்... நல்ல சோறு நாலு நாளைக்கு கெடைக்கும். மிச்ச காசு இருந்திச்சினா, மதுர போய்ட்டு வரணும். கெழவி ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்திச்சி.. அது மண்டையபோடரதுக்குள்ள மீனாச்சி அம்மனை கண்ணுல காமிச்சரனும்... பாவம்.. அப்பன் இருந்தப்பவும் அழுகுது. மகன் இருந்தப்பவும் அழுகுது. சந்தைல காயை வித்துட்டு வூட்ட நெருங்கினான்..
கெழவி கயித்துக்கட்டில்ல படுத்துகிட்டி இருந்துது. காதுல வெசயத்த போட்டுட்டம்னா கொஞ்சம் சந்தோசப்படும்னு கருங்குதிர வெசயத்தைச் சொன்னான்.. கெழவி அன்னிக்கித்தான் பொறந்துச்சு போல... மூஞ்சி இளசாயிருச்சு..
அன்னிலிருந்து கருங்குதிரைக்கு அயிரமீனுதான்,வெள்ள சோறுதான், ஒரே கூத்து தான் போங்க.. கவுண்டரு சொன்ன நாளு வந்திச்சி. நல்லா மாப்ள கணக்கா துணியைப் போட்டுட்டு கவுண்டரு ஊட்டுக்குப் போனான்.
" சாமி. குதிரைக்கு காசு கொடுக்கம்னு சொன்னிங்க.. "
" ம்ம்.... வட்டிப் பணம்டா... வெள்ளனே கொடுத்துடு. இல்லாட்டி ஊட்டை எழுதி வாங்கிப்புடுவேண்டா.... "
" இல்லசாமி. சரியா கொடுத்தறேன்."
" ஏ தேவி.. இந்த கருவாயன் வந்து நிக்கான். அந்த பணத்தைக் கொடுடி.."
தேவி கவுண்டரு சம்சாரம்.. நல்லா கொழுகொழுன்னு இருக்கும் கழுத... கவுண்டரு நல்லவரு. இந்தம்மா நேரெதுக்கே. காசை அவன் கையில லொட் டுனு திணிச்சுட்டு மொறைச்சுட்டு போயிருச்சு..
" தோ பார்றா... அடுத்தவன் காலை மிதிச்சேன், கைய மிதிச்சேனுட்டு குதிரய ஒடச்சுப் போடாதடா.. அம்புட்டுத்தான் சொல்லுவேன்."
" வரேங் சாமி"
கையில் காசு, கண்ணுல கனவு... கருங்குதிர இப்ப நெசமாவே குதிர ஆயிட்டான்.. ஒன்னும் புடிக்க முடியல. பயபுள்ள கெழவிகிட்ட போய் காசக் கொடுத்தான்.. கெழவி அம்புட்டு காசப் பாத்ததே இல்ல.. ரொம்ப இல்லசாமி, ரெண்டாயிரம் ரூவா. எங்கிட்டு போய் சம்பாரிக்க,? எப்படி அடைக்க?.. குதிரை ஆயிரம் ரூவாக்கு வாங்கிப்புடலாம். மீதி என்ன செய்யறது?.
" கெழவி. என்னை நம்பி கவுண்டரு ரெண்டாயிரம் ரூவா கொடுத்தாரு தெரியும்ல.. நம்ம பேரைக் கேட்டாலே கவுண்டரு நடுங்குறாரு தெரியுமா.. சரி சரி. சந்தையீல மாடன் இருப்பான். அவண்ட சொன்னா குதிர செஞ்சு கொடுப்பான்.. என்ன, கொஞ்சம் காசு செலவாகும். தண்ணி வாங்கி கொடுத்தா கொள்ள அழகா செஞ்சு கொடுப்பான்.. என்ன சொல்ற கெழவி?"
" தே, நேரா மதுரைக்கு போவோம்டா. அங்கிட்டுதான் நல்ல கட்டை விக்கிறானுங்க. மாடஞ் சொன்னான், மண்ணாங்கட்டி சொன்னான்னு காச கரியாக்காதே. "
" அதுவுஞ் சரிதான். "

கெழவி கூட கருங்குதிர போனான்... மதுரைக்கி. மீனாச்சி அம்மாவை பாத்துப்புட்டு, நல்ல பொய்க்கா குதிர வாங்கிட்டு ஊருக்கு வந்தாங்க... மனசெல்லாம் ஒரே சந்தோசந்தான். ஒன்னும் சொல்றாப்டி இல்ல... மதுரைக்கு போனப்போ ஆத்தாவ கூட்டிட்டுபோய் ஓட்டல்ல புரோட்டா வாங்கிக் கொடுத்தான்... கெழவி இதுக்கு முன்னாடி தின்னதே இல்ல. நமுக்கு நமுக்குனு ஒரே மூச்சுல தின்னுபுடுச்சு.. ம்ம்.... இதுகளுக்கு இப்படியும் ஒரு சந்தோசந்தான்..
உன்னும் ஒருவாரந்தான் இருக்கு. பங்குனி திருவிழாவுக்கு... பதினாலு நாளு ஊரே கலகலனு இருக்கும்.. தெனமும் கூத்து கட்டுவாங்க... பொய்க்கால் குதிர ஆட்டம் ஒருவாரமாவது நிக்கும்.. எப்படியும் ஐநூறு ரூவா அடிச்சுப்புடலாம்.. கருங்குதிர நல்லா கணக்கு பன்னீட்டு இருந்தான்.
திருவிழா வந்திருச்சி,. புது சட்டை, புதுவேட்டி, புது பொய்க்கா குதிர. எல்லாமே புதிசு. சம்புலி ஊட்ல போயி குதிரைக்கு அலங்காரம் பண்ணீட்டு இருந்தான். ரெண்டு பேருமா சேந்து கடப்பாரையைக் கூட்டிட்டு போனாங்க.. விழா கமிட்டிக் காரனுங்க திடீர்னு இவனுகள தனியா கூப்புட்டானுங்க..
" ஏ! இந்த தடவ கூத்து இல்லப்பா, "
" என்னா சாமி. இப்படி சொல்லி வயித்துல ஆசீட்டு ஊத்துறீங்க.. இத வெச்சுதானே எங்களுக்கு பொழப்பே நடக்கி."
" ஏ என்ன வெளயாடரயா? என்னிக்காச்சி கூத்து நடக்கும். அது உனக்கு வருசம் பூராவா கஞ்சி ஊத்துது. வெலங்காத பயலுகளா... இந்த வருஷம் சினிமா ஓட்டறம்டா..""
" அப்பறம் எதுக்கு சாமி எங்கள வரச்சொன்னீங்க"
" வந்திட்டீங்கல்ல.. அன்னதானம் நடக்கும். போய்த் தின்னுட்டு ஊட்டுக்குப் போற வழியப் பாருய்யா... "
" சாமி.."
போய்ட்டாரு... கருங்குதிரைக்கு இப்படி ஒரு சோதனை வரும்னு யாருமே எதிர்ப்பாக்கல. பாவம். கவுண்டரு கொடுத்த ரெண்டாயிரத்த அப்படியே செலவு பண்ணிப்புட்டான்... ஏதோ கடை கன்னி வெச்சிருந்தா பொழச்சிருப்பான்.. எழவு கூத்து கூத்துனு இப்படி வாழ்க்கையில கூத்து அடிச்சுப் புடிச்சே இந்த பாழாப் போன சினிமா... அசராம எப்பவும் இருக்கற கடப்பாரை அழுதே போட்டான்.
மெதுவா நடந்து ஊட்டுக்கு வந்தானுங்க.. கருங்குதிர கெழவிகிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தான்...
" கெழவி, தா கெழவி,, இந்த வருஷம் கூத்து இல்லியாம்.. சினிமா ஓட்டறானுங்களாம். ஏமாத்திப்புட்டானுங்க படுபாவிங்க" அப்படின்னே அழுதுட்டான்... கெழவி கயித்துக் கட்டில்ல படுத்திருந்துச்சு..
" கெழவி, சோறு போடு , அந்த நாய்ங்க அன்னதானம் பண்றாங்க. என்னால அது சாப்பட முடியாது. எந்திரி கெழவி."
கெழவி அசரவே இல்ல. இவன் போய் உலுக்குனான்.. அது நிரந்தரமா போய்ச் சேந்திருச்சு..
கெழவி சந்தோசமாத்தான் செத்துருக்கு... பாவம் கருங்குதிர. அத நம்பிதான் இருந்தான். போய்ச் சேர்ந்திருச்சி.. அதோட கையில பழைய குதிரையோட மேல்துணி கெடந்திச்சி.
கருங்குதிர குதிரக்கட்டையே வெறுத்துப் பார்த்தான்.

அன்று
வென்றவர்களை
அநியாயமாக
கொன்றார்கள்
இன்று
கொன்றவர்கள்
அநியாயமாக
வென்றார்கள்...

3.5.07

விதிகள்

|

விதிகளை வென்றதாகச்
சொல்லப்பட்டது.
இலக்கணங்கள்
செத்துக்கொண்டிருக்கின்றன....

3.5.07

கவிதை

|

நாட்டிலே நூறு கவிகள்.
ஆளுக்கோர் புத்தகம்
ஆயிரம் அச்சிட்டனர்.
நூறு புத்தகங்கள்
விற்று தீர்ந்தன.!!

2.5.07

விதிகளை உடைக்கவா?

|

நொடிகள்
மழையிலழிந்த கோலமாய்
உருகிக்கொண்டிருந்தன.
காலங்கள் வழிந்துகொண்டிருந்தன.

பெருக்கெடுத்து ஓடும்
வியர்வைகள்,
முகச்சுருக்கத்தைக்
காணாமல் ஓவியமாய்த்
திகழ மறுத்தன.
குங்குமத்தைக் கலைப்போமா
என்று இல்லாத பொருளைத்
தேடி அலைந்தன.

கண்கள்
கண்டவர்களைத் தேடின.
காட்சி பிழையானது.
நெஞ்சம் பெருத்து இறங்கியது.
காற்றோ சுவைத்து மகிழ்ந்தது.

ரணம் சூழ்ந்த காலத்தை
மறந்துபோய்
மீண்டுமொரு மீண்டெழுதல்
கிட்டுமா என்று
படபடக்கிறது இமைகள்.

ஏழாவதாக கிட்டய சுவை
மீண்டும் வருமா
என்று தவிக்கிறது அதரம்.

வீணில் கழிகிறது
தேகம்
கனவுகள்
வெடிக்கிறது இரவில்..

என்ன செய்வது?
உறவுகள் சொப்பவில்லை
மறுஉறவுக்கும் ஒப்பவில்லை.

உணர்வுகளைப் புதைத்து
அதன் மீதமர்ந்திருக்கிறார்கள்.

நான் எழுந்திடவா ?
தூங்கிவிடவா ?

நானும் கெல்லி கிளார்க்ஸனும்

சிறு பிராய பொழுதினில்
மழைத்துளி கண்டு
ஒதுங்குவேன்.
கிரகண காலத்தைக்
கண்டஞ்சி ஜன்னலின்
உட்புறம் அமர்ந்து ரசிப்பேன்.
வானவில்லின் நிறங்களை
எண்ணி வர்ணக்கலப்பு செய்வேன்.
தூக்கம் வந்தால்
வேப்பமரத்தின் மடியில்
நித்திரை ஆட்கொள்ளுவேன்

இன்றோ,
முகிலெடுத்து
என் மனதில் ஒளித்து
மழையின் கண்ணீரைக்
கண்டு ரசிக்கிறேன்
சந்திரனை நிறுத்தி
கிரகணத்தைக் கொஞ்சம்
தள்ளிப் போடுகிறேன்
வானவில்லைக் குடைந்து
அதைப் பூவாய் சூட்டிக் கொள்ள
வில்லெடுத்து புறப்படுகிறேன்.


பிராயமாற்றத்தில்
ஏக மாற்றங்கள்.
என் கண்களில் விழுந்த
மழைத்துளி இன்றும்
நினைவிருக்கிறது எனக்கு,.
எளிதில் மறக்கக் கூடியதல்ல
சிறுவயது காதலனை...
இன்று நான் எத்தனையோ
கனவுகளில் கன்னியாக
இருந்தாலும்..

2.5.07

Mr.Bean's Holiday

|

மிஸ்டர் பீன் பட வரிசைகளை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் வயிறு குலுங்கச் சிரிக்கும்படியான முழுநீள காமடிப் படம் கொடுத்திருக்கிறார்கள்...
ரோவன் பற்றி சொல்லவேண்டியதில்லை.. என் வாழ்நாளில் ஒரு நடிகரைப் பார்த்ததும் சிரிப்பு வருகிறது என்றால் அது ரோவனை மட்டுமே குறிப்பிடுவேன்... இனி அவர் பீன் என்றே அழைக்கப் படுவார்..
அதே கார் ; அதே கோட்டு சூட்டு... எல்லாம் அதே! லண்டனில் ஒரு பரிசுப் போட்டியில் வெற்றி பெரும் பீன் அதன் பரிசாக ஒரு டிஜிட்டல் வீடியோ கேமிராவையும் பாரீஸிலுள்ள கான்னஸ் பீச்சுக்கும் செல்ல தேர்வாகிறார்.. கிறுக்குத்தனமான நடவடிக்கையால் ஒரு பயணியையும் அவரது மகனையும் பிரித்துவிடுகிறார். அந்த மகனும் பீனும் அடுத்த ஸ்டேசனில் இறங்கி நிற்கும்போது அந்த பயணி அடுத்த ரயிலில் செல்கிறார்... அந்த ரயில் நிற்காமல் சென்றாலும், அவர் எழுதிவைத்த போன் எண்ணை கண்ணாடி வழியே காண்பிக்க, பீன் , தான் கொண்டுவந்த கேமிராவின் உதவியால் அதை வீடியோ எடுக்க, இறுதியில் அந்த போன் எண்களின் கடைசி எண்ணை வீடியோவில் சரிவர பதிக்காமல் போனார்... பின்னர் இருவரும் அடுத்த ரயில் ஏறுவதற்குள் மறந்தவாறு போன் செய்யும் இடத்தில் தனது பர்ஸையும் பாஸ்போர்ட்டையும் வைத்துவிட்டு ஏறிவிடுகிறார் பீன்.. டிக்கெட் இல்லாததால் அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிடப்படுகின்றனர், பின்னர் இருவரும் மிகவும் சிரமப் பட்டு பணம் சேகரித்து ஓரிடத்தில் இருவரும் பிரிந்து பின் கதாநாயகியுடன் சேர்ந்து, ........ இறுதியில் அந்த பயணியிடம் அவர் மகனை ஓப்படைத்தலும் கான்னஸ் பீச்சுக்குப் போய் சேர்தலுமே கதை...
இடையிடையே நடக்கும் கூத்துக்கள் அடேயப்பா!! நான் மூன்றுமுறை பார்த்தேன்... எல்லா இடத்திலும் சிரிப்பு மீண்டும் மீண்டும்.... பட ஆரம்பத்தில் பரிசுப் போட்டி அறிவிப்புகளோடு ஆங்கில டயலாக் முடிந்துவிடுகிறது.. பிறகு வசனமே இல்லை. முழுவதும் இசைதான். காமிரா கையில் கிடைத்ததும் பீன் செய்யும் லோலாயங்களுக்கு அளவே இல்லை.. ஒவ்வொரு காட்சியும் அதிரடி சிரிப்பை வரவழைக்கிறது.
ரயிலை மிஸ் செய்வதும், ரெஸ்டாரெண்டில் பிடிக்காத உணவை சாப்பிடுவதுபோல நடித்து அடுத்தவர் கைப்பையில் உணவைப் போடுவதும், அந்த பயணியிடம் காமிராவைக் கொடுத்து படமெடுக்கச் சொல்லுவதும், அப்பப்பா!! என்ன ரகளை!!! அதோடு விட்டாரா? ஒரு எண் விடுபட்டுவிட்டது என்பதால் இருக்கும் எல்லா எண்களுக்கும் போன் செய்து யாரென்று கேட்பது... தவறிப்போய் பாஸ்போர்ட்டையும் பர்ஸையும் விட்டுவிட்டு, பாட்டுப் பாடி பணம் சேகரிப்பதும் காமடியில் கலக்கல்...
ஒரு பஸ் டிக்கெட் தவறி கீழே விழுந்து அது ஒரு கோழியின் காலில் ஒட்டிக்கொண்டு அதைத் துரத்தப் போய் கோழிப்பண்ணைக்கே செல்வதும் அதைப் பிந்தொடர்ந்து சாலையோரத்தில் யாராவது தன்னை ஏற்றிக் கொள்ளமாட்டார்களா என்று கைகாட்ட, வெகுதூரத்தில் ஒரு வண்டி மிகமிக மெதுவாக வர, அதற்க்காக காத்திருந்து காத்திருந்து, ஒருவழியாக அந்த வண்டி வந்துசேர,, அதையும் பீன் விடாமல் லவட்டப் பார்க்க, வண்டியின் உரிமையாளர் நடந்துவந்தே அந்த வண்டியைப் பிடுங்குவார் பாருங்கள்..... காமடியின் உச்சம் இது... கண்களில் தண்ணீர் வர சிரித்துப் பார்த்தோம்... அத்தனை காமெடி... இப்படியொரு காமடியை கண்டதே இல்லை யாம்..
கதாநாயகி.... என்ன ஒரு அழகு... (சூப்பர் ஃபிகரு மச்சி) திரைப்படத்தில் நடிக்கும் நடிகையாக வருகிறார்... பீனின் காரில் இருவரும் பயணிக்க ஒரே கூத்து... இறுதியில் தான் நடித்த படத்தில் ஒரு முத்தக் காட்சி இடம்பெறவில்லை என்று வருத்தமாய் இருக்க (ப்ரிவியூவில்) பீன் தான் கொண்டுவந்த காமிராவில் ஏற்கனவே எடுத்த கதாநாயகியின் மூவி க்ளிப்புகளை ஆப்பரேட்டர் அறைக்குள் சென்று ஓட்டி விடுகிறார்... இதன்காரணமாக அந்தப் பையனை அவனுக்குரிய பெற்றவனிடம் ஒப்படைப்பதும் இங்கேதான்... அருமையாக கதை முடிந்து இருக்கிறது.. பீனின் கனவுப் பயணமான கான்னஸ் பீச்சும் தியேட்டருக்கு அருகே இருக்கக் கண்டு அவர் செல்லும் விதம் கூட அருமை...
படம் பார்க்க இருப்பவர்கள் கைக்குட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டும்... சிரித்து சிரித்து கண்களில் நீர் வரும் நிச்சயமாக... வயிறுவலி மாத்திரை அவசியம் வேண்டும்...

தூறல்களில்
தொலைந்துபோனது
துவண்டு கிடக்கும்
துற்வாசர்களின்
துஞ்சல்கள்.

மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்.
மச்சமுள்ளவனைத் தொட்டு
பிச்சை போடுவாளாம்
வாருங்களடா செல்லுவோம்.

கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.

காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.

போகும் வழியில்
பானம் இருந்தால்
கொஞ்சம் இடுக்கில் வை
அவளோடு ஊற்றிக் கொள்ள..

இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்.

" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"

அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்
காட்டுகிறேன்.

18.4.07

கல்லறைகூவல்

|

தேய்ந்துபோன வானத்தினடி
தேயத்துடிக்கிறது
தேனிலா

முட்டி மோதி விருட்சமாய்
மலர நினைக்கும் மேகத்தை
விலக்கிவிட்டு புணரத் துடிக்கிறது
பகலவனும் பல்லவியும்.

இடையிடையே உதிர்ந்த
ரத்தங்களைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டு
பொத்தி வைக்கிறது
நிலமெனும் அரக்கி.
நெஞ்சில் புண்களை விதைத்து
அறுவடை செய்யும் கிழத்திபுற்களுக்கூடான பாதையில்
நடை தளர்ந்து
போய் நிற்கிறது
ஒரு ஆவி
அதன் கையில் விண்ணை
வெடிக்கச் செய்யும்
ஒலிப் பெருக்கி.

அறைகூவலுக்குத் தயாரான
நிலையில், சொறிந்துகொண்டிருந்த
இரத்தப் பிழம்புகளை
வெறித்துப் போய்
பார்த்துக் கொண்டே
கண்களை மிரட்டுகிறது
கல்லறையை வாடகைக்குப்
பிடித்துத் தொங்கும் பேய்.

முருங்கை மரத்து நண்பர்களும்
நெஞ்சு பிளந்து தின்னும் எதிரிகளும்
உறங்கியே உடைந்துபோகும்
உறவினர்களும்,
இன்னும் பல இத்யாதிகளும்
இரைக்கும் கூவலை
எதிர்நோக்கி இருந்தார்கள்

பூச்செண்டு பறித்த கதையுண்டு
கரமிழந்தவர்கள் காதல் கேட்டதுண்டு
கணவன் இழந்து சிரித்தவர்கள் பார்த்ததுண்டு
இதை மொண்டு எடுக்க பலருண்டு

ஒரு சொல் சொல்லிற்று.
ஏற்கனவே இறந்துபோன பேய்

வாழ்வது சாவது மேலது.

முட்ட முடியாமல் -கைகள்
வெட்டு பட்ட வீரர்கள்
ஒற்றைச் சூரியனாய்
உள்நுழைகிறார்கள்
கல்லறைக்கு...
புதிய உறுப்பினர்கள்
கூடிவிட்டது சுடுகாட்டில்..

காற்றோடு வாளேந்தி
குருதி வடிக்கப்
போராடுகிறது
என் மைத்துளிகள்

ஈரக் குமிழ்களை
எச்சிலில் அடக்கிவிட்டு
நமட்டுச் சிரிப்போடு
சூரியனைத் துளைத்தெடுக்கும்
என் வியர்வையின் பலன்கள்

உள்ளூர அடக்கியிருக்கும்
உறுப்பிடியில்லா பசியை
ஓர் எழுத்தில் அடக்க
முயற்சிக்கும்
என் காகிதத்தின் கோடுகள்

பின்னிரவை பின்னி
சரமாக்கி நெஞ்சில் இட்டு
சந்திரனைத் தேடியலையும்
என் கற்பனைச் சிறகுகள்

பிரபஞ்சத்தை தாளில்
அடைத்துவிட்டு
எல்லை தேடிக் கொண்டிருக்கிறது
என் பேனாவின் முனைகள்

ஓர்விழிப் பார்வையும்
ஓராயிரம் கைதட்டல்கள்
நிமிர்ந்த நெஞ்சு
முரண் பட்டு உதிக்கும்
வடக்குச் சூரியன்கள்

எத்தனையோ எழுதிக்
கிழித்துவிட்டு
இது கவியோ என்று
நினைத்தேகுகிறது
புடைத்துப் போட்ட
மனப் புற்கள்.

அரங்கத்தில் நுழைந்துவிட்டான்
அந்த நடிகன்
அவன் நடிப்பு மிக அருமை
துடிப்பு மிக்கது. அல்லது
துடிக்கச் செய்யும் நடிப்பு.

கைகள் தட்டி வரவேற்கலாம்
முடியவில்லை
எழுந்து நின்று பாராட்டலாம்
வலுவில்லை
களித்தவர்கள் காணலாம்
இரவலில்லா இன்ப லோகத்தை..

நாடு போற்றும் நடிகனாகிவிட்டான்
திரைப்படங்கள், விளம்பரங்கள்
பேனர்கள், பலகைகள்
இல்லாத இடமில்லை
இவனும் இவன் பிரச்சாரமும்.
ஒரே வாணவேடிக்கை தான்

இவன் திரைப்படங்களைக்
கண்டு களித்தவர்கள் சிலர்
படம் பார்க்கவில்லை என
சாதிக்கும் சிலர்
இதற்கிடையே
சிரித்துக் கொண்டே பலரை
அரங்கத்தினுள் நுழையவைக்கிறான்
இந்த நடிகன்

பயணங்கள் தொடர்கிறது
அரங்கங்கள் நிறைகிறது
கணக்கெடுப்புகள் தொடர்கிறது
இவனை வெல்ல யாருமில்லை
இரண்டு ரூபாய் செலவும்
கட்டுப்பாட்டுணர்வும் தவிர..

14.4.07

ஆறா ரணம் - செவிகள்

|

கழிநெடிலடிவெண்பா

புள்ளிசை கேட்டறிந்த காதிலே நீயும்தான்
உள்ளிருந்து ஊற்றுகிறாய் ரத்தக் குழம்பு
கமழக் கமழச் கவிகள் படித்ததை
என்செவி உற்று அறிந்ததே கேளாயோ
உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
நடனங் களித்த கதைமாறி யின்று
சடலமாய் போனது வெந்து அவைகள்
அதரவில் லாலே குதறவும் கொண்டாய்
பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
தொளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு
செவிகளை மீறி நுழைகிறது அன்று
புவியைச் சருக்கிய வார்த்தைக ளாலே
கவிதைகள் கண்ணீர் விடுமேபார் காகிதம்
சாகும் குருதி படியுமடி வற்றி
கதையை நிறுத்தடி சற்றே!

ஊருக்குள்ள ஒண்ணுமில்ல
ஊத்திக்கவோ தண்ணியில்ல

பல்லுங் காஞ்சி பதிநாளு ஆச்சு
பத்துங் கரஞ்சி போயாச்சு

என்ன எழவுக்கு இந்த கொண்டாட்டம்?

மீசை முறுக்கி வாயோரம்
காச மெரட்டி கழுத்தோரம்
ஓச இல்லாம கத்தி வெச்சாப்ல

வேணுமோடா எனக்கு?

வெளக்குத் திரிக்கு லோல்பட்டு
பக்கத்து வீட்டுக் காரன்கிட்ட
பத்து ரூபா கடன் நான் வாங்க,

வட்டியில்லாம எங்கிட்ட
தருமகர்த்தா அன்பளிப்பா?
வேணுமோடா எனக்கு
சித்திரைக் கனி
நிறுத்துக்கோடா
பணம் பொறட்றது இனி.

9.4.07

நாளைய காலை....

|

அமரப்பட்ட இடத்தில்
பல நினைவுகள் அமர
கண்கள் குளித்தது;
தேகமும் கூட.

என்னுள் இருந்து
பயிர் செய்தவன்,
தப்பிவிட்டான்.
இனியென் கண்களுக்கு
முத்தமில்லை;
வெறும் கனவுகள் வருமோ?

என் கரங்களின் கணையாழிகள்
ஆவேசமாக பிடுங்கியெடுக்கப்படுகிறது
இதயக் குழாய்கள் பிடுங்குவதைப்போல..

ஊற்றிய தண்ணீரில்
என் கோலம்
அலங்கோலம்.
புள்ளி வைத்த பொடிகள்
கரைந்து போன கோலம்.

கழுத்தோடு
அணைக்கப்பட்டிருந்த என்னுயிர்
கொலை செய்யப்பட்டது.
கவனித்துக் கொண்டிருந்த
மரண ஜீவன்
கண்ணீர் விட்டது.

திருப்தியாக சென்றுவிட்டார்கள்
புண்ணிய வதிகள்.
திருப்தியற்று கிடக்கிறேன்
புண்பட்ட விதிகள்.

நாளைய காலை,
வாசலில் கூவிக் கொண்டிருக்கும்
பூக்காரியிடம் வாங்கி
சொறுகிக் கொண்டேன்
இருமுழ மல்லிகைப் பூக்கள்!

5.4.07

வேவுகணைகள்

|

உன் மீது எனக்கு
அதீத அன்பு
தின முத்தங்களால்
மனம் நிறைந்து
புதுமலராய் நிற்கிறேன்.
என் முகம் பார்க்கும்
இத்தனை பேர் மத்தியில்
உன் சிலரால் மட்டுமே
காதல் புரிய முடிகிறது.

உனக்கெனவே
ஒதுக்கப்பட்ட இடத்தில்
எனக்காக கவியெழுதுகிறாய்
கதை பேசுகிறாய்.
சில சமயங்களில் கிண்டலாக
கொஞ்சுகிறாய்.
ஏதாவதொரு நொடியில்
கோபம் வந்தால்,
என் கண்ணசைவில்
நிறுத்திக் கொள்கிறாய்!

அவ்வப்போது
விண்கற்கள் தாக்கும்.
உனக்கும் எனக்குமுண்டான
ஈர்ப்புவிசை அறியாமல்.

வேவு பார்க்கும்
சில கழுகுகள்,
நம் உறுதியறியாது
கண்கள் பொசுங்க
ரணப்பட்டு போகிறது.

நம் பந்தம் பிரிக்க முடியாதது.
வேவுகணைகள்
எத்தனை வந்தபின்னும்....

யாருமற்ற அநாதை வினாடிகளில்
உதறப்பட்ட அங்கத்தால்
சிதறப்பட்ட பொருள்கள்
ஒரு குப்பைக்கூளமாய் கிடந்தது.

யோனியிலிருந்து குருதி வடிந்து
தொடைக்குக் கீழ் படிந்து
காய்ந்து போய்க்கிடந்தது.
ரணத்தையும் ரத்தத்தையும்
தாங்காமல் இழுத்து, போயிருக்கிறாள்.
பிதுக்கிய பிண்டத்தை
விட்டெறிந்திருக்கிறாள்.

குருதி படிந்தவாறு கிடந்த
உயிருள்ள ஒரு பிண்டம்
ஊளையிட்டது.
காற்றை வெறுத்துப் போய்
அலறியிருப்பது அறிகிறேன்.

வெடத்துப்போன உள்ளத்தால்
கிடத்திய சடலத்தை
வெளிவந்த கரு முன்னே
எரிக்க முற்படுகிறேன்.
முன்னதாக
அந்த பிண்டம் மீண்டும் அழுதது.

இம்முறை
காற்றுக்காக அல்ல
வயிற்றுக்காக.

என் செய்ய?

என் மடி கிடத்தி
முலை எடுத்து
தின்னச் செய்கிறேன்.
மென்காற்றின் ஓசை
என் செவிக்குள் அலையாக...

யாரும் பார்த்துவிடக்கூடும்
வெகுவாக பசியடக்கு என்று
நடுக்கத்தோடு சுற்றியது சிரம்.
மெல்ல அருகினில் வந்து
தன் கையை எடுத்து
கும்பிட்டது ஒரு கரம்.

நித்திரை ஆழ்ந்த
பிண்டத்தின் தலைமுகர்ந்து
கண்களில் நீர்கோத்தேன்.
வணங்கிய கரங்களின்மேல்
துளிகள் விழுந்தன...

3.4.07

ஆறா ரணம் - கண்கள்

|

ஊறிக்கொண்டிருக்கும்
சேற்றுத் தாமரையைக்
கண்ணால் காண சகிக்காமல்
முற்கள் பொருந்திய மலராகச்
சென்று விடுகிறாய் பார்வை குருடாய்...

ஆற அமர்ந்து
கண்கள் பேசட்டுமே என்று
நினைத்தாலோ நீ
விழிகளை மூடிவிட்டு
மெளனம் பேசுகிறாய்
இதனால்
என் கண்களில் குருதி வடிவது
உனக்குத் தெரியும் என்றாலும்
உறுதியாக ஒரு வார்த்தை சொல்
இருக்கவா ? போய்விடவா ?

பார்த்த சமயங்களில்
கணைகளைத் தொடுத்தாய் கண்ணுக்கு
பாராத சமயங்களில்
அமிலம் ஊற்றுகிறாய் அதே கண்ணுக்கு

ஆடி அணிந்து பார்த்துக்கொள்ள
என் இதயமொன்றும்
பார்வை இழக்கவில்லை
அதனால் இரணத்தைத் தீர்க்க
உன் எச்சிலை என் விழிகளுக்குள்
ஒரு முறையாவது ஊற்றச் சொல்லுகிறேன்

நீ விழிகள் திறக்கும் போது
என் இதயம் இயங்குகிறது
மூடும்போது
குழாய்களில் கொழுப்பு சேருகிறது.
என்றுமே என் கண்களுக்கு முன்
நீ மூடியே கிடக்கிறாய் உன் மனம் போல

விக்கலோடு இயங்குகிறது
உன் பார்வை படாத என் இதயமும்
ஒரு சோடி கண்களும்...

குருதியைக் குடித்துக்கொண்டு
இறுதியைத் தேடி அலையும்
அகோர நெஞ்சம் இவனுக்கு..
களத்திலே எதிர்க்க வலுவில்லை ;
மறைமுகமாய் தாக்கிவிட்டு
தான் யாரென்று அறியாமலிருக்கிறான்..

தன் வீடு நன்று என்றாலும்
எதிர் வீட்டை சேதப்படுத்துகிறான்
எதிரியைக் கூட மன்னிக்கலாம்
என்று சொல்வார்கள்
எதுவும் இல்லாதவனை
எப்படி மன்னிப்பது?

மதில்களில் கீறல் ஏற்படுத்தி
வீட்டைக் காயப்படுத்தும்
வீணனுக்கு வேலையே
தென்படும் இதயங்களைப்
பிழிவதுதான்..

மென்மை என்ற அர்த்தம்
நெஞ்சில் இல்லை.. ஆனால்
வேசம் மட்டும் மென்மையாகப்
போடத் தெரிகிறது
இந்த கூனிக்கு..

தன் வீட்டுப்பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கித் தருகிறான்
தெருவில் சுற்றித் திரியும்
மலர்களை, பிண்டம் இல்லாமல்
நசுக்கத்தான் பார்க்கிறான்..

இலக்கு என்பது இங்கே
இல்லை என்றாலும்
போட்டிக்கு வந்து
புறமுதுகிடப் போகிறான் பார்!

நானும் ஓவியாவும்

விழுதுகளின் நீளமும்
வேர்களின் ஆழமும்
இலைகளின் பசுமையும்
இதமாகக் கொண்டு
கிளைகளைப் பரப்பி
எண்ணற்ற விழுதுகளைப்
பெற்றிருக்கிறது
தன்னலமில்லா ஆலமரம்

ஆழ ஊன்றி நிற்குமிந்த
ஆல மரத்தின்
அடிவேர்களை
நோண்டப்பார்க்கிறது
நெஞ்சமில்லா உயிர்கள்

மரத்தைச்
சாய்ப்பதாக நினைத்து
இடுக்குகளில் படர்ந்திருக்கும்
அழகிய பூக்களையும்
கொத்தப்பார்க்கிறது
வஞ்வம் மிகுந்த வண்டுகள்..

வேர்களைப் பிடுங்க இருக்க
பூக்களைக் கொத்துவது
எந்த விதத்தில் ஞாயம்?

புன்னகையை மறந்து
தன்னிலையைத் துறந்து
கொத்தும் வண்டுகளுக்கு
விழுதுகளின் ஒரு அடி போதும்//

ஆலமரம் விழித்துக்கொண்டால்
துச்சமான இவ்வண்டுகளின் கதி
என்ன என்று யாருக்குத் தெரியும்?

விழுதின் ஒரு நுனி
கண் விழித்துக்கொண்டது,
கணைகள் தொடுக்க புறப்பட்டுவிட்டது.

இனியும் வேர்களை நோண்டினால்
அக்னிக்குஞ்சுகளுக்கு
பலியாகவேண்டியதுதான்...

கோடைத் தாக்குதலில்
உதடுகள் உலர்ந்த
இலைகளை
வாரி யணைத்துக் கொண்டது
ஒரு ஆலமரம்.

பீறிட்ட ஞாபங்கள்
ஒன்று சேர
மெல்ல கிளைமேல்
படர்ந்தேன் ஒரு பாம்புபோல.

ஒரு கிளையினுள் நுழைந்த
அக்கணமே கண்டேன்.
அங்கே பல சிற்பங்கள்
செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன.
சிறு வலியோடு தண்டனைகள்
நிறைவேற்றப்படுகின்றன.
முன்பொருநாள் எனக்கும்..

"நீ யார்?
உனக்கு என்ன வேண்டும்?"
அதே அதிகாரத் தோரணையில்
கேள்வி கேட்கப்பட்டது.
என் பதிலை எதிர்பாராது
உளியை கையில் எடுத்துக்கொண்டான்
என்னையும் செதுக்கிய சிற்பி.
நான் ஞாபகங்களுடன்
வெளியேறினேன்.

அன்று
அழுத விழிகளுடன்
அதே கிளையில் தண்டனை
நிறைவேற்றப்பட்டதால்தான்
இன்று
அழகிய சிற்பமாய்
ஆதவனாய் நான்....

சாபமிட்ட அதே நாக்கு
வாழ்த்தவும் தயங்குகிறது.
என் செவிக்கு
பலரின் சாபங்கள் கேட்டன.
வருங்காலத்தில் அதைப் பற்றி
வருத்தப்படப் போவதறியாமல்.

எண்ணிலடங்கா
எண்ணிக்கையில்
உன் மீதொரு நம்பிக்கை

எப்படிப்பட்ட சவாலையும்
எதிர்க்கும் திறனாக
உன்னிரு கைகளின்
எண்ணிக்கையில்
திறமை வைத்திருக்கிறாய்
ஆனால்
எதிர்த்தாடும் சவாலை
எதிர்கொள்ள இயலாமல்
நீ இழந்த இடத்தினால்
ஊடகங்களின் ஒரு மூலையில்
மரணம் ஏற்பட்டிருக்கும்

ஒருவகையில் நீ கொலையாளிதான்

உன் சோகம் சில வினாடிகள்
என் சோகம் உனது
அடுத்த எழுச்சி வரை!
பதறிய மனங்களுக்காக
பேட்டிகள் கொடுக்கத் தெரிகிறது
உனது களத்தில் நின்றாவது
ஒரு போட்டி கொடுக்கத் தெரிகிறதா?

வெறும் கைதட்டலோடு
இருந்திருந்தால்
'போய்த் தொலைது' என்று
விட்டிருப்பேன்.
எனக்குள் மீறி
இதயத்தில் அமர்ந்த பின்
உன்னைத் தூற்றுவது தவறா?

உன் எழுச்சிக்கு மீண்டும்
வேண்டுகிறேன்
உன் வளர்ச்சிக்கும்
என்னை அறியாமலேதான்..........

பின்னலாடைகளுக்கு
உயிர் கொடுக்கும் தேர்ந்தவள் நீ

வேகமாக இயங்கும் கரங்களினால்
காணக் கூடாதவைகளைக்
காணத் துடிக்கிறது
என் கருவாட்டுக் கண்கள்
உன் மேனியின் ஈர்ப்பும்
அதன் மேல் படர்ந்திருக்கும்
ஆடையின் விலகலும்
என் நெருப்புக்குத் தீனியாக
மாறிவிட்டிருந்தது,

என் கரங்களின் தீண்டலால்
எழுந்து வருவாய்
நமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில்.
பஞ்சுக் கொடோனுக்குள்
பிஞ்சு மனதாய் நுழைவாய்.
பணிக்காகத்தான் என்று நீயும்
எனக்காகத்தான் என்று நானும்
நினைத்திருப்போம்.

அலைகழிக்கப்பட்ட
காற்று அறியும், அங்கே
அரங்கேறக் கூடாதவைகள்
அரங்கேறியது என்று.
உன் முனகலுக்குப் பூட்டாக
வெட்டுபட்ட துணிகள் கிடக்கின்றன.
இல்லையேல் வெட்டுபடும் சம்பளபாக்கி.

ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும்
ஏற்பட்ட சலசலப்பில்
ஒரு லோகத்தை விட்டு
கலைந்து எழுவோம்.
கலைந்துபோய் நீயும்
கலையாக நானும்.

எனது அடுத்த இலக்கெல்லாம்
ஆடைகளை ஏற்றுமதி செய்வதுவும்
கூலியாக ஆடைகளைக் கலைப்பதுவும்////

என்றாவது ஒருநாள்
உன் மனம் பதறினால்
வீதியில் நடந்து செல்.
'சிங்கர், கைமடி*
ஆள்தேவை' என்ற
அட்டை தொங்கவிடப்பட்டிருக்கும்
உன் மானம் போல...

* சிங்கர் - துணியைத் தைப்பவர்,
கைமடி - ஒரு ஆடையின் மேல்பாகமும் கைப்பாகமும் இணைத்துக் கொடுப்பவர்...

ஃப்ளக்ஸ் விளம்பர பேனர்கள்
தொங்கவிடப்பட்டிருந்தன
வண்ணக் காகிதங்கள்
வடிவாய் கத்தரிக்கப்பட்டு
அங்கங்கே ஒட்டவைக்கப்பட்டிருந்தன
இவற்றில் ஆறிலொரு பங்கு செலவில்
பலகையால் அலங்கார மேடைகள்
அடிக்கவைக்கப்பட்டிருந்தன
சறுக்கி விழாதிருக்க
சாமியானா டெண்ட் போர்வைகள்
விரித்துக் கிடந்தன.


நானொரு மூலையில்
காட்சிக்காக காத்துக்கொண்டிருந்தேன்
ஒலிப்பெருக்கியில் சொன்ன நேரத்தில்
பறந்து வந்தன அழகிய பறவைகள்.
கண்கள் மயக்கும் உடைகளில்...
வலிகளை அடக்கிய
முகச்சாயம் தெரிகிறது.
நடனத்துக்குண்டான அசைவுகளை
மேடையில் சொல்லிக்கொண்டன.
இளம் பிஞ்சுகள்


ஒலியில்லாமல் அசைகின்றன
நர்த்தனமாடும் இவர்களின்
உதடுகள்.
கூட்ட இரைச்சலைக்
கண்டும் கேளாது இருக்கின்றன
இவர்களின் செவிகள்.
சிறப்பு நடனம் தருவதொன்றே
குறிக்கோள் போலும்..


முன்னே
மின்னொளி புகுத்தப்பட்டது.
பொதுமக்களுக்காக
பாடல் ஒலிபரப்பப்பட்டது
முதலில்,
தமிழை கொலை செய்யும்
குத்துப்பாட்டுகள் பாடின,
இன்ன பாடல்
என்றறியாமல் ஆடுகின்றன
மிகச் சரியான நடன அசைவில்.
இவர்கள் வாழ்வது
அந்த கொலையில்தான் என்பது
தெரிகிறது தெளிவாக..

பாடல் முடிந்ததும்,

" விஜய் ரசிகர் நற்பணி மன்றம்
சார்பாக ரூபாய் ஐம்பது
நன்கொடையாக பெறப்பட்டது "

என்ற அறிவிப்புகள்

" நன்கொடை தாரீர்"

நடனக் குழுத் தலைவி.
பேசத்தெரிந்தவள்
அவளொருத்தி மட்டும்.

மனம் கேட்டது.

" நீ?"

" நானொரு கவிஞன் "

" அதனால்?"

விடையில்லை என்னிடம்

கைதட்டலில் திருப்தியின்றி
நடந்து வருகிறேன்...
ஒலிப்பெருக்கியில்
ஒரு பாடல்
ஒலித்துக்கொண்டிருந்தது
பிஞ்சுகளின் ஆடைகள்
மாறிவிட்டிருந்தன.

22.3.07

ரகசியக் கவிதை.

|

நான் ஒரு கவிஞை அல்ல.
பெற்றெடுத்து அதை
உலகத்தில் சிறப்பிக்க
ஆனால் கவிஞை ஆக்கப்படுவேன்
இருட்டில் நடக்கும் எண்ணங்களால்

என் நெஞ்சில் கருவொன்று
திணிக்க முயன்றான் ஒருவன்
எண்ணங்களை உடைத்து
துளிகளின் மேலமர்ந்து
கசங்கிய நிலையில்
விதைத்துப் போனான்
ஒரு கவிதை மட்டுமே விளையும் கருவை.

ஆள் அரவமின்றி காய்ந்து கிடக்கும்
ஒரு தாளில் அழுத்தமாய்
புள்ளியிட்டு சென்றுவிட்டான்.
என் கரங்களில் வலிமை இல்லை
வலி ஏற்பட்ட நேரத்தில்
என் கரங்களும் என்னிடமில்லை

என்னை அறியாமல்
திணிக்கப்பட்ட எண்ணக்கருவால்
ஊற்றெடுத்தது கவிதை ஒன்று
ஆம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.
கரு என்ன என்பது அறியேன்
ஆனால் கவிதை நிச்சயம்.

யாவருக்கும் ஏற்பட்ட
அதே காலத்தில்
கவிதை பெற்றெடுத்தேன்
என் கூரைக்குக் கீழே
ஒழுகும் தண்ணீரில்
கவிதை கரைந்துவிடக்கூடும்
ஆக அது வைக்கப்பட வேண்டிய
இடத்திற்கு வைக்கப்படவேண்டும்

திணித்தவன் எங்கோ ஒரு இடத்தில்
பிரச்சாரம் செய்து கொண்டிருக்கக்கூடும்
கவிஞை ஆக்கப்பட்டவளாகிய நான்
இதை என்ன செய்ய என்று அறியாமல்...

கண்களில் பட்டது....
தவறுகளையும், கழிப்பவைகளையும்
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் களம்.
என் கவிதையை ஏற்றுக் கொள்ளுமா?
இருக்கட்டும்.
ரகசியக் கவிதையான இது
அங்கேயே வைக்கப்படும்.
இழந்த சோகத்தையும்விட
என் நெஞ்சிரண்டும் வலித்தது
கவிதையை வளர்த்திவிட

என் ரகசியக் கவிதை
எனக்குத் திணிக்கப்பட்ட கவிதை
என்னை வலிக்கச் செய்த கவிதை
வேறொரு பெயரிலாவது
புகழ் பெறட்டும்...
என்னோடு இருந்து
மழையின் துளிகளுக்கும்
வெயிலின் தாக்கத்திற்கும்
தாள் கிழிந்து போக வேண்டாம்.

நானும் ஓவியாவும்.

கோளத்தின் அலையாய்
முகம் தெரியும் மழைக் காலத்தில்
நடைபாதை கழிவுகளை
ஒதுக்கிவிட்டு
நனைக்காமல் இருக்க
குடையோடு தவழ்ந்துகொண்டிருந்தேன்

கண்கள் கண்டவரை
யாவரும் குடையுடன்
தலை காக்கின்றனர்
மழையின் அழுகையை
கண்களிலிருந்து வீசிவிடுகின்றனர்

ஒரு சிறு இடைவெளியில்
தள்ளுவண்டியுடன்
நிற்கும் அந்த தாத்தாவைக் கண்டதும்
மழைக்குக் கூட
இரக்கமின்றி போனது.
என் கைகள்
குடை பொத்தானைத் தழுவுகிறது.

எடுத்துச் சென்று கொடுக்க
யாவருக்கும் மனமில்லை
ஒரு முதியவரைக் காக்க
மழைக்கும் துணிவில்லை
விதிவிலக்காக நான்.

மழையின் ஆக்ரோசத்தை
மனம் தழுவிய அதேவேளையில்
உடல் நனைந்தது.
பிந்தைய நாளில்
என் மொழிகள்
வேறானது.

பகல் பொழுதுகளில்
இரக்கமற்ற அதே இடத்தில்
நடக்கையில்
தாத்தாவின் அருகே என் குடை
நிழற்குடையாய்.

நிறம் மாறும் மனிதர்கள்
குணம் கரையும் மழை
தாத்தாவின் பார்வை மட்டும்
நிதர்சனமாய் நிற்கிறது.

நன்றி ஓவி.. கவிதைக்கருவிற்க்கு..

சாலையோரங்களில்
நிதானியாக பயணிக்கையில்
உலாவும் கண்களை
கனவுகளாய் படரவிடுகிறோம்

பல்துலக்காமல் அவன் சிரிக்கும்
சிரிப்புக்கு வெறுப்பைக் காட்டி
இழந்து போன கால்களை
ஏளனமாய் பார்க்கிறோம்
அவன் கேட்கும் நாலணா
நம் சட்டைப் பையில் இல்லை..

தள்ளாட்டங்களுக்குக்
குறைவில்லாமல்
கண்கள் உருள நடந்து வரும்
மிதவாதியை
வேதனையாகப் பார்க்கிறோம்
இரவு கொண்டாட்டங்களுக்கு
எடுத்துவைக்கப்பட்டிருக்கும்
காசையும் கணக்கு
பார்த்துக் கொள்கிறோம்
மிதவாதியின் முகத்தைப் பார்த்து.

மெல்ல இறங்கி
கண்களின் பயணத்தில்
வீடின்றி தவிக்கும்
கூட்டத்தைப் பார்க்கிறோம்
வீணாக இரைக்கும்
பணம், கண்ணுக்குத் தெரிவதில்லை..

(இன்னும் இன்னும் இன்னும்
ஒராயிரம் பூக்களை
ஒரு மலர்கொத்தில் அடுக்க முடியுமா?)

எல்லாம் கவனித்துவிட்டு
வீட்டுக் கண்ணாடியில்
முகம் பார்க்கிறோம்
பிம்பத்தின் விரிசல்களில்
பல முகங்கள் தெரிகின்றன...

காதலாய் வருடிய
உன் அதே கைகள்
காற்றைக் கிழித்துக்கொண்டு
இடுகிறது
மூன்று கோடுகள்.

என் கேசத்தின் சுருளில்
மயங்கி விழுந்த காலம் போய்
இன்று சுருட்டி எடுக்கிறாய்
துவைக்கும் துணியைப் போல.
உதிரும் பூக்களின் அழுகையைக்
காணாமல் மிதிக்கிறாய்
வாசனை போக..

தெம்பில்லாத உயிராய்
உன் முன்னே நிற்கையிலே
ஆண்மையை நிலை நாட்டுவாய்
செந்நிறக் கண்களோடு.
ஒளியின் வேகத்தை மிஞ்சும்
ஒலிபடைத்த மனதோடு...

எதிரே கனவில் மிதக்கும்
இவளுக்குத் தெரியப்போகிறது
என் துளிகளின் அவமானமும்
உன் வெறியின் அட்டகாசமும்.
மெல்ல கனவைக் கொன்று எழுந்து
உன்னையும் என்னையும் பார்க்கிறாள்.
அரைவிழிகள் திறக்க..

கேசத்தைச் சுருட்டிய நிலையில்
உன் கைகளையும்
கண்களை உருட்டிய நிலையில்
என் கைகளையும் காணும்போது
என்ன செய்வாள்
நம் இன்பத்திற்கு பிறந்தவள்?

உன் கீறல்களுக்குச் சுவராய்
இருந்தது என்னோடு போகட்டும்
இப்பிஞ்சுக்குத் தெரிய வைக்காதே!

யாகங்கள் செய்த பின்னும்
அதன் புகை உனைத் தொட்ட பின்னும்
மேகங்கள் கருத்த பின்னும்
எம் நெஞ்சங்கள் வெளுத்த பின்னும்
மோகங்கள் தீண்டிய பின்னும்
சூரியனைக் கழித்த பின்னும்
தாகங்கள் அடங்கவில்லை - மழை
சோகங்கள் தீரவில்லை

பாகங்கள் உனக்கிரைத்தோம்
பழி பாவங்கள் விட்டிரைத்தோம்
கோபங்கள் எடுத் தெறிந்தோம்
கோவில்கள் எடுத் திரைத்தோம் - சிலர்
நாமங்கள் பழித்த காரணமோ?
ஓமங்கள் இழித்த காரணமோ?
தீமைகள் தடுத்திரா காரணமோ?
ஊமைகள் ஆன காரணமோ?
சீமைக்குக் கொடுத்த மழை-இந்த
ஊமைக்கு கொடுத்தல் உமக் கிழிவோ?
ஊமைக்கு உரைத்த லில்லையென
எமைக் கண்டு இளிப்போ?

ஆதி எடுத்துரைத்து பாடலியற்றி
மீதி உயிரெடுத்து மிச்ச மேகத்தில்
மெச்ச உதரிவிட்டு, கண்கள்
உச்ச வான் நோக்கும்....
இரத்தம் சிதறிவிட்டோம்
மொத்தம் உமக்களித்தோம் -ஆதலின்
ஆசு கவி போலிங்கு
பூசு மழை பூமிக்கு - இந்தப்
பாட்டுத் தீ பட்ட பின்னாவது -எங்கள்
காட்டுத் தீ அணைப்பாயோ?
காக்கின்றோம் உமது பதிலுக்கு - எதிர்
பார்க்கின்றோம் உமது துளிகளுக்கு...

விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல்
விழும் எச்சில்களுக்கு
இரத்தம் வருத்த ஆடுகிறான்
தன் பிஞ்சுகளோடு

கனத்த உடலும்
கால் தெரியும் அமைப்பும்
ரசிக்கத்தான் கூட்டமுண்டு
காலணா வீச ஆளில்லை

கரணம் அடிக்கும் பூக்களை
ரசிக்கத் தெரிகிறது
சிந்தும் துளி ரத்தங்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை

உழைக்கப் பல தொழில்கள்
பிழைக்கப் பல தொழில்கள்
பிச்சைக்குத் தொழிலுண்டா?
வீசுங்கள் உங்கள் சட்டைப்பை
காசுகளை.

ஆகாயத்தின் மத்தியில்
ஆடும் இவர்களின் வாழ்க்கையும்
அடிக்கடி கலையும் மேகங்கள்

கயிறின் நுனியில்
உயிரை வைத்து
பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில்
உதடுகள் வெடிக்க
இவர்கள் ஆடுகிறார்கள்
இறைவனின் கூத்து
இறைவன் ஆடுகிறான்
இவர்களின் வாழ்க்கையில் கூத்து.

இது கொசுறு கவிதை:

(எல்லாவற்றையும்
கவிஞனுக்கு எழுதத் தெரிகிறது
எழுந்து போய் ஒரு வார்த்தை
சொல்ல தெம்பில்லை.)

முதலில் கணிணி எப்படி எனக்கு
அறிமுகம்?. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் கணிணியை கண்ணில் பார்த்தேன். எட்டாக் கனி.
தொடக்கூட அநுமதியில்லாமல் இருந்தது. DOS என்ற OS படித்த பின்தான் கணிணியைத் தொடவிட்டார்கள். பள்ளிக்கு
வெளியே மாதக் கட்டணத்தில் படித்த போது சில மொழிகளையும் (qbasic, foxpro) சேர்த்து படித்தேன். கணக்கு நமக்கு
சருக்கும் என்பதால் qbasic ல் தோற்றுவிட்டேன். வேலை நிமித்தமாக சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி
இருக்கும்போதுதான் Windows படித்தேன். நான் எடுத்தது PGDCA ( Post Graduate Diploma in Computer Application)
எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் நான் படித்தது இரண்டு மட்டும்தான். ஒன்று முழுமையாக Windows
(கிட்டத்தட்ட 95 சதம்) மற்றது இணையம்.
ஊரில் வேலைக்காக Corel படித்தேன் photoshop படிக்கவில்லை; தானாக தெரிந்துகொண்டேன்.

வேலைக்கு அமர்ந்த போதுதான் விளையாட்டுக்கள் பற்றி அறிந்து கொண்டேன். எனக்கு மிகச் சரியாக அறிமுகமாகிய
விளையாட்டு wolf. இது ஒரு ஆக்ஸன் விளையாட்டு என்றாலும் கிராஃபிக்ஸ் அவ்வளவாக நன்றாக இருக்காது. அப்போது
எனக்கு அதுவே பெரிதாகப் பட்டது. அந்த விளையாட்டை முழுவதுமாக முடித்துவிட்டேன். பிறகு கிடைத்தது Doom.

எனக்கு மிக ஆர்வமுண்டாக்கிய விளையாட்டில் இதுவே முதல். முழு கேமையும் முடிப்பதற்கு நான் வெகு காலங்கள்
எடுத்துக்கொண்டேன். DOS சார்ந்த கேம் என்றாலும் வெகு சிறப்பாக இருந்தது. அதன் பின் வேலையிருந்ததாலும்
பெரும்பாலும் டெமோ மட்டுமே கிடைத்ததாலும் அவ்வளவாக விளையாடாமல் இருந்தேன்.

வீட்டில் கணிணி வாங்கியதும் முதல் வேலையாக கேம் பதிவு செய்தேன். என் முதல் கேம் wolf, மற்றும் doom ஐ
திரும்பவும் விளையாடினேன். Roadrash என்ற மோட்டார்சைக்கிள் ஓட்டும் கேம் எனக்கு பிடித்தது.. தெரிந்த ஒருவரிடம்
முழுமையாக வாங்கி எல்லா Race ஐயும் முடித்துவிட்டேன்.. இருந்தாலும் எனக்கு திருப்தி சற்று குறைந்தே இருந்தது.

SOF II (Soldier of Fortune II ) :

என் வாழ்வில் மறக்க முடியாத விளையாட்டு.. First Person shootter வகையை சார்ந்தது. என் நண்பரின் உதவியில்
டூப்ளிகேட் தகட்டில் பதிந்த இதை வாங்கி விளையாடினால்.... சீக்கிரமே செத்துவிடுவேன் (கேமில்.. ) கொஞ்சகாலம்
எனக்கு அது பிடிக்கவே இல்லை. ஒருநாள் என் நண்பன் விஷ்ணு என்பவன் ஏதாவது கேம் விளையாடலாம் என்றான். சரி
என்று SOF II போட்டு விளையாடினோம். அவனும் சரி நானும் சரி இருவருமே கத்துக்குட்டிகள். இருந்தாலும் கொஞ்ச
கொஞ்சமாக விளையாடி அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறினோம். இது ஆக்ஸன் கேம் என்றாலும் மூளை வேண்டும்.. சில
இடங்களில் மூளையின் பிரயோகம் அதிகம் தேவைப்படும். வைரஸ்களை தயாரிக்கும் கும்பல் உலகம் முழுவது
நிறைந்திருக்கும் அவர்களை அழிக்க கதாநாயகன் செல்லுவதே கதை.. கதைக் களம் எல்லா பருவநிலையிலும் எல்லா
திணைகளிலும் நடக்கும். எனக்கு மிகவும் மிகவும் பிடித்த விளையாட்டில் இதுவும் ஒன்று.

ஒரு ஆளாக விளையாடி முடிக்கவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 7 மணிநேரம் வீதம் ஒரு வாரத்தில் முடித்துவிடலாம்.
நான் எடுத்துக்கொண்ட காலம் 6 மாதம்.. இந்த விளையாட்டில் சிறப்பம்சம் என்னவென்றால் நிறைய Mission கள்
துப்பாக்கிகள் அதைவிட புத்திசாலித்தனமான போக்கு, சிறப்பான கிராபிக்ஸ் என அனைத்து அருமையாக இருந்தது.
இந்த கேமிற்கு அடிமையாகிவிடுவேனோ என்ற அளவிற்கு விளையாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

SOF II முடிப்பதற்குள் Spiderman, NFS, Cricket போன்றவைகளும் முடித்துவிட்டேன். குறிப்பாக Spiderman மிக
எளிதாக இருந்தமையால் நான் அவ்வளவாக விளையாடவில்லை. விஷ்ணு அதை முடித்துவிட்டான். அதுவும்
சுவாரசியமான கேம்தான்...

SoF II முடித்து சில நாட்கள் சும்மாவே இருந்தேன். வேறு எந்த கேமும் கிடைக்கவில்லை. அச்சமயம் பார்த்து டிவியில்
COD என்ற விளம்பரம் பார்த்தேன்... ஏதோ சொல்லுவார்களே Love at First Sight என்று. அதேபோல் Addict at first
sight ஆகிவிட்டேன்..

COD (Call of Duty)

SoF II வை விட என் வாழ்வில் மறக்கமுடியாத கேம். இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது..
எல்லா வகையிலும் SoF II வை விஞ்சும் விளையாட்டு. ஒரு போர்களத்தில் புகுந்துகொண்ட அனுபவமே இது தந்தது..
இது தனிநபராக இணைந்து போராடும் விளையாட்டாக அல்லாமல் ஒரு குழுவாக சென்று தாக்கவேண்டும்.. அதன்
நேர்த்தி இன்றும் என்னால் மறக்கமுடியாது. ஏகப்பட்ட Mission கள். அதிலும் பல நினைத்தாலே எனக்கு இன்றும்
மன்றத்தில் எழுதுவதை விட்டுவிட்டு கேம் ஆடலாமோ என்று தோன்றும். அத்துணை சிறப்பு இந்த கேமிற்கு. இந்த
கேமிற்காகவே யாருக்கும் தெரியாமல் 2500 ரூபாய் செலவு செய்து nVidia Card வாங்கினேன்.

நான் எதிர்பார்த்த திருப்தி எனக்கு இந்த கேம் மூலமாக மட்டுமே கிடைத்தது. துப்பாக்கிகளோடு கையெறி குண்டுகள்.
கால குண்டுகள் மற்றும் வண்டி ஓட்டிக்கொண்டே சுடுவது.. பீரங்கிகள் ஓட்டி குண்டு எய்வது.. வானில் பறக்கும்
விமானங்களை சுடும் சிறப்பு எந்திரங்களை சிறப்பாக கையாள்வது, தந்திரமாக எதிரியின் கட்டிடத்தில் கால குண்டு
வைப்பது என்று அனைத்தும் படு பிரமாதம்.. இடையிடையே SOF II போலவே படமாக ஓடும்.. SoF II கேமிற்கு
நிச்சயமாக ஆங்கில அறிவு தேவை. இதற்கு அவ்வாறில்லை.. சுமார் 4 மாதத்தில் முடித்துவிட்டேன். (இதுவரை
மூன்றுமுறை முடித்துவிட்டேன்...)

நிச்சயமாக பலரும் விளையாடக்கூடியது. வாய்ப்பு கிடைத்தால் Call of Duty விளையாடிப்பாருங்கள்

அதன்பிறகு Maxpayne, MIB, WWE, போன்றவைகள் வந்துபோனாலும் எனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை.

DOOM 3 . நான் பெரும்பாலும் Activision கம்பனி கேம் களை மட்டுமே வாங்குவேன். அந்த கம்பனி மட்டுமே
யதார்த்தமாகவும் 3D கிராபிக்ஸ் அழகாகவும் கொடுக்கும் கம்பனி. அதன் அடுத்த தயாரிப்பாக Doom 3 வாங்கினேன்.

DOS ல் விளையாடிய அதே தான்.. இப்போது 3D முலாம் பூசி கொடுத்திருக்கிறார்கள்,. மிகவும் சிறப்பான 3D க்ராபிக்ஸ்
கொண்ட கேம்.. இதன் தேவைப்படி பாருங்கள் : 128 MB Video Ram, 512 MB RAM.

நீங்கள் இதயநோயாளியானால் தயவுசெய்து இந்த கேம் பார்க்கக்கூட வேண்டாம்.. அவ்வளவு கொடூரமானது.. அதைவிட
ஒலி........ சொல்லக்கூட முடியாது. திடீரென தாக்குதலுக்கு திடீர் ஒலி கொடுப்பார்கள்.. நான் பயத்தாலேயே இதன் Patch
Resurrection of Evil விளையாடவே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. மார்ஸ் கிரகத்தில் நடப்பதாக
விளையாட்டு செல்லும். (ராக் நடித்த டூம் படமும் இதைப் பார்த்து எடுத்த படம்தான்.) ஒவ்வொரு நொடியும் பயந்தவாறே
செல்லவேண்டும்.. பயந்துகொண்டே முடித்துவிட்டேன்.. ஆனால் முடிக்க ஒருவருடமே ஆகிவிட்டதுதான் கொடுமை..

இதில் Mission களுடன் PDA உபயோகமும் செய்யவேண்டும்.. அந்த யுக்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. PDA
மூலமாக மெயில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வாங்கிக்கொள்ளலாம். பேயால் தாக்குண்டு இறந்துபோன
விஞ்ஞானிகளிடமிருந்து ரகசிய வார்த்தைகள் அவர்களை பற்றிய குறிப்புகள் போன்றவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
கேம் நகருவதற்கு முக்கிய காரணியாக இது இருக்கிறது. துப்பாக்கிகள் விதவிதமாய்.... ஒவ்வொன்றும் மிக அருமை.

World of Warcraft III : குறிப்பிட்டு சொல்லக்கூடிய கேமில் இதுவும் ஒன்று.. முழுமையும் என் நண்பன் விஷ்னு
உதவியுடன் முடித்தேன். நான்கு பிரிவுகளாக சண்டையிடவேண்டும். இந்த வகை விளையாட்டு ( platform என்று
நினைக்கிறேன் ) பிடித்திருந்தது. இந்த கேமில் கேம் கிராபிக்ஸைவிட இடையிடையே வரும் Movie கிராபிக்ஸ் எந்த
ஒரு ஹாலிவுட் படத்திலும் பார்த்ததில்லை. வீடியோ இணைத்துள்ளேன் பாருங்கள் நேர்த்தியை..

Age of empires 3 வந்ததும் வாங்கியதுதான். விளையாடவே இல்லை. ஆர்வம் குறைந்துவிட்டது..

இதுவும் முடிந்த பிறகு பல கேம்கள் கிடப்பில் கிடக்கின்றன.. Brothers in Arms, Hulk, போன்றவைகளும் பட்டியலில்
அடக்கம்... Hulk முழுவதுமாக முடித்துவிட்டேன். பலவற்றிற்கு பெயர்கூட மறந்துபோய்விட்டது.. இதற்கு பின்
முழுமையாக விளையாடிய ஒரே கேம் COD II தான்..

COD II (Call of Duty 2) : பழைய கேம் போலத்தான். கிராபிக்ஸ் வித்தியாசம் இருக்கிறது. இது இன்னும் யதார்த்தம்.
பழைய கேமில் மருத்துவப் பெட்டி எடுத்துக்கொண்டால்தான் உயிரோடு கேம் முடிக்கமுடியும். இதில் அப்படியில்லை.
ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் செல்லவேண்டும். நாட்டின் சார்ப்பாக விளையாடவேண்டும்.. பல அம்சங்கள் எனக்கு
பிடித்திருந்தன.. இருந்தாலும் முதல் கேம் போல இல்லை..

இப்போது கேம் விளையாடுவதில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனாலும் பட்டியல் இருக்கிறது

முக்கியமாக கவனிக்கவேண்டியது: பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே விளையாடவேண்டும்.. எந்த சூழ்நிலையிலும் Cheat
code உபயோகித்தல் கூடாது.. நான் டூம் 3 க்கும் மட்டுமே உபயோகித்தேன். அதுவும் கடைசி கிளைமாக்ஸில்.

முதன்முதலாய்
உன்னருகே நான்.
உன் போதை விழிகள்
என் உடலில் எழுதின
எனக்கான தலைவிதி.

உன் மனமெப்படியோ
அப்படியே செல்ல
என் வாழ்க்கை
பயணிக்கும் போது
இடையிடையே
இரவுத் தீண்டல்களில்
பாதை தடுமாறும்.

உனக்காக பட்டினி
கிடந்தேன் பல நாட்கள்
மனநிறைவாய் வருவாய்.
எனக்கென இருநாட்கள்கூட
உன் மனம் தாங்காது

சலித்துப் போய்
நடுநிசியில்
யாருமில்லாத வானத்தை
வெறுப்பாக பார்ப்பதும்
கொண்டாட்டமில்லா இரவுகளை
அடியோடு தொலைப்பதும்
இன்றைய சூழ்நிலையாக்கினாய்.

உன் விஷமம் அறிந்தும்
உன்னுயிரோடு ஒட்டுகிறேன்
பிளாஸ்டிக் பை நீராக...
நீ என்னோடு எழுதிய கவிதைகள்
என் அருகே உறங்குகின்றனவே!

வீட்டை காலி செய்து மனதை கொன்றான்..
அவளோடு அலைந்து திரிந்த கானகங்கள்
பூங்காக்கள், சாலைகள் ஆகிய
எல்லா இடங்களிலும் சோகமாய்
ஒரு பிரிவை உணர்ந்தான்..
அங்கே அவளோ
ஏதோ மறந்த உணர்வோடு
மகிழ்ச்சியாக இருந்தாள்..
அக்காள் குழந்தைகளோடு
விளையாடிக்கொண்டும்,
வீட்டில் அக்காளுடன் சண்டைபோட்டும்
மாமாவைக் கொஞ்சிக்கொண்டும்
மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தும்..
சாதாரணமாகத்தான் இருந்தாள்..
ஆனால் ஏதோ ஒன்று இழந்த நினைவு.
என்ன என்றுதான் தெரியவில்லை..
அன்றைய ஒரு நாள்..
அவள் வீட்டிற்குச் சென்றான்
அங்கே நினைவுகளைப் படரவிட்டான்..
அவளோடு சண்டையிட்ட இடங்கள்,
கொஞ்சிய இடங்கள்
ஒவ்வொன்றாக கணக்கிட்டான்...
சோகம் மட்டுமே மிஞ்சியது...
அவள் ஆவியாகவே இருந்திருக்கலாம்..
மென் குணம்படைத்தவள்
இன்று இதயத்தைத் தைக்கிறாளே!!
அக்காள் வீட்டிலிருந்து
தன் வீட்டிற்கு வந்தாள் பூங்குழலி.
தன் வீடு சற்றே மாறி இருப்பதை
சந்தேகத்தோடு உணர்ந்தாள்.
ஆவியாக இருந்த காலத்தில்
நடந்த அத்துணைகளும்
நொடியில் மறந்துவிட்டாள்...
ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று
நினைத்தாளே தவிர,
அது தானிருக்கும்போதுதான் என்று
நினைப்பு வரவில்லை,,,,
இல்ல மாற்றத்தை நோட்டமிட்டே
மெல்ல மாடி ஏறி வந்தாள்..
அங்கே........
கதிரவன் மாடியை
ஒரு பூங்காவாக மாற்றியிருந்தான்..
பூத்துக்குலுங்கும் செண்பகப்பூவும்
கனகம், ரோஜா, செவ்வந்தி ஆகியவையும்
அழகூட்டப்பட்ட தூண்களில்
படர்ந்திருக்கும் முல்லைகளும்
கொடிகளும்
மாடியை வர்ணமயமாக்கின...
அதைப் பார்த்த அவள்
சொக்கிப் போனாள்...
பூக்களுக்கு தண்ணீர் ஊற்றும்
கதிரவனைக் கண்டதும் வணங்கினாள்.
அவனால்தானே இன்று
பூக்களை ரசிக்க முடிகிறது!!
கதிரவன் சோகத்தை மறைத்தான்
ஆதவனை மறைத்து நிற்கும் மேகமாய்..
விளிம்பில் நீர் எட்டிப் பார்த்தாலும்
முகத்திலே சிரிப்பைக் கொண்டு
அவளை அணுகினான்..
பூங்குழலிக்கு ஏதோ
இழந்த மாற்றம்///
அது அவன் கண்களைப் பார்த்ததும் வந்தது..
கதிரவன் விடைபெற முயன்றான்..
காதலி முன்னே நின்றும்-அதிலும்
உடலோடு இணைந்த உயிராக நின்றும்
வேதனை மிஞ்சப் புறப்பட்டான்...
காதல் வெறும் பஞ்சல்ல.
அவள் இல்லத்து சாவியைக் கேட்டாள்.
அவன் மறந்தாற்போல எடுத்துச் சென்றுவிட்டால்??
சாவிக்கொத்தை குழலியின் கைகளில்
திணித்தான் மெல்ல....
அற்புதங்கள் வாழ்க்கையின்
சில நேரங்களில் நிகழும்...
அதோ!!
அவன் ஸ்பரிசம் பட்டதும்
உயிர் விளையாடிய சித்து விளையாட்டுக்கள்
நினைவுக்கு வந்தன.
அவள் இழந்த உணர்வு இவன்தான்.
ஆம்,,
காதல் என்றும் அழியாது.
உணர்ச்சிகள் மேலிட
கட்டி யணைத்தான் கதிரவன்..
பூமித்தாயை அணைக்கும் ஆதவன் போல..
காதலுக்கு முகமில்லை
மோட்சமில்லை
அகமில்லை.
அது ஒரு வெற்றிடம்
காற்று புக முடியாது//
குழந்தைகள் போல
இரண்டு மனங்களின் பிணைப்பே காதல்..
கதிரவனும் பூங்குழலியும் இனி
நிஜக் காதலர்கள்...
ஆவி உலகை வென்ற காதலர்கள்.
காதல் ஒரு மாயை..
உள் நுழைந்து ஆட்டி படைக்கும் தெய்வீகம்..

வாழ்க காதல்
வளர்க தமிழ்...


"விஷாக்! இன்னிக்கு நமக்கு டைவர்ஸ். கோர்ட்டுக்கு வந்துடு. ஏதாவது காரணம் சொல்லாத. "

"ம்ம்ம்.. கண்டிப்பா! உன்னோட லட்சியத்துக்கு என்னைக்கும் தடையா இருக்க மாட்டேன்."

போனைத் துண்டித்துவிட்டான் விஷாக்.

இன்று இருவருக்கு விவாகரத்து ஆகப் போகும் தினம்.. மகளிர் தினமும் கூட. கிட்டத்தட்ட இரு வருடங்கள் பிரிந்து
வாழ்கிறார்கள். பிரிந்து வாழ்ந்தாலும் நண்பர்களாக தொடருகிறார்கள். சில சொல்லப்படாத கருத்துக்களுக்கு பிரிந்து
வாழ்கிறார்கள் என்றால் அது இக்காலத்தில் ஆச்சரியமல்ல.

விஷாக் ஒரு கிறிஸ்டியன். இன்ஃபோசிஸ் இல் வேலை செய்யும் மென்பொருள் வல்லுனன். தொழிலுக்கு ஏற்ற மென்மை
கலந்தவன்/ ஜார்ஜ் வெலிங்டன் என்ற உண்மையான பெயரை தன் காதலி லட்சுமிக்காக மாற்றிக்கொண்டான்.
இருப்பினும் அவன் பெயரில் ஒரு கிறிஸ்துவ நெடி அடிக்கும்./
லட்சுமி ஐயர் வீட்டுப் பெண். காதல் திருமணமே சிறந்தது என்று விஷாக்கை மணந்தவள். பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி
மதுரையில் ஒரு சர்சில் நடந்த திருமணம். சென்னையில் வேலை கிடைத்துவிட்டதால் அங்கு சென்று குடும்பம்
தள்ளினார்கள்.

சென்னையில் இருந்தபோதுதான் பிரச்சனையே ஆரம்பம். ஓயாமல் வேலை வேலை என்று சுற்றிக்கொண்டு
இருந்தமையாலும் சகஜமாக பழகும் பெண்களை லட்சுமி விரும்பாததாலும் சற்று இடைவெளி அதிகமானது இருவரும்
உறங்கும் அறையில். காதல் இருவருக்கும் உண்டு. காட்டிக் கொள்ளத்தான் மறுக்கிறார்கள்.

கோர்ட் வீதியில் காரை நிறுத்தி இறங்கினான் விஷாக். கார் ஓட்டுனர் அதனை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டு
ஹாயாக அமர்ந்திருக்கையில் ஒரு டாக்ஸியில் வந்து இறங்கினாள் லட்சுமி.

"லட்சு! பிளீஸ் இன்னிக்கும் ஒன்னும் கெட்டுப் போகல. நல்லா யோசிச்சுப் பாரு. என்ன தப்பு பண்ணினேன்னு விவாகரத்து
வரைக்கும் போயிட்ட?"

"பிளீஸ் லிசன் விஷு! நாம ஃப்ரெண்டாவே இருப்போம். பழைய புராணத்தைப் புரட்டாத. உனக்கு எத்தனை தடவை
சொல்லி இருக்கேன். இந்த மாதிரி திரும்பத் திரும்பக் கேட்காதேன்னு.

"சாரி லட்சு! ஒவ்வொருதடவையும் இதை சொல்லும்போது நீ திரும்பி எனக்கு கிடைக்கமாட்டாயா ன்னு ஒரு ஆசை..
இந்த ரெண்டு வருசத்தில நாம அழுததுதான் மிச்சம்,. "

"யுவா என்ன பண்றான்?"

"அவனுக்கென்ன ஸ்கூலுக்கு போயிட்டு வருவான். நான் அவனை கண்டுக்கறதே இல்ல." ஒரு தாய் பாத்துகற மாதிரி
வருமா?"

" ம்ம் சரிசரி.. நம்ம கேஸ் வரதுக்கு இன்னும் ரெண்டு மணிநேரமாகும். வக்கீல்ட இப்பத்தான் பேசினேன். கன்பாஃர்மா
இன்னிக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துருவாரு.. "

" லட்சு! கடைசியா சொல்றேன். எல்லாத்துக்கும் யோசனை பண்ணு! "

லட்சுமி முறைத்தாள் அவனைப் பார்த்து. அவளுக்கும் ஏக்கம்தான். முதன்முதலில் விவாகரத்து நோட்டீஸ் விட்டது
இவள்தான் என்றாலும் அந்த காரணத்திற்காகவே பலநாட்கள் அழுதிருக்கிறாள். அதோடு பையன் யுவாவை பிரிந்த
சோகமும் கூட..
யுவா அப்பா செல்லம். அதனாலேயே அப்பாவிடம் இருந்துவிட்டான். இருந்தாலும் அவனுக்குள்ளும் பாசம் எட்டும்போது
அன்னையை அவ்வப்போது பார்ப்பான்.

"என்னங்க லட்சுமி மேடம்! இன்னிக்கு குளோஸ் பண்ணிடலாமே!" வக்கீல் தாமோதரன் இடைச்செருகலாக வந்தார்.

" சார்! இன்னிக்கு முடிச்சுடுங்க." லட்சுமி

" என்ன சார்! நீங்க பதில் சொல்ல மாட்டேங்குரீங்க? ரெண்டு பேரும் நோட்டீஸ் அனுப்பி கண்டபடி பேசிக்குவீங்கன்னு
எதிர்பார்த்தா இப்படி அன்யோன்யமாக இருக்கீங்களே!? திரும்பவும் யோசியுங்க மேடம்..."

" தாமோதரன் சார்! ரெண்டு வருஷமா யோசிக்காத ஒன்னை ரெண்டு மணிநேரத்தில யோசிச்சு பிரயோசனமில்லை.. லட்சு
திரும்பவும் எனக்கு கிடைப்பாள்னு நெனச்சேன். ஆனா ..."

"தோ பாருங்க விஷு... ரிலேக்ஸ். எல்லாம் நல்லதுக்கே!

மண் கறைகள் படிந்த அந்த கோர்ட் வளாகத்தில் அவர்கள் பெயர் அழைத்ததும் சென்றனர் இருவரும்.. கூட வக்கீலும்.
நம் எண்ணங்களிலிருந்து எத்தனை தூரம் தள்ளிப் போகிறோம்? பெண்ணின் மனது வலியதுதான். இருந்தாலும் எல்லா
விஷயங்களிலும் இருந்தால் என்னாவது? ஒதுக்கும்போது வலிக்கும் இதயத்தை எடுத்து அழுதிட இருவருக்கும்
துணிவில்லை.. ஆனால் பாழாய் போன மனம் மட்டும் லட்சுமிக்கு திரும்பவும் சேர மறுக்கிறது.

" விஷாக்! நீங்க உங்களோட மனைவியை விட்டு பிரிய விருப்பப்படுறீங்களா? உங்கள் முழு மனசு இதுக்கு ஒத்துக்குதா? "
நீதிபதி கனம் நிறைந்த குரலில் கேட்டார்.

" யெஸ்! " ஒரே வார்த்தையில் கண்களில் வெளிவந்த நீரை மறைத்து சொன்னான்.

" லட்சுமி! நீங்க?"

" முழுமனசோட சம்மதிக்கிறேன்.. எனக்கும் சரி அவருக்கும் சரி சேர்ந்துவாழ இஷ்டமில்லை.. "

" இருவரின் முழுமனதின் படியும், சுய நினைவோடும் இருவருக்கும் உண்டான பந்தத்தை இந்த நீதிமன்றம் பிரிக்கிறது.
சட்டப்படி இனி இருவரும் தனி மனிதர்கள். இவர்களின் குழந்தை யுவா அவர் தாயின் அரவணைப்பில் 18 வயதுவரையில்
வளர்க்கப் படும் என்றும் கூறி உத்தரவிடுகிறது."

மெல்ல வளாகத்தை விட்டு இருவரும் நீங்குகையில் இருவருக்கும் மனது காணாமல் போயிருந்தது. காதலை விட
பிரிதலில்தான் வலி அதிகம்./ அவளுடைய தொண்டை அடைபட்டுக் கிடந்தது. அவனுக்கு இதயமே நின்று போய்க்
கிடந்தது.

காரில் ஏறுகையில் அவளை அழைத்தான்.

"லட்சு! கங்க்ராட்ஸ்! நீ நெனச்சதை சாதிச்சுட்ட.. எப்படியும் பிரிஞ்சுடுவோம்னு தெரிஞ்சும் உனக்காக மகளிர்
தினத்துக்காக ஒரு ரோஸ் வாங்கிட்டு வந்தேன்.. பிளீஸ் வாங்கிக்கோ!"

அவள் மெளனமாக நின்று கொண்டிருந்தாள். அவன் ரோஸ்கள் அடங்கிய ஒரு பொக்கேயை எடுத்துக் கொடுத்தான்.
கண்ணிர் சிந்த அவள் பெற்றுக்கொண்டாள்.

" பை லட்சு! என்னை காண்டாக்ட் பண்ணு அடிக்கடி. நீ பேசற அந்த வார்த்தைகளுக்காகவே நான் உசுரோட
இருப்பேன். யுவா வை உன்னோட வீட்ல கொண்டு வந்து நைட் விட்டுடுவேன். பை மா! "

இதயங்களின் அழுகை மனதுக்குத் தெரியாமல் போய்விட்டது. இருவரின் மனரத்தினால் இதயங்கள்
உருகிக்கொண்டுதான் இருக்கிறது. லட்சுமி ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவளால் அடக்க
முடியாத அழுகை அப்போது பீறிட்டு, தன் அறைக்குள் சத்தமாகவே அழுதாள். அவன் கொடுத்த அந்த பொக்கேவை
பிரித்தாள்.. அழகிய ரோஜாக்கள் அடங்கிய கொத்து. நறுமணம் மூக்கைத் துளைத்தது. இடையில் ஒரு கடிதம்
சொறுகப்பட்டிருந்தது.

"அன்பு லட்சுவுக்கு..
உனக்கு நான் எழுதும் கடைசி காதல் கடிதம். என்னோடு வாழ்ந்த நாட்களில் நான் சொர்க்கத்தில்தான் இருந்தேன்
என்பதை நீ அறிவாய்.. நீ எங்கு இருந்தாய் என்பதை நான் அறியேன். காதல் ஒரு வரப்பிரசாதம், அதில் நீ ஒரு சாதம்
என்று அடிக்கடி என்னிடம் சொல்வாய். உண்டு மயங்கிய என்னை நீ ஜீரணக்கோளாறு என்று ஒதுக்கலாமா? உனக்காக
நான் எழுதிய கடிதம் கூட அழுகிறதைப் பார் லட்சு. யுவா உனக்காக பிராத்தனை செய்கிறான். அவனுக்கு அறிவு எட்டும்
காலம் வெகுதூரமில்லை/ குழந்தையை முன்னிட்டாவது நீ கைசேர்வாய் என்று நினைத்தேன். ஆனால் உன் ஆன்மாவில்
நான் மிகப்பெரும் துரோகி ஆகிவிட்டேன்.
யுவாவை உன்னிடம் விட்டபிறகு நான் அமெரிக்கா செல்ல இருக்கிறேன். இங்கிருந்தால் உன் ஞாபகத்தில் நான் இறந்தே
போவேன். எனக்கு வாழ ஆசை உண்டு// இறப்பென்றால் அது உன் மடியில்தான். உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு மகளிர்தினத்தன்று எனக்கு கொடுத்த முத்தம்... உன்னிடமிருந்து நான் வாங்கிய
கடைசி முத்தம். அன்றைய நிகழ்வுகளை நினைத்துப்பார். உன் கணவன் என்றாவது தவறாக நடந்திருக்கமுடியுமா?
பெண்கள் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள் என்று பெருமை பொங்க சொன்னவள் நீ!
என்ன சொன்னாலும் உன் பாறை மனது கரையாது. உன் நினைவுகளாலும் உன்னை மட்டுமல்ல நான் நேசித்த இந்த
நாட்டையே பிரியப் போகிறேன்..
யுவாவை நல்லபடியாக படிக்கவை.. அவனும் நல்ல நிலைக்கு வரவேண்டும்.. நீ ஒத்துக்கொள்வாயோ மாட்டாயோ யுவாவின்
பெயரில் பேங்கில் பணம் போட்டிருக்கிறேன். அவன் படிப்பு செலவுக்கு உதவும்..

மற்றது...........

கண்ணீர் தவிர வேறெதுவும் மிச்சமில்லை..

உன் அன்பு முன்னாள் கணவன் (துரதிர்ஸ்டசாலி)

விஷாக்.

கடிதம் படித்ததும் கண்களில் வியர்வைகள் சொட்டியது. ஏற்கனவே அழுதவள் தற்போது இன்னும் அழுதாள்.. கண்களைத்
துடைத்துவிட்டு போன் செய்யப்போனாள்.. அவளின் பார்வை அந்த எழுத்துக்களின் மேலேதான் இருந்தது.
அவள் வயிறு மீண்டும் ஒரு சிசுவுக்காக ஏங்கிய காலம் மீண்டும் வந்துவிட்டது போலும்.. காலியாக்கப்பட்ட இதயம்
மீண்டும் நிரப்பப்படும் என்று நம்பிக்கையில் போன் செய்தாள்.. காலண்டரைப் பார்த்தாள். மார்ச் 8 மகளிர்தினம். மீண்டும்
ஒருமுறை அவனுக்கு முத்தமிட மனம் துடித்தது.

அவன் ஹலோ என்றான். அக்கணமே அவள் உயிர் அவனோடு கலந்துவிட்டது..

சிறு வயதில் தெலுகு சூழலில் நான் வளர்ந்தாலும் தமிழ் பாடல்கள்தான் கேட்டறிந்தேன்... தெலுகு பாடல்கள் அப்போது
ஈரோட்டில் விற்கப்பட்டனவா என்பதை விட, எனக்கும் அவ்வளவாக புரியாது// தமிழ் பாடல்களில் உண்மையிலேயே
நான் மயங்கியது இளையராஜாவின் இன்னிசையில்தான். ஒவ்வொருமுறையும் கேட்கும்போதெல்லாம் இனிப்பு ஊறும் என்
நாக்கில். அதிலும் மோகன் படப் பாடல்கள் எங்கு ஒலித்தாலும் நின்று கேட்பேன்.. அந்த அளவுக்கு பைத்தியம்.. இதில்
உச்சம் " வா வெண்ணிலா! உன்னைத் தானே" என்ற பாடல். மெய்மறந்து நிற்கிறான் என்று சொல்வார்களே!!! அந்த
நிலைக்கு வந்துவிட்டேன்./ அடுத்ததாக ரகுமான்.. ரொம்பவும் நான் ரசித்த, ரசிக்கும் பாடல் "ரோஜா ரோஜா-
காதலர்தினம் படப்பாடல் (அதற்கு காரணமிருக்கிறது.. பிறகு டைரியில் சொல்கிறேன்.) தற்போதைய சில பாடல்கள்
மட்டுமே நான் முணுமுணுக்கிறேன். பெரும்பாலும் தமிழ்பாடல்கள் கேட்கும் வழக்கமே போய்விட்டது.. பழைய பாடல்கள்
என்றாவது கேட்பேன். இல்லையென்றால் நம்ம இளையராஜா அல்லது எப்போவாவது இசைப்புயல்....

ஆங்கிலப்பாடலுடன்:

சிறு வயதிலேயே மைக்கேல் ஜாக்ஸன் பாடல்கள் என்றால் உயிர். அனைத்து பாடல்களும் அடங்கிய இரு VCD நான்
வாங்கினேன். அதைப் போட்டு போட்டு பிளேயரே தேய்ந்திருக்கும். வீடியோ பாடல்கள் அனைத்தும் பார்த்தாகிவிட்டது.
பின் ஆடியோ பாடல்கள் விலைக்கு வாங்கி கேட்டேன்.. அனைத்திலும் சொக்கிப் போனேன்.. எனக்கு மிகவும் பிடித்த எம்
ஜெ பாடல் : Billy Jean, Beat it, Thiriller மற்றும் சொல்லிக்கொண்டே போகலாம்.. திரில்லர் மிக அருமையான பாடல்...
பக்கா டேன்ஸ்.. மைக் தன் வாழ்க்கையை மிக ஆடம்பரம் பண்ணியே அழிந்துகொண்டு இருக்கிறார்.. மிக வேதனையான
செயல்..

மைக் கிற்கு பின் பிரிட்னி, தேன் குரல் என்பதை நான் கேட்டது அவளுடைய குரலில்தான். அவளுடன் நான் கேட்ட
முதல் பாடலே தூள்// baby one more time. ஒன் மோர் டைம் கேட்க வைக்கும் குரல்,... ஆனால் அவளுடைய
பிரபலமான சில பாடல்கள் மட்டுமே தான் கேட்டேன்.. மெய் சிலிர்த்தேன்.. அப்போதுதான் மற்ற பாப் பாடகர்கள் மீது
ஒரு கவனம் வந்தது... அதற்கு முழுமுதற் காரணம். V Tv, VH1. இவளுடைய The beat goes on, I am Slave, My
prerogative, கடைசியாக, Toxic... போன்ற சில பாடல்கள் மட்டுமே பிடித்தது... அதற்கு பின் இன்று வரை நான் இவள்
பாடல்கள் கேட்பதில்லை.. ஏனோ பிடிக்கவில்லை..

பிரிட்னிக்கு அடுத்து நான் மிகவும் ரசித்த பாடக பாடகிகள் : Jlo, Enrique, Kylie,

இதில் ஜெலோ வின் All I have பாடலை இன்று முனகினாலும் போன முறை கிரிக்கெட் உலகக் கோப்பை ஞாபகம்
வரும்.. அந்த சமயத்தில் வெளியான பாடல், பின் Jenny From The Block, Get Right போன்ற பாடல்கள் மிக அருமை..

Enrique மிகக் குறிப்பிடவேண்டிய மனிதர்.. நான் விழுந்துவிட்ட பாடல் Escape. அடாடா!! மிக அருமையான பாடல்..
நேர்த்தியான காட்சியமைப்பு!! அதிலும் அந்த பெண்..... (அவள் ஒரு பிரபலம்... மிகப் பிரபலம் உங்களுக்குத் தெரிய
வாய்ப்பிருக்கிறது.. யாரெனச் சொல்லுங்கள் பார்போம்) காட்சிகளில் சில ஆபாச அமைப்பு, அதை விட்டால் மற்ற
அனைத்தும் மிக அருமை.. மோட்டார் வண்டியில் போய்கொண்டு இருக்கும்போதே அப்படியே பாடகனாகி மேடையில்
பாடுவதாக எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் மிக நேர்த்தி... இவருடைய Escape ஆல்பத்தின் எல்லா பாடல்களும் டாப்!!!
குறிப்பாக Escape, Love to see you Cry, Hero. Dont turn off the light. போன்றவை டாப்கிளாஸ்...

kylie.... அழகான கிழவி.. அவளை நான் கண்ட முதல் பாடலிலேயே சொக்கிப் போனேன்... பாப் உலகில் ஒரு கிழவியும்
பாடுகிறாள் என்றாலும் ஏற்றுக்கொள்கிறார்கள்.. குழந்தைத் தனமான குரல் அவளுக்கு... இவளுடைய Fever ஆல்பப்
பாடலை இன்றுவரையிலும் கேட்கிறேன்... குறிப்பாக சொல்லவேண்டிய பாடல்கள் : In your eyes, Can't get out of my
head, Love at firsht sight, Come into my world... மற்றும் more more... In your eyes யாருக்கும் பிடிக்கும்படியான
இசையமைப்பு! பின்பக்க கிராபிக்ஸ் அமைப்பு... அதேபோல்தான் இரண்டாவது பாடலும்... Love at First sight பாடல்
மிக நேர்த்தி... அழகான கிராபிக்ஸ் அமைப்பு... ஒரே ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு பின்பக்கம் நேர்த்தி
செய்திருக்கிறார்கள்.. நம்மவர்கள் செய்யும்படியானதுதான்.. ஐடியா கிடைகாதே!! Come into my world பாடல்
சொல்லும்படியான பாடல்.. அந்த பாடலில் பின்பக்க நிகழ்வுகள் எல்லாம் ஒரே மாதிரி கைலி மட்டும் ஒரு தெருவை
சுற்றி வருகிறாள்.. இந்த பாடலில் நான்கு கைலிகள். முதல் கைலி விட்டுச் சென்ற ஒரு பையை இரண்டாவது கைலி
எடுத்துச் செல்லுவாள்.. இப்படியாக நான்குபேரும் பாடுவார்கள்.. இடையிடையே காட்சி வெட்டு இருக்காது.. வீடியோ
உள்ளது அனுப்புகிறேன் பாருங்கள்.. கிராபிக்ஸில் மிக சவாலான விசயம்தான் நம்மவர்களுக்கு..

அடுத்து Shakira..

நான் முதன்முதலாக ஒரிஜினல் கேசட் வாங்கிய ஆல்பம் இவளுடையதுதான். Laundry Service.
லத்தீன் பாடல்கள் சில இதில் அடக்கம்.. இவளின் நடன அசைவு அப்பப்பா! சொல்ல வார்த்தைகள் இல்லை.. Whenever,
wherever, Objection Tango, te dejo madrid, under neath your clothes, the one, que me quedes tu போன்ற பல
பாடல்கள் மிக அருமை... சமீபத்தில் வெளிவந்த Fijaci�n Oral (Vol.1), Oral Fixation (Vol.2 ) அனைத்துபாடல்களும் மிக
அருமை.. ஷகிரா உண்மையில் அழகும் அறிவும் ஆட்டமும் நிறைந்த பெண்மனி... கண்மனி

Shania Twain. சில பாடல்கள் கேட்டிருக்கிறேன்.. கேட்ட அனைத்து மிக டாப்//
I'm gonna getcha good! Up, Ka ching, Forever and for always... அனைத்தும் கேட்கும்படியான பாடல்கள் அவள்
கிழவி என்றாலும் குரலில் குமரி.... வாய்பிருந்தால் வீடியோ இணைக்கிறேன்.

அப்பறம் Nelly, Nelly Furtado, Stefani, Evanesence, Celin Dion, Eminem, Shaggi, Avril, 50 cent இப்படி பட்டியல்
நீண்டு கொண்டே போகும்.... அனைத்து பாடல்களும் மிக அருமை..

Kelly Clarkson: போன வருடம் கிராமி வாங்கிய பெண்மனி... மயங்கி மயங்கி பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.
(இவளுடைய ஒரு பாடலைத்தான் வித்தியாசமாக ஒரு பாடல் விமர்சனம் என்ற பெயரில் திரி போட்டு இருக்கிறேன்.)
அர்த்தம் மிகுந்த பாடல்கள். ஆழமான பாடல்கள்.. நேரம் அமைந்தால் மற்ற பாடல்களுக்கும் விமர்சனம் எழுதுகிறேன்..
என் வாழ்வில் மறக்க முடியா பாப் பெண்மனி. Break away, behind these hazel eyes, Since you been gone, becaus of you போன்றவை டாப்

Maria Carey... சலித்துப் போகுமளவு இவள் பாடல்கள் கேட்டு இருக்கிறேன். We Belong together என்ற பாடல் என்னை
ஒரு கவிதை எழுதத் தூண்டி இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. (தெரிகிறதா ஏமாற்றம்?) உடையா குரல்
கொண்ட பெரியமனசுக் காரி.. அழகானவள்.

Beyonce பிரிட்னிக்கு போட்டி என்கிறார்கள். முதன்முதலாக இவளைப் பார்த்தது Destiny;s Child குருப்பில்தான். பின்
அடிமையாகிவிட்டேன்./. இவளுடைய குரலுக்கு... அழகானவள்.. பிரிட்னியெல்லாம் வெறும் தூசுதான்... இவள் ஒரு
புதையல். baby boy, crazi in love, Naughty girl கடைசியாக வந்த ஆல்பமான Bday யிலிருந்து Dejavu, irriplaceble, ring the alarm போன்றவை டாப்

குரூப்பாக பாடும் பாடல்களில் Bep (black eyed peas) ரொம்ப பிடிக்கும்.. அதில் Fergie எனக்கு மிகப் பிடித்தமானவள்.

Dido.. இவளுடைய ஒரு பாடல் என்னை கவிதை எழுதத் தூண்டியது (நன்றி காதலனே!) அனைத்து அர்த்தமுள்ள
ஆழமான பாடல்கள்.. life for rent, White Flag, Thank you.... போன்றவை சூப்பர்..

இன்னுமிருக்கிறார்கள்... இத்துடன் முடித்துக்கொள்கிறேன். ரொம்ப படித்தால் சலிப்பாக போய்விடும்.. நினைவு

வரும்போது மீண்டும் தருகிறேன்..

ஆவியைக் காதலித்தாலும்
அவள் மறையும் நிமிடங்கள்
வாழ்க்கையின் ரணக்கீறல்கள்
அவளோடு வாழ்ந்த காலத்தில்
பேசிய பேச்சுக்கள் ஏராளம்/
ஒரு உயிர் அடங்கும்போது
நினைவுகள் ஏராளமாய் வந்து
கதவைத் தட்டுமல்லவா?

கண்முன் மறைகிறாள் குழலி...
அது பிறருக்குத் தெரியவில்லை.
பிடிபட்ட கதிரவன் கதறினான்..
போகாதே என்று இதயம் வெடிக்க
துடிதுடித்துப் போனான்..
காதலின் உச்சமாக அந்த உடலுக்கு
முன்னே நின்றுகொண்டு
முத்தமிட்டான் அவள் இதழ் நோக்கி.....
அச்சமயம் ஒரு அதிசயம்.....

காதல் எவ்வளவு வலிமையானது?
ஒரு முத்தத்தில் பிரிந்த காதல் உண்டு
முத்தத்தில் சேர்ந்த காதல் உண்டு..
ஆனால்
முத்தத்தாலே உயிர்வந்த காதலுண்டா?

இறந்து போன குழலி
நினைவுகளின் வலிமையால்
மீண்டும் உயிர் பெற்றாள்..
அவளின் கோமா நிலையால்
நிற்கக் கூட இல்லாத நிலை..
சுற்றி நிற்கும் காவல் கூட்டத்தையும்
மருத்துவ உடை அணிந்து நிற்கும்
மருத்துவர்களையும்
ஏனைய சந்திப்பாளர்களையும்
வித்தியாசமாக நோட்டமிட்டாள்..
அவளுக்கு எல்லாமே புதிதாகத் தோன்றியது..
அவள் நினைவுகளின் காதலன்
கதிரவன் உட்பட....

அவள் உயிர் பிழைத்த சந்தோசத்தில்
மனையே மகிழ்ச்சியில் திளைக்க,
மனம் மட்டும் சோகமாய் திரிந்தான்..

உயிர் உடலோடு
சேர்ந்தால்தானே மனிதன்?
முயற்சிக்கலாமே என்று
படுத்திருந்த உடலோடு
ஆவியான இவள் படுத்தாள்..
ஆனால் எதுவும் நடக்கவில்லை..
கைகளை ஆட்டிப் பார்த்தாள்.
தலையை நீட்டிப் பார்த்தாள்.
ம்ஹீம்...
அச்சமயம் பார்த்து
தலைமை மருத்துவர் வந்து சேர்ந்தார்..
கோமாவில் படுத்திருக்கும் உடலை
எடுத்து சென்றுவிடுமாறு
பூங்குழலியின் அக்காவிடம் சொன்னார்,,,
அனைத்தையும் கேட்டறிந்தாள்
அவர்களுக்கு மிக
அருகே நின்றுகொண்டே...

மெல்ல அவனோடு சோர்ந்தவாறு
வீடு சேர்ந்தாள்...

கவிதை சேர்க்கும் மொட்டை மாடியில்
எண்ணங்களை உலவ விட்டார்கள்,,
எண்ணங்கள் காதலித்தால்
இவர்கள் காதலர்கள் தாம்..
ஆவியுடன் காதலா?
எண்ணலாம்...
சொல்லியிருக்கிறார்களே
"காதலுக்கு கண்ணில்லை,
காதில்லை
மூக்கில்லை
முழியில்லை "என்று...

கதிரவன் ஒரு முடிவு செய்தான்
உடலைத் திருடி வந்துவிட....
என்றாவது ஓர்நாள் உயிர் இணையுமல்லவா,,

நண்பன் உதவியால்
மெல்ல மருத்துவமனை சென்றான்
நாசியைப் பிடுங்கும்
நாற்றம் கமழும் இடம் இது..
மூக்கைப் பிடித்தவாறே
ஒரு பூனை போல சென்றார்கள்..
இது என்ன மடமா? சத்திரமா?
மருத்துவமனை..
காவலின்றி போகுமா?
கடத்தலில் புதியவன் என்பதால்
கதிரவன் தவறிழைத்துவிட்டான்.
காவல் காரர்கள் சுற்றி வளைத்தார்கள்..
இருப்பினும் அவள் உடல் அடங்கிய
சக்கர மெத்தையை உசுப்பி
அங்கிருந்து அகன்றான்.
ஆனால் பிடிபட்டான்...

கோமாவிலிருந்த குழலி
இந்த கூச்சல் குழப்பங்களுக்கிடையில்
இறந்தே போனாள்...
நினைவுகளின் இறப்பால்
உடலைவிட்டு பிரிந்த நினைவுகள்
உடல் போனது நினைவுகளும் போயிற்று..

ஒருவன் அடிபட்டுக் கிடந்தான்...
மருத்துவர்கள் எவருமில்லை..
ஒருவேளை இருந்தாலும்
உதவுவார்களோ?
மானங்கெட்ட மனிதர்கள் சிலர்
தண்ணீர் கொடுக்கவும் தயங்குவார்கள்.
குழலியினால் மற்றவர்கள் கண்களுக்கு
காட்சி தரவும் முடியாது..
பொருள்களைத் தொடவும் முடியாது.
கதிரவனைத் தூண்டினாள்..
முதலில்
முதலுதவி செய்ய....

ஒன்றுமே அறியாத அவன்
அவள் சொல்படி
ஒவ்வொன்றாய் செய்தான்.
விபரங்களை அவளிடம் கேட்டறிந்தான்.
மற்றவர்களின் கண்ணுக்கு
அவள் தெரியாள்.
ஆக இவன் பேசியது
அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது...
முதலுதவியில் அவன் உயிர்பெற்றான்.
அச்சமயந்தான் பூங்குழலி அறிந்துகொண்டாள்
தானொரு மருத்துவச்சி என்று...


ஞாபங்களின் இழப்பால்
ஞானம் போய்விட்டதே!
கதிரவனின் துணையால்
தூண்டு பெற்றிருக்கிறாள்
அழகிய கிழத்தி.
விழிகளில் யோஜனை செய்தாள்
அவள் பணி செய்த மனைக்குச்
சென்று விசாரிக்க முடிவெய்தாள்..

உடனே விரைந்து சென்றார்கள்
இருவரும்
ஒரு மனதின் வேகத்தைப் போல..
தன் இறப்புக்கு முந்தைய வாழ்க்கை
தன் பிறப்புக்கு பிந்தைய வாழ்க்கை
எவ்விதமிருந்திருக்கும்?
அறிந்து கொள்ள ஆவலுற்றாள்..

அங்கே வரவேற்பரையில்........

மருத்துவமனை என்றால்,
நாற்றம் வீசவேண்டுமா?
நோயாளிகளின் அழுகிய வாசனையும்
பணம் திருடும் மருத்துவர்களின்
மெல்லிய பேச்சும்
மருத்துவச்சிகளின் அவசர ஓட்டமும்
தான் இறப்பதை இன்னும் அறியாது
அவசரப் பிரிவில் படுத்திருக்கும்
இருதய நோயாளிகளும்
மருத்துவமனையை அடையாளம் காட்டின,,
வரவேற்பறைப் பெண், ஓவியா
வாய் திறக்க கஷ்டப் படுவாள் போலும்
பூங்குழலியைப் பற்றி கதிரவன் விசாரித்தான்.
பூங்குழலியைத் தன்னருகே வைத்துக்கொண்டே...
என்னே ஒரு உலகம்/? விந்தை?
அருகிலே அவள்...
முகவரி கேட்கிறான் வேறொருவளிடம்//

ஓவியா, தேன்மொழியைக் காட்டுகிறாள்.
தேன்மொழி, பூங்குழலிக்கு உற்ற நண்பி.

கதிர், மேல் மாடி சென்றான்.
தேன்மொழியைச் சந்தித்தான்.
விசாரித்தான்
அப்போது.........

தேன்மொழி சொன்னாள்,
" பூங்குழலி இறக்கவில்லை..
மாறாக அவள் நினைவுகள் இறந்துபோனது.
கோமாவில் இருக்கிறாள். "
குழலிக்கு புரிந்து போனது..
மெல்ல அவள் படுத்திருந்த அறைக்கு
அவளே சென்றாள்...

இந்த வாக்கியம் பார்த்தீர்களா?
இனிமையாக
இருக்கிறதல்லவா?

இனிமையில்லாது போனாள்
இவள்.

குழலியின் உடல் வெறும் ஜடமாய்
உயிர் மட்டும் உலாவிக் கொண்டிருக்கிறது
கதிரவன் கண்களுக்குத் தெரிந்தவாறு..

கலங்கிப்போயிருந்த
கதிரவனுக்கு
கண்களாலேயே மன்னிப்பு கேட்டாள்..
கதிரவன் தண்சுடர்..
ஒரு பெண், அதிலும்
அழகிய பெண், அதிலும்
இறந்து போன பெண், அதிலும்
கலங்கிய விழிகளோடு வந்தால்,
கல்லும் கரையாதா?

குழலியின் நண்பனாகிப் போனான்
கதிரவன்..

அவளைப் பற்றி
அக்கம் பக்கம் விசாரித்தான்...
(குழலி வசித்த வீட்டில் அல்லவா
கதிரவன் இடம் பிடித்திருக்கிறான்....)
விடைகள் இல்லை.
கூடவே அவளும் வந்தாள்..
கதிரவன் கண்களுக்கு மட்டும்
தெரியும் வண்ணம்........

குழலியின் நண்பியான
தேன்மொழி இல்லத்தை
இறந்த காரணத்தினால்
மறந்து போனாள்.
சற்று விசாரிக்கையில்
தெரிந்து கொண்டார்கள் இல்லத்தை...
ஆனால் அங்கே அவளில்லை..
அதற்கு எதிரே அவள்
குடி மாறியதைப் பாராமல்
மெளனமாக கலைந்து சென்றார்கள்
ஆவியும் பாவியும்....

மெல்ல நாட்கள் கரைந்தன,
ஆதவனின் ஒவ்வொரு எழுச்சியிலும்
நாட்கள் நகர்ந்து கொண்டு
இறுதியில் இறந்துபோக வேண்டும்..
எழுச்சி மட்டும்
என்றும் வீழ்ச்சி இல்லை.

ஓர் நாள்...
கதிரவன் கைபிடித்து (?)
நகர் வலம் வந்தாள் பூங்குழலி..
பூங்காவில் விளையாடும் சிறு குழந்தைகள்
சர்க்கஸில் சறுக்கும் பிஞ்சுகள்
அதனை ஆவலோடு பார்க்கும்
மற்றைய பிள்ளைகளுக்கு மத்தியில்
முக மலர்ச்சியாக
பூங்காவின் வழி
ஒரு ஓட்டலுக்குள் சென்றார்கள்,,
அங்கே அச்சமயம்.....

குளத்துப் படிகளில் மண்டியிட்டு
நீ அள்ளி வீசிய தண்ணீரின்
தெறிப்பை பார்த்து மகிழுவேன்.
குளத்து மீன்கள் வெட்கலாம்
நான் இரைத்த பொரிகளை தின்றுவிட்டு...

கொலுசாணியை சரிபார்க்க
முதல்படியில் நீர் நனைய
கால் பரப்புவாய்.
வெட்கி ஓடும் நீரைக் குடிக்க
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..

பொரிகளுக்கு ஏங்கிய மீன்கள்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...

உன் நனைந்த ஆடைகளைப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........

உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...

எழுந்தோம்; நடந்தோம்.

ஆன்மீகம் குடிகொண்டிருக்கும்
ஒரு சிலையை வணங்குவதற்கு முன்
ஒரு பூக்கடைக்குப் புறப்படுவோம்
ஒப்பனைகள் புரிய..

வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும்
பூக்களில் எல்லாம் உன் வாசனை
உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்

உன் கூந்தலில் ஏறிவிட்டு
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.

என் கரம் பிடித்தவாறு
ஒரு குழந்தையாக தவழ்ந்து வருவாய்.
தரிசன வரிசையில்..
உன் வியர்வைகளை
என் ரேகைகள் ருசிக்கும்
உன் ஈரத்தை என் மனம் ரசிக்கும்

இறுதியாக அந்த சிலை வந்ததும்
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,

ஒரு தெய்வக் குடிலுக்குள்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..

அவள் மேஜைக்கு
இடையில் நின்று கொண்டிருந்தாள்.
அவளின் இடை
மேஜைக்கு மேலும்
கால்கள் கீழும்
இருந்தன....
விந்தை...
அவள் இறந்துபோனவள்.
அவள் ஒரு ஆவி...
அது அவளுக்கு விளங்கவில்லை...

சிறிது நாட்கள் நகர்ந்தது,.
அவள் அவனோடே வசித்தலானாள்
அவனின் செயல்களுக்கு
இடைமறித்தாள்...
நன்றாக படியுங்கள்
இடைமறித்தாள்.

தொல்லை காட்சி பார்க்கையில்
தொல்லை கொடுப்பாள்
பாட்டு என்ற பெயரில்
அறை அதிர அலறுவாள்
அழகிய முகம்தான்
அவளுக்கு என்றாளும்
அவதியுறும் செயலால்
அழுகிய முகமாய் தெரியலானாள்
அவனுக்கு...

முடிவு செய்தான்...

சாமியார்களை வரவைத்தான்..
பேயோட்டும் சாமியார்கள்- வெறும்
நாயோட்டும் சாமியார்கள்
அவளுக்கு அருகிலே இருந்தும்
ஓடல் நடைபெறவில்லை.
அவளும் ஓட்டமெடுக்கவில்லை.
மாறாக,
ஏளனமாக பார்வையிட்டாள் குழலி...
பேயோட்டுபவனுக்கு குழலி தெரியவில்லை..
ஆம்... கதிரவன் கண்களுக்கு மட்டுமே
விருந்தாக வந்திருக்கிறாள்.
மற்ற சுடர்களுக்கு வெறும் காற்றுதான்..
அற்புதம் என்பதா இதை?

ஆவியிடம் பேசுபவர்கள்,
சூனியம் செய்பவர்கள்
சாமியார்கள்
இன்னபிற இத்யாதிகள்
எல்லோரையும் வரவைத்து
ஓட்டப் பார்த்தான் குழலியை..
அவனருகேயே அமர்ந்து கொண்டு
அனைத்தையும் கவனித்தாள்
அஞ்ஞானத்தோடு....

பணத்தைக் கொடுத்து
ஏமாற்றம் வாங்கினான்..

குழலி மென்மையானவள்
மருத்துவச்சிகளின் ஆரோக்கிய குணம்
அழகிய விழிகளும்
சோடா குண்டுகள் போல விழிகளும்
நடுப்புற ரோஜா போல நுதல்களும்
பெற்ற பேரழகி....
அவள் க்ஷணநேரம் யோசித்தாள்...
துன்பம் என்று மற்றவர்களுக்கு
கொடுப்பதை என்றாவது யோசித்திருப்போமா?
என்று கலங்கினாள்..
ஒரு முடிவும் எடுத்தாள்.....

நம் மனதின் குழப்பம் அவள்
நம் வயதின் குழப்பம் அவள்
நம் எண்ணமே குழப்பமாய்
என்று உறுதி படுத்திக்கொண்டான்.

அன்றைய இரவு....
கழிந்தது காதலாய்...
இல்லை இல்லை
காதல் கழியுமா?,,,,, வேறு???
கழிந்தது ஒரு கனவாய்...

"இன்னும் என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?
நான் காவல் துறையை அணுகட்டுமா?"

பூங்குழலியின் இனிய ராகம்
அவன் செவியில் ஒலித்தது.
அவன் கனவே என்று நினைத்துக்கொண்டான்.

குழலி ஒரு மருத்துவச்சி அல்லவா?
அதிலும் மனம் குன்றியவர்களுக்கு
மருத்துவம் பார்ப்பவளல்லவா?
ஆகையால்,
மெல்ல சில கேள்விகள் எழுப்பினாள்..
அவனும் பதில்கள் சொன்னான்..
உடன் பாடின்றி குழலி எழுந்து
காவலை அணுகப் போகிறேன்
என்று தொலைப் பேசியை
எடுக்க முற்படுகையில்.....

அவளால் எடுக்க முடியவில்லை
அவளின் கைகள்
தொலைப் பேசியின் உள்ளே
ஒரு மென் காற்று போல
நுழைந்து செல்கிறதே தவிர
எடுத்து பேச முடியவில்லை
அவளால் எந்த பொருளையும்
தொடக்கூட முடியாது.

அவளென்ன அதிசயமா?

கதிரவன் கொஞ்சம் யோசித்தான்
ஒருவேளை ஆல்கஹால் காரணமோ?
பதிலுக்காக யாசித்தான்..

மனிதன் எதையும் நம்புவதில்லை/
அதிசயங்கள் பல இங்கே
நிகழ்வதை அவன் அறியவில்லை...

என்ன காரணம்?
அழகிய பெண்ணொருத்தி,
அவளால் பொருளும் தொடமுடியாது..
பிரம்மையா?
கனவா?
போதையா?

நண்பனின் புத்தக் கடைக்குச்
சென்று, புத்தியைத் தீட்டினான்.
புத்தகங்களில்
புதையாத பொருளுண்டா?
ஆவியோட்டும் மந்திர
புத்தகங்கள் பல...
காவி ஆடைக்காவது ஓடும்
ஆவிகள் இவை என்று
பல நூல்களைப் பிரித்தான்..

இல்லத்தில் தீபமேற்றி
பாடல் பாடினான்.
இறைவனைத் தூது வேண்டினான்,

ஆனால் அதற்கெல்லாம்
சளைத்தவளல்ல பூங்குழலி..
மீண்டும் தோன்றினாள்.
இம்முறை கதிரவன்
இவளின் பெயர் கேட்டான்.
இனிப்பு ததும்பும்
இதழால் சொன்னாள்
"பூங்குழலி"

" வேறு யாரிடமாவது கடைசியாக
என்னைத் தவிர பேசினாயா?"

"என்ன உளறுகிறாய்?"

" நீ இங்கு
இருந்த காலத்தில்
என்ன என்ன செய்தாய்?"

" உன்னைவிட மேலாக.."

கேள்வியின் உச்சமாக
கேட்டான்...

"நீ இறந்ததைப் போன்று
உணர்ந்திருக்கிறாயா?"

" சுத்தப் பேத்தல்..."

கதிரவன் மெல்ல
கைகளை அவள் தோளில்
தொட்டு பேச நினைக்கிறான்....
காற்றிடம் பேசியது போல
அவளைத் தொட முடியாது போனது..
அவளுக்கு
அது புரியவில்லை.
அவள் இறந்துவிட்டாள் என்று
அவன் சொன்னான்.....
அது தவறு என்று
அடித்துக் கூறினாள் குழலி...

மெல்ல நகர்ந்துகொண்டே
மேஜை அருகே வந்தார்கள்..

" நீ இறந்துவிட்டாய் "

"இல்லை"

"குனிந்து பார் குழலி..
உணருவாய்
உண்மையை"

அங்கே..........

(இனி பொதுப்படையாக கவிதை செல்லும்...)

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அவள் இதழ் எழுப்பிய சத்தத்தில்
கோலா தவறி சிதறியது..
குழலி கத்தினாள்...
கதிரவனை திருடன் என்று நினைத்தாள்.
அவனோ இல்லை என்று தப்பித்தான்..
சிறு சங்கடம்தான்..

அவன் சொன்னான்.....
இனிமையான
இந்த
இல்லம் என்னுடையது என்று..

அவள்
அதைத் திருப்பி ஒப்பித்தாள்.
இந்த கட்டில்கள், ஜன்னல் வளைவுகள்
சரிகைகள், அலங்கார விளக்குகள்
பூந்தொட்டிகள், பூஜை அறைப் பூக்கள்
இன்னும் இன்னும்.....
என்னுடையது என்றாள்...
உடனே வீட்டை விட்டு வெளியேறு
என்றாள்...
ஆவேசமாய்

கதிரவன் அவளைப்
பைத்தியக்காரி என்று நினைத்தான்...

மெல்ல சமையல் அறை நோக்கி
ஆவேசமாய், நுழைந்தாள்...................

கூட சென்றான் கதிரவன்.
அங்கே அவள் இல்லை...

கனவாக இருக்குமோ?
சில சமயங்கள் நம் எண்ணங்களின்
ஓட்டத்தினால் பாதை சறுக்கி
இம்மாதிரி நிகழ்வதுண்டு..
மனம் ஒரு மாயம்.
அதன் வேலைகள் சில சமயம்
தோற்றுவிக்கும் பல காயம்..
இது அம்மாதிரிதானா?
விடு..........

குளியலறையில்
ஷவரின் மழைத் தூறலில்
ஒடுங்கிப் போயிருந்த
தலை முடிகளை சீவிவிட்டு,
பஞ்சு போன்ற துண்டை எடுத்து
முகத்தை ஒற்றி வைத்து
மெல்ல கண்ணாடியை நோக்கி
நின்றவனுக்குப் பின்னே..........
அவள்.....
சொல்கிறாள்

"உன்னை வெளியேறச் சொன்னேனே?"

அவன் கண்ணாடியைத் துடைத்துவிட்டு
திரும்பவும் பார்த்தான்...
எல்லாம் மாயை./.....

அன்றிரவு சில முடிவுகளாய்
மனதை ஒரு அலையாய் இல்லாமல்
ஒருமுகப் படுத்தினான்...
வீட்டிற்குச் சென்று
அவள் இருக்கிறாளா என்று பார்த்தான்.
இல்லை..
சமயலறையில்
இல்லை
குளியலறையில்
இல்லை......
நிம்மதி.

Subscribe